திங்கள், 7 ஜூன், 2010

காஸ்ஸாவுக்குச் செல்லும் உதவிக் கப்பல்களுக்கு ஈரான் பாதுகாப்பு

இஸ்ரேலின் முற்றுகையால் பசி,பட்டினி மற்றும் மருத்துவ வசதியின்றி வாழும் காஸ்ஸா மக்களுக்குச் செல்லும் உதவிக் கப்பல்களை ஈவு இரக்கமற்ற இஸ்ரேலிய அரசு தனது இராணுவ நடவடிக்கையின் மூலம் தடுத்து வருகிறது.

சமீபத்தில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 'ஃப்ளோடில்லா' கப்பல்களில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய இராணுவம் 9சமூகசேவகர்களைக் கொன்றொழித்தது. கடந்த சனிக்கிழமை இன்னொரு உதவிக் கப்பலும் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதனையொட்டி காஸ்ஸாவுக்குச் செல்லும் உதவிக் கப்பல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அளிக்க ஈரானியப் புரட்சிப் படை முன்வந்துள்ளது.

ஈரானின் உச்ச மார்க்கத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காமினியின் உதவியாளர் அலி ஷராஸி இதனைத் தெரிவித்தார்.

"ஈரானின் கப்பற்படை அமைதியை நாடி, உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு காஸ்ஸாவுக்குச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயாராக உள்ளது" என்று அவர் கூறினார்.

மேலும்;"ஈரான் கப்பற்படையிலிருந்து இந்தப் புரட்சிப்படை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.ஆயத்துல்லாஹ் அலி காமினி உத்தரவிட்டால் உடனே இந்தப் புரட்சிப் படை களத்தில் இறங்கிவிடும்.காஸ்ஸாவின் அப்பாவி மக்களைக் காப்பது ஈரானின் கடமை" என்று அலி ஷராஸி மேலும் கூறினார்.
source:7days

கருத்துகள் இல்லை: