சிவகங்கை: மாணவ, மாணவிகளுக்கு எளிய முறையில் ஆங்கில பயிற்சி அளிக்க பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட டி.வி.டிக்களில் ஆபாச படங்கள் இருந்ததால் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எஸ்.புதூர் ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
இந்த முகாமில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் சார்பாக மாணவ-மாணவிகளுக்கு எளிய முறையில் ஆங்கிலம் பயிற்சி கொடுப்பதற்காக டி.வி.டிகள் வழங்கப்பட்டன. இந்த டி.வி.டிக்களில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் என்ற பெயரில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த டி.வி.டிக்ககளை எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் மாணவ -மாணவிகளுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் டி.வியில் போட்டுக் காண்பித்தனர்.
அப்போது அதில் திடீரென மலையாள கவர்ச்சி நடிகை மற்றும் பல்வேறு துணை நடிகைகள் நடித்த ஆபாசப் படங்கள் ஓடின. இதைப் பார்த்தது ஆசிரியர்களும், மாணவ, மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.
அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக ஒவ்வொரு பள்ளிக்கூடமாக சென்று இந்த ஆபாச டி.வி.டிக்களை திரும்பப் பெற்றனர்.
ஆசிரியர்களுக்கு தரப்பட்ட டி.வி.டி. கேசட்டுகளில் மலையாள ஆபாசப் பட 'பிட்டுகள்' எப்படி பதிவானது என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக