ஹரியானா மாநிலம் மென்கெரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிங்கு (வயது 19). அருகில் உள்ள மற்றொரு கிராமத்தைச் சேர்ந்தவர் மோனிகா (18). இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு மோனிகாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி அவர்களது காதல் தொடர்ந்தது.
இந்த நிலையில் பிங்கு, மோனிகா இருவரும் மோனிகாவின் மாமா வீட்டில் பிணமாக தொங்கினார்கள்.
மோனிகாவின் உறவினர்கள் காதல் ஜோடியை அடித்து, கொன்று தூக்கில் தொங்க விட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மோனிகாவின் பெற்றோர் சகோதரர் மற்றும் உறவினர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிங்கு, மோனிகா இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வேறு குலங்களை சேர்ந்தவர்கள். இந்த குலத்தை சேர்ந்தவர் சகோதரன், சகோதரிகளாக கருதப்படுகின்றனர். அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வது இல்லை. இதை மீறி இருவரும் காதலித்ததால் அவர்களை கொலை செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக