தமுமுகவின் நிறுவனத் தலைவர் சகோ.குணங்குடி ஹனீபா அவர்கள் நீண்டகால சிறைவாசத்திற்கு பின்னால் தனது இல்லத்தில் மகிழ்ச்சியாக இருக் கிறார். உடல் நலிவுற்று இருந்தாலும் உள்ளத்தால் உற்சாகமாக இருந்தார். அவர் மக்கள் உரிமைக்கு மனம்திறந்து அளித்த பேட்டியை வெளியிடுகிறோம். (ஆர்)
கேள்வி : உங்கள் ஆரம்பகால பொது வாழக்கைப் பற்றி கூறுங்கள்.குணங்குடி ஹனீபா : அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில தொழிற்சங்கச் செயலாளராக எனது சமூக பொதுப்பணிகள் தொடங்கியது. அதன்பிறகு 1984ஆம் ஆண்டு தமுமுகவை நான் தொடங்கி எனது குடும்ப உறுப்பினர்களை அதில் இணைத்து அதன்மூலமாக முஸ்லிம் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவைகளில் தனி இடஒதுக்கீடு கிடைத்திடவும் மற்றும் அனைத்து சமூக மக்களின் அடிப்படை உரிமைகளை அரசிடம் பெற்றி டவும் திராவிடர் கழகம், தேவர் பேரவை, வன்னியர் சங்கம் உள் ளிட்ட அனைத்து சமூக அமைப் புகளோடும் சேர்ந்து சமூகப்பணி கள் செய்துவந்தேன்.
கேள்வி : முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பெறவேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு எப்படி வந்தது?
குணங்குடி ஹனீபா : திராவி டர் கழகம் நடத்தக்கூடிய இட ஒதுக்கீடு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதன் அடிப்படையி லும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 1920ஆம் ஆண்டு இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக் கீடு பெற்ற வரலாறுகளைப் படித்தும் அந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.
கேள்வி : டாக்டர் ராமதாஸ், பழநி பாபா, டாக்டர் சேப்பன் ஆகியோரோடு உங்களுடைய கடந்தகால அனுபவம் பற்றி கூறுங்களேன்...
குணங்குடி ஹனீபா : வன்னி யர் சங்கம் தலைமையில் பிற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு ஒன்று இருந்தது. த.மு.மு.க. அந்தக் கூட்டமைப்பில் இருந்தது. அவர்கள் என்னை பாமகவின் பொருளாளராக அறிவித்து 1996 வரை அதன் தமிழகப் பொரு ளாளராக எனது பணிகள் தொ டர்ந்தது. மருத்துவர் ராமதாஸ் அவர்களும், பாமகவின் அனை த்து நிர்வாகிகளும் என் மீது அன்பு செலுத்தினார்கள். சமு தாயப் போராளி பழநிபாபா அவர்கள், மருத்துவர் அய்யா அவர்களை விமர்சனம் செய் ததாக எனக்கு தகவல் கிடைத்தது. அது சம்பந்தமாக பழநிபாபா அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அப்போது பழநிபாபா அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் இருந்தார்கள். பாபா அவர்கள் எனக்கு எழுதிய பதில் கடிதத்தில் மருத்துவர் அய்யா அவர்களைப் பற்றி நான் நல்ல மரியாதை வைத்திருக்கிறேன். மருத்துவரை நான் விமர்சனம் செய்வதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விவரங்களை மருத்துவர் அய்யா அவரிடம் தெரிவித்தேன். அதன் பிறகு மருத்துவர் அய்யா, பாமக பொதுச் செயலாளர் தலித் எழில்மலை ஆகியோர் திருச்சி மத்திய சிறைக்குச் சென்று சமு தாயப் போராளி பழநிபாபா அவர்களை நலன் விசாரித்து ஆறுதல் சொன்னார்கள். அன்று முதல் பாபா படுகொலை செய்யப்படும் வரை எனக்கும் பாபாவுக்கும் நட்பு தொடர்ந்தது. அப்போது என்னுடைய அடிப் படைத் தேவைகளுக்கு மருத் துவர் அய்யா தெரிவித்து பழநி பாபா அவர்கள் எனக்கு உதவி செய்துள்ளார்கள். சமூகப் பிரச்சி னைகளுக்கு போராடுகின்ற போது டாக்டர் சேப்பன் அவர்கள் ஊக்கப்படுத்துவார்கள். அதன் அடிப்படையில் டாக்டர் அம்பேத் கர் அவர்களின் பேரன் பிரகாஷ் அம்பேத்கார் அவர்களின் தலை மையிலான இந்தியக் குடியரசுக் கட்சி நிர்வாகிகள் டாக்டர். சேப் பன், சக்திதாசன், பெரியவர் இளையபெருமாள் போன்ற சமூக ஊழியர்களிடம் எனக்கு நல்ல நட்பு இருந்தது.
பாபா அகில இந்திய ஜிஹாத் கமிட்டி தலைவராகவும், நான் பாமக பொருளாளராகவும் பொ து மேடைகள் மூலமாக மட்டுமே இணைந்து சமூதாயப் பணி கள் செய்தது மறக்க முடியாத நிகழ்வுகளாகும். இன்று தமிழக த்தில் சமுதாய மக்கள் பொதுப் பிரச்சினைகளுக்கு ஜனநாயக முறையில் வீதிக்கு வந்து போராடு கிறார்கள். சமுதாய மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு இறை வன் பழநி பாபா அவர்கள் மூலம் வழங்கியது என்பது என் கருத்து.
கேள்வி : 1984 முதல் ஒரு சிறு குழுவாக இருந்த தமுமு 1995&ல் அதை வெகுஜன அமைப்பாக மாறியதற்கு காரணம் என்ன?
குணங்குடி ஹனீபா : சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்போது தமிழக அரசு முஸ்லிம் மக்கள் மீது தொடர்ந்து அடக்குமுறை கொடு த்து பல முஸ்லிம் சகோத ரர்கள் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டதோடு இன்னும் பல சகோதரர்கள் தடா சட்டத்தில் கைது செய்யப்படும் நிலையும் உருவாகி இருந்தது. அதைக் கண்டித்து ஜாக் அமைப்பின் பின்னணியில் மேலப்பாளையத்தில் தடா எதிர்ப்பு பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பாமக பொருளாளராக நான் கலந்துகொண்டேன். அதைத் தொ டர்ந்து சகோதரர்கள் எஸ்.எம்.பாக்கர், ஹைதர் அலி, இன்ஜீனியர் அப்துல் சமது ஆகியோர் பலமுறை பாமக அலுவலகம் வந்து என்னை சந்தித்து சமுதாய பாதிப்புகளைத் தெரிவித்து, நமது சமூகத்தின் மீதான அடக்குமுறைகளைத் தடுக்க அமர்ந்து பேசவேண்டும் என்று விஞ்ஞானி அப்துல் ஜலீல் அவர்களின் இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கு நான், பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், செ.ஹைதர் அலி, இமாம் பீ.ஜே, சகோதரர்கள் என்.எஸ்.அப்துல் ஜலீல், இன்ஜீ னியர் அப்துல் சமது, நிஸார் அஹமது, ஏ.எஸ்.அலாவுத்தீன், சிம் ஜாகீர் உசேன் ஆகியோர் அமர்ந்து அடக்கு முறையைத் தடுக்க சமூக அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். அப் போது நான், புதிய அமைப்பு வேண்டாம், இடஒதுக்கீட்டிற்காக நான் தொடங்கிய தமுமுக அமை ப்பை நீங்கள் விரும்பினால் அந்த அமைப்பின் மூலம் அடக்கு முறைகளைத் தடுப்போம் என்று தெரிவித்தேன். இதனை அனைவரும் ஏற்று அன்று முதல் தமுமுக விரிவுபடுத்தப்பட்டது.
கேள்வி : ரயில் குண்டு வெடிப்பு வழக்குகளில் நீங்கள் கைது செய்யப் பட்ட போது அதை எப்படி எதிர் கொண்டீர்கள்?
குணங்குடி ஹனீபா : 15.2.98 அன்று என் மகள் திருமணத்தில் என்னைக் கைது செய்து பொய் வழக்கு புனையப்பட்டு மதுரை சிறையில் இருந்த போது மூன்று ரயில் குண்டு வெடிப்பு பிடி ஆணை சிறையில் என க்கு வழங்கப்பட்டது. பிடி ஆணை வழங்கிய போது எந்த அதிர்ச் சியும் எனக்கு ஏற் படவில்லை. காரணம் நான் நிரபராதி, நிச்ச யம் இறைவன் இந்த வழக்கில் விடுதலை கொடுப்பான் என்ற நம்பிக் கை அன்று இருந்தது. அதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி : நீங்கள் சிறைக்குச் சென்றதும் சில மாதங்களில் திரும்பி விடலாம் என்றுதானே நினைத்தீர்கள்?
குணங்குடி ஹனீபா : மூன்று மாதம் முதல் ஆறு மாதத்தில் பிணையில் வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. நான் 13 ஆண்டுகாலம் முடிந்து விடுதலைப் பெற்றிருப்பது வாழ்நாளில் மறக்க முடியாதது. இந்த நிலை எந்த ஒரு குடிமகனுக்கும் ஏற்படக்கூடாது. நான் 13 ஆண்டுகாலம் சிறையில் இருக்கக் காரணமான அதிகாரிகள் ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர் கள் நேர்வழி பெற தொடர்ந்து துஆ செய்கிறேன்.
கேள்வி : நீங்கள் சிறையில் இருந்த காலக்கட்டங்களில் தமுமுகவின் பிர மாண்ட வளர்ச்சியையும், அதன் போராட்டங்களையும் கேள்விப்படும் போது உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது?
குணங்குடி ஹனீபா : குடும்பத் தலைவன் ஒருவனுக்கு தன் குடும்பத்தில் பேரன், பேத்திகள், கொள்ளு பேத்திகள் என குடு ம்ப உறுப்பினர்கள் பெருகிக் கொண்டே போகும்போது எவ் வளவு சந்தோஷம் அடைவா னோ அதைவிட பல மடங்கு சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது. அதற்காக இதைக் கட்டிக்காத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி மற்றும் தலைமை நிர்வாகிகள் முதல் கிளைக்கழக நிர்வாகிகள் வரை அனைவருக்கும் அந்த வளர்ச்சி உருவாக துணை புரிந்த இறைவனுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி : உங்கள் குடும்பத்தினர் உங்களைப் பிரிந்து இருந்த காலக்கட்டங்களில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
குணங்குடி ஹனீபா : நான் சிறைக்குச் சென்றவுடன் என் குடும்பம் வறுமையில் வாடியது. அந்த காலக் கட்டத் தில் எஸ். கமாலுத்தீன் மதனீ அவர்கள் தலைமையிலான ஜாக் அமைப்பு மூலம் மாதந்தோறும் சிறிய நிதியை என் குடும்பத்திற்கு இறைவன் கிடைக்கச் செய் தான். மேலும் தமுமுக வளைகுடா முன்னாள் நிர்வாகி மேலப்பாளையம் சகோ. பழ்லுல் இலாஹி அவர்கள் முயற்சி செய்து எனது இரு மகன்களையும் துபை பணிக்கு எடுத்துக்கொண்டார்கள். அதைத் தொடர்ந்து குடும்பத் தேவைகள் நிறைவை பெற்றது. இருந்தபோதிலும் வாரந்தோறும், என்னைத் திருமணம் செய்த ஒரே காரணத்திற்காக என் மனைவி அமிதா பீவி அவர்கள் 13 ஆண்டுகாலமாக சிறையில் நேர்கா ணலுக்கு அலைந்ததும், சிறையில் நான் இருந்தபோது என் தந்தை மரணம் அடைந்ததும் அதிகமான வேதனையை அளித்தது. இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகிய பாதிப்புகள் எனக்கு ஏற்பட இதுவும் ஒரு காரணம். இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் அமைப்பு களும் மாநிலம் முழுவதும் உள்ள முஸ்லிம் ஜமாஅத்துகளும் பள்ளி வாசல் இமாம்களும் அவரவர் சக்திக்கேற்ப எனக்காக துஆ செய் தது, குரல் கொடுத்தது ஆறுதலாக இருந்தது.
கேள்வி : 13 ஆண்டுகளாக சிறை யில் உங்கள் அன்றாட வாழ்க்கை எப்படி இருந்தது?
குணங்குடி ஹனீபா : தொடக்கத் தில் சாப்பாடு, தொழுகை, உறக்கம் அடுத்து சமூகத்திற்கு அரசு செய்ய வேண்டிய தேவைகளை சிறைத்துறை வழியாக அரசுக்கு கோரிக்கை மனுக் கள் அனுப்புவது, நீதிமன்றங்களில் சமூகத் தேவை களைக் கேட்டு முழக்கங்கள் மூலம் வெளிப்படுத்துவது எ ன தொடர்ந்தது. குறிப்பாக சகோ. இமாம் அலி அவர்கள் காவல் துறையிடமிருந்து தப்பித் தபோது மதுரையில் உள்ள முஸ்லிம் பெண்களையும் ஆண் களையும் விசாரணை என்ற பெயரில் பலநாட்கள் வைத்து காவல்துறையினர் கொடுமைப் படுத்தினார்கள். அப்போது மதுரை நீதிமன்றம் சென்ற நான் நீதிபதியிடம் இது குறித்து முறையிட்டதோடு கடுமை யான முழக்கங்களை எழுப்பி னேன். அடுத்த நாள் மது ரையில் வெளிவந்த அனைத்து செய்தித்தாள்களிலும் அந்தச் செய் தி வெளிவந்து மக்கள் மீதான அடக்குமுறை குறைந்தது. மேலும் புழல் மத்திய சிறையில் முக்கிய வழக்குகளில் உள்ளவர்களைத் தவிர்த்து பல்வேறு வழக்குகளில் உள்ள சுமார் 100 முஸ்லிம்களுக்கு ரமலானில் 30 நாட்களுக்கும் நோன்புக்குத் தேவையான உணவு தானியங்கள், புத்தா டைகள் ஆகியவற்றை தமுமுக தலைமையிடம் பெற்று மூன் றாண்டுகளாக தொடர்ந்து கொடுத்துள்ளேன். மேலும் பல் வேறு சமூகங்களைச் சேர்ந்த முதியோர்கள், உடல் ஊன முற்றோர் ஆகியோர்களுக்கு அடிப் படைத் தேவைகளை நண்பர் களிடம் இருந்து பெற்றுக் கொடுத் துள்ளேன். எதிர்கால சந்ததிகள் பலனடைகின்ற வகையில் மா, பலா, வாழை உள்ளிட்ட கனிமரங்களை சிறையில் உருவாக்கியுள்ளேன். அந்த வகையில் இறைவன் எனக்கு நல்ல கண்ணியத்தைக் கொடுத் திருந்தான்.
கேள்வி : 13 ஆண்டுகள் கழிந்த பிறகு நிரபராதி என்று நீதிபதி தீர்ப்பு சொன்னபோது எப்படி உணர்ந்தீர்கள்?
குணங்குடி ஹனீபா : நீதிபதி தீர்ப்பைச் சொன்னவுடன் என் னையும் அறியாமல் நீதிமன்றத்தில் அழுதுவிட்டேன். என் வழக்கில் என்னோடு இருந்த சகோதரர்கள் அனைவரிடமும் சலாம் சொல்லி கை கொடுத்து, உங்கள் மனது புண்படுகின்ற வகையில் நான் பேசியிருந்தால் அல்லாஹ்விற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி அனைவரிடமும் சலாத்தை பரிமாறிக்கொண்டேன். மேலும் சமுதாய மக்களை சந்திக் கின்ற வாய்ப்பை இறைவன் வழங்கியிருக்கின்றான் என்ற ஆனந்தக் கண்ணீர் வந்ததே தவிர வருத்தமான மனநிலை ஏற் படவில்லை.
கேள்வி : சிறையிலிருந்து விடுதலையாகி, சக சிறைவாசிகளை விட்டு பிரியும் போது அந்த தருணம் எப்படி இருந்தது?
குணங்குடி ஹனீபா : உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு வேதனையாக இருந் தது. வெளியில் நடந்து வருகின்ற பொழுது நடப்பதற்கு கால் கூச் சமாக இருந்தது.
கேள்வி : இப்போது தமுமுக உறுப்பினர் படிவத்தை புதுப்பித்து உள்ளீர்கள். சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைக்கக்கூடிய திட்டம் ஏதா வது இருக்கிறதா?
குணங்குடி ஹனீபா : தேர்தல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து சமுதாய வழக்குகளில் ஆயுள் தண்டனைப் பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள சகோதரர்கள் கோவை எஸ்.ஏ. பாஷா பாய், முகமது அன்சாரி, தாஜுதீன், தடா புஹாரி, ஜாகிர் உசேன், காஜா நிஜாமுன், அபுபக்கர் சத்தீக், மூசா, நாகூர் அப்துல் காதர், ஹைதர் அலி, சாகுல் ஹமீது, ரஹ்மத்துல்லாகான் உள்ளிட்ட 55 முஸ்லிம் சகோதரர்களை விடுதலை செய்திடவும் கல்வி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவைகளில் மாநிலத்தில் 5 சதவீதமும் மத்தியில் 10 சத வீதமும் பெற்றிடவும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கூட்டமைப்பாக செயல்பட இறுதிவரை முயற்சி செய்வேன்.
கேள்வி : சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் மரியாதை நிமித்தமாகவும் நன்றி செலுத்தும் வித மாகவும் எல்லோரையும் சந்தித்தீர் களா? அவர்களுடைய அணுகுமு றை எப்படி இருந்தது?
குணங்குடி ஹனீபா : உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஒருவன் நோய் குணமாகி அவனை உறவினர்கள் எப்படி நலம் விசாரிப்பார்களோ அதை விடப் பலமடங்கு என் மீது இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜமாஅத்தே இஸ்லாமி, டி. என்.டீ.ஜே, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அய்யா பழ.நெடுமாறன், தம்பி சீமான், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, என்றும் மறக்க முடியாத என் தம்பி பாக்கர் தலைமையிலான இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் என் மீது காட்டிய அன்பு, அதைப்போன்று தமு முக சகோதரர்கள் காட்டிய உணர் வுப்பூர்வமான பாசம் என்றும் என் வாழ்நாளில் மறக்க முடியாது.
பேட்டி : புழல் ஷேக் முகமது அலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக