மேலப்பாளையம் மைல காதர் புரத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு கடந்த ஒரு மாதகாலமாக நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் குடிநீர் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் மாவட்ட ம.ம.க பொருளாளர் ரசூல் மைதீன் தலைமையில் பெண்களுடன் காலி குடங்களுடன் மாநாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் மற்றும் மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் கருப்பசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு உடனடியாக குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தப் போராட்டத்திற்கு சுமார் 100 பெண்கள் உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக