இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
செவ்வாய், 22 ஜூன், 2010
இந்து முன்னணியினரின் வெறித்தனம்
திருப்பூரில் நேற்று நடை பெற்ற இந்து முன்னணி மாநாட்டின் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டு பேனர்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து திமுகவினருக்கும் இந்து முன்னணியினருக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. பேனர்களை கிழித்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி தொண்டர்கள் திமுகவினரை தாக்கினர். சம்பவத்தைக் கேள்விப்பட்ட திமுகவினர் திரண்டு வந்து இந்து முன்னணியினரை தாக்கினர். இந்து முன்னணியினரின் வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாயின. இதனைத் தொடர்ந்து இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். இதனால் திருப்பூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. செம்மொழி மாநாட்டினை முன்னிட்டு அசம்பாவிதத்தை தவிர்க்க எண்ணிய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் செய்தவர்களை சமாதானப் படுத்தியதைத் தொடர்ந்து சாலை மறியல் திரும்பப் பெறப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக