|
தினமலர் ஆசிரியருக்கு, 19.05.10 அன்று வெளியான தினமலர் இணைய பதிப்பில் ‘இது உங்கள் இடம்’ பகுதியில் சென்னையிலிருந்து க.பரமானந்தம் என்பவர் நடிகை குஷ்பு திமுகவில் இணைந்தது பற்றி காரண காரியங்களை அலசும்போது திமுக இதனால ‘இஸ்லாமியர்களை திருப்தி படுத்த முடியும்’என்று உளறுகிறார். ‘கற்பை’ பற்றி குஷ்புவின் பேட்டி வெளியான நேரத்திலேயே முஸ்லிம் பெண்களெல்லாம் குஷ்புவை ஆதரிப்பதாகவும் இன்னும் ஒரு படி மேலே போய் முஸ்லிம் பெண்களுக்கு குஷ்புதான் முன் மாதிரி என்றும் செய்தி வெளியிட்டு பத்திரிகை தர்மத்தை (!!!!!!) தாங்கள் எப்படியெல்லாம் நிலை நாட்டினீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். இதற்கு எதிர்வினையாக தினமலரை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தி முஸ்லிம் சமூகம் தனது கண்டனத்தை பதிவு செய்த போதிலும் தாங்கள் இன்னும் திருந்தவில்லை என்பதையே மேற்கண்ட கடிதம் கூறுகிது. ஒரு விபச்சாரி கூட நாலு சுவற்றுக்குள்தான் தன் முந்தானையை கழற்றுவாள். ஆனால தன் அங்க அவயங்களை கூச்சமின்றி உலகத்தார் முன் பார்வைக்கு வைக்கும் ஒரு நடிகையை, தான் செய்யும் விபச்சாரத்தை மற்றவர்களும் செய்ய வேண்டும்என்றும் அதுதான் முற்போக்கானது என்று கூறும் ஒரு கழிசடையை, ஆணும் பெண்ணும் பார்வையை தாழ்த்த வேண்டும் என்றும், வெட்கத்தலங்களை பேண வேண்டும் என்றும் (திருக்குர்ஆன் 24:30,31), விபச்சாரத்தின் அருகில் கூட செல்ல வேண்டாம் என்றும்(25:68), அந்நிய ஆணோடு நடத்தும் பேச்சில் கூட நளினம் வேண்டாம் என்றும் (3:32), ஆடைகளால் அங்க அவயங்களை மறைக்க வேண்டும் (33:59) என்றும் கூறும் ஒழுக்க மாண்புகள் நிறைந்த பெண்மையின் கண்ணியத்தை உண்மையிலயே பேணுகின்ற ஒரு வாழ்வியல் நெறியோடு வலிந்து வலிந்து தொடர்பு படுத்தி எழுத உங்களை தூண்டுவது எது? இதயத்தில் நிரம்பி இருககும் இஸ்லாமிய வெறுப்பும் அத்தோடு சிந்தனையில் ஊறிப் போயிருக்கும் இந்துத்துவமும் அல்லாது வேறு என்ன காரணம் இருக்க முடியும் பூணூலை கழற்றி விட்டு மாடு முதல் பன்றி வரை உண்ணும், பார்ப்பன சடங்குகளையெல்லாம் இகழ்ந்துரைக்கும் கமல்ஹாசனை வைதீகப் பார்ப்பனர்களின் முன் மாதிரி என்று யாரவது எழுதினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? பூணூல் முதல குடுமி வரை துடிக்குமல்லவா? அப்படித்தானே மற்றவர்களுக்கும் இருக்கும்? மேலும் நடிகை குஷ்பு தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாக எப்போதாவது கூறினாரா? அவர் இன்று தழுவி இருக்கும் மதம் என்ன? எந்த மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்திருக்கிறார்? எந்த மதத்தின் படி வாழ்க்கை நடத்துகிறார்? இதை தெளிவாகத் தெரிந்தும் ஒன்றுமே தெரியாதது போல் எதற்கு இந்தப் பாசாங்கு? இஸ்லாத்தை எதிர்ப்பது என்றால் அதிலும் ஒரு நேர்மையை கடைபிடியுங்கள். மானங்கெட்ட நடிகையின் முந்தானையின் பின்னால் நின்று முஸ்லிம்களின் மேல் எச்சில் துப்பாதீர்கள். இப்படிக்கு, உகாண்டா வாழ் இந்தியர்கள், கம்பாலா, உகாண்டா , கிழக்கு ஆப்ரிக்கா |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக