புளியங்குடி: அரசு மருத்துவமனையில் பிரவசம் பார்க்க டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி பெண் பலியானார்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி கீழபள்ளிவாசல் புதுமனை தெருவை சேர்ந்தவர் சுபகனி. இவரது மனைவி ஷமீலா பீவி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்படவே புளியங்குடி அரசு மருத்துவமனையில் காலை 6 மணிக்கு அட்மிட் செய்துள்ளனர்.
காலை 10 மணி வரை எந்த மருத்துவர்களும் இவருக்கு சிகிச்சை அளிக்க வரவில்லை. கடுமையான வயிற்று வலியால் துடித்த அவர் சிகிச்சை பெறாமலேயே வயிற்றில் குழந்தையோடு பலியானார்.
தகவல் அறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு மருத்துவர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புளியங்குடியில் கர்ப்பிணி பெண் இறந்த சம்பவத்தை அறிந்து தென்காசி மாவட்ட மருத்துவமனை துணை இயக்குநர் அலுவலக்தை தமுமுகவினர் முற்றுகையிட்டதால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக