காஸ்ஸா மீதான முற்றுகையை இஸ்ரேல் விளக்கிக் கொள்ளவேண்டும். அங்கு வாடும் ஃபலஸ்தீன மக்களுக்கான உதவிப் பொருட்களை அனுமதிக்கவேண்டும் என்று ஜி-8 நாடுகள் கூறியுள்ளன.
"எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1860-ஐ செயல்படுத்தவும், மனிதாபிமான மற்றும் வர்த்தக பொருட்கள் காஸ்ஸாவுக்கு சென்று வர உத்திரவாதமளிக்கவும் செயல்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளது.
"காஸ்ஸா மக்களின் மனிதாபிமான மற்றும் வர்த்தக பொருட்கள், சமுதாய மறுசீரமைப்பு, அடிப்படை வசதிகள், சட்டப் பூர்வமான பொருளாதார மேம்பாடுகள் ஆகியவற்றை பூர்த்தி செய்ய இந்த தீர்மான கொள்கைகளை முழுமையாக அமல்செய்ய வற்புறுத்துகிறோம்" என்றும் ஒரு செய்தி குறிப்பிடுகிறது.
முற்றுகையை மீற முயன்ற உதவிக்கப்பல் மீது கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான உயிர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.
ஆறு கப்பல்களில் 42 நாடுகளை சேர்ந்த சுமார் 700 சேவகர்கள் 10,000 டன் நிவாரண பொருட்களை காஸ்ஸாவிற்கு ஏந்திவந்து கொண்டிருந்தனர். ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா என்ற கப்பலை சர்வதேச எல்லையில் இஸ்ரேல் தாக்கியதில் 9 துருக்கியர்கள் கொல்லப்பட்டனர், 50 பேர் படுகாயமடைந்தனர்.
1.5 மில்லியனுக்கும் மேலான ஃபலஸ்தீனர்கள் 4 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலின் தளராத முற்றுகையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் இஸ்ரேலிய முற்றுகைக்கு ஃபலஸ்தீன குழந்தைகள் காஸ்ஸா நகரில் சனிக்கிழமையன்று மெழுகுவர்த்தி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக