பாப்ரி மஸ்ஜித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாப்ரி மஸ்ஜித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஜனவரி, 2011

இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் நடத்திய "நீதியைத் தேடும் பாப்ரி மஸ்ஜித்" கலந்தாய்வு அமர்வு

ஜுபைல்(சவூதிஅரேபியா),ஜன.3: வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலனுக்காக சவூதி அரேபியாவில் செயல்பட்டுவரும் அமைப்பு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம்(IIF). இவ்வமைப்பின் தமிழ் பிரிவு சார்பாக ஜுபைல் நகரில் "நீதியைத்தேடும் பாப்ரி மஸ்ஜித்" என்ற தலைப்பில் கலந்தாய்வு அமர்வு நடந்தேறியது.

ஜுபைல் இண்டர்நேசனல் ரெஸ்ட்டாரெண்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஜுபைல் ஏரியா தலைவர் அஹ்மத் சிராஜ் தலைமை வகித்தார். ஹஸன் முஹம்மது IIF ஆற்றிவரும் பணிகளைக் குறித்து உரை நிகழ்த்தினார். பொறியாளர் நாகூர்மீரான் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: "நான்கு நூற்றாண்டுகளாக இந்திய முஸ்லிம்கள் தொழுகை நடத்திய பாப்ரி மஸ்ஜித் முஸ்லிம்களுக்கே சொந்தமானதாகும். இந்தியாவில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், நீதிபீடங்களும் சங்க்பரிவார்களுக்கு அனுகூலமான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.

பாப்ரி மஸ்ஜித் ஒரு இந்து-முஸ்லிம் பிரச்சனையல்ல. இந்தியாவின் மானப் பிரச்சனையாகும். பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டால் மட்டுமே இந்நாட்டை ஆள்பவர்கள் தேசத்தோடும், முஸ்லிம்களோடும் நீதியோடு நடந்தார்கள் என்று கூறவியலும். அதற்காக தேசத்தின் அனைத்து ஜனநாயக அமைப்புகளும், முஸ்லிம்களும் களமிறங்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக நன்றியுரையை பிலால் முஹம்மது தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சவூதி வாழ் தமிழ் மக்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

பாபர் மஸ்ஜித். நீதியை தேடும் பயணங்கள் உரை: பேரா. அருணன்

அயோத்தி பாப்ரிம‌சூதி தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்து, நாட்டாண்மை தீர்ப்பை விட படுகேவலமானது.

அயோத்தியில் ராமர் கோயிலே இடிக்கப்படவில்லை. ஏனென்றால் அயோத்தியில் ராமர் கோயில் என்று ஒன்று இருந்ததே இல்லை.

இல்லாத கோயிலை சொல்லி இருந்த மசூதியை இடித்தார்கள். ராமர் பெயரை சொல்லி நாட்டிலே கலவரத்தை தூண்டுவதே குறிக்கோள்.

பாபர் மஸ்ஜித். நீதியை தேடும் பயணங்கள்
உரை: பேரா. அருணன்
தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமுமுக சார்பில் டிசம்பர்-06 அன்று நடைபெற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் பேரா. அருணன் ஆற்றிய உரை.

Prof.Arunan Speech Part-01 உரை பகுதி -01







ஞாயிறு, 17 அக்டோபர், 2010

சன்னி வக்ஃபோர்டு தலைவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் சந்திப்பு

அப்பீல் அளிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாகின்றன

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை திரும்ப அளிப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்து வருவதாக உ.பி மாநில சன்னி வக்ஃபோர்டு தலைவர் சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், சோஷியல் டெமோக்ரேடிக் பார்டியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் ஆகிய தலைவர்களுடனான சந்திப்பின்போது இதனை தெரிவித்தார் அவர்.

வழக்கில் வாதாடுவதற்கு பிரபலமான வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்து சமரசத்திற்கு தயாராகவேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது. நம்பிக்கையை மட்டும் ஆதாரமாகக் கொண்டுள்ள இந்த தீர்ப்பில் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் தராது. இவ்வழக்கில் மாயாவதி தலைமையிலான உ.பி அரசு வக்ஃபோர்டிற்கு பூரண சுதந்திரம் அளித்துள்ளது. வழக்கை முன்னெடுத்துச் செல்ல பொருளாதார ரீதியான குறைபாடுகள் உண்டு என சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார்.

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பார்கள் இதற்கு பதிலளித்த தலைவர்கள் கூறுகையில்,பாப்ரி மஸ்ஜித் வழக்கு என்பது ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்சனையாகும். வழக்கை நடத்துவதில் இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பர் என உறுதி வழங்கினர்.

உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு தேவையான விபரங்களை ஒரு வழக்கறிஞர் குழு தயாராக்கி வருவதாக வழக்கறிஞர் ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்தார் மேலும் உச்சநீதிமன்றத்திலிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம். வழக்கை நடத்துவதற்கு பெருமளவிலான பணம் தேவைப்படும். என்றும் தெரிவித்தார்.


சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன்- அன்சாரி

முஸ்லிம்கள் தரப்பில் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் துவக்கம் கால மனுதாரரான ஹாஷிம் அன்சாரியையும் பாப்புலர் ஃப்ரண்ட், SDPI, இமாம் கவுன்சில் தலைவர்கள் சந்தித்து செய்திகளை பரிமாறிக் கொண்டனர்.

பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை உலக முஸ்லிம்களின் பிரச்சனை என அன்ஸாரி சந்திப்பின்போது குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது: பாப்ரி மஸ்ஜித் வழக்கில் சன்னி வக்ஃப் போர்டுடன் நிற்பேன். சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன். அயோத்தியில் சில ஹிந்து சன்னியாசிகளுடன் நான் நடத்திய கலந்துரையாடலை ஊடகங்கள் தவறாக பரப்புரைச் செய்தன என்றும் அன்சாரி குறிப்பிட்டார்.

செய்தி:தேஜஸ்

செவ்வாய், 5 அக்டோபர், 2010

'நான் நடத்திய ரதயாத்திரையை நியாயப்படுத்துகிறது அயோத்தியா தீர்ப்பு' - எல்.கே.அத்வானி

புதுடெல்லி,அக்.5:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு தான் நடத்திய ரதயாத்திரையை நியாயப்படுத்துவதாக பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் பின்னணியில் தற்காலிக கோயில் அமைந்துள்ள இடத்தில் ராமர்கோயில் கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை தான் நடத்தப்போவதாக அத்வானி தெரிவிக்கிறார்.

1989 ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர்கோயிலை கட்டவேண்டுமெனக் கோரி அத்வானி ரதயாத்திரையை நடத்தினார்.

அத்வானியின் ரத யாத்திரை நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி ரத்தயாத்திரையாக மாறியது.

லக்னோ பெஞ்சின் தீர்ப்பு சட்டங்களைவிட நம்பிக்கையை உயர்த்திப்பிடிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார் அத்வானி. தீர்ப்பின் மூலம் சட்டம் நம்பிக்கையை உயர்த்திப் பிடிப்பதாக அத்வானி கூறினார்.

ஃபைஸாபாத்தில் சரயூ நதியின் கரையில் காம்ப்ளக்ஸிற்கு வெளியே முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் கட்டலாம் என பா.ஜ.கவின் தலைவர் நிதின்கட்காரி பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருந்தார். இதனை அத்வானியும் ஆதரித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்

திங்கள், 4 அக்டோபர், 2010

அபத்தங்கள் நிறைந்த அகழ்வாராய்ச்சித் துறையின் அறிக்கை: பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப்

புதுடெல்லி,அக்.4:ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டதற்கு ஆதாரமாக அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் கூறிய ஆர்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா என்ற இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் அறிக்கை அபத்தங்கள் நிறைந்தது என பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப் கூறியுள்ளார்.

மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சிதிலங்களின் கற்களில் விஸ்வஹிந்து பரிசத்தால் கண்டெடுக்கப்பட்டது எனக்கூறப்படும் பழங்கால கல்வெட்டுகள் திட்டமிட்டே இட்டுக்கட்டப்பட்ட செய்தி என இர்ஃபான் ஹபீப் சுட்டிக்காட்டுகிறார்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் அறிக்கையை ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரலில் சமர்ப்பித்தது.

ராம்சாபுத்ரா எனக்கூறப்படும் இடத்திற்கு கீழ் செங்கல் பொடியும், சுண்ணாம்பும் சேர்ந்து கட்டப்பட்ட ஐந்து மாடி கட்டிடத்தின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் பாபரால் தகர்க்கப்பட்ட ராமர்கோயில் என்ற கண்ணை மூடிக்கொண்ட முடிவுக்கு வந்துள்ளது நீதிமன்றம்.

ஆனால், செங்கல் பொடியும், சுண்ணாம்பும் சேர்ந்த கட்டிடக்கலை மொகாலாயர்களின் வருகையின் மூலமே இந்தியாவிற்கு வந்தது என இர்ஃபான் ஹபீப் சுட்டிக்காட்டுகிறார்.

பழங்கால ஹிந்துக் கோயில்கள் இம்மாதிரியான கட்டிடக்கலையின் அடிப்படையில் கட்டப்படவில்லை. ஏறத்தாழ சம அளவிலான கட்டிகளை பயன்படுத்தி இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது என அவ்வறிக்கையில் கூறப்பட்டாலும், அதன் சுவர்களில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதுக் குறித்து அகழ்வாராய்ச்சித்துறையின் அறிக்கையில் விவரிக்கப்படவில்லை. ஆனாலும், அது ஒரு முக்கிய கட்டிடம் என அகழ்வாராய்ச்சித்துறை அறிக்கையில் கூறப்படுகிறது.

கட்டிடத்திற்கு கலைநயம் மிகுந்ததாக அஸ்திவாரம் இருந்ததாக கூறும் அகழ்வாராய்ச்சித்துறையின் அறிக்கையில் அந்த கலை நயம் எத்தகையது என்பதுக் குறித்து கூறவில்லை. இவ்வாறு இர்ஃபான் ஹபீப் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

சனி, 2 அக்டோபர், 2010

பாப்ரி மஸ்ஜித் நிலம்:விட்டுக் கொடுக்கமாட்டோம் - டெல்லி இமாம்

புதுடெல்லி,அக்.1:பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது எனவும், ஆதாரங்களை நீதிமன்றம் புறக்கணித்துள்ளது எனவும் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் செய்யத் அஹ்மத் புஹாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இத்தீர்ப்பில் இந்திய முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியில்லை.பாப்ரி மஸ்ஜிதின் உரிமையை முஸ்லிம்கள் கைவிடமாட்டார்கள்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

வியாழன், 30 செப்டம்பர், 2010

தீர்ப்புக்காக காத்திருக்கும் ஹாஷிம் அன்ஸாரி

லக்னோ,செப்.30:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கவிருக்கையில் லக்னோவிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அயோத்தியாவில் பஞ்சிதோலா என்ற ஊரில் ஒரு சிறிய வீட்டில் ஆசுவாசத்தோடு 90 வயது முதியவர் ஒருவர் காத்திருக்கிறார். அவர்தான் வழக்குதாரரான முஹம்மது ஹாஷிம் அன்ஸாரி.

வழக்கு துவங்கும் பொழுது அன்ஸாரியின் வயது 30 ஐ தொடும். ஆரம்பக் காலங்களில் சக வழக்குதாரர்கள் 5 பேர் அன்ஸாரியுடன் இருந்தார்கள். அவர்களெல்லாம் கால ஓட்டத்தில் இவ்வுலகிற்கு விடை சொல்லிவிட்டார்கள். வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்து போராடிய ஒரு வழக்கின் தீர்ப்பை காணும் பாக்கியத்தை இறைவன் அளித்தது அன்ஸாரிக்கு மட்டுமே.

தீர்ப்பு வழங்குவதற்கான இடைக்காலத் தடையை நீக்கிய உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை ஆசுவாசமாக உள்ளதாக அன்ஸாரி கூறுகிறார்.

"இந்த தீர்மானத்தில் தேசம் முழுவதும் மகிழ்ச்சியுண்டாகும். வருடக்கணக்கில் இழுத்துக் கொண்டு செல்லும் இவ்வழக்கில் தீர்ப்பு வெளிவருவது ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரேபோலவே ஆசுவாசமளிக்கும்" என்று அன்ஸாரி கூறுகிறார்.

பாப்ரி மஸ்ஜிதில் விக்கிரகங்களை திருட்டுத்தனமாக வைத்த பிறகு அங்கு பூஜைச் செய்வதற்கு அனுமதிக்கோரி 1950 ஜனவரி 16-ஆம் தேதி ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் கோபால்சிங் விசாரத் என்பவர் தாக்கல் செய்த மனுவில் எதிர் கட்சிதாரராக அன்ஸாரி களமிறங்கினார். வழக்கை பின்னர் சன்னி செண்ட்ரல் வக்ஃப் போர்டு ஏற்றது.

பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக இவ்வழக்கை பயன்படுத்திய பொழுது இந்தியாவை நெருக்கடிக்கு உள்ளாக்கிய ஒரு வழக்காக பாப்ரி மஸ்ஜித் வழக்கு மாறியது.

இதற்கிடையே பாப்ரி மஸ்ஜித் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளால் தகர்க்கப்பட்டது. அறுபது வருடகால தனது போராட்டத்திற்கு வருகிற 30-ஆம் தேதி முடிவு ஏற்படும் என அன்ஸாரி ஆசுவாசமாக உள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு எவ்வாறிருந்தாலும், இரு சமூகங்களிடையே நிலவி வரும் நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படாமல் பாதுகாக்க தலைவர்கள் முன்வரவேண்டும் என அன்ஸாரி வேண்டுகோள் விடுக்கிறார்.

இனியொரு அரசியல் ஆதாயத்திற்கு பாப்ரி மஸ்ஜித் காரணமாகிவிடக் கூடாது. விருப்பமிருந்தாலும், நீதிமன்றத் தீர்ப்பை கேட்பதற்காக தான் லக்னோ நீதிமன்றத்திற்கு வரமாட்டேன் என அன்ஸாரி தெரிவிக்கிறார்.

"முதுமை என்னை வீட்டில் உட்கார வைத்துவிட்டது. தீர்ப்பு என்னவாயினும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.தீர்ப்பு சாதகமாகயிருந்தாலும், பாதகமாகயிருந்தாலும் அதனை பூட்டிய கதவுக்கு வெளியே முஸ்லிம்கள் ஒதுக்கிட வேண்டும். சாலையில் இறங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடுவதோ, கண்டனப் போராட்டம் நடத்துவதோ தேவையில்லை.

தீர்ப்பு சாதகமாக வரவில்லையென்றாலும் சட்டத்தின் வாயில்கள் திறந்தே உள்ளன. தீர்ப்பு எவ்வாறிருப்பினும் பாப்ரி மஸ்ஜித் புனர்நிர்மாணத்தை விரைவாக நிறைவேற்றும் வாய்ப்பு இல்லை.தீர்ப்பு எவ்விதத்திலும் அயோத்தியை பாதிக்காது. இங்கு ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்கள் போலவே வாழ்ந்து வருகிறோம். குழப்பத்தை ஏற்படுத்தியவர்களெல்லாம் வெளியேயிருந்து வந்தவர்கள். அவர்கள் அயோத்தியை அரசியல் போர்க்களமாக்கிவிட்டார்கள். இந்த பிரச்சனையை இத்தோடு முடித்துக் கொள்வோம். இல்லையெனில், இந்த தீயை அணைக்க ஒருபோதும் இயலாது." என்றும் அன்ஸாரி கூறுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

புதன், 29 செப்டம்பர், 2010

பாப்ரி மஸ்ஜித்:20 விஷயங்களில் தீர்ப்பு

லக்னோ,செப்,29:சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய விவகாரத்தில் நாளை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்ச் தீர்ப்பளிக்கப் போகிறது. 28 கட்சிதாரர்கள் உட்படும் 5 வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கப்படுகிறது.

நாளை அளிக்கும் தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் தீர்மானிக்கும் முக்கிய விஷயங்கள் இவையாகும்:
1.தகர்க்கப்பட்ட கட்டிடம் முஸ்லிம்களின் மஸ்ஜிதா?
2.அந்த கட்டிடம் எப்பொழுது நிர்மாணிக்கப்பட்டது
3.ஹிந்து கோயிலை இடித்துவிட்டா அந்தக் கட்டிடம் கட்டப்பட்டது?
4.முஸ்லிம்கள் தொன்றுதொட்டே இங்கு தொழுகை நடத்தி வருகின்றார்களா?
5.சர்ச்சைக்குரிய கட்டிடம் நிரந்தரமாகவும், தெள்ளந்தெளிவாகவும்
முஸ்லிம்களின் கைவசமிருந்ததா?
6.1949 ஆம் ஆண்டு வரை முஸ்லிம்களின் கைவசமாக அந்த கட்டிடம் இருந்ததா?
7.கட்டிடத்தின் மீது ஹிந்துக்கள் உரிமைக் கோரியது மிகவும் காலந்தாழ்ந்து உருவானதா?
8.முஸ்லிம்களுடைய நிரந்தரமான, தெள்ளந்தெளிவான உடமை உரிமையை தகர்த்துவிட்டா ஹிந்துக்கள் அவ்விடத்தில் வழிபாட்டுரிமையை பெற்றனர்?
9.இந்த இடம் ஹிந்துக்களின் நம்பிக்கையின்படி ராமன் பிறந்த இடமா?
10.ராமனுடைய பிறந்த இடம் என்ற நிலையில் ஹிந்துக்கள் புராதனக் காலம் முதல் இங்கு வழிபாடு நடத்துகின்றனரா?
11.கட்டிடத்தில் காணப்படும் சிலையும் இதர ஹிந்துமத
வழிபாட்டுப் பொருட்களும் 1949 டிசம்பர் 22 ஆம் தேதி ரகசியமாக அங்கு வைக்கப்பட்டது என்ற வாதம் சரியா?
12.தகர்க்கப்பட்ட கட்டிடத்தோடு இணைந்துள்ள ராம்சம்பூத்ரா, பண்டாரம், சீதா ரஸோயி ஆகிய பெயர்களில் குறிப்பிடப்படும் நிர்மாணங்கள் உண்மையில் என்ன? அவை கட்டிடத்தின் ஒருபகுதியா?
13.கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதி புராதனமானதா?
14.சிலைகள் இருக்குமிடத்தில் முஸ்லிம்களின் மஸ்ஜித் கட்ட அனுமதியில்லை என்ற இஸ்லாமிய சட்டத் திட்டத்தின்படி இது மஸ்ஜிதாக இருக்க முடியாது என்ற வாதம் சரியா?
15.ஹிந்துக்களுக்கு மட்டுமே நுழைய அனுமதிக்கப்பட்ட இடமா சர்ச்சைக்குரிய பகுதி?
16.இடிக்கப்பட்ட பிறகு இது ஒரு முஸ்லிம் வழிப்பாட்டுத் தலமா?
17.சர்ச்சைக்குரிய இடம் முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் என்றால் தொடர்ந்து வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாமா?
18.இடத்தின் உரிமை எந்த கட்சிதாரருக்கு?
19.இதர முஸ்லிம்களின் மஸ்ஜிதுகளிலிருந்து வித்தியாசமாக சர்ச்சைக்குரிய கட்டிடத்தில் மினாராக்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்ததால் அது ஒரு முஸ்லிம் மஸ்ஜித் என்ற வாதம் சரியா?
20.இடத்தின் உரிமை கிடைக்காத கட்சிதாரருக்கு எவ்வித வணக்க வழிபாட்டிற்குரிய வசதிகளை செய்துக் கொடுப்பது?

மேற்கண்ட கேள்விகள் அனைத்திற்கும் இலக்கமிட்ட தீர்ப்பை நீதிமன்றம் வழங்காது. ஆனால் மேற்குறிப்பிட்ட விஷயங்களை அடக்கிய பொதுவான தீர்ப்பை வியாழக்கிழமை வழங்கும்.

வரலாற்று ரீதியான, நம்பிக்கை ரீதியான தர்க்க விவகாரத்தில் விஞ்ஞானப் பூர்வமான தொல்பொருள் ஆய்வு நடத்திய பிறகு கூறப்படும் இத்தீர்ப்பு வரலாற்றில் அபூர்வமானதாகும்.

செய்தி:மாத்யமம்

புதன், 22 செப்டம்பர், 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: அமைதி காக்க வேண்டும்...! தமுமுக தலைமை வேண்டுகோள்

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு செப்டம்பர் 24 அன்று வெளிவரும் நிலையில் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க எல்லா மொழி நாளிதழ்களிலும் விளம்பரமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித், ராமர் கோயிலை இடித்து கட்டப் பட்டதா? இல்லையா? என்பது குறித்த வழக்கில்தான் தீர்ப்பு வெளிவரவிருக்கிறது.

இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்குகள் தனி என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருக்கும் அனைத்து ஜமாத்துகள், சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள், வட்டார மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு தமுமுக சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர் கள் எழுதியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது...

“பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இக்கடிதம் தங்களை பூரண சுகத்தோடும், இஸ்லாமிய சிந்தனை களோடும் சந்திக்கட்டுமாக.!

1992 டிசம்பர் 6&ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், 1995 முதல் தமுமுக தொடர்ந்து டிசம்பர் 6-ல் போராட்டங்களை நடத்தி வருவதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதும் நீங்கள் அறிந்த செய்திகளாகும்.

1948 முதல் நடந்துவரும் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் செப்.24, 2010 அன்று தீர்ப்பு வெளிவர இருக்கிறது.

தீர்ப்பு நியாயமான முறையில் நமக்கு கிடைக்க அன்றாடத் தொழுகைகளிலும், ஜும்ஆ தொழுகைகளிலும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.

தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட் டமாகக் கருதாமலும், பாதகமாக வந்தால் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் இருக்கவேண்டும் என்பதை அனைத்து பள்ளிகளிலும் ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒருவேளை தீர்ப்பு தேதி தள்ளிப் போனாலும், இதே அறிவுரையை அப்போதும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பொது அமைதி, சட்டம்&-ஒழுங்கு ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து, அதற்காக இறைவனிடம் பிரார்த் திப்போமாக.

தமுமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முஸ்-லிம்கள் வாழும் பகுதிகளிலும், முஸ்லிம்களின் சொத்துக்கள் இருக்கும் பகுதிகளிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யு மாறு காவல்துறையிடம் கோரிக் கை வைத்துள்ளோம்.

மேற்கண்டவாறு தமுமுக தலைவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

மத்தியபிரதேசில் 10 ஆயிரம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தேர்வு: அதிர்ச்சித் தகவல்

புதுடெல்லி,செப்.19:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவரவிருக்கும் சூழலில் இந்தியாவில் அமைதியை விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காகவும் பிரார்த்திக் கொண்டிருக்கும் வேளையில் ராஜேஷ் பிட்கார் என்பவர் இந்தியாவை ஹிந்து தேசமாக மாற்ற 10 ஆயிரம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை தேர்வுச் செய்துவருகிறார் என்ற அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது.

இந்த பயங்கரவாதிகளின் தேர்வுக்குப் பெயர் ஹிந்து யோத்யா பாரதி அபியான் என்று பெயராம்.

இதில் அதிர்ச்சித்தரும் தகவல் என்னவெனில், இந்த பயங்கரவாதிகளின் நேர்முக தேர்வு நான்கு சுவற்றிற்குள் ரகசியமாக நடைபெறவில்லை என்பதுதான்.
ஆம்!, வெட்ட வெளிச்சமாக இந்த தேர்வு நடந்துவருகிறது. இந்த ஹிந்து யோத்யா பாரதி அபியானுக்கு தலைமை வகிக்கும் ராஜேஷ் பிட்கார் என்பவரும், அதன் வழிகாட்டிகளில் ஒருவரான தாமோதர் சிங் ஜி ஜாதவ் என்பவரும் வெளிப்படையாகவே பொதுமக்களுக்கு பயங்கரவாத நேர்முகதேர்வுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இவர்களை பயங்கரவாத நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுக்கும் சுவரொட்டிகள் மத்தியபிரதேச மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக டெல்லியைச் சார்ந்த சுதந்திர பத்திரிகையாளரான விஜய் பிரதாப் ஒரு தகவலை தெரிவிக்கிறார். கடந்த 16-ஆம் தேதி பயங்கரவாத தேர்வை நடத்தும் ராஜேஷ் பிட்கார் விஜய் பிரதாபை அழைத்துள்ளார். இவருடனான கலந்துரையாடலின் பொழுது, பயங்கரவாதிகளின் தேர்வை ஒப்புக்கொண்ட ராஜேஷ் பிட்கார் தங்களின் நோக்கம் ஹிந்துராஷ்ட்ரம் உருவாக்குவதுதான் என்பதையும் தெரிவித்துள்ளார்.

"இந்த இயக்கம் இளைஞர்களின் இயக்கம். இது தீவிர சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஹிந்து ராஷ்ட்ரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும்." என்று கூறியுள்ளார் ராஜேஷ் பிட்கார்.

தங்களது இயக்கத்தின் பணிகளைக் குறித்து ராஜேஷ் பிட்கார் கூறுகையில், "நாங்கள் 10 ஆயிரம் பேரைக் கொண்ட தீவிரவாத இயக்கத்தை உருவாக்குகிறோம். நாங்கள் இதர இயக்கங்களைப் போன்று அல்ல." என்கிறார்.

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக் குறித்து கூறுகையில், "இது தேசத்தின் பெருமை சார்ந்த ஒன்று. எங்கள் இயக்கம் இவ்விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பணியை ஆற்றும்" என்கிறார்.

தற்பொழுது நமது கேள்வி என்னவெனில் மத்திய-மாநில அரசுகள் இத்தகைய பகிரங்கமாக செயல்படும் பயங்கரவாதிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் சாதிப்பது ஏன்?
செய்தி:twocirlces.நெட் , மணற்கேணி டைம்ஸ்

சனி, 18 செப்டம்பர், 2010

பாப்ரி மஸ்ஜித்:காங்கிரசுக்கு கடைசி வாய்ப்பு

1992 ஆம் ஆண்டு அயோத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இறையில்லமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது மஸ்ஜிதா அல்லது கோயிலா என்பதுக் குறித்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வருகிற செப்.24 ஆம் தேதி வழங்கவிருக்கிறது. இந்நிலையில் சுதந்திர இந்தியா கண்ட மிகப்பெரிய மத பயங்கரவாதத்திற்கு காரணமான மஸ்ஜித்-மந்திர் சர்ச்சை மீண்டும் நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பாப்ரி மஸ்ஜிதின் கம்பீரமான மினாராக்களை தகர்த்தெறிந்து தேசமுழுவதும் மதவெறியைத் தூண்டி கலவரத்தை நடத்திய சங்க்பரிவார் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திவிட்டது.

வரலாற்று தொல்பொருள் ஆராய்ச்சி ஆவணங்கள் மஸ்ஜித் அவ்விடத்தில் இருந்ததை நிரூபித்தாலும் கூட எப்பாடுபட்டாவது ராமர்கோயில் கட்டியே தீருவோம் என சங்க்பரிவாரின் தலைவர்கள் கூறிவருகின்றனர்.

நம்பிகையுடன் தொடர்புடைய விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படமாட்டோம் என அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாயினும் பரவாயில்லை ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் சங்க்பரிவாரின் நிலைப்பாடு நஷ்டமடைந்த அரசியல் எதிர்காலத்தை மீட்பதற்கான ஆயுதமாக அயோத்திப் பிரச்சனையை பயன்படுத்தும் தீவிர முயற்சியாகும். இதனால் இப்பிரச்சனை மீண்டும் தேசத்தின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் மத வன்முறையாக வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசு உள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு செப்.24 அன்று திட்டமிட்டப்படி கூறப்படும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஹிந்து-முஸ்லிம் நல்லிணக்க சூழல் பாதிக்காமலிருக்கவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு உயரிய முன்னுரிமை வழங்கவேண்டும் எனக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பிவிட்டது.

அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய அரசு 458 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்பவேண்டும் என உ.பி.அரசும் கோரியிருந்தது.

மத்திய அரசு ஊடகங்கள் மூலமாக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விளம்பரப்படுத்தி வருகிறது.

நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது எதிர்ப்பையும், அச்சுறுத்தலையும் முழக்கியுள்ளனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.இவ்விவகாரத்தில் ஏற்கனவே சங்க்பரிவார்கள் இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், நீதி பீடத்தையும் புறக்கணித்தவர்களாவர்.

வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்கள் மூலமும் இந்தியாவின் தேசிய, ஜனநாயக நலன்களையெல்லாம் கருத்தில் கொள்ள தாங்கள் தயார் அல்ல என்பதை 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததன் மூலம் நிரூபித்துள்ளனர் சங்க்பரிவார்கள்.

நீதிமன்றம் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் ஏற்றுக்கொள்வதும், எதிராக மாறினால் தூக்கி வீசுவதும் சங்க்பரிவாரின் பாணியாகும்.

1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22-23 தேதிகளில் மஸ்ஜிதிற்குள் அத்துமீறி சிலைகளை வைத்ததற்கு ஆதரவாகவும், 1950 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில் மஸ்ஜிதிற்குள் வைக்கப்பட்டிருந்த சிலைகளை மாற்றுவதை தடைச்செய்தும், மஸ்ஜிதிற்குள் பூஜையை அனுமதித்தும் உ.பி மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்புகளை கூறியபொழுது நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது சங்க்பரிவார்.

பாப்ரிமஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் தற்காலிக கோயிலை அவர்கள் கட்டிய பொழுதும் அவ்விடத்தின் உரிமைத் தொடர்பான விவகாரத்தில் தங்களின் பலகீனத்தை அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆதலால், மஸ்ஜித் அமைந்திருந்த இடத்தின் உரிமைக் குறித்த வழக்குத் தீர்ப்பில் அவர்களுக்கு சந்தேகம் எழுவது இயல்பானதாகும்.

தீர்ப்பு வரும் முன்னரே, அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவதன் மூலம் தங்களின் நம்பிக்கைக் குறித்த சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளதே காரணமாகும்.

விவாதத்தைக் கிளப்பி மீண்டும் ஹிந்துப் பயங்கரவாதத்திற்கு உரமூட்டி மக்களிடையே மதவெறியைத் தூண்டிவிடுவதன் மூலம் மத்திய-மாநில அரசுகளையும்,நீதித் துறையையும் நிர்பந்தத்தில் சிக்கவைப்பதும் சங்க்பரிவார்களின் தந்திரங்களில் ஒன்றாகும்.

உண்மையான ஆதாரங்களும், நியாயங்களையும் தாண்டி 'பொதுமனசாட்சி' என்ற பெரும்பான்மையினரின் மனோநிலையை நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளும் புதிய நடைமுறை உள்ளது.

பாப்ரிமஸ்ஜித் தொடர்பான சில வழக்குகளிலேயே நாம் இதனை காணலாம். ஆகவே, கலவரங்களைத் தூண்டி பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்பு என்ற மாயையை தோற்றுவித்தால் உண்மையான தீர்ப்பையே மாற்றியமைத்துவிடலாம் என்ற மோகம் சங்க்பரிவார்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தீர்ப்பு எவ்வாறாயினும், அதனை தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு பயன்படுத்தும் தீவிர முயற்சியில் சங்க்பரிவார் இறங்கியுள்ளது வெட்ட வெளிச்சமாகும்.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு எவ்வாறு இப்பிரச்சனையை கையாளப் போகிறது? என்பதுதான் கேள்வி.

ஜவஹர்லால் நேரு முதல் நரசிம்மராவ் வரை மாறி மாறி இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசுகளின் நிலைப்பாடுகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆக்கமும்,ஊக்கமும் ஊட்டக்கூடியதாகவே அமைந்திருந்தன.

இறுதியாக, உ.பி மாநில அரசியலிருந்து துரத்தப்பட்டு தேசிய அரசியலில் பலகீனப்பட்டு நிற்கும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. எல்லாவற்றையும் திருத்தியும், மன்னிப்புக் கோரியும் இழந்ததை மீட்டெடுக்க வெற்றிகரமான காய்நகர்த்தல்களை காங்கிரஸ் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில்தான் மீண்டும் ஒரு சோதனையாக பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு வரவிருக்கிறது.

நீதிமன்றத் தீர்ப்பைக் குறித்த சங்க்பரிவார்களின் கடுமையான பதிலும், நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து தீர்வுகாணலாம் என்று இரு சமூகங்களிலுள்ள சில தலைவர்களின் வேண்டுகோளையும் முன்வைத்து சில முயற்சிகளை காங்கிரஸ் எடுத்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு என்னவாயினும், இரு சமூகங்களிடையே உள்ள நல்லிணக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

ஒரு தலைபட்சமாக நிர்பந்தம் செலுத்துவது தீர்வு காண்பதற்கு இயலாது எனவும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெற்றால்தான் இப்பிரச்சனையை தீர்க்க இயலும் எனவும் பாப்ரி மஸ்ஜித் விவாதம் கிளம்பிய துவக்க நாள்களில் ஒன்றான 1950 ஜனவரி ஒன்பதாம் தேதி உ.பி முதல்வர் கோவிந்த் பல்லபந்திற்கு எழுதிய கடிதத்தில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து ஹிந்துத்துவா வாதிகளுக்கு முன்னர் வேண்டுமென்றே தோல்வியை ஒப்புக்கொண்டே வந்துள்ளது.

தங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளை புரிந்துக்கொண்டு பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் ஜனநாயக மதசார்பற்ற கொள்கைகளோடான மதிப்பை நிரூபிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கடைசி வாய்ப்புதான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு என்றுக் கூறலாம்.

தேசத்தின் ஜனநாயக மதசார்பற்ற கட்டமைப்பின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அளவுகோலாகவும் இது மாறலாம். அத்தகையதொரு மிக்க கவனத்தோடு இப்பிரச்சனையை கையாளும் விதமாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படும் என எதிர்பார்ப்போம்.

விமர்சகன்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

செப்.17 பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு: 35000 துணை ராணுவப் படையினரை அனுப்ப உ.பி அரசு கோரிக்கை

புதுடெல்லி,செப்.4:பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தின் உரிமைத் தொடர்பான 125 ஆண்டுகள் பழமையான வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு பெஞ்ச் வருகிற செப்.17 அன்று வழங்கவிருக்கிறது.

சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாப்பதற்காக துணை ராணுவப் படையினரை அனுப்ப உ.பி.அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

35000 துணைராணுவப் படையினரை(400 கம்பெனி) அனுப்ப உ.பி.அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரியிருக்கிறது.முன்னர் உ.பி.கவர்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு இவ்வளவு ராணுவத்தினர் தேவை என அறிவித்திருந்தார். இந்த கோரிக்கையை முதல்வர் மாயாவதி ஆதரித்துள்ளார்.

அயோத்தியா, ஃபாஸியாபாத் ஆகியவை மட்டுமின்றி வாராணாசி, கான்பூர், லக்னோ, மாத்துரா, அலஹபாத், கோண்டா, அலிகர், மொராதாபாத், மீரட் உள்ளிட்ட நகரங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படவேண்டும் என மாநில அரசு கருதுகிறது.

கேபினட் செகரட்டரி சசாங்க் சேகரின் தலைமையில் நடந்த போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் கூட்டத்தில்தான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

நேற்று முன் தினம் எ.டி.ஜி.பி ப்ரிஜ்லால் மீரட் பகுதியில் போலீஸ் அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்தினார். காமன்வெல்த் போட்டிக்கும், பாப்ரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பிற்கு பிறகும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எ.டி.ஜி.பி அறிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு ஏற்றுக்கொள்வோம் - ஜமாஅத்தே இஸ்லாமி

நாங்கள் உன்னை மறக்கவில்லை!

புதுடெல்லி,ஆக31:பாப்ரி மஸ்ஜித் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு என்னவெனினும் முஸ்லிம்கள் அங்கீகரிக்க வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி என்ற அமைப்பு கூறியுள்ளது.

இந்திய முஸ்லிம்கள் பொறுமையை கையாள்பவர்கள். இந்த அணுகுமுறை பாப்ரி மஸ்ஜித் வழக்கிலும் அமையும் என அவ்வமைப்பின் தலைவர் செய்யத் ஜலாலுதீன் உமரி கூறுகிறார்.

ஊடகங்கள் இந்திய முஸ்லிம்களின் பாராட்டப்பட வேண்டிய இந்த அணுகுமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என கோரியுள்ளார் அவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

அயோத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு நரசிம்மராவ் முக்கிய பங்காற்றினார்- அசோக் சிங்கால்

ஹைதராபாத்,ஆக19:அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில தற்காலிகமாக ராமர் கோவில் கட்டுவதற்கு மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் முக்கிய பங்காற்றியதற்தாக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால் அவரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் டிச-6 1992 அன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை நிறைவேற்றினார் என பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறினார்.

ராமர் கோவில் கட்டுவதில் நரசிம்மராவின் பங்களிப்பில் எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லை அவரின் பங்கு மறைக்க முடியாதது. பிரதமர் நரசிம்மராவ் பாபரி மஸ்ஜிதை இடிப்பதை தடுக்கும் நடவடிக்கைகளில் எவ்வித முயற்சிகளும் எடுக்கவில்லை மேலும் உடனே அதே இடத்தில ராமர் கோவில் கட்டுவதையும் தடுக்கவில்லை.

பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில மீண்டும் பள்ளியைக் கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்ததை நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவர் ராமர் கோவில் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டி உள்ளார். மேலும் எல்லா ஹிந்துகளின் மனதிலும் இன்றும் நரசிம்மராவ வாழ்கிறார். என்றும் அசோக் சிங்கால் கூறினார்.

ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் அமைதியான முறையில் மேற்க் கொள்ளப்படும் "எங்களின் கனவான பெரிய இராமர் கோவில் கட்டுவதற்காக கையெழுத்து இயக்கம், பொதுகூட்டங்கள் மற்றும் யாகங்களும் தொடங்கப்படும்." என்றும் அவர் கூறினார்.

"அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். இதற்காக அனுமான் சக்தி விழிப்புணர்வு இயக்கத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.ஆகஸ்ட் 16 ம் தேதி முதல் கிராம, தாலுகா, மாவட்ட அளவில் விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.

இது தொடர்பாக நாடு முழுவதும் ஆயிரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நாங்கள் தொடங்கியுள்ள அனுமான் சக்தி விழிப்புணர்வு இயக்கம் தேசிய அளவில் நடைபெறும். இதன் மூலம் இந்துக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்

இந்துக்கள் எப்போதும் அமைதியையே விரும்புகிறார்கள். அயோத்தியில் இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும். இதற்காக நாங்கள் பாஜகவை சார்ந்து இருக்கவில்லை.

பேச்சுவார்த்தை மூலமோ சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டோ இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது.

நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து ராமர் கோவில் கட்டுவது குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்." என்றார்.

கஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க கஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவதற்காக பிரதமர் மன்மோகன்சிங் எடுக்கும் நடவடிக்கைகளை அவர் கண்டித்தார்.

"ஜம்மு-கஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது பேரழிவுகளை உண்டாக்கும். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி மேலும் கஷ்மீருக்கு சிறப்ப்பு அந்தஸ்து வழங்கும் காஷ்மீருக்கான சட்டத்தின் 370 வது பகுதியையும் நீக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

எல்லையோரப் பகுதிகளில் வாழும் ஹிந்துக்கள் வார்த்தைகளால் கூற முடியாத அளவு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் மேலும் நான்கு லட்சம் ஹிந்துக்கள் ஜம்மு-கஷ்மீர் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

எல்லைப் பகுதிகளில் ஊடுருவல்களை தடுக்க இராணுவ கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.