ஹமாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹமாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 செப்டம்பர், 2010

புதிய ஏவுகணைகளை அறிமுகம் செய்தது ஹமாஸ்

காஸ்ஸா,செப்.3:இஸ்ரேலின் உள்பகுதிக்குள் சென்று தாக்கும் சக்திக்கொண்ட புதிய ஏவுகணைகளை ஹமாஸ் நிர்மாணித்துள்ளது.

80 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணையை நிர்மாணித்துள்ளதாக ஹமாஸை மேற்கோள்காட்டி குத்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஹமாஸிடமிருக்கும் ஏவுகணையை விட மூன்று மடங்கு சக்திக்கொண்டது இவை. இஸ்ரேலின் ஹெர்ஸ்லியா, கஃபர் ஷூபா ஆகிய நகரங்களை சென்றடையும் சக்திக் கொண்டவை இவை எனக் கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

மப்ஹூஹ் கொலை:யு.ஏ.இ ஜெர்மனியிடம் விளக்கம் கேட்கிறது

அபுதாபி,ஆக15:ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல் மப்ஹூஹ் யு.ஏ.இயில் வைத்து கொல்லப்பட்டதுத் தொடர்பாக ஜெர்மனியிடம் அந்நாடு விளக்கம் கேட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய கைதுச் செய்யப்பட்டுள்ள இஸ்ரேலிய உளவாளி யூரி ப்ரோட்ஸ்கி போலி ஜெர்மனி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி குற்றத்தில் ஈடுபட்டுள்ளது உறுதியான நிலையில்தான் இந்த விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

யூரி போலந்தில் வைத்து கைதுச் செய்யப்பட்டு ஜெர்மனியிடம் ஒப்படைத்த பிறகு இஸ்ரேலுக்கு திரும்பிச் செல்ல ஜெர்மனி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு கவலைத் தெரிவித்துள்ளது.

யு.ஏ.இ. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சட்டப்பிரிவு இணை அமைச்சர் டாக்டர்.அப்துற்றஹ்மான் அல் அவாதிதான் ஜெர்மனியிடம் விளக்கம் கேட்பதுத் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் மப்ஹூஹ் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்துக் கொல்லப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஹமாஸ்

ஆக2:இஸ்ரேலுடன் எவ்விதத்திலும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஹமாஸ் கூறியுள்ளது.

"பாலஸ்தீன்- இஸ்ரேலுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நேரடியாகவோ மறைமுகமாகவோ நியாயப்படுத்த முடியாது." என்று ஹமாஸ் அரசியல் தலைவர் காலித் மிஷால் கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் வற்புறுத்துதலின் பேரிலேயே நடத்தப்படுகிறது என்றும் கூறினார்.

மூத்த ஃபலஸ்தீன தலைவர்,அரபுக்கள் சங்கத்தின் நேரடி அமைதி பேச்சுக்கான மறு அழைப்பை நிராகரித்து,இந்த பேச்சுவார்த்தையை முறைப்படுத்த முடியாது ஏனெனில் இதை அரபுக்கள் விரும்பி செய்யவில்லை மாறாக அவர்களின் மீது நிர்பந்தப் படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இஸ்ரேலை தொடர்ந்து எதிர்த்து நிற்பதும்,போராடுவதுமே ஃபலஸ்தீன தேசத்துக்கு ஒரே வழி, இதுவே நமக்கு பெருமை மற்றும் கண்ணியத்திற்கு வழி என்று மிஷால் இஸ்லாமிய அமைப்புகளுக்கு மீண்டும் மீண்டும் கூறினார்.

கடந்த வியாழனன்று,அரபுக்கள் சங்கத்தின் அமைதி நடவடிக்கை கமிட்டி, பாலஸ்தீன்-இஸ்ரேலுக்கிடையேயான நேரடி அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2008-ஜனவரி 2009 வரை ஹமாஸ் இயங்கும் காஸ்ஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1400க்கும் மேற்பட்டோர் பலியாயினர், இதனால் மத்திய கிழக்கு அமைதி பேச்சு முறிவடைந்தது.

பலத்த உட்கட்சி எதிர்ப்பையும் மீறி மே மாதத்தில் அமெரிக்கா ஏற்பாடு செய்த இஸ்ரேலுடன் சமீப பேச்சு வார்த்தையில் ஃபலஸ்தீன அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 25 மே, 2010

ஹமாஸ் தலைவர் படுகொலை:இஸ்ரேல் தூதரை ஆஸ்திரேலியா வெளியேற்றியது

கான்பெர்ரா:ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் கடந்த ஜனவரி மாதம் துபாயில் வைத்து இஸ்ரேலிய மொசாத் ஏஜண்டுகளால் கொல்லப்பட்டார்.

அவருடைய கொலையாளிகள் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டை போலியாக பயன்படுத்தியதை துபாய் போலீஸ் கண்டறிந்திருந்தது.

இந்நிலையில் இஸ்ரேலின் இத்தகைய மோசமான நடவடிக்கையை கண்டித்து ஆஸ்திரேலியா இஸ்ரேலின் தூதரக அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது.

மொசாத் உளவாளிகள் மப்ஹூஹை கொல்வதற்காக ஆஸ்திரேலியாவின் 4 பாஸ்போர்ட்டுகளை போலியாக பயன்படுத்தி மோசடிச் செய்துள்ளனர்.

'ஒரு நட்பு நாட்டின் நடவடிக்கை அல்ல இஸ்ரேல் செய்தது’ என ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டீஃபன் ஸ்மித் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஏற்கனவே பிரிட்டன் மப்ஹூஹ் கொலையில் அந்நாட்டு பாஸ்போர்ட்டுகளை போலியாக பயன்படுத்தி மோசடிச் செய்த இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்து பிரிட்டனின் இஸ்ரேலிய தூதரக அதிகாரியை வெளியேற்றியிருந்தது.

இஸ்ரேலில் வசிக்கும் ஆஸ்திரேலியக்காரர்களின் பாஸ்போர்ட்டைத்தான் மோசடியாக மொசாத் உளவாளிகள் பயன்படுத்தியுள்ளனர்.

இஸ்ரேலிய அதிகாரிகளின் துணையில்லாமல் இச்சம்பவம் நடக்க வாய்ப்பில்லை என ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது. ஆஸ்திரேலியா நாட்டு ஃபெடரல் போலீஸ் இஸ்ரேலுக்குச் சென்றிருந்தது. ஆனால் மப்ஹூஹ் கொலைக்கு காரணம் நாங்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என இஸ்ரேல் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 22 மே, 2010

ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் விடுதலைச் செய்தது.

காஸ்ஸா:இஸ்ரேலால் சிறையிலடைக்கப்பட்ட ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான முஹம்மது அபூ தீரை இஸ்ரேல் விடுதலைஸ் செய்துள்ளது.

இஸ்ரேலிய ராணுவ வீரன் கிலாத் ஷாலிதை ஹமாஸ் கைது செய்ததைத் தொடர்ந்து அபூ தீர் உள்ளிட்ட 50 ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் கைது செய்து சிறையிலடைத்தது.

ஷாலிதை விடுவிக்க தயாரான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அபூ தீர் விடுதலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் ஒன்பது ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் விடுதலை செய்திருந்தது.

ஷாலிதின் விடுதலைக்கு பகரமாக ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளை விடுதலை செய்யவேண்டுமென்பது ஹமாஸின் கோரிக்கையாகும். அபூதீர் 40 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிறையிலிருந்து விடுதலையான அபூ திரை ஏராளமான ஃபலஸ்தீன் மக்கள் வரவேற்றனர்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 20 பிப்ரவரி, 2010

ஹமாஸ் தலைவர் கொலையில் மொஸாத் பயன்படுத்தியது ஆஸ்திரியா சிம்கார்டு- 2008 மும்பைத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது

துபாய்:துபாயில் ஹமாஸ் தலைவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலையாளிகளான மொஸாத் ஏஜண்டுகள் ஆஸ்த்ரியா நாட்டின் சிம் கார்டுகளை பயன்படுத்தியது குறித்து தீவிரவாத தடுப்பு போலீசார் விசாரித்துவருவதாகம் இது தொடர்பாக துபாய் போலீசுடன் தொடர்புக் கொண்டுள்ளதாகவும் ஆஸ்திரியா நாட்டின் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ருடோல்ஃப் கொள்ளிய கூறினார்.

விசாரணை நடந்து வருவதால் இதுக்குறித்து அதிகம் கூற இயலாது என அவர் தெரிவித்தார். 7 ஆஸ்திரியா சிம் கார்டுகளை கொலையாளிகள் பயன்படுத்தியுள்ளனர். 2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போதும் இத்தகைய சிம் கார்டுகளை பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஸீ நியூஸ் சானல் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வியாழன், 18 பிப்ரவரி, 2010

ஹமாஸ் தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளில் ஏழுபேர் வசிப்பது இஸ்ரேலில்

துபை:நேற்று முன் தினம் துபை போலீஸ் ஹமாஸ் தலைவர் மப்ஹூஹ் கொலையாளிகளைப் பற்றிய வீடியோ காட்சிகளை வெளியிட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கு புதிய திசை நோக்கிச் செல்கிறது.

வீடியோ காட்சிகள் மூலம் கண்டறியப்பட்ட 11 பேரில் பிரான்சைச் சார்ந்தவர் தவிர மற்ற அனைவரும் போலி பாஸ்போர்ட்டுகளில் பயணம் செய்துள்ளனர். இவர்களின் உண்மையான நாடு எது என்பது குறித்து குழப்பம் தொடர்கிறது. குற்றவாளிகளின் பெயர் கொண்ட ஏழுபேர் தற்ப்பொழுது இஸ்ரேலில் வசித்துவருவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இவர்கள் இக்குற்றத்தை செய்யவில்லை எனக் கூறுகின்றனர்.

பிரிட்டீஷ் பாஸ்போர்ட்டில் பயணம் செய்தவர்களில் ஆறுபேர் போலி முகவரியிலான பாஸ்போர்ட்டை பயன்படுத்தியுள்ளனர். பெயரும் நம்பரையும் மாற்றாமல் புகைப்படத்தை மாற்றியுள்ளனர். இவர்களுக்கு ஒருமாதம் முன்பு பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் இவர்களில் ஏழுபேர் தற்ப்பொழுது இஸ்ரேலில் வசிக்கின்றனர். தங்களுக்கு இக்குற்றத்தில் பங்கில்லை என அவர்கள் ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.

அதே வேளையில் இக்கொலையை செய்தவர்கள் மொஸாத் தான் என்று ஹமாஸின் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் வலுவடைந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி துபைக்கு வந்த இவர்கள் பின்னர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இவ்விவகாரத்தில் இஸ்ரேல் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ஆனால் பிரிட்டீஷ் பாஸ்போர்ட்டை போலியாக பயன்படுத்தியதைக் குறித்து விசாரணை நடத்தப்போவதாக பிரிட்டீஷ் பிரதமர் அறிவித்ததாக சி.என்.என் கூறுகிறது. இஸ்ரேல் குடிமகன்கள் பிரிட்டீஷ் பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தியதாக கண்டறிந்தால் தூதரக உறவில் அது இன்னொரு பிரச்சனைக்கு காரணமாகும் என தெரிகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ஹமாஸ் தலைவர் படுகொலையின் பின்ணணியில் மொஸாத் இருப்பது உறுதியானால்; இஸ்ரேல் பிரதமருக்கு சர்வதேச அரெஸ்ட் வாரண்ட்: துபாய் காவல்துறை

துபாய் :சமீபத்தில் துபாயில் ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹுஹ் படுகொலை செய்யப்பட்டதில் இஸ்ரேலின் பங்கு உறுதிப்படுத்தப்பட்டால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹீக்கு சர்வதேச அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று துபாய் காவல் துறை தலைவர் எச்சரித்துள்ளார்.

ஹமாஸ் தலைவர் மஹ்மூத் கடந்த ஜனவரி 20 அன்று துபாய் ஹோட்டலில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதை செய்தது இஸ்ரேல் தான் என்று ஹமாஸ் ஆணித்தரமாக சொல்லி வருகிறது.

இது பற்றி கருத்து தெரிவிக்க மறுக்கும் இஸ்ரேல் மஹ்மூத் துபாயில் சில ஈரான் தலைவர்களை சந்திக்க வந்ததாகவும் அவரின் வேறு எதிரிகள் இக்கொலையில் பின்னால் இருக்க வாய்ப்புண்டு என்றும் தெரிவித்தது.

இச்சூழலில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த துபாய் காவல் துறை தலைவர் ஜெனரல் தஹி கஃபன் தமீம் "இக்கொலையின் பின்னால் இருப்பது மொஸாத் என்பது உறுதிப்படுத்தப்பட்டால் இஸ்ரேலிய பிரதமருக்கு சர்வதேச அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். ஏனென்றால் மொஸாத் பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் செய்திருக்க முடியாது" என்றும் அவர் விளக்கினார்.

மேலும் "மஹ்மூத் ஈரானிய அதிகாரிகளை சந்திக்க விரும்பினால் அவர் எளிதாக ஈரானுக்கோ அல்லது சிரியாவிற்கோ சென்று சந்தித்திருக்க முடியும். அவர் துபாய்க்கு ஹமாஸின் அலுவலாக வரவில்லை என்றும் எதிர்காலத்தில் ஹமாஸ் மற்றும் மொஸாத்தும் தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்கும் தளமாக துபாயை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்" என்றும் கூறினார்.
source:inneram

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

பாலஸ்தீன் ஐரோப்பிய யூனியனின் அறிக்கை - ஹமாஸ் அதிருப்தி!


பலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிரச்னையைத் தீர்ப்பதற்கான ஓர் அரசியல் தீர்வு, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தின் எதிர்காலம் ஆகியவை தொடர்பாக ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கை, பலஸ்தீன் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை என்று ஹமாஸ் கருத்துத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹமாஸ் பேச்சாளர் கலாநிதி ஸமீ அபூ ஸுஹ்ரி பலஸ்தீன் தகவல் மையத்துடனான (PIC) சந்திப்பின்போது, "பலஸ்தீன் பிரச்னை தொடர்பாக, நடுநிலையான - சர்வதேச நிலைபாட்டை மேற்கொள்வதில் ஐரோப்பிய யூனியன் முக்கிய பங்குவகிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
பலஸ்தீன் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஆதரவான எத்தகைய முன்னெடுப்பையும் ஹமாஸ் வரவேற்கும். அதேவேளை, 1967 ஆண்டுக்குரிய எல்லைகளுடன் பலஸ்தீன் தேசம் ஸ்தாபிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும். ஆனால், பலஸ்தீன் நிலப்பரப்பிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட எந்தவோர் இடத்திலும் இஸ்ரேல் நிலைகொள்வதை அது அங்கீகரிக்கப் போவதில்லை என்று ஸமீ அபூ ஸுஹ்ரி விளக்கமளித்தார்.

இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையை ‘அமைதியாகத் தீர்க்கும்’ வகையில் இஸ்ரேல் - எதிர்கால பலஸ்தீன் ஆகிய இருநாடுகளுக்கும் ஜெரூசலம் தலைநகராக இருக்கும் என்ற நிலைபாட்டினை ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு அமைச்சர்கள் கடந்த வியாழக்கிழமை ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source:inneram