பலஸ்தீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பலஸ்தீன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 நவம்பர், 2010

ஓநாய்களின் பள்ளத்தாக்கு’- பலஸ்தீன் என்ற திரைப்படம் மேலும் இஸ்ரேலுக்கு பலத்த அடி

ஐந்து ஆண்டுகள் இஸ்ரேலிய முற்றுகைக்குல் வதைக்கப்படும் காஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சென்ற துருக்கி கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை சித்தரிக்கும் ‘ஓநாய்களின் பள்ளத்தாக்கு’- பலஸ்தீன் என்ற பெயரில் துருக்கியில் ஒரு இராணுவ தாக்குதல் திரைப்படம் தயாரிக்கப்படுள்ளது

இத்திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 28 ஆம் தேதி வெளியாகிறது. இந்த பெயரில் ஏற்கனவே தொலைக்காட்சி தொடர் ஒன்று துருக்கியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதுடன் அந்த தொலைக்காட்சி தொடர் துருக்கி இஸ்ரேல் உறவில் மேலும் பல விரிசல்களை ஏற்படுத்தியுள்ளதாக துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன இந்த கப்பலில் இலங்கையை சேர்ந்த இரு மாணவர்கள் படுகாயம் அடைந்தமை குறிபிடத்தக்கது

One Man Army, Spy operation போன்ற இராணுவ முறைகளை கையாண்டு துருக்கி எதிரிகளை வேட்டையாடுவது இதில் சிதரிக்கபடுகின்றது சிறப்பு காட்சியாக ஒன்பது துருக்கி நாட்டு முஸ்லிம்களை படுகொலை செய்த flotilla கப்பல் தாக்குதலுக்கு உத்தரவிட்ட இஸ்ரேலிய கொமாண்டோ தலைவர் கொல்லப்படும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாலர்களை பலஸ்தீனின் ஓநாய்கள் என்று வர்ணித்து பெயர் சூட்டியுள்ளமையும் சிறப்பானதாக துருக்கிய மக்கள் தெரிவிக்கின்றனர் விரிவாக பார்க்க Video

ஓநாய்களின் பள்ளத்தாக்கு’-பலஸ்தீன் திரைப்படம் துருக்கி நாட்டுக்கும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகார சபைக்கும் ஏற்பட்டுள்ள முறுகலை தவிர்க்க அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பலத்த அடியாகும் என விமர்சிக்கப்படுகின்றது

அந்த திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் துருக்கியில் தொலைக்காச்சிகள், மற்றும் திரையரங்குகளில் காண்பிக்க படுகின்றது அந்த காட்சிகள் இங்கு பதிவு செய்யப்படுகின்றது

தேங்க்ஸ் டு : M.ரிஸ்னி முஹம்மட் ,OurUmmah.org


வியாழன், 30 செப்டம்பர், 2010

இனவாதத்துக்குத் துணைபோகும் இஸ்ரேலிய வழக்குமன்றம்

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரை அடுத்துள்ள ஷெய்க் ஜர்ராஹ் பிரதேசத்திலிருந்து அனேகமான பலஸ்தீன் குடும்பங்களை வெளியேற்றும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ள இஸ்ரேலிய உயர் வழக்குமன்றத்தின் செயல் முழுக்க முழுக்க இனக் காழ்ப்புணர்வுடையதும் பாரதூரமானதுமாகும் என பலஸ்தீன் நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்தஃபா அல் பர்கோதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (28.09.2010) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய உயர் வழக்குமன்றத்தின் உத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மண்ணின் மைந்தர்களான பலஸ்தீனர்களைத் தமது சொந்த இருப்பிடங்களை விட்டும் பலவந்தமாக வெளியேற்றுவதை சட்டபூர்வமாக்கிக்கொள்ள முயன்றுவரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் இத்தகைய நடவடிக்கைகள் மிகப் பாரதூரமானவை என்றும் புனித ஜெரூசல நகரில் வாழும் ஏனைய பலஸ்தீனர்களின் எதிர்கால இருப்புக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தலாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதான போர்வையின்கீழ் தமது சட்டவிரோதக் குடியேற்றங்களை விரிவாக்குவதிலும் புனித ஜெரூசல நகரினை யூதமயப்படுத்துவதிலும் ஈடுபட்டுவரும் இஸ்ரேலிய சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில், இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்

Israel soldier facebook photos

முன்னாள் இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாய் ஒருவர் தான் பலஸ்தீன் ஆண் கைதிகளைத் துன்புறுத்தியவிதம் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதை அடுத்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

திங்கட்கிழமை (16.08.2010) ஃபேஸ் புக்கில் 'இராணுவம் - என் வாழ்வின் சிறந்த கணங்கள்' என்ற தலைப்பில் கண்களும் கைகளும் கட்டப்பட்டிருந்த பலஸ்தீன் கைதிகளைத் தான் நடாத்திய விதத்தை வெளிக்காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு முன்னாள் இராணுவ பெண் சிப்பாயான Eden Abergil பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கைதிகளை நடாத்தும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய துஷ்பிரயோகம் குறித்துக் கடுமையான கண்டனங்கள் தற்போது எழுந்துள்ள நிலையில், இஸ்ரேலிய அதிகாரத் தரப்பு. குறித்த பெண் இராணுவ சிப்பாய் தற்போது பணியில் இல்லை என்பதால் மேற்படி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு தொடர்பில் தாம் பதிலளிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டு. வழமை போலவே தன்னுடைய நழுவல் போக்கையே கைக்கொண்டுள்ளது.

இஸ்ரேலியச் சிறைகளில் உள்ள பலஸ்தீனக் கைதிகள் காலங்காலமாக பல்வேறு காட்டுமிராண்டித்தனமான துன்புறுத்தல்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அஹ்ரார் எனப்படும் பலஸ்தீன் கைதிகளுக்கான நலன்புரிச் சங்கம் பல்வேறு கண்டன மனுக்களை ஐ.நா. முதலான சர்வதேச அமைப்புக்களுக்கு அனுப்பியும் பலஸ்தீன் கைதிகள் எதிர்கொண்டுவரும் அவல நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே மேற்படி புகைப்பட விவகாரம் நமக்கு உணர்த்துகின்றது.

செவ்வாய், 22 டிசம்பர், 2009

ஃபலஸ்தீனர்களிடமிருந்து திருடப்பட்ட உடல் உறுப்புகள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்

டெல்அவீவ்: ஃபலஸ்தீன் கைதிகளிடமிருந்து திருடப்பட்ட உடல் உறுப்புகளை இஸ்ரேலிய ராணுவவீரர்கள் உபயோகப்படுத்தியதற்காண தகவலை இஸ்ரேலிய அரசியல் கட்சியின் மூத்த தலைவரான அஹ்மத் தீலி வெளியிட்டுள்ளார்.

1990களில் டெல்அவீவில் சிறையிலிருந்த ஃபலஸ்தீனர்களிடமிருந்து பரவலாக இஸ்ரேலிய ராணுவம் உடல் உறுப்புகளை திருடியதாக மருத்துவ ஆய்வு மையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி தீலி கூறுகிறார்.

இந்த உடல் உறுப்புகள் பெரும்பாலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதயம், எலும்பு, கண், சிறு நீரகம் ஆகியவைத்தான் பெரும்பாலும் திருடப்பட்டுள்ளது.நோயாளிகள் மற்றும் இறந்துபோன ஃபலஸ்தீனர்களின் உடல்களிலிருந்து உறுப்புகள் திருடப்பட்டுள்ளன.
ஃபலஸ்தீனர்களிடமிருந்து திருடப்பட்ட உடல் உறுப்புகள் சர்வதேச சந்தையில் விற்கப்பட்டதாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது. உடல் உறுப்பு மாஃபியா கும்பலின் முக்கிய சூத்திரதாரி இஸ்ரேலிய அரசியல் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்தாதன் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டிருந்தது.

இஸ்ரேலிய படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட 16 வயது ஃபலஸ்தீனத்தைச் சார்ந்த பிலால் அஹ்மத் கனீமின் இறந்த உடலில் காணப்பட்ட முறிவு அடையாளங்கள் இஸ்ரேலிய உடல் உறுப்பு திருட்டை வெளிச்சம் போட்டு காட்டியது. கனீமின் உடல் வயிறு கீறப்பட்ட நிலையிலிருந்தது. தொடர்ந்து நடத்திய பிரேத பரிசோதனையில் உடல் உறுப்புகள் திருடப்பட்டது கண்டறியப்பட்டது. விசாரணையில் 20 ஃபலஸ்தீனர்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இவ்விவாதத்தைத் தொடர்ந்து டெல் அவீவில் ஃபாரன்ஸிக் மெடிசின் தலைவர் டாக்டர் யஹூதாஸ் 2004 ஆம் ஆண்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 15 டிசம்பர், 2009

வயோதிகப் பெண்மணி கைது - இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் மற்றுமொரு சாதனை(!?)

நப்லஸ்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (13.12.2009) அதிகாலையில் நப்லஸ் நகரில் திடீர் தாக்குதலொன்றை மேற்கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, 65 வயதான உம்மு பாக்கிர் என்ற பெண்மணியின் வீட்டுக்குள் பலவந்தமாகப் புகுந்து அவரைக் கைதுசெய்துள்ளதாக கைதிகள் தொடர்பான கற்கை மற்றும் மனித உரிமைகளுக்கான அஹ்ரார் மையம் தகவல் தெரிவித்துள்ளது. வயோதிகப் பெண்மணியிடம் வீரம்(!?) காட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர்
அஹ்ரார் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உம்மு பாக்கிர் எனும் வயோதிகப் பெண்மணியின் ஐந்து மகன்கள் ஏற்கெனவே இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, கடந்த மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அவருடைய மருமகள் நில்லி அல் ஸஃபாதியையும் இந்த மாதத் தொடக்கத்தில் அவரது எஞ்சியிருந்த ஒரே மகன் உமர் மற்றும் பேரன் பாக்கிர் பாக்கிர் (வயது 19) ஆகிய இருவரையும் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அஹ்ரார் மையத்தின் பணிப்பாளர் ஃபுவாட் அல் ஹஃப்ஷ் இதுபற்றித் தகவல் அளிக்கையில், இஸ்ரேலின் பெட்டாஹ் திக்வா தடுப்புக்காவல் நிலையத்தில் தற்போது அடைத்துவைக்கப்பட்டுள்ள உம்மு பாக்கிர் (வயது 65) பலஸ்தீன் கைதிகளிலேயே மிகவும் வயது முதிர்ந்தவர் என்றும், அவருடைய மூத்த மகன் பாக்கிர், மருமகள் நில்லியின் கண்பார்வையற்ற கணவன் ஆகியோரும் இதே தடுப்புக்காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கொஞ்சம்கூட மனிதாபிமானமின்றி, மகன்களுக்கு உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஏற்கெனவே பல்வேறு நோய்களால் துன்புற்றுக்கொண்டிருக்கும் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியை இப்படிக் கடத்திச் சென்று தடுப்புக் காவலில் வைத்திருக்கும் மிக இழிவான செயற்பாடானது அதன் மிலேச்சத்தனமான சுயரூபத்தை எடுத்துக்காட்டப் போதுமானதாகும் என்று கடிந்துரைத்த ஃபுவாட் அல் ஹஃப்ஷ், உம்மு பாக்கிரை உடனடியாக விடுவிப்பது தொடர்பில் விரைந்து செயற்படுமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளார்.
திடீர் சோதனை என்ற போர்வையில் தொடர் கைதுகள்
இதே தினத்தில் அல் ஹலீல் நகரத்தில் திடீர் சோதனை என்ற போர்வையில் களமிறங்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை பலஸ்தீன் இளைஞர் ஒருவரைக் கைதுசெய்து அவரது வீட்டிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துள்ளது.

அவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞரின் பெயர் அக்ரம் அல் ஹத்தாத் என்பதாகவும் அவரது வீட்டிலிருந்த நகைகளே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் திருடப்பட்டுள்ளன என்றும் உள்ளூர் வட்டாரங்கள் பலஸ்தீன் தகவல் மையத்திடம் தகவல் தெரிவித்துள்ளன.

நன்றி: PIC

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

பாலஸ்தீன் ஐரோப்பிய யூனியனின் அறிக்கை - ஹமாஸ் அதிருப்தி!


பலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிரச்னையைத் தீர்ப்பதற்கான ஓர் அரசியல் தீர்வு, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தின் எதிர்காலம் ஆகியவை தொடர்பாக ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கை, பலஸ்தீன் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை என்று ஹமாஸ் கருத்துத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹமாஸ் பேச்சாளர் கலாநிதி ஸமீ அபூ ஸுஹ்ரி பலஸ்தீன் தகவல் மையத்துடனான (PIC) சந்திப்பின்போது, "பலஸ்தீன் பிரச்னை தொடர்பாக, நடுநிலையான - சர்வதேச நிலைபாட்டை மேற்கொள்வதில் ஐரோப்பிய யூனியன் முக்கிய பங்குவகிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
பலஸ்தீன் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஆதரவான எத்தகைய முன்னெடுப்பையும் ஹமாஸ் வரவேற்கும். அதேவேளை, 1967 ஆண்டுக்குரிய எல்லைகளுடன் பலஸ்தீன் தேசம் ஸ்தாபிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும். ஆனால், பலஸ்தீன் நிலப்பரப்பிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட எந்தவோர் இடத்திலும் இஸ்ரேல் நிலைகொள்வதை அது அங்கீகரிக்கப் போவதில்லை என்று ஸமீ அபூ ஸுஹ்ரி விளக்கமளித்தார்.

இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையை ‘அமைதியாகத் தீர்க்கும்’ வகையில் இஸ்ரேல் - எதிர்கால பலஸ்தீன் ஆகிய இருநாடுகளுக்கும் ஜெரூசலம் தலைநகராக இருக்கும் என்ற நிலைபாட்டினை ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு அமைச்சர்கள் கடந்த வியாழக்கிழமை ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source:inneram