லண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஆகஸ்ட், 2010

ஹிட்லர் யூதக்குலத்தைச் சார்ந்தவர்- ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

லண்டன்,ஆக25:யூதர்களை கொல்ல களமிறங்கி பணியாற்றிய ஜெர்மனியின் நாசி இயக்கத் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் யூத பரம்பரயைச் சார்ந்தவர் என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஹிட்லரின் உறவினர்களிடம் நடத்திய டி.என்.ஏ பரிசோதனையில் ஹிட்லரின் முன்னோர்கள் யூதக்குலத்தைச் சார்ந்த வட ஆப்பிரிக்காவைச் சார்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

லண்டனில் டெய்லி எக்ஸ்ப்ரஸ் என்ற பத்திரிகைதான் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. நாசி இயக்கத் தலைவரின் மருமகன்களின் ஒருவரான அலெக்ஸாண்டர் ஸ்டூவர்ட் ஹூஸ்டன் பயன்படுத்திய டவலை பத்திரிகையாளர் லாங்க் பால் மர்டேர்ஸ் என்பவர் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

ஹிட்லரின் ஆஸ்திரியாவைச் சார்ந்த இன்னொரு உறவினர் நோர்பர்ட் ஹெச் என்ற விவசாயிடமிருந்து பெறப்பட்ட மாதிரியையும் இவர் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

ஜெர்மனி மற்றும் மேற்கு ஐரோப்பாவில் காணப்படாத வகையான ஒய் குரோமோசோம்கள்தான் இரண்டு மாதிரிகளையும் பரிசோதித்த பொழுது கண்டுபிடிக்கப்பட்டது. யூதர்களிடம்தான் இவ்வகையான குரோமோசோம்கள் காணப்படும் என அந்த ஆய்வறிக்கையில் கூறப்படுகிறது.

ஹிட்லரின் முன்னோர்கள் ஜெர்மனியில் குடியேறியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.மொராக்கோ,அல்ஜீரியா,துனீசியா ஆகிய நாடுகளிலிலுள்ள மக்களிடமும்,அஷ்கெனாஸி,ஸெஃபால்டிக் யூதப் பிரிவினர்களிடமும்தான் இந்தவகையான குரோமோசோம்கள் காணப்படுகிறது என மர்டேர்ஸ் கூறுகிறார்.

"நாங்கள் சுத்தமான ஆரிய இரத்தத்தில் பிறந்தவர்கள்" என ஹிட்லரும், சில நாசித் தலைவர்களும் பெருமை அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

பிரிட்டனில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும்: சாயீதா வார்சி

லண்டன்,ஆக8:பிரிட்டனில் உள்ள இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது எந்த வகையிலும் அவர்களின் சுதந்திரத்தை பாதிக்காது. எனவே இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார் முதல் முஸ்லிம் காபினட் அமைச்சரான சாயீதா வார்சி.

பர்தா முகத்தை மூடும் படியான ஆடையாக இருப்பதாலும் ஆண்கள் கட்டுப்படுத்துவதாலேயே இஸ்லாமிய பெண்கள் அதனை அணிகின்றனர் என கடந்த மாதம் பிரிட்டனில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டதில் பெரும்பான்மையானோர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் பெல்ஜியம், பிரான்ஸ் நாடுகளை தொடர்ந்து பிரிட்டனிலும் பொது இடங்களில் பர்தா அணிய தடை வரக் கூடும் என்ற சர்ச்சை நிலவி வந்தது. பின்னர் பிரிட்டன் அமைச்சர் டேமியன் கிரீன் பிரிட்டனில் பர்தா அணிய தடை விதிக்கப்படாது என அறிவித்ததன் மூலம் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆண்கள் கட்டாயத்தின் பேரில் மட்டும் பெண்கள் பர்தா அணிவதில்லை. பல இஸ்லாமிய பெண்கள் பர்தாவை விரும்பியே அணிகின்றனர். எனவே பர்தா அணிய தடை விதிக்கக் கூடாது என்று இஸ்லாமிய அமைச்சர் ஒருவரே தற்போது நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதன் மூலம் இந்த விசயம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

புதன், 28 ஜூலை, 2010

லண்டனில் முகத்திரை அணிந்த மாணவிகளுக்கு பேருந்தில் ஏற அனுமதி மறுப்பு

லண்டன்,ஜுலை27:22 வயது மதிக்கத்தக்க இரண்டு முஸ்லிம் மாணவிகளில் ஒருவர் முகத்திரை அணிந்த காரணத்திற்காக பேருந்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விசாரணை செய்வதாக லண்டன் பேருந்து நிறுவனமான மெட்ரோலைன் கூறியுள்ளது.

இரண்டு மாணவிகளில் யாஸ்மின் என்ற மாணவி ஹிஜாப் அணிந்திருந்ததாகவும்,மற்றொருவர் அதூஃபா கண்கள் மட்டும் தெரியும்படி முகத்திரை அணிந்திருந்தனர்.

அவ்விரு மாணவிகளும் பேருந்தில் ஏற முற்படும்போது அப்பேருந்தின் ஓட்டுநர், "நான் உங்களை பேருந்தில் ஏற்ற முடியாது, நீங்கள் இருவரும் அச்சுறுத்தும்படி இருக்கிறீர்கள்" என்று கூறி பேருந்தில் ஏற்ற மறுத்துள்ளார்.

"நாங்கள் இந்த விவகாரத்தை அக்கறையுடன் எடுத்து விசாரித்து வருகிறோம். எங்களின் நிறுவன ஊழியர்கள் இவ்வாறு கூறியிருப்பார்கள் என்று எங்களுக்கு சந்தேகம் இல்லை, ஏனெனில் நாங்கள் சமத்துவம், வேற்றுமை எல்லோருக்கும் உண்டு என்பதை மதித்து உறுதி செய்திருக்கிறோம்." என்று மெட்ரோலைன் கூறியிருக்கிறது.

"இதுகுறித்து மூன்று ஓட்டுநர்களை விசாரித்து வருகிறோம், எங்கள் நிறுவன ஓட்டுநர் அனுமதி மறுத்திருந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது, ஆனால் தனிநபர் வழக்கிற்காக கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

சனி, 3 ஜூலை, 2010

லண்டன் உள்ளிட்ட விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கேனர்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

லண்டன்:விமான நிலையங்களில் முழு உடல் பரிசோதனை ஸ்கேனர்களை பயன்படுத்தினால் பயணிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.இது குறித்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கதிரியக்கவியல் ஆராய்ச்சி மையத் தலைவர் டேவிட் பிரென்னர் கூறியிருப்பதாவது: 'விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட உள்ள முழு உடல் ஸ்கேனிங் கருவிகளிலிருந்து வெளியேறும் எக்ஸ்-ரே கதிர்கள் உடலுக்கு தீமை விளைவிக்கக் கூடியது. சாதாரணக் கருவிகளை விட இந்த வகை ஸ்கேனர்கள் 20 மடங்கு கதிரியக்கத்தை வெளிப்படுத்தக் கூடியன.

குறிப்பாக குழந்தைகள் இந்த கதிரியக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவர். ஸ்கேனர்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம் காரணமாக தோல் புற்றுநோய் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, இது போன்ற முழு உடல் பரிசோதனை ஸ்கேனர்களை பயன்படுத்துவதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்து, அதற்கேற்ப கருவியை வடிவமைப்பது நல்லது என்று டெய்லி மெயிலில் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த, உலக நாடுகள் முயற்சி செய்து வரும் வேளையில் பிரென்னரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ததாக அமைந்துள்ளது.

புதன், 30 ஜூன், 2010

லண்டன் அருகே பச்சிளம் குழந்தைகள் புதைக்கப்பட்ட மயானம்

லண்டன் அருகே உள்ள பக்கிங்காம்ஷயர் பகுதியில் ஹேம்லிடன் என்ற இடத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அகழ்வராய்ச்சி செய்யப்பட்டது. அங்கிருந்த ரோமானியர்களின் பங்களா அருகே மயானம் ஒன்றும் இருந்தது. அங்கு பச்சிளம் குழந்தைகள் அதிகளவில் புதைக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 97 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் இருந்தன. அனைத்து எலும்பு கூடுகளும் ஒரே அளவாக இருந்தன. கருவில் உருவாகி 40 வாரங்கள் ஆன குழந்தைகளின் எலும்புகள் போலவே அவை இருந்தது.இது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.இயற்கை காரணங்களால் குழந்தைகள் இறந்திருந்தால், அவர்களின் வயது வித்தியாசம் வேறுபட்டிருக்கும். ஆனால் பிறந்த சில நாட்களில் இந்தக் குழந்தைகள் இறந்தது எப்படி என்ற ஆராய்ச்சியில் இறங்கினர்.

இது குறித்து விளக்கம் அளித்த ஆராய்ச்சியாளர் ஜில் அயர்ஸ், "அந்த மாளிகை விபசாரம் நடைபெறும் இடமாக இருந்திருக்க வேண்டும். கருத்தடை சாதனங்கள் அந்தக் காலத்தில் இல்லாததால், பாலியில் தொழிலாளர்களுக்கு விருப்பமில்லாமல் குழந்தைகள் பிறந்திருக்கும். அந்தக் குழுந்தைகளை ரோமானியர்கள் கொன்று புதைத்திருக்கலாம்" என கூறியுள்ளார்.

இஸ்ரேலின் ஆஸ்கிலன் நகரில் கடந்த 1988ம் ஆண்டு நடந்த அகழ்வாராய்ச்சியில் இதே போல் பச்சிளம் குழந்தைகள் புதைக்கப்பட்ட மயானம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்திலும் ரோமானியர்களின் விபசார விடுதி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

"இந்த அளவுக்கு குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்ட மயானம் உலகில் வேறு எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை" என்கிறார் எலும்புக் கூடு ஆராய்ச்சியாளர் சிமன் மேஸ்.

ஞாயிறு, 27 ஜூன், 2010

பிரபல இஸ்லாமிய பிரசாரகர் பிலால் பிலிப்ஸுக்கும் லண்டனில் நுழைய தடை


லண்டன் : உலக அமைதிக்காக பிரபல இந்திய இஸ்லாமிய பிராசரகர் ஜாகிர் நாயக் வருடந்தோறும் பீஸ் எனும் பெயரில் கருத்தரங்கத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறார். அப்படி ஒரு மாநாடு கடந்த வாரம் லண்டனில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஜாகிர் நாயக் மறைமுகமாக தீவிரவாதத்திற்கு துணை போவதாக கூறி இங்கிலாந்து அரசாங்கம் அவருக்கு தடை விதித்திருந்ததை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

தற்போது அக்கருத்தரங்குக்கு வருகை தரவிருந்த பல இஸ்லாமிய பிராசரகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவிலிருந்து அரீப் இஸ்லாம் எனும் பிரசாரகருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது போல் கனடாவை சேர்ந்த தற்போது கத்தாரில் வசிக்கும் பிரபல இஸ்லாமிய பிராசரகரான பிலால் பிலிப்ஸூம் லண்டன் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜாகிர் நாயக்குக்காவது வருவதற்கு முன் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் தான் கடந்த சனிக்கிழமை காலை 8 மணிக்கு விமான நிலையத்தில் இறங்கியதாகவும் பின் காலை 11 மணிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறினார். மேலும் தங்களின் அமைதிக்கான மாநாட்டை தடை செய்வதன் மூலம் அவ்வெற்றிடத்தை தீவிர போக்குடையவர்கள் ஆக்கிரமிப்பதிற்கு இவர்களே காரணமாக இருக்கிறார்கள்.

தங்கள் கால்களை தாங்களே சுட்டு கொள்வதாக சொன்ன பிலால் பிலிப்ஸ் ஒரு விதத்தில் இதுவும் நன்மைக்கே என்றும் இவர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூரணமாக்கி வைப்பான் என்றும் கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்த ஒரு இணைய தள நிபுணர் கூகுள் தேடலில் ஜாகிர் நாயக் மற்றும் பீஸ் மாநாடு அதிகம் பார்க்கப்படுவதற்கும் இஸ்லாத்தை குறித்த தேடல்கள் இணையத்தில் அதிகரிப்பதற்குமே இது உதவும் என்று கூறினார்.

சனி, 19 ஜூன், 2010

பிரிட்டனுக்குள் நுழைய ஜாஹிர் நாயக்கிற்கு விசா மறுப்பு

லண்டன்:மும்பையைச் சார்ந்த பிரபல முஸ்லிம் அறிஞரும் மதங்களுக்கிடையேயான கலந்துரையாடலில் வல்லுநராக விளங்கும் டாக்டர்.ஜாஹிர் நாயக் பிரிட்டனுக்குள நுழைய அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது.

ஜாஹிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும், வெறுப்பைத் தூண்டும் உரையை நிகழ்த்துபவர் என்று சில பத்திரிகைகளும்,சில அமைப்புகளும் குற்றம் சாட்டியிருந்தன.

"இந்த நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் இந்த நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்" என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
BBC

செவ்வாய், 25 மே, 2010

ஃபேஸ் புக்கிற்கு 200 கோடி டாலர் நஷ்டம்

லண்டன்:இறைத்தூதரை அவமதிக்கும் விதமாக கேலிச்சித்திரம் வெளியிட்ட சோஷியல் நெட்வொர்க்கான ஃபேஸ்புக்கிலிருந்து ஆயிரக்கணக்கான நபர்கள் பின்வாங்கியதால் இரண்டு பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நபிகளாரை அவமதிக்கும் விதமாக படம் வரையும் போட்டியை அறீவித்ததனால் பல முஸ்லிம் நாடுகளும் ஃபேஸ் புக்கை தடைச்செய்திருந்தன.

மார்க் ஸக்கர்பக் என்ற இஸ்ரேலிய ஆதரவாளரான யூதனுக்கு சொந்தமானதுதான் ஃபேஸ்புக்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

பிரிட்டீஷ் ராணுவம் ஈராக்கில் மூதாட்டியை சித்தரவதைச் செய்து கொன்றது

லண்டன்:பிரிட்டீஷைச் சார்ந்த ராணுவ வீரர்கள் ஈராக்கில் 62 வயதான மூதாட்டியை வீட்டிலிருந்து பிடித்துச் சென்று சித்தரவதைச் செய்துக் கொன்றதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் இண்டிபெண்டண்ட் பத்திரிகைச்செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பிரிட்டனில் ராயல் மிலிட்டரி போலீஸ் விசாரித்துவருகிறது. 2006 இல்தான் இச்சம்பவம் நடைபெற்றது. பஸராவைச்சார்ந்த ஸபீஹா குதர் தாலிபா என்பவர்தான் கொல்லப்பட்டவர். நவம்பர் 15 ஆம் தேதி ராயல் ரெஜிமண்டில் பிடித்துச் செல்லப்பட்ட இவருடைய மரணித்த உடல் சாலையருகில் வீசப்பட்டிருந்தது. வயிற்றில் குண்டடிப்பட்ட அடையாளமும், முகம் முழுவதும் படுகாயமடைந்த அடையாளம் காணப்பட்டது. பஸராவில் அல்கிப்லா போலீஸ் இதனை முதலில் விசாரித்தது. இவருடைய கைகளில் விலங்கிடப்பட்டிருந்தது. உடல்முழுவதும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன உடல் ஆடையற்ற நிலையில் இருந்ததாக போலீஸ் ரிப்போர்டில் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை பிரிட்டீஷ் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக்கொண்ட போதிலும் சித்திரவதைச் செய்ததை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. காயமடைந்த அப்பெண்மணி ராணுவ மருத்துவமனையில் இறந்ததாக பிரிட்டீஷ் பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறுகிறார். இப்பெண்மணியின் குடும்பத்தினர் பிரிட்டீஷ் பாதுகாப்புத்துறைக்கெதிராக லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர முயற்சித்துவருகின்றனர்.

வீட்டில் அத்துமீறி நுழைந்த பிரிட்டீஷ் ராணுவத்தை எதிர்த்த ஸபீஹாவின் மகன் அல்மாலிகியை ராணுவம் சுட்டுக்கொன்றதாக இவர்களின் வழக்கறிஞர் கூறுகிறார். ஸபீஹாவின் மற்றொரு மகனை பிரிட்டீஷ் ராணுவம் சித்திரவதைச் செய்ததையும் வழக்கறிஞர் குறிப்பிடுகிறார்.
ஸபீஹாவின் மகன் கூறியதாவது "அதிகாலையில் திடீரென வீட்டில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. திருடர்கள் யாரோ வீட்டில் நுழைந்து சுடுகின்றார்கள் என்று கருதி எனது சகோதரர் வீட்டின் மேல்பகுதியிலிருந்து அவர்களை திருப்பிச் சுட்டான். 20 நிமிடங்கள் அவர்கள் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் எனது சகோதரர் மரணமடைந்தார். வீட்டை சுற்றிவளைத்து வீட்டிலிலுள்ள அறையில் அத்துமீறி நுழைந்த பிரிட்டீஷ் ராணுவத்தினர் என்னை கடுமையாக தாக்கிய பிறகு வெளியேக் கொண்டு நிறுத்தினர். இதைப்பார்த்து சப்தமிட்டுக் கொண்டே வந்த தடுத்த எனது உம்மாவை அவர்கள் பிடித்து இழுத்துச்சென்றனர். எனது உம்மாவை நான்கு அல்லது ஐந்து பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் பிடித்துச்சென்றதை பார்த்தேன். அப்பொழுது எனது உம்மாவின் உடலில் ஒரு காயமும் இல்லை. ஒரு பிரிட்டீஷ் ராணுவ வீரன் எனது உம்மாவை துப்பாக்கியால் அடித்தான்.பின்னர் அவர் மீதிருந்த போர்வையை பிடித்து இழுத்துவிட்டு அவரை ராணுவ ஜீப்பில் தூக்கியெறிந்து அழைத்துச் சென்றனர். பின்னர் நான் எனது உம்மாவைக்கண்டது சாலையோரத்தில். என்னை வேறொரு வாகனத்தில் ராணுவ முகாமிற்கு கொண்டுச் சென்றனர். கடுமையான சித்தரவதைக்குப் பிறகு என்னிடம் விசாரணை நடத்தினர்.

அல்காயிதாவின் ராக்கெட் தாக்குதலைக் குறித்து கூறக்கூறி அவர்கள் என்னை பிழிந்து எடுத்தனர். மறுநாளும் இதுத்தொடர்ந்தது, பின்னர் ஒரு ராணுவ வீரன் நான் நிரபராதி என்பதையறிந்து என்னிடம் ஐந்து டாலர்கள் தந்து ஒரு டாக்சியில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பிவைத்தான்" இவ்வாறு ஸபீஹாவின் மகன் கூறினார்.
செய்தி:மாத்யமம்

வியாழன், 12 நவம்பர், 2009

6 இந்திய முஸ்லீம் மாணவர்கள் மீது தாக்குதல்

லண்டன்: வடக்கு லண்டனில் உள்ள இஸ்லாமிய கழக பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 6 இந்திய மாணவர்கள், ஒரு கும்பலால் கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலின் இந்தத் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க லண்டன் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுதவிர மேலும் 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது. பல்கலைக்கழக வளாகம் அருகே சம்பந்தப்பட்ட இந்திய மாணவர்கள் வந்து கொண்டிருந்தபோது அங்கு 30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் வந்து அவர்களை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்களை இரும்புக் கம்பி, செங்கல், கம்புகளால் சரமாரியாகத் தாக்கினர். இனவெறியுடன் கோஷமும் போட்டபடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர்களைத் தடுக்க 2 மாணவர்களும், இன்னொருவரும் முயன்றபோது அவர்களுக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது.
கடந்த வாரம் இப்பல்கலைக்கழக மாணவர் ஒருவரைப் பார்த்து ஒரு கும்பல், இஸ்லாமை கேலி செய்து கிண்டலடித்து வம்புக்கு இழுத்துள்ளது. அவரைத் தொழுகைகக்குப் போக விடாமல் ரகளையும் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த மாணவரைத் தாக்கியுள்ளனர். இருப்பினும் சக மாணவர்கள் குறுக்கிட்டு அந்தக் கும்பலைத் தடுத்து பிரித்து விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது பெரும் கும்பலாக வந்து இந்திய முஸ்லீம் மாணவர்களைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து இஸ்லாமிய மாணவர் கழகங்களின் சம்மேளன நிர்வாகிகள் கூறுகையில், முஸ்லீம்களே ஓடி விடுங்கள், பாக்கிஸ் என்று கூறி அவர்கள் தாக்கியுள்ளனர்.
இங்கு படிக்கும் ஆசிய மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது.
அமைப்பின் செய்தித் தொடர்பாளர் காசிம் ரபீக் கூறுகையில், கடந்த ஒரு வருடமாகவே பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற இனவெறித் தாக்குதல்கள் நடந்தபடிதான் உள்ளன. இதுகுறித்து போலீஸ் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுகிறோம் என்றார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 17 முதல் 19 வயதுக்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

லண்டன் வந்தால் கைது - இஸ்ரேல் துணை பிரதமரின் லண்டன் பயணம் ரத்து.

இஸ்ரேலிய துணை பிரதமர் மோஷே யாலொன் தான் செய்த போர் குற்றங்களுக்காக கைது செய்யப்படலாம் என்று அஞ்சி தனது லண்டன் பயணத்தை ரத்து செய்திருக்கின்றார்.

லண்டனில் இயங்கும் பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் தன்னை கைது செய்ய வலியுறுத்தலாம் என்று அஞ்சி அந்தப் பயணத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இவர் 2002 ல் ஹமாசின் முக்கிய தலைவர் உட்பட 15 பொதுமக்கள் மற்றும் 8 குழந்தைகள் கொல்லப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர்.

ஹமாசின் ஆயுதப் பிரிவு தளபதி ஸலாஹ் ஷேதாதே வை கொல்வதற்காக ஒரு டன் எடை உள்ள குண்டினை இஸ்ரேலிய போர் விமானம் காசா நகரத்தின் மீது போட்டது. அதில் ஸலாஹ் ஷேதாதே மற்றும் அவருடைய மனைவி குழந்தைகள் உட்பட அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில் யாலொன் இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்தார்.

இஸ்ரேலிய வெளியுறவுத்துறை யாலோனின் இந்த பயணத்தை ரத்து செய்ய அறிவுறுத்தியது. யாலொன் பிரிட்டன் பிரிவு யூத தேசிய நிதி(British branch of the Jewish National Fund) நடத்திய நிதி திரட்டும் விருந்து ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரிட்டன் செல்ல இருந்தார்.



கடந்த வாரம் இஸ்ரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் எஹூத் பரக், தன்னை பிரிட்டனில் கைது செய்ய நடந்த முயற்சியை முட்டாள் தனமானது என்று கூறியிருந்தார்.

இவரை காசா மீதான இஸ்ரேலின் மனிதநேயமற்ற தாக்குதலுக்காக கைது செய்ய வேண்டும் என பிரிட்டன் பொதுநல விரும்பிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேண்டுகோளை அரசியல் நலம் கருதி பிரிட்டன் அரசு நிராகரித்தது.

நன்றி
அல் ஜசீரா

திங்கள், 15 ஜூன், 2009

இலண்டன் மாநாட்டில் தமுமுக, ஜாக் தலைவர்கள்!

இலண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையம் சார்பாக உலக அமைதிக்கு வழி…ஓரிறை கொள்கை ஒன்றே!

எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடப்பெற்றது.
மநாட்டில் தமிழ்நாடு JAQH அமைப்பின் அமீர் மெளலவி S. கமாலுதீன் மதனி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ் மெளலவி ஹாபிழ் யஹ்யா அஷ்ஷெய்க் M. மன்சூர் நளீமி மெளலவி முஹம்மது இஸ்மாயில் மற்றும் உலமா பெருமக்கள் கலந்துக்கொண்டு

உலக அமைதிக்கு இஸ்லாமிய கொள்கை,

இஸ்லாமிய வட்டியில்ல கடன்,

படைத்தவனை வனங்கு;படைப்பினங்களை வனங்காதே!

என்ற தலைப்புகளில் பேசினார்கள்.
பலப்பகுதிகளில் இருந்து திரலாக கலந்துக்கொண்டனர்.

யுஜெஎன் வட்ட மேசை அமர்வில் த.மு.மு.க தலைவர்




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வதற்காக கடந்த ஜுன் 7ம் தேதி இரவு லண்டன் வந்தார். லண்டன் ஹூத்ரோ விமான நிலையத்தில் அவரை தைக்கால் ஜாகிர் ஹூசைன், காரைக்கால் டாக்டர் கபீர், லால்பேட்டை இல்யாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
யுஜெஎன் வட்ட மேசை அமர்வில் த.மு.மு.க தலைவர்
ஜுன் 8 முதல் 10 வரை லண்டன் மைதன்வேல் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற யுனிவர்சல் ஜஸ்டிஸ் நெட்வர்க் (சர்வதேச நீதி இணையம்) – யுஜெஎன் அமைப்பின் வட்ட மேசை அமர்வில் தமுமுக தலைவர் கலந்துக் கொண்டார். கடந்த ஆண்டு மலேசியாவில் உள்ள பினங்கு நகரத்தில் யுஜெஎன் அமைப்பு தொடங்கப்பட்டது.


சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் தமுமுக
உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காக இயங்கும் முஸ்லிம் அரசு சாரா அமைப்புகளின் ஒரு இணைப்பு அமைப்பாக யுஜெஎன் உருவாக்கப்பட்டது. இதில் தமுமுகவும் இணைந்து செயல்படுகின்றது.



3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்னையை தமுமுக தலைவர் விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா. உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை முன்னெடுத்துச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா, பிரான்சு, டென்மார்க், நார்வே, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்குக் கொண்டார்கள்.

ஐ.நா. வினால் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமை அமைப்பான இஸ்லாமிக் ஹூமைன் ரைட்ஸ் கமிசன் மற்றும் சிட்டிசன் இன்டர்நேசனல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

பிரிட்டனில் உள்ள லீஸ்டர் நகரில் இயங்கும் இஸ்லாமிக் பவுன்டேசன் நிறுவனத்திற்கு கடந்த வெள்ளி (ஜுன் 11) அன்று தமுமுக தலைவர் வருகை புரிந்தார் 1973ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பிரட்டனில் மிக சிறப்பாக இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை செய்து வருகின்றது.

ஆங்கிலத்தில் முன்னூருக்கும் மேலான நூல்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மனாசிர் ஹசன் தமுமுக தலைவரை வரவேற்று நிறுவனத்தின் பணிகளை விளக்கியதுடன் தமுமுகவின் சேவைகளையும் கேட்டறிந்தார். மதிய விருந்தும் அளித்தார் இந்த நிறுவனத்தின செயல் இயக்குனரான சென்னையை சேர்ந்த இர்சாத் பாகியும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.

இந்த நிறுவனத்தின் சார்பாக ஒரு உயர் கல்வி நிறுவனமும் இயங்கி வருகின்றது. அங்கு இஸ்லாமிய வங்கியியல் குறித்த முதுகலை பட்டப்படிப்பும் டாக்டர் பட்டத்திற்காக பல்வேறு ஆய்வு பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தமுமுக தலைவருடன் தைக்கால் ஜாகிர் ஹூசைனும் பிரபல மருத்துவர் டாக்டர் அஜ்மலும் உடன் சென்றிருந்தார்கள்.

லீஸ்டரில் வெள்ளி மாலை அங்கு வாழும் தமிழக மற்றும் இலங்கை சகோதர்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில தமுமுக தலைவர் பங்குக் கொண்டார். இலங்கை மவ்லவி இஸ்மாயில் நளீமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில் தமிழக நிலவரங்கள் மற்றும் இலங்கை நிலவரங்கள் குறித்து மிக ஆர்வமாக பங்குக் கொண்டோர் தமுமுக தலைவரிடம் கலந்துரையாடினர்.

ஞாயிறு, 14 ஜூன், 2009

லண்டன் இஸ்லாமிய அழைப்புப் பணி மையம் வழங்கும் உலக அமைதிக்கு வழி…ஓரிறை கொள்கை ஒன்றே!!

நாள் : 14.06.2009 ஞாயிறு 4:00- PM T PM To 9:00 PM

இடம்: PLASHET SCHOOL { OLD BUILDING }
Plashet Grove, East Ham, LONDON E6 1DG

சிறப்புப் பேச்சாளர்கள்:


மெளலவி S.கமாலுதீன் மதனி
{ அமீர் JAQH,தமிழ்நாடு }

மெளலவி ஹாபிழ் யஹ்யா
அஷ்ஷெய்க் M.மன்சூர் நளீமி
மெளலவி H.M.மின்ஹாஜ்

சிறப்பு விருந்தினர்

Dr, M.H.ஜவாஹிருல்லாஹ்

{ தலைவர் தமுமுக }

இஸ்லாமிய அழைப்புப் பணி மையம்
லண்டன்