தமிழ் நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 மார்ச், 2011

ஆலுக்காசை வெளியேற்றக் கோரி தஞ்சையில் மறியல்: 350 பேர் கைது

தமிழ்நாட்டில் நகை வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆலுக்காஸ் நகை மாளிகையைத் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றக் கோரி தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆலுக்காஸ் நகை மாளிகமுன்பு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் இன்று மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச் செயலாளரதோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்திலகலந்து கொண்டனர்.


ஆலூக்காஸ் நகை மாளிகை முன்பு திரண்ட தமிழின உணர்வாளர்கள் கையிலத.தே.பொ.க. கொடியை ஏந்தியபடி “வெளியேற்று! வெளியேற்று! மலையாள ஆலூக்காசவெளியேற்று!என்று ஆக்ரோசமாக ஒரே குரலில் முழக்கமிட்டனர்.

பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக முழக்கமிட்டுககொண்டிருந்த உணர்வாளர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரான்சிஸ் ஆலூக்காஸ் நகமாளிகைக்குள் முழக்கமிட்டுக்கொண்டே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனாலகாவல்துறையினருக்கும் போராட்டக் குழுவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதசற்றும் எதிர்பாராத ஆலூக்காஸ் நகை மாளிகை நிர்வாகத்தினர் உடனடியாகக் கடையை மூடினர்.

போராட்டக் குழுவினர் அத்தனைபேரும் நகை மாளிகையினபடிக்கட்டிலும் வாசலிலும் சாலையிலும் கீழே அமர்ந்து முழக்கமிடத் தொடங்கினார்கள்.


த.தே.பொ.க. நகரச் செயலாளர் இரா.சு முனியாண்டி, த.இ.மு. தஞ்சை நகரச் செயலாளர் செந்திறல் உள்ளிட்டோர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்திலஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, போராட்டக் குழுவின் ஒரு பகுதியினர் அருகாமையிலிருந்ஜோஸ் ஆலூக்காஸ் கடையை நோக்கி விரைந்தனர். இதையும் எதிர்பார்த்திராத காவல்துறையினரபோராட்டக் குழுவினரைக் கட்டுப்படுத்துவதற்குள் திணறிப் போயினர். போராட்டத்தின் போதநகை மாளிகையின் மீது கற்கள் வீசப்பட்டன. ஆலூக்காசின் விளம்பரப் பலககிழிக்கப்பட்டது.

நாற்பது நிமிடங்களுக்கும் மேலாக இந்தப் போராட்டமநீடித்தது. இறுதியில் 3 சிற்றுந்துகள் 2 காவல் வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்களிலபோராட்டத்திற்குத் தலைமைவகித்த தோழர் பழ.இராசேந்திரன் உட்பட 300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டோர் தஞ்சை கீழவாசலில் உள்ள அன்னதிருமணமண்டபத்திற்குக் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தஞ்சையில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்தகும்பகோணம் ஆலூக்காஸ் நகை மாளிகை இன்று மூடப்பட்டது. தஞ்சை மற்றும் குடந்தநகரங்களைச் சேர்ந்த பொற்கொல்லர்களும் நகை வணிகர்களும் போராட்டக் களத்திற்கு வந்தமறியலில் ஈடுபட்ட தோழர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துச் சென்றனர். குடந்தவிஸ்வகர்மா சங்கத்தினர் தங்கள் பதாகையோடு போராட்டத்திற்கு வந்திருந்தனர்.

இரண்டு நகை மாளிகை முன்பும் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. உடனடியாக அதிரடிப்டையினர் வரவழைக்கப்பட்டனர். அதிரடிப்படையினரும் காவல்துறையினருமஆலூக்காஸ் நகை மாளிகைகள் உள்ள சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய், 8 மார்ச், 2011

2 ஜி: உறுதியளிக்க காங்கிரஸ் தயக்கம்?

மத்திய அரசில் இருந்து விலகிக்கொள்கிறோம்’ என்று முடிவெடுத்து அறிவித்த கையோடு, திங்கட்கிழமை எங்கள் அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்று அறிவித்த தி.மு.க., தங்களது முடிவிற்கான உண்மையான காரணத்தை முன்வைத்து நேற்று இரவு வரை காங்கிரஸ் தலைமையுடன் தீவிரமாக பேசிய தி.மு.க. அமைச்சர்கள், இப்போதும் பேச்சுவார்த்தையை தொடர்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

“60 இடங்களா, 63 இடங்களா என்பதல்ல பிரச்சனை, 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக புலனாய்வு செய்துவரும் ம.பு.க., தனது குடும்பத்தினரை விசாரணைக்கு அழைக்கவோ அல்லது கைது செய்யவோ கூடாது என்று உறுதிமொழியை தி.மு.க. தலைவர் எதிர்பார்க்கிறார். அதில்தான் சங்கடம் உள்ளது” என்று டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தாக செய்திகள் கூறுகின்றன.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்ற மும்பையின் டி.பி.ரியால்டி நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி (கடனாகவோ அல்லது பங்குகள் பெறவோ) கொடுத்த காரணம் என்ன? என்ற ம.பு.க.வின் வினாவிற்கு கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தால் திருப்திகரமான பதில் சொல்ல முடியாததால், அது தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரரான தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை விசாரிக்க வேண்டிய முடிவை ம.பு.க. எடுத்துள்ளதாம்.

அது மட்டுமின்றி, வீட்டு மனை விற்பனை நிறுவனமான டி.பி.ரியால்டிக்கு 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு எந்த அடிப்படையில் செய்யப்பட்டது என்ற முக்கிய கேள்விக்கும் உரிய பதிலை எதிர்பார்க்கிறது ம.பு.க. இதேபோல் யுனிடெக் எனும் மற்றொரு வீட்டு மனை விற்பனை நிறுவனமும் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றுள்ளது. இதன் பின்னணியில் டாடா டெலிகாம் உள்ளதும், அதற்கு ரூ.1,650 கோடி கடன் வழங்கப்பட்டதும் எந்த அடிப்படையில் என்பதை ம.பு.க. நீதிமன்றத்திற்கு விளக்க வேண்டிய நிலை உள்ளது.

சென்னையில் உள்ள வோல்டாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடம் மிக மிக குறைந்த விலையில் விற்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து நீலகிரியில் ஒரு தேயிலைத் தோட்டம் வாங்கப்பட்டதும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக (ஜெயலலிதா அறிக்கை இதை சுட்டிக்காட்டுகிறது) இருப்பதால் அது பற்றியெல்லாம் உண்மையறிய கனிமொழியிடம் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்தில் ம.பு.க. உள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FILE
தி.மு.க. தலைவர் கருணாநிதி, 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக தனது குடும்பத்தினர் விசாரிக்கப்படுவதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது என்று உறுதிபட தெரிவித்திருப்பதாகவும், அதற்கு உறுதி பெறவே நேற்று காலை முதல் நடைபெற்றுவரும் எல்லா பேச்சுவார்த்தையின் நோக்கமாகும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு காங்கிரஸ் மிகவும் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. ம.பு.க. விசாரணையை சாதாரண சூழலில் கட்டுப்படுத்திவிட முடியும். தற்போது 2 ஜி விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருவதால், அது எழுப்பிய பல வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டுமெனில் ‘தொடர்புடைஅனைவரிடமும‘ விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் ம.பு.க.விற்கு இருக்கிறது என்றும், உச்ச நீதிமன்றத்தில் அதுதான் எல்லா வினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளதால் இதில் மத்திய அரசு ஒன்றும் செய்வதற்கில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

இச்சிக்கலில் மத்திய அரசின் நிலையை விளக்க கடந்த சனிக்கிழமை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சென்னை வந்து தி.மு.க. தலைமையை சந்திப்பதாக இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆக, எந்த காரணத்திற்காக கூட்டணிச் சிக்கல் ஏற்பட்டதோ அதற்குத் தீர்வு காண முடியாமல் இரு கட்சிகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசால் தனக்கு உதவ முடியும் என்று கருணாநிதி நினைக்கிறார். அது தங்கள் கையைவிட்டுப் போய்விட்ட நிலை என்று காங்கிரஸ் கூறுகிறது.

இந்த நிலையில்தான் இன்று காலையிலும் பேச்சுவார்த்தை டெல்லியில் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

நாங்குநேரி தொகுதி! நாங்குநேரி எம்.எல்.ஏ.​!

இந்த அருமையானத் தொடரின் வாயிலாக எங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாட்டை மக்களுடன் பகிர்ந்துகொள்ள ஒருவாய்ப்பை தந்த பாலைவனத் தூதிற்கு நன்றி.

எனது தொகுதி நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி. எனது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.வசந்தகுமார் ஆம் வசந்த்&கோ வின் உரிமையாளரான சாட்சாத் அந்த வசந்தகுமாரே தான். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான இவர் முதன்முறையாக எங்கள்(நாங்குநேரி) தொகுதியில் தான் வெற்றிப்பெற்றார்.

"அடிப்படையிலேயே பல செல்வங்களுக்கு சொந்தக்காரனும் பல நிறுவனங்களுக்கு அதிபரான நான் எம்.எல் ஏ. பதவியின் மூலம்தான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை" என தன் பிரச்சாரத்தில் தெரிவித்தவர்.
இவருக்காக பல இயங்கங்கள் முழுவீச்சில் பிரச்சாரம் செய்தன. "மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நான் இப்பொறுப்புக்கு வர நினைக்கிறேன். அவ்வாறு நான் செய்யாவிட்டால் என் சட்டையை பிடித்து இழுத்து கேட்கும் உரிமையை நான் உங்களுக்கு வழங்குகிறேன்" என்று தன் பிரச்சாரத்தின் வாயிலாக முழங்கினார்.

ஆனால் சொன்னபடி நடந்தாரா??? எங்கே தன் சட்டையை பிடித்து இழுத்துவிடுவாரோ என்று பயந்து டெல்லிக்கு சென்று ஒளிந்துக்கொண்டார்.

இவரை காண வேண்டும் என்றால் எம்.எல் ஏ. ஆன பின்பு இவர் மக்களுக்காக!! தொடங்கிய இவரது வசந்த் டிவி-யில் அல்லது வசந்த்&கோ வின் விளம்பரத்தில் மட்டுமே காண முடிந்தது.

இவர் தன் தொகுதி மக்களுக்கு அதிகமாக செய்தது என்னவென்றால் தன் படம் போட்ட காலண்டர் அடித்து கொடுத்ததும் தன் கட்சியின் தலைவி சோனியாவின் பிறந்தநாளுக்கு வழங்கிய காங்கிரஸ் கட்சியின் கரையிட்ட துண்டுமேயாகும்.

நாங்குநேரி தொகுதி மக்களே, நம் தொகுதியில் எங்காவது ஒழுங்கான சாலையை நீங்கள் பார்த்ததுண்டா?

மக்களின் அடிப்படை தேவைகளை இவர் செய்ததுண்டா?
எத்தனை முறை தேர்தலுக்கு பின்பு இவரை நீங்கள் நம் தொகுதியில் பார்திதிருக்கிறீர்கள்?

உங்கள் பகுதிக்கு வந்து அங்கு (நடந்த?) பணிகளை பார்க்கவோ அல்லது நம் குறைகளை கேட்கவோ வந்ததுண்டா?

எங்கள் பகுதிக்கு (பத்மநேரி-கேசவநேரி) வந்தபோது நாங்கள் வைத்த எங்கள் பகுதியின் நீண்டகால கோரிக்கையான ஆற்றின் கரையை கட்டும் கோரிக்கைக்கு இவர் இதுவரை செவிசாய்க்கவில்லை.

ஆகவே நண்பர்களே! வாக்காளர்களே இவர் இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட்டாலோ அல்லது வேறு தொகுதியில் போட்டியிட்டாலும் மீண்டும் இதே நிலைமைத்தான்.

அவ்வாறு மீண்டும் அவர் வந்தால் தொகுதி மக்களுக்காக, தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வசந்த் நியூஸ் என்ற பெயரில் ஒரு டி.வி சேனல் தொடங்குவார் மேலும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் கரை பதித்த துண்டுக்குப் பதிலாக வேஷ்டியோ அல்லது சேலையோ வழங்குவார் என நினைக்கிறேன்.

உஷாரய்யா உஷாரு!!!

Regards
JAR
kesavaneri,padmaneri
---------------------------------------------------------------------------------
நாங்குநேரி, திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டுவெற்றி பெற்ற வேட்பாளர்கட்சிவாக்கு விழுக்காடு (%)
2006H.வசந்தகுமார்இ.தே.கா51.76
2001S.மாணிக்கராஜ்அதிமுக51.54
1996S.V.கிருஷ்ணன்இந்திய கம்யூனிச கட்சி40.27
1991V.நடேசன் பால்ராஜ்அதிமுக72.90
1989ஆச்சியூர் M.மணிதிமுக31.87
1984M.ஜான் வின்சென்ட்அதிமுக58.00
1980M.ஜான் வின்சென்ட்அதிமுக52.18
1977M.ஜான் வின்சென்ட்ஜனதா கட்சி27.71

-------------------------------- ------------------------------------
இவரின் கூற்றுக்கு பதில் தரலாம். பதிலை கருத்துரையாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பலாம்.

நன்றி :

http://thoothuelectionservey.blogspot.com/2011/03/blog-post.html

புதன், 15 செப்டம்பர், 2010

தலைமைச் செயலாளர்கள் என்றாலே பார்ப்பனர் தானா?

S Malathiநாள்தோறும் முதலமைச்சருடனும், மூத்த அமைச்சர்களுடனும் விவாதித்து, தமிழ்நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படும் தலைமைச் செயலாளர் பதவி என்பது கோட்டையில் முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான பதவியாகும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா, 2001 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அவர் எடுத்த முதல் நடவடிக்கை, தில்லியில் மத்திய அரசுப் பணியில் இருந்த பார்ப்பனர் பி.சங்கர் என்பவரைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து தலைமைச் செயலாளர் பதவியில் அமர்த்தியதுதான்.

பார்ப்பன அதிகாரி பி. சங்கரைத் தொடர்ந்து, தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் நான்கு பார்ப்பனர்களைத் தேடித் தேடி பதவியில் அமர்த்தினார் ஜெயலலிதா. பி. சங்கர், சுகவனேஸ்வர், லட்சுமி பிரானேஷ், என். நாராயணன் என்று நீடித்த பார்ப்பன தலைமைச் செயலாளர்கள் பட்டியலைப் பார்த்து கொதித்துப் போனது நாம் மட்டுமல்ல, தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியும்தான். முன்னாள் அமைச்சர் க. பொன்முடி ஒரு நீண்ட கட்டுரையையே எழுதி தி.மு.க.வின் கண்டனத்தைத் தெரிவித்தார்.

அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில், "சூத்திரர்" கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் ஆட்சியில் என்ன நிலைமை?

எல்.கே. திரிபாதி என்ற ஒரிசா பார்ப்பனரைத் தேடிப் பிடித்து பதவியில் அமர்த்தினார் கலைஞர் கருணாநிதி. அதற்கடுத்து, அவர் ஓய்வு பெற்றபோது இரண்டாண்டுகளுக்கு முன், கே.எஸ்.சிறீபதி என்ற பார்ப்பனர் அந்தப் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் ஓய்வு பெற்றபோது மத்திய அரசிடம் வாதாடி, 6 மாத காலம் பதவி நீடிப்பு பெற்றுத் தந்தது மட்டுமல்ல, தற்போது மாநிலத்தின் தலைமைத் தகவல் அதிகாரியாக நியமித்துள்ளது 'சூத்திரர்' அரசு. (நேர்மையான தலித் அதிகாரி உமாசங்கருக்குத் தண்டனை - தங்கள் விருப்பங்களுக்கு எல்லாம் தாளம் போடும் பார்ப்பனர் சிறீபதிக்கு வெகுமானம்; எப்படி இருக்கிறது சமூகநீதி!)

சிறீபதியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பார்ப்பன அம்மையார்

எஸ். மாலதியை தலைமைச் செயலாளராக நியமித்துள்ளது தி.மு.க. அரசு. இவர்கள் ஒவ்வொருவரும் நியமிக்கப்பட்ட போதும், ஏராளமான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய அதிகாரிகளின்

சீனியாரிட்டியை புறந்தள்ளியே நியமிக்கப்பட்டார்கள் என்பது வேறு செய்தி!

சங்கர் முதல் மாலதி வரை, தொடர்ந்து ஏழு பார்ப்பனர்களே தலைமைச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் வரலாற்றில் இதற்கு முன் இவ்வாறு நடந்தது இல்லை. திராவிட இயக்க ஆட்சி என்று கூறிக்கொள்வோர் ஆட்சியில்தான் இந்த சமூக நீதிக்கு விரோதமான போக்கு.

பார்ப்பனர் ஜெயலலிதா நான்கு பார்ப்பனர்களை உயர் பதவியில் அமர்த்தினார். அடுத்து வந்த "சூத்திரர்" கலைஞர் கருணாநிதி மூன்று பார்ப்பனர்களை வெட்கமின்றி தலைமைச் செயலாளர்களாக நியமித்துள்ளார். இந்த இரண்டு ஆட்சிகளுக்கும் நடைமுறையில் என்ன வேறுபாடு என்று கேட்க விரும்புகிறோம்.

'வாழும் பெரியார்' கலைஞர் தலைமையிலான "சூத்திர" ஆட்சியைப் பாதுகாப்பதே தங்கள் கடமை என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறிவரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்த அநீதியை எதிர்த்து வாய் திறக்காதது ஏன்?

தலைமைச் செயலாளர் மட்டுமல்ல, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த பல தமிழர்கள், கல்வியாளர்களைப் புறக்கணித்து விட்டு, பார்ப்பன அம்மையார் மீனா என்பவரை நியமித்திருக்கிறது இந்த சூத்திர ஆட்சி!

நிதி, உள்துறை, சுகாதாரம், கல்வி, பொதுப்பணி போன்ற முக்கிய துறைகளின் செயலாளர்களாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்காத 'நவீன தீண்டாமை'யும் கோட்டையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தி.மு.க. ஆட்சியை விமர்சித்து பத்திரிகைகள் எழுதும்போது மட்டும், சூத்திரன் என்பதால்தான் தன்னைப் பார்ப்பன ஏடுகள் பிராண்டு கின்றன என்று கலைஞர் கருணாநிதி புலம்புவது வாடிக்கை. தங்கள் ஆட்சியை விமர்சிக்கும் பத்திரிகைகளை பார்ப்பான், பார்ப்பான் பத்திரிகை என்று பக்கத்துக்கு பக்கம் எழுதும் 'முரசொலி'யைக் கேட்கிறோம். இந்த சமூகநீதிக்கு விரோதமான பார்ப்பன நியமனங்களை என்னவென்று அழைப்பது?

பத்திரிகை என்றால் மட்டும் பார்ப்பனர்களை எதிர்ப்பது, உயர் பதவி என்று வந்துவிட்டால் பார்ப்பனர்களைத் தேடிப் பிடித்து அமர்த்தி அழகு பார்ப்பது என்பது இரட்டை வேடம் அல்லவா? இந்த பாசாங்கு நடவடிக்கைகளை பார்ப்பனரல்லாத மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.

சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் இந்த அக்கிரமத்தை கோடானுகோடி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தொடர்ந்து ஏமாற மாட்டார்கள், எச்சரிக்கை!

சனி, 10 ஜூலை, 2010

மதுரை மாநகரில் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம்


மதுரை மாநகரில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் மீது காவல்துறை போட்டுக் கொண்டிருக்கும் அப்பட்டமான பொய் வழக்குகளுக்கு ஒரு அளவே இல்லாமல் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றது.
மதுரை மாநகர் செல்லூரில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன் பிறந்த சகோதரர்களான 3 முஸ்லிம் இளைஞர்கள் மீது ஐ.பி.சி 302 செக்ஷனில் மதுரை மாநகர காவல்துறை பொய்வழக்கு பதிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய நெல்பேட்டை பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் மீது தொடர்ந்து பொய்வழக்கு போட்டுக் கொண்டிருக்கின்றது.

கடந்த 5.7.10 அன்று தென்காசி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தங்களுடைய வழக்கு வாயிதாவில் ஆஜராகிவிட்டு, காலை உணவு சாப்பிடுவதற்காக நெல்பேட்டை காயிதேமில்லத் பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டலுக்கு வந்த அந்த இளைஞர்கள் மீது மதுரை டவுன் காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளைத்துரை மற்றும் விளக்குத்தூண் சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துகுமார் ஆகியோர் பொய் வழக்கு புனைந்துள்ளனர்.

முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய மதுரை மாநகர் காவல்துறை ஒரு சார்பு தன்மையுடனும் பாரபட்சமாகவும் நடந்து முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாளையும் மதுரை வாழ் முஸ்லிம்கள் பாதுகாப்பு உணர்வற்று ஒருவித பயத்துடனேயே கழித்து வருகின்றார்கள்.

முஸ்லிம்கள் மீது மதுரை மாநகர காவல்துறை தொடர்ந்து புனைந்து வரும் பொய் வழ்க்கிற்கெதிராக போராட, சமுதாய நலனில் அக்கறையுள்ள முஸ்லிம் பெரியவர்கள், முஸ்லிம் இயக்கங்கள் ஆகியவை ஒன்றிணைந்து "முஸ்லிம்கள்
மீதான பொய் வழக்கிற்கெதிரான கூட்டமைப்பு" என்ற ஒரு பொதுவான கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,ஜம்இய்யிதுல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்(JAQH), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI), இந்திய தவ்ஹீத் ஜமாத், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், NCHRO, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF) ஆகியவை இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இக்கூட்டமைப்பின் சார்பாக ஏ.சி. வெள்ளைத்துரை மற்றும் விளக்குத்தூண் ஸ்பெஷல் எஸ்.ஐ. முத்துக்குமார் மற்றும் உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும்,மேற்படி பொய் வழக்கை வாபஸ் பெறுமாறும் கோரி இன்று (9/7/10) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு நெல்பேட்டை அண்ணாசிலை அருகில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முஹம்மது நஸ்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 12/7/2010 திங்கட்கிழமை அன்று தென்மண்டல ஐ.ஜி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரை சந்தித்து மனு அளிப்பது எனவும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முஹம்மது நஸ்ருதீன் தெரிவித்தார்.