இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
திங்கள், 14 மார்ச், 2011
கஷ்மீர்:ஷபீர் ஷாவின் நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி - 25 சங்க்பரிவார் குண்டர்கள் கைது
DPF-இன் தலைவரான ஷபீர் ஷா க்ராண்ட் ப்ளாசா ஹோட்டலில் வைத்து கூட்டம் ஒன்றை நடத்தினார். ஷபீர் ஷா ஹோட்டலுக்கு வந்தவுடன் ஏற்கனவே அங்கு திரண்டிருந்த சங்க்பரிவார் குண்டர்கள் அவருக்கெதிராக கோஷமிட்டு நிகழ்ச்சியை தடுக்க முயன்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவர்களை
தடுத்தனர்.
கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை அரசு உருவாக்க வேண்டுமென ஷபீர் ஷா அக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் ,
புதன், 26 ஜனவரி, 2011
காவிக் கொடியவர்களின் கையில் சிக்கி தவிக்கும் தேசியக்கொடி!!

இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை, படுகொலைகளை எதிர்த்து சுதந்திரத்திற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் அனைவரும் இரத்தம் சிந்தி போராடும் கஷ்மீரிகளின் உணர்வுகளை புண்படுத்துவதற்காக திட்டமிட்டு பாசிச பா.ஜ.க சங்பரிவார தொண்டர்களை திரட்டிக்கொண்டு ஸ்ரீநகர் சென்று குடியரசு தினத்தன்று (இன்று,26,ஜனவரி.2011) தேசியக்கொடியை ஏற்றப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து கஷ்மீரில் பதட்டம் நிலவுகிறது.
தேசப்பற்று, தேசியக்கொடி என்ற பெயரில் மீண்டும் சங்பரிவார் கும்பல்கள் இந்திய சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை பெரும்பான்மை மக்களிடம் விதைக்க ஆரம்பித்துள்ளது.கொடி பிடிக்க காரணமென்ன? அஜ்மீர், மாலேகான், மற்றும் மக்கா மஸ்ஜித்களில் வெடிகுண்டு வைத்து பலரின் உயிரிழப்புக்கு காரணமானது சங்பரிவார்தான் என்று பட்டவர்த்தனமாக அவர்களின் முகமூடி கழற்றியெறியப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் இச்சூழ்நிலையில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தேசப்பற்று என்ற மற்றொரு முகமூடியணிந்து வந்திருக்கிறது சங்பரிவார்.
பா.ஜ.க தலைமையிலான அந்த மதவெறி சக்திகள் இன்று (26,ஜனவரி.2011) காஷ்மீர் ஸ்ரீநகரில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றப்போவதாக அறிவித்து பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. காக்காய் பிடிப்பதில் வல்லர்களான 'காவி' வந்தேறிகள் ஆங்கில 'வந்தேறிகளோடு' கைக்கோர்த்து பிரிட்டிஷ் ஆண்டைகளின் அடிமைகளாக செயல்பட்ட இவர்களால் 'மூவர்ண தேசியக் கொடி' சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒருபொழுதும் பிடிக்கப்பட்டதே இல்லை. ஒட்டு மொத்த இந்தியாவே ஆங்கிலேய அரசை எதிர்த்த போது இவர்கள் மட்டும் பிரிட்டிஷாருக்கு வக்காலத்து வாங்கி ஒத்து ஊதினர் என்பது வரலாறு. இந்திய தேசியக் கொடியை கையிழேந்தும் அருகதை சங்பரிவாரத்திற்கு உள்ளதா? என்று வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே காவிக் கொடியை தவிர வேறொன்றும் பிடிக்காத கயவர்களுக்கு மூவர்ணக் கொடி அறவே பிடிக்காது. சங்பரிவாரின் ஆங்கில ஊதுகுழலான ஆர்கனைசர் (ஜூலை 17, 1947) இதழில், சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாக 'மூவர்ண கொடியை தேர்ந்தெடுத்தது பற்றி மிகவும் வருந்தியும் காவிக் கொடிதான் தேர்ந்தெடுக்கபட்டிருக்க வேண்டும் என்றும் முகப்பு கட்டுரை வடித்தது. ஆகஸ்ட் 14 (1947) அன்று எழுதிய மற்றொரு முகப்பு கட்டுரையில் 'மூவர்ணக் கொடியை' பற்றி மிகவும் இழிவாக 'மூன்று என்ற எண்ணே அபசகுனமானது அதனால் மூன்று வர்ணங்களை கொண்ட தேசியக்கொடி பாரதமாதாவிற்கு கேடு விளைவிக்கும்' என்று பூச்சாண்டி காட்டி காவிக் கொடியை தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டுமென்று பலமுறை முயன்று தோற்றது.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு வெளியான கோல்வால்க்கரின் 'சிந்தனை கொத்துக்கள்' என்ற நூலில்கூட தேசியக் கொடியை விமர்சித்து காவிக் கொடியை புகழ்ந்து, இந்தியாவில் வசிக்கும் அனைவரும் ஒருநாள் காவிக்கொடி முன் தலைவணங்க வேண்டிய நிலை உருவாகும் என்று எழுதியிருந்தது. சங்பரிவாரம் நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மூவர்ணக் கொடிக்கு இன்று வரை இடமே கிடையாது. அதன் தலைமையகமான நாக்பூர் அலுவலகத்திலோ அல்லது அது 'ஷாகா' பயிற்சி நடத்தும் மைதானங்களிலோ தேசியக் கொடியை பறக்கவிட்டதே இல்லை. ஆனால் எப்பொழுதெல்லாம் இந்திய முஸ்லிம்களை சீண்டி மதக்கலவரம் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அப்பொழுது மட்டுமே சங்பரிவாரின் கண்களுக்கு மூவர்ண தேசியக்கொடி தென்படும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜோசியத்தை பள்ளிக் கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும் என்று முன்மொழிந்த முரளிமனோகர் ஜோஷீ தலைமையில் ஸ்ரீநகர் லால்சௌக்கிலும், உமாபாரதி தலைமையில் கர்நாடக ஈத்கா மைதானத்தில் தேசிய கொடியேற்றி கலவரம் விளைவிக்க முயன்றனர். ஹிந்துக்களுக்கு மதவெறி ஊட்ட காவிக் கொடியையும் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த மூவர்ணக் கொடியையும் சந்தர்பத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தி வந்திருக்கிறது. பாப்ரி பள்ளிவாசலை இடிப்பதற்காக அதன் மண்டபங்களின் மீது ஏறிய ஹிந்து வன்முறைகும்பலின் கையில் 'காவி' கொடி இருந்ததை நாமெல்லாம் மறந்திருக்க முடியாது.ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றப்போகிற சாக்கிலே கலவரம் விளைவித்து மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்க முயலும் காவி பச்சோந்திகள் சட்டத்தை சந்திக்க திராணியில்லாது தாங்கள் செய்த 'காலித் தனத்துக்கு' மூவர்ணம் பூசி தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அரசியல் ஆதாயம் தேடும் இவர்களின் ஈனச் செயலை இந்திய ஒருமைப்பாட்டில் அக்கறை கொண்டவர்கள் மக்களுக்கு தோலுரித்து காட்டவேண்டும்.
நன்றி : பிறைநதிபுரத்தான்.
வியாழன், 16 டிசம்பர், 2010
20 ஆண்டுகளில் காஷ்மீறில் கொல்லப்பட்ட தலைவர்கள் 697 பேர்.
ஜம்மு,டிச.13:கடந்த 20 வருடங்களுக்கிடையே கஷ்மீரில் நடந்த மோதலில் 697 அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டுதான் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.2002-100 பேர், 2010-4 பேர், 2009-6 பேர், 2007- 9 பேர், 2006-17 பேர், 2005-40 பேர், 2004- 62 பேர், 2003-52 பேர், 2001- 76 பேர், 2000-35 பேர், என புள்ளிவிபரம் கூறுகிறது. தேசிய மாநாட்டுக் கட்சியின் 420 பேரும், பி.டி.பியைச் சார்ந்த 96 பேரும் இதில் உட்படுவர். சனி, 9 அக்டோபர், 2010
புதன், 29 செப்டம்பர், 2010
எங்களுக்கு தேவை பிச்சையல்ல! நீதி!
எங்களுக்கு தேவை பிச்சையல்ல! நீதி! எனக்கூறி துஃபைலின் தந்தை முஹம்மது அஷ்ரஃப் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்த நிதியுதவியை நிராகரித்துவிட்டார்.
கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி துஃபைல் கொல்லப்பட்டார். ரஜவ்ரி கதலில் கனி மெம்மோரியல் ஸ்டேடியத்தின் அருகில் தனது தோழர்களுடன் துஃபைல் சென்றுக் கொண்டிருக்கும் வேளையில்தான் பாதுகாப்புப் படையினரின் கண்ணீர் குண்டு அவருடைய தலையில் தாக்கில் துஃபைல் மரணித்தார்.
தொடர்ந்து நடந்த கஷ்மீரிகளின் போராட்டத்தில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
"எனது மகன் மகத்தான லட்சியத்திற்காக உயிரை தியாகம் செய்துள்ளான்" என துஃபைலின் தந்தை கூறுகிறார்.
மேலும் "உயிர் தியாகிகளின் இரத்தத்தை விற்று காசு சம்பாதிக்க நாங்கள் விரும்பவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் தரலாம் எனக்கூறினாலும் வாங்கமாட்டோம்" என முஹம்மது அஷ்ரஃப் கூறுகிறார்.
"எங்கள் குழந்தையை கொலைச் செய்தவர்களோடு எந்த சமரசத்திற்கும் இடமில்லை. ஆட்சியாளர்களான உங்களுக்கு இச்சம்பவம் நிகழ்ந்திருந்தால் நீங்கள் நிதியுதவியை வாங்குவீர்களா? பணம் தருவதற்கு பதிலாக கொலையாளிகளான பாதுகாப்பு படையினரை தண்டிக்க வேண்டும். கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக இச்சம்பவத்தை திசைதிருப்ப முயல்வது அதிகாரிகளின் வழக்கம்" என துஃபைலின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,பாலைவனத் தூது
சனி, 25 செப்டம்பர், 2010
கஷ்மீருக்கு சுயாட்சி வழங்க வேண்டும்: பஸ்வான்
கஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.ஆனால், அரசியல் சட்டத்திற்குட்பட்டு முடியுமென்றால் கஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என பஸ்வான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு கஷ்மீர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பிரிவினைவாத தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும்.
போராட்டத்தில் கைதுச் செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலைச்செய்ய வேண்டும். அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு சமர்ப்பித்த சிபாரிசுகளை அங்கீகரித்து காலதாமதம் இல்லாமல் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு பஸ்வான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜூன் 11க்குப் பிறகு கஷ்மீரில் 110 சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டதுக் குறித்து உயர்மட்ட விசாரணை தேவை எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கஷ்மீருக்குச் சென்ற அனைத்து கட்சி பிரதிநிதிக் குழுவில் இடம்பெற்றிருந்த பஸ்வான், ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி, ஜெ.கெ.எல்.எஃப் தலைவர் யாசின் மாலிக் ஆகியோரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,பாலைவனத் தூது
புதன், 15 செப்டம்பர், 2010
கஷ்மீர்:துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் மரணம்
ஸ்ரீநகர்/புதுடெல்லி,செப்.14:கஷ்மீரில் நேற்று நடந்த போலீஸ்-ராணுவம் துப்பாக்கிச் சூட்டிலும், வன்முறையிலும் 18 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.அமெரிக்காவில் திருக்குர்ஆனை கிழித்துவிட்டார்கள் என்ற செய்தியைத் தொடர்ந்துதான் புதிய போராட்டம் துவங்கியது. சிறுபான்மை சமூகம் நடத்தும் தனியார் பள்ளிக்கூடம் மற்றும் ஏராளமான அரசு நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பு முழக்கங்களுடன் தெருவில் இறங்கிய மக்கள் திரள் பாதுகாப்புப் படையினருடன் மோதியது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
கல்வீச்சு நடத்திய கூட்டத்தினரை பின் தொடரும் பொழுது வாகனம் ஏறி போலீஸ்காரர் ஒருவர் மரணமடைந்தார்.
பாரமுல்லா மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கூடத்தை மக்கள் கூட்டம் தகர்த்தது. ப்ளாக் டெவலப்மெண்ட் அலுவலகம், நீதிமன்றம், தாசில்தாரின் அலுவலகம், சமூகநலத்துறை அலுவலகம், சுற்றுலாத் துறையின் இரண்டு மையங்கள், போலீஸ் நிலையம் ஆகியன தாக்குதலுக்குள்ளாகின. தொடர்ந்து போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் இங்கு கொல்லப்பட்டனர்.
முதஸ்ஸிர் அஹ்மத் பராய், அப்துல் மஜீத், அப்துல் கய்யூம், ஆஃபாக் அஹ்மத் கான், அஹ்மத் கனாய் ஆகியோர்தான் சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர். பத்திற்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
பக்ராம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது வயது தில் அஹ்மத் லோன் என்ற சிறுவனும், குலாம் ரசூல் தாந்த்ரா என்பவரும் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.
மத்திய கஷ்மீரில் புத்காம் நகரத்தில் ஷராரி ஷெரீஃபிற்கு வெளியே அமைதியாக நடந்த பேரணி மீது சி.ஆர்.பி.எஃப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தானிஷ் நபி என்பவர் கொல்லப்பட்டார். முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டித்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது.
புத்காமில் ஓம்புராவில் மக்கள் வசிக்கும் வளாகத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரஃபீக்கா என்ற பெண்மணி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து புத்காம் போலீஸ் நிலையத்தின் மீது மக்கள் கல்வீசினர். இதனால் துப்பாக்கியால் போலீஸ் சுட்டதால் இருபது பேருக்கு காயம் ஏற்பட்டது. இங்குதான் கல்வீச்சு நடத்திய மக்கள் கூட்டத்தை பின் தொடரும் வேளையில் தேவேந்தர் சிங் என்ற போலீஸ்காரர் வாகனம் ஏறியதால் மரணமடைந்தார்.
பந்திப்புராவில் அஜாஸ் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நிஸார் அஹ்மத் பட் என்பவர் கொல்லப்பட்டார். புல்வாமா மாவட்டத்தில் பாம்போரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இன்னொருவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் இஜாஸ் அஹ்மத் கொஜ்ரியாவார். பதினைந்துபேருக்கு காயம் ஏற்பட்டது. அனந்த நாக்கில் இரண்டு பேரை போலீஸ் அநியாயமாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது.
இதற்கிடையே, அமெரிக்காவில் திருக்குர்ஆனை கிழித்த செய்தியை தொடர்ந்து சர்வதேச செய்தி நிறுவனமான பிரஸ் டி.விக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்காவில் சிலர் திருக்குர்ஆன் பிரதியை கிழித்தெறிந்ததால் ஏற்பட்ட வன்முறைக்கு இந்தியாவின் அமெரிக்கத் தூதர் திமோத்தி ஜெ ரோமர் ஆச்சரியம் தெரிவித்தார். ஆனால், சிறுபான்மை சமூகத்தின் பள்ளிக்கூடத்தின் மீது நடந்த தாக்குதலை ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி கண்டித்துள்ளார்.
கஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மை சமூகத்தினரின் நிறுவனங்களுக்கு கஷ்மீரிகள் பாதுகாப்புத்தான் அளிக்கவேண்டுமென அவர் கூறினார்.
கஷ்மீர் பிரச்சனையைக் குறித்து விவாதிக்க கூடிய பாதுகாப்பிற்கான அமைச்சரவை முடிவெடுக்காமல் கலைந்தது. பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுல் ஆயுதச்சட்டத்தை பகுதியளவில் குறைப்பதுக் குறித்து விவாதித்தாலும், மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் உருவான சூழலில் தீர்மானம் எடுக்கமுடியாமல் 3 மணிநேரம் நீண்ட கூட்டம் பிரிந்தது.
கஷ்மீர் பிரச்சனையைக் குறித்து விவாதிக்க நாளை அனைத்துக் கட்சியினரின் கூட்டத்தைக் கூட்ட பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவானது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
ஞாயிறு, 12 செப்டம்பர், 2010
கஷ்மீர் மீண்டும் பற்றி எரிகிறது
ராணுவமும், போலீசும் இணைந்து அப்பாவிகளை சுட்டுக்கொல்வதைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை முடிந்து ஸ்ரீநகரிலிருந்து ஊர்வலமாக லால் சவுக்கிற்கு வந்த மக்கள் கூட்டம் க்ரைம் ப்ராஞ்ச் அலுவலகமும் போலீஸ் அவுட்போஸ்ட் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்களையும், வாகனங்களையும் தீக்கிரையாக்கினர்.
ஹூர்ரியத் கான்ஃப்ரன்ஸ் தலைவர் மீர்வாயிஸ் உமர்ஃபாரூக், ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாஸீன் மாலிக் ஆகியோரின் தலைமையில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துக் கொண்ட பேரணி நடைபெற்றது.
கடந்த 3 மாதங்களுக்கிடையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 70 பேரைக் கொன்றொழித்த ராணுவ நடவடிக்கையை கண்டித்து லால்சவுக்கிற்கு பேரணி நடத்த ஈத்பெருநாள் தொழுகைக்கு வருகைத்தந்த மீர்வாய்ஸ் ஃபாரூக் அழைப்புவிடுத்தார்.
லால்சவுக்கில் அரைமணிநேரம் கண்டன தர்ணாப் போராட்டம் நடத்தவும் அவர் அழைப்புவிடுத்தார். ஆனால் கண்டனப் போராட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிரான, சுதந்திரத்தைக் கோரும் கோஷங்களை எழுப்பினர்.
தர்ணாவுக்கு பிறகு அவர்கள் கொதிப்படைந்து கொந்தளிக்க ஆரம்பித்தார்கள். முதன்மை பொறியாளர் அலுவலகத்திற்கு தீவைத்த மக்கள் கூட்டம் அருகிலிலுள்ள க்ரைம்ப்ராஞ்ச் அலுவலகத்தையும் தீவைத்துக் கொளுத்தினர்.
பெரும்பாலும் மரங்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டிடங்களில் தீ வேகமாக பரவியது. தீயணைப்பு வண்டிகளை மக்கள் கூட்டம் தடுத்ததால் அதிகநேரமாக தீயை அணைக்க இயலவில்லை. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்திய பொழுதிலும் ஆள் அபாயம் ஏற்பட்டதாக் தகவல் இல்லை.
முன்னர் ஹஸ்ரத் பால் மஸ்ஜிதிற்கு வெளியே போலீஸ் அவுட்போஸ்டும், வாகனங்களும் பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
ஜஹாங்கீர் சவுக், ரீகல் சவுக் ஆகிய இடங்களில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
மீர்வாய்ஸ் ஃபாரூக்கும், யாஸின் மாலிக்கும்தான் நேற்றைய வன்முறைக்கு காரணமென கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் குற்றஞ்சாட்டுகிறார். போராட்டம் அமைதியாக நடைபெறும் என்று கருதித்தான் போலீஸ் உத்தரவுகளையும் மீறி தான் அனுமதியளித்ததாக உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார். வன்முறைகளை தான் ஆதரிக்கவில்லை எனவும், ஆனால் பொதுமக்களின் வழக்கமான பதில்தான் பள்ளத்தாக்கில் பிரகடமானது என மீர்வாய்ஸ் ஃபாரூக் தெரிவித்தார்.
அதேவேளையில், செய்யத் அலிஷா கிலானியின் தலைமையிலான ஹூர்ரியத் மாநாட்டுக் கட்சியின் அமைப்பினரும் தலைமறைவாக உள்ள முஸ்லிம் லீக் தலைவர் மஸ்ரத் ஆலமின் ஆட்களும்தான் வன்முறைக்கு காரணம் என போலீஸ் குற்றஞ்சாட்டுகிறது.
இதற்கிடையே, ஆயுதப்படை சட்டத்தை பகுதியளவில் வாபஸ் பெறும் மத்திய அரசின் திட்டம் செல்லுபடியாகாது என மீர்வாய்ஸ் ஃபாரூக் ஈத் பெருநாள் தொழுகை உரையில் குறிப்பிட்டார். "அத்தகைய முயற்சிகளுக்கான காலம் கடந்துவிட்டது. அதனைவிட பெரிய காரியங்களைக் குறித்து பேசவேண்டிய நேரமிது. பொருளாதார திட்டங்களோ, தொழில் துவங்க உதவும் திட்டங்களோ கஷ்மீர் பிரச்சனைக்கு பரிகாரமல்ல. சுய நிர்ணய உரிமைக்காகத்தான் கஷ்மீரிகள் உயிரை அர்ப்பணம் செய்கின்றனர்.
டெல்லி அரசு மக்களை தவறாக புரிந்துக்கொள்ள முயற்சி செய்வதுபோல் பள்ளத்தாக்கின் எதிர்ப்பு பாகிஸ்தானின் உருவாக்கம் அல்ல. அது முற்றிலும் உள்நாட்டு போராட்டமாகும்." இவ்வாறு மீர்வாய்ஸ் ஃபாரூக் உரைநிகழ்த்தினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010
கஷ்மீரிகள் கல்வீச்சில் ஈடுபடுவது தற்காப்பிற்காக: தேஜஸ் நிருபருடன் செய்யத் அலிஷா கிலானி பேட்டி.
ஸ்ரீநகர்,ஆக21:கஷ்மீரில் அதிக மக்கள் ஆதரவுப் பெற்றத் தலைவர் தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத்தின் தலைவர் செய்யத் அலிஷா கிலானி. விட்டுக் கொடுக்காத மனப்பான்மைதான் கிலானியை பிறர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. கிலானி முழு அடைப்பிற்கு அழைப்புவிடுத்தால் எந்தவொரு கட்சியின் ஆதரவு இல்லாவிட்டாலும் கஷ்மீர் ஸ்தம்பிக்கும்.கஷ்மீரில் மிக அதிகமாக கைதுச் செய்யப்பட்டவர் கிலானியாவார். கிலானியுடன் தேஜஸ் மலையாள நாளிதழின் பிரதிநிதி நடத்திய நேர்முக பேட்டி கீழே.
தேஜஸ்:பேச்சுவார்த்தைக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விடுத்த அழைப்பை நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள். தற்பொழுது பிரதமர் அளித்த சுயாட்சி வாக்குறுதியையும் நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள். எந்தவொரு சமரசத்திற்கும் இடங்கொடாத கண்டிப்பானவர் கிலானி எனக் குற்றஞ்சுமத்த இது காரணமாகுமே?
கிலானி:பேச்சுவார்த்தைகள் நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால் அந்த பேச்சுவார்த்தை பயன்தரத்தக்கதாக மாறவேண்டும்.எது அடிப்படை பிரச்சனை என்பதுதான் முக்கியம். அதுதான் பேச்சுவார்த்தையின் ஒரேயொரு அஜண்டாவாக இருக்கவேண்டும்.கஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதிதான் என்பதை அங்கீகரிப்பதுதான் இந்தியா முதலில் செய்யவேண்டியது. தொடர்ந்து இங்கு நடைமுறையில் உள்ள கொடிய சட்டங்களை வாபஸ் பெறவேண்டும்.
இந்தியா,பாகிஸ்தான்,கஷ்மீரிகள் ஆகியோருடன் தொடர்புடையதுதான் கஷ்மீர் பிரச்சனை.பேச்சுவார்த்தையில் எல்லோரும் கலந்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று தரப்பினரும் முன்வைக்கும் ஃபார்முலாவின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடத்துவதும், தீர்வு காண்பதுமாகும். இத்தகையதொரு பேச்சுவார்த்தையை விரும்பினால், நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம். இந்தியா இவ்விஷயத்தை அங்கீகரிக்காதவரை கஷ்மீர் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பயனற்று போகும்.
தேஜஸ்:தங்களை பலவீனப்படுத்த இந்திய அரசு தொடர்ந்து முயல்வதாக நீங்கள் குற்றஞ்சாட்டியுள்ளீர்கள். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைத்ததன் மூலம் தங்களுடைய செல்வாக்கை இந்திய அரசு அங்கீகரிக்கிறதல்லவா? இதனை நல்லதொரு மாற்றமாக அல்லவா நீங்கள் காணவேண்டும்?
கிலானி:அவ்வாறில்லை,இந்தியாவிற்கு உள்ளார்ந்த நேர்மை உண்டெனில் அவர்கள் கஷ்மீர் மக்களுக்காக எதனையாவது செய்யவேண்டும். முன்னர் மீர்வாய்ஸ் பிரிவினருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், இதனால் எவ்வித பயனும் விளையவில்லை என மீர்வாய்ஸ் ஃபாரூக்கே கூறியுள்ளார். மக்களுக்கிடையே கஷ்மீர் தலைவர்களின் இமேஜை குலைப்பதே இந்தியாவின் நோக்கம்.பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்தியாவிற்கு எவ்வித கஷ்டமுமில்லை. ஆனால், ராணுவ சக்தியைத்தான் இந்தியா எப்பொழுதும் நம்பியுள்ளது.
தேஜஸ்:தேசிய மாநாட்டுக் கட்சி அரசை நீங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்கின்றீர்கள்?
கிலானி:தேசிய மாநாட்டுக் கட்சியானாலும் சரி பி.டி.பி அல்லது காங்கிரஸ் என்னச் செய்தார்கள்? என்னச் செய்யவில்லை? என்பதை நாங்கள் ஒரு பிரச்சனையாக கருதவில்லை.
இந்தியா நேரடியாக கஷ்மீரை ஆளுகிறது.வேறு எவருக்கும் இங்கு அதிகாரமில்லை. சில வாரங்களுக்கு முன்பு கஷ்மீர் மாநில அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் முஹம்மத் ஸாஹரே, சி.ஆர்.பி.எஃப் எங்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்படுவது இல்லை என்று கூறியிருந்தார். அவர்கள் பரிபூரணமாகவே கட்டுப்பாடு இல்லாதவர்கள். நாங்கள் பல் இல்லாத சிறுத்தை என்பதை அமைச்சரவையின் அங்கத்தினரே ஒப்புக்கொள்கிறார்.
தேஜஸ்:கடந்த சில மாதங்களாக கஷ்மீரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அவை பல வேளைகளில் வன்முறையில் முடிகிறது. மக்கள் பாதுகாப்புப் படையினர் மீது கல் வீசுகிறார்கள்.மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தத் தூண்டுவது இதுதானே?
கிலானி:பாதுகாப்புப் படையினர்தான் மக்களை அவர்கள் மீது கல்லெறியத் தூண்டுகின்றனர்.அமைதியான போராட்டங்களைக் கூட இங்கு அனுமதிப்பதில்லை.
பாதுகாப்புப்படையினர் 52 பேரைக் கொன்ற பொழுது அதில் 50 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் இளைஞர்களாவர். மக்களால் கல்லெறியப்பட்ட எந்தவொரு பாதுகாப்புப் படையினரும் இதுவரை இறந்ததில்லை. கல்லெறிவதற்கு மக்கள் தூண்டப்படுகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் தற்காப்பிற்காகவே கல்வீச்சில் ஈடுபடுகின்றார்கள். அமைதியாக செல்லும் கண்டனப் பேரணியின் மீது கண்ணீர்க் குண்டு வீசுவதும், துப்பாக்கிச்சூடு நடத்துவதும் நிகழும் பொழுது மக்கள் கல்வீச்சில் ஈடுபடுகின்றார்கள்.
தேஜஸ்:கஷ்மீர் விவகாரத்தில் இந்தியா என்னச் செய்யவேண்டும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
கிலானி:கஷ்மீருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் நேரமாகிவிட்டது என சமீபத்தில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் இந்தியாவுக்கு உள்ளார்ந்த நேர்மை உண்டெனில் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே துவங்க வேண்டும். இந்தியா கஷ்மீரை சர்ச்சைக்குரிய பகுதி என்பதை அங்கீகரிக்க வேண்டும். கஷ்மீர் தொடர்பாக ஐ.நா நிறைவேற்றிய, இந்தியா அங்கீகரித்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறுதான், தீர்விற்கு சூழலை உருவாக்க வேண்டும். துரதிர்ஷ்டவசத்தால், அது உருவாகவில்லை. இந்தியா உள்ளார்ந்த நேர்மையுடன் பேசவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
கடந்த காலங்களுக்கிடையே கஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆறு லட்சம் பேர் இங்குக் கொல்லப்பட்டனர். ஐந்து லட்சம் வரையிலான மக்கள் ஜம்முவில் கொல்லப்பட்டனர். பிரிவினையின் பொழுது, பாகிஸ்தானுக்கு போவதற்குரிய வசதியை ஏற்படுத்தி தருவதாக வாக்களித்து ஒரு இடத்தில் முஸ்லிம்களை ஒன்றுக்கூட்டி தோக்ரா ராணுவம் கூட்டுப்படு கொலைச் செய்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கிடையே ஒரு லட்சம் வரையிலான நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கஷ்மீர் பள்ளத்தாக்கில் 1000 ரகசிய பிண சமாதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுதான் இந்தியாவின் அணுகுமுறை.
தேஜஸ்:கஷ்மீரின் தற்பொழுதைய பிரச்சனையின் பின்னணியில் லஷ்கர்-இ-தய்யிபா என உள்துறை அமைச்சர் கூறுகிறார்?
கிலானி:நிச்சயமாக இல்லை. இது பிரச்சனையை திசைத் திருப்புவதற்காக கூறப்படும் குற்றச்சாட்டாகும். பாகிஸ்தான் கஷ்மீரி இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட பண உதவிச் செய்கிறது என்பதெல்லாம் இந்தியா உருவாக்கும் பொய்களாகும். எவரும் இங்கு வந்து இங்குள்ள பிரச்சனை என்ன? என்பதை புரிந்துக் கொள்ளலாம். இங்கு ஒரு லஷ்கரும் இல்லை. வெள்ளப்பெருக்கு போன்ற சொந்த பிரச்சனைகளால் அல்லாடுகிறது பாகிஸ்தான். அவர்களுக்கு எங்களுடைய பிரச்சனைக்கு தார்மீக ஆதரவு அளிக்கக்கூட இயலவில்லை.
நன்றி:தேஜஸ் மலையாள நாளிதழ்
வியாழன், 19 ஆகஸ்ட், 2010
கஷ்மீர் இஸ்லாமிய மயமாகி வருவதாக ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டு
"காஷ்மீரை இஸ்லாமிய மயமாக மாற்றி வருவது மிகவும் ஆபத்தான ஒரு விளையாட்டு, இது இருவகையான திட்டங்கள் மூலம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது, அவர்கள் முதலில் இடங்களை குறிப்பிட முஸ்லிம் பெயர் பலகைகளை வைத்து வருகின்றனர். பின்னர் சினிமா திரை அரங்குகள், அழகு நிலையங்கள் மற்றும் உணவு விடுதிகள் மற்றும் நவீன அழகு சாதன கடைகள் மீது தடைகளை விதித்து வருகின்றனர்.
பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களில் முஸ்லிம் பெண்களை முகத்திரை அணிய பணிக்கின்றனர்." என ஆர்.எஸ்.எஸ் ன் ஆர்கனைசர் இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கும் நவீன அழகு ஆடைகளை அணிவதற்கும் மேலும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கும் எல்லையோர பகுதிகளில் அனுமதிப்பதில்லை என்றும் அக்கட்டுரையில் வெளிவந்துள்ளன.
சில முல்லாக்கள் பெண்களை பள்ளிகூடங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மதரசா கல்வித் திட்டத்தை பெரிய அளவில் முன்னிலை படுத்துவதாகவும், அரபிமொழி முன்னேற்றத்தினை ஊக்குவிப்பதாகவும் கட்டுரை வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிப்பபதற்கு பதிலாக வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை விட வேண்டும் எனவும் கேட்டுள்ளனர் என்றும் நிர்வாகமும் கூட இஸ்லாமிய மயமாகி விட்டதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எல்லைப் பிரிவினையின் போது அங்கு வந்து வாழும் ஹிந்து குடியேற்ற வாசிகளுக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை என்றும் மேலும் பல குற்றச்சாட்டுகளை கூறுகிறது.
கஷ்மீரின் இந்த தொடர்ந்த இஸ்லாமிய மயமானது எல்லையோரம் உள்ள நூற்றுக்கும் மேலான ஹிந்துக் கோவில்களை இடிப்பது, ஹிந்துக்களை குறிவைத்துக் கொல்வது மற்றும் அவர்களை குடியேற்றப் பகுதிகளில் இருந்து அவர்களின் வேலைகளையும் சொத்துக்களையும் மற்றும் எல்லாவற்றையும் விட்டு வெளியேற்றுவது போன்ற அவர்களின் திட்டத்தை நிறைவேற்றும் முகமாக சவால் விடுவதாக உள்ளது
இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட வேண்டும், 'பாகிஸ்தானுக்கு போங்க இல்லையேல் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் கஷ்மீருக்குப் போங்க அல்லது எங்கு இஸ்லாமிய சட்ட திட்டங்களை சுதந்திரமாக செயல் படுத்த முடியுமோ அங்கு போங்க' என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது .
அரசியல்வாதிகளிடம் இஸ்லாமிய வாதம் ஊடுருவி உள்ளதாக ஆர்கனைசர் குற்றம் சாட்டுகிறது. கஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தின் 370 பிரிவையும் ஆர்கனைசர் கடுமையாக விமர்சித்துள்ளது.
பிரிவினை வாதிகள் ஹிந்துக்களை பள்ளிகூடங்களிலும் அலுவலகங்களிலும் திட்டமிட்டு குறி வைத்து வருவதாகக் கூறுகிறது.
ஹிந்துக்கள், சீக்கியர்கள் கடைகள் குறி வைத்து தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன. குடியேற்ற வேலைக்காரர்கள் தாக்குதலுக்கு இலக்காகப் படுகின்றனர். கஷ்மீரிகள் அல்லாத மற்றவர்கள் நடத்தும் நிறுவனங்கள் எல்லைப் பகுதியை விட்டு வெளியேறுமாறு மிரட்டப் படுகின்றன என்றும் ஆர்கனைசர் குற்றம் சாட்டுகிறது.
புதன், 11 ஆகஸ்ட், 2010
கஷ்மீரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்' பிரதமர் வேண்டுகோள்
கஷ்மீர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இளைஞர்கள் வன்முறையைக் கைவிட்டு பள்ளி, கல்லூரிகளுக்குத் திரும்ப வேண்டும்.அந்த மாநில நிலவரம் குறித்து பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
"ஜம்மு-கஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் அனைவருக்கும் வேதனையளிப்பதாக உள்ளது. வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் மகன், மகளை இழந்து வாடும் ஒவ்வொரு தாய், தந்தை மற்றும் குடும்பங்களின் துயரத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இளைஞர்கள் வன்முறையைக் கைவிட்டு பள்ளி, கல்லூரிகளுக்குத் திரும்ப வேண்டும்.
ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் பிள்ளைகள் கல்வி நிலையங்களுக்குச் செல்வதைக் கண்காணிக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் இப்போது கல்வி கற்கவில்லை என்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும், மாநிலத்தின் எதிர்காலம் என்னவாகும் என்பதை பெற்றோர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆயுதப் படை சிறப்புச் சட்ட விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சட்டம், ஒழுங்கு முழு பொறுப்பையும் ஏற்க மாநில போலீஸாருக்கு இப்போதைக்கு போதிய ஆள்பலம் இல்லை.
முதலாவதாக மாநில போலீஸ் படையை பலப்படுத்த வேண்டும். அப்போதுதான், அவர்களால் தன்னிச்சையாக, சுதந்திரமாகச் செயல்பட முடியும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு.
வன்முறையைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படையினரும், மாநில போலீஸாரும் மிகப் பெரிய சவால்களை சந்தித்துள்ளனர். அவர்களில் பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவது வேதனையானது.
இனிமேலும் கஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதை அனுமதிக்க முடியாது. அதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கஷ்மீர் இளைஞர்களுக்கு தனியார், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது தொடர்பாக விரிவான திட்டத்தை தயாரிக்க பொருளாதார நிபுணர் சி. ரங்கராஜன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மூன்று மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது இளைஞர் அணிகள் மூலமாக மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
கஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஜனநாயக வரம்புகளுக்கு உள்பட்டு எல்லா பிரச்னைகள் குறித்தும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது.
அதற்கு மாநிலத்தில் நிரந்தர அமைதி நிலவ வேண்டும். அதற்கான வாய்ப்பை காஷ்மீர் மக்கள் உருவாக்கித் தரவேண்டும்" என்றார்.
பிரதமரின் பேச்சு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, எஸ்.எம்.கிருஷ்ணா, குலாம்நபி ஆசாத் மற்றும் கஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகள் சார்பில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகம்மது யூசுப் தாரிகாமி, சுயேச்சை எம்எல்ஏ குலாம் ஹசன் மிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது. இருப்பினும் கஷ்மீர் பிரச்னை குறித்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுக்கு மக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி செவ்வாய்க்கிழமை கூறும்போது, "கஷ்மீரில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இதன்மூலம் மாநிலத்தில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னையில் பிரதமர் தலையிடவேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருவது நாங்கள்தான்" என்றார் அவர்.
செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010
கஷ்மீருக்கு சுயாட்சி வழங்கக் கூடாது: ராஜ்நாத் சிங்
பாட்னாவில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்."காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பலவீனம் மற்றும் உறுதியின்மையே கஷ்மீரில் இப்போது நிலவும் குழப்பத்துக்கு காரணம்.மேலும் கஷ்மீருக்கு சுயஅதிகாரம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதுபோல் ராணுவ பாதுகாப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதையும் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்." என்றார் அவர்
சனி, 7 ஆகஸ்ட், 2010
கஷ்மீரில் அமைதியை கொண்டுவர அரசியல் கைதிகள் மற்றும் இளைஞர்கள் விடுவிக்க வேண்டும்' - பி.டி.பி கோரிக்கை
ஸ்ரீநகர்,ஆக6:கஷ்மீரில் அமைதியைக் கொண்டு வரவும், கஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணவும், அங்கு கைதுசெய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்,இளைஞர்கள் மற்றும் சயீத் அலி கீலானி போன்ற தலைவர்களையும் விடுதலை செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என மக்கள் ஜனநாயக கட்சி கட்சி கூறியுள்ளது.மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில்; "கஷ்மீர் பிரச்சினைகளுக்கு இராணுவ பலத்தை பிரயோகித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் செயல் முறைகளை அரசு கொண்டுள்ளது. இதன் மூலம் கஷ்மீர் அரசாங்கம் பல அரசியல் தலைவர்களயும் சிறு வயது இளைஞர்களையும் கைது செய்து சிறையில் வைத்துள்ளது. இது அம்மாநில அரசின் தோல்வியைக் காண்பிக்கின்றது .
அரசியல் மாற்றங்களைக் கொண்டு வர தக்கதருணம்
வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ள மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக், முஹமது யாசின், மாலிக் சபீர் அஹமத் சாஹ், நயீம் கான் மற்றும் சபீர் அஹ்மத் மிர் ஆகிய அரசியல் தலைவர்களுக்கு சுதந்திரமான ஒரு அரசியல் தளத்தை அமைத்து அவர்களின் அரசியல் ஈடுபாட்டை கஷ்மீரில் அமைதியைக் கொண்டு வரும் செயல்பாடுகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் கைது செய்து கிரிமினல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களையும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் செயல்பாடுகளுக்காக விடுதலை செய்யவேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தற்போதைய கஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்" என தான் நம்புவதாக மெஹபூபா குறிப்பிட்டார்.
"மாநிலத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அரசியல் கட்சிகளுக்கிடையே தொடர்ந்து நடந்து வரும் பூசல்களைக் களையவும் மக்கள் ஜனநாயக கட்சி எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களையும் வலியுறுத்தும்" எனவும் கூறினார்.
"மாநில அரசு மற்றும் அதன் குடிமக்கள் தங்களுக்குள் எத்தகைய வேறுபாடுகளிலும் மற்றும் பிரிவினை செய்து தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் நடவடிக்கைகளையும் தவிர்க்க பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.
பயனுள்ள அரசியல் முயற்சிகளால் மட்டுமே கஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண முடியும் என்பதை மக்கள் ஜனநாயக கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இது இந்திய அரசாங்கம் விழிப்புடன் செயல்பட்டு பயனுள்ள அரசியல் மாற்றங்களைக் கொண்டும் மனிதநேய அணுகுமுறைகளின் மூலமும் தீர்வு காண தக்க சமயமாகும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 60 சதவிகித கஷ்மீர் மக்கள் வாக்களிப்பில் பங்கு கொண்டனர். தற்போது கஷ்மீர் பிரச்சினையை கையாளும் முறைகளின் மூலம் இது பாதிக்கப்பட கூடாது. இது எதிர்பாரதவிதமாக உள்ளது. மக்கள் ஜனநாயக கட்சியின் இந்த கருத்து தக்க தருணத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது பல உயிர் இழப்புகளும் பொருளாதார இழப்புகளும் ஏற்பட காரணமாக அமைந்து விட்டது." என்றும் அவர் கூறினார்.
புதன், 4 ஆகஸ்ட், 2010
கஷ்மீரில் கண்டதும் சுட உத்தரவு: மேலும் 7 பேர் மரணம்
ஸ்ரீநகர்,ஆக4:கஷ்மீரில் பல நாட்களாக தொடரும் வன்முறைக்கு இதுவரை ஓய்வு ஏற்படவில்லை.பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் 7 பேர் நேற்றுக் கொல்லப்பட்டனர்.
கல்வீச்சில் ஏராளமான போலீசாருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே ஸ்ரீநகரில் வன்முறையாளர்களை கண்டால் சுட உத்தரவிட்டுள்ளதாக ஒலிபெருக்கி மூலம் போலீஸ் மக்களை அறிவித்துள்ளது.
ஸ்ரீநகர், பட்கம், பந்திபோரா, அவாதிபோரா, குல்காம், பாராமுல்லா, சோப்பூர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் இறங்கிய மக்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் மீது கடுமையான கல்வீச்சில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் அரசு வாகனங்கள் மற்றும் போலீஸ் முகாம்கள் மீது தாக்குதல் நடந்தது.
மிஹ்ராஜ் அஹ்மத் லோன்(வயது 25)துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். கமர்வாரியில் போராட்டம் நடத்தியவர்களை கலைந்துச் செல்ல போலீஸ் உத்தரவிட்டதை மறுத்ததால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மிஹ்ராஜ் கொல்லப்பட்டுள்ளார்.
ஈத்கா மைதானத்தில் கொந்தளிப்பிலிருந்த மக்களை கலைந்து செல்ல போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அனீஸ் குர்ஷித் என்பவர் கொல்லப்பட்டார். குல்காமில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்றொருவர் கொல்லப்பட்டார். இவர் யார் என அடையாளம் காணப்படவில்லை. நேற்று முன் தினம் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிட்சைப் பெற்றுவந்த ரியாஸ் அஹ்மதும் நேற்று மரணமடைந்தார். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் நேற்று மூன்றுபேருக்கு காயமேற்பட்டுள்ளது. இத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் துவங்கிய வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
கர்ஃபாலி மொஹல்லா, ஃபதஹ்கடல் ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் பாதிப்பில்லை. குல்காமில் போலீஸ் முகாமை கொழுத்திய பொதுமக்கள் போலீஸ் அதிகாரி மீதும் தாக்குதல் நடத்தினர்.
பல இடங்களிலும் இந்தியா எதிர்ப்பு கோஷங்கள் முழங்கவே போராட்டங்கள் இரவிலும் தொடர்ந்தன. சோப்போரில் தாலுகா அலுவலகமும், பமீயில் போலீஸ் முகாமும் தீவைத்துக் கொழுத்தப்பட்டன. இதற்கிடையே கஷ்மீருக்கு கூடுதல் துணை ராணுவப்படையினரை அனுப்ப மத்திய அரசு முடிவுச்செய்துள்ளது. ஜம்முவிலிருந்த 32 கம்பெனி(3200) துணை ராணுவப்படையினரை கஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு ஏற்கனவே அனுப்பியுள்ளது மத்திய அரசு.
ஜம்மு கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கஷ்மீர் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வுதான் தேவை என்று உமர் அப்துல்லாஹ் குறிப்பிட்டது தற்போதைய பிரச்சனைகள் வெறும் சட்ட-ஒழுங்கு பிரச்சனை இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஆனால் ராணுவத்தை அனுப்புவதற்கான தீர்மானம் கஷ்மீர் பிரச்சனையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். இன்னும் ஓரிரு தினங்களில் 19 கம்பெனி(1900) ராணுவத்தினர் கஷ்மீர் செல்வர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
திங்கள், 2 ஆகஸ்ட், 2010
கஷ்மீரை சற்று கண்ணைத் திறந்து பாருங்கள்!
வானமே இடிந்து தலையில் வீழ்ந்தாலும்கூட கவலைப்படாத ஐ.நா பொதுச்செயலாளர் பான்கிமூன் கூட கவலைப்படுமளவுக்கு கஷ்மீரில் நடந்துவரும் நிகழ்வுகள் காரணமாகியுள்ளன.கஷ்மீரின் கட்டுப்பாடு ஆட்சியாளர்களின் கையிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிறது என்பதை அங்கிருந்துவரும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.
கடந்த ஜூன் 11 ஆம் தேதி துவங்கிய மோதலும், இரத்தக்களரியும் ஆட்சியாளர்களின் செப்பிடி வித்தைகளால் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் உள்ளன.
கடந்த ஆறுவாரங்களுக்கிடையே போலீஸின் துப்பாக்கிச்சூட்டில் மரணித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு டஜனாகும்.
முப்பதைத்தாண்டாத 18 வயதிற்கும் 19 வயதிற்குமிடைப்பட்ட இந்த தேசத்தின் குடிமகன்கள் தங்கள் இன்னுயிரை பறிகொடுத்துள்ளனர்.
மோதல் மற்றும் போராட்டம் காரணமாக கஷ்மீரின் முக்கிய நகரங்களெல்லாம் ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிக்கிடக்கின்றன. போராட்டக்காரர்களை நோக்கி உமர் அப்துல்லாஹ்வின் போலீஸ் நடத்தும் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டால் நிலைமை மேலும் மோசமாகிவருகிறது.
தற்போதைய நிகழ்வுகளுக்கு என்னக்காரணம்? தினமணி போன்ற பத்திரிகை உலக பாசிஸ்டுகள் ஏ.சி அறையில் உட்கார்ந்துக் கொண்டு எழுதுவதுபோல் பாகிஸ்தானிலிருந்து வீசப்படும் கரன்சி நோட்டுகளா? நிச்சயமாக இல்லை எனலாம்.
கஷ்மீரின் இத்தகையதொரு சூழலுக்கு காரணமே எச்சில் துண்டுகளுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் மூன்று அப்பாவி இளைஞர்களை தயவுதாட்சணியமில்லாமல் சுட்டுக் கொன்றதாகும்.
அத்தோடு அவர்களுக்கு பயங்கரவாத முத்திரைக் குத்தி குழித்தோண்டி புதைக்கவும் செய்தனர். ஆனால் உண்மைகள் வெளியானபொழுது போலீசின் வாதங்கள் பொய்த்துப் போயின.
சில்லரைகளைக் கொடுத்தும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையை ஆசைக்காட்டியும் பிரச்சனையை சமாளித்துவிடலாம் என திட்டமிட்டவர்களின் எண்ணத்தில் மண் விழுந்தது.
நாள்தோறும் கூடுதலான இளைஞர்கள் அரசுக்கெதிராகவும், பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும் போராட்டக்களத்தில் குதித்து வருகின்றனர்.
கஷ்மீரின் பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவரத் தெரியாத முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கையாலாகத்தனத்தால் ராணுவத்தின் பொறுப்பில் கஷ்மீர் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கஷ்மீர் வந்தபொழுதும் நிலைமை சீராகவில்லை என்பதைத்தான் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய மோதல் சூழல் நமக்கு உணர்த்துகிறது.
கஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அழைத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கஷ்மீர் பள்ளதாக்கில் ஓரளவு செல்வாக்குள்ள அமைப்புகள் கூட கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற குரல் எழுப்பியது மீர்வாய்ஸ் ஃபாரூக்கோ அல்லது சையத் அலிஷா கிலானியோ அல்ல. மாறாக, கஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லாஹ்தான் அந்த நபர்.
உண்மையில் பிரிவினைவாதிகள்தான் கஷ்மீர் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதை சொல்லாமல் சொல்லுவதுதான் உமர் அப்துல்லாஹ்வின் கோரிக்கை வெளிப்படுத்தும் உண்மையாகும்.
டெல்லியில் இருந்துக் கொண்டு கஷ்மீரின் திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கும் பாதுகாப்பு வல்லுநர்கள் இதனை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
துப்பாக்கிக் குண்டுகளால் ஒரு சமூகத்தை அச்சுறுத்தி அடிபணியவைக்க முடியாது என்ற உண்மையை ஒரு ஜனநாயக அரசை புரியவைக்க வேண்டியுள்ளது துரதிர்ஷ்டவசமானதாகும்.
இஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் காஸ்ஸாவை சற்று ஏறெடுத்துப் பாருங்கள் மேலே கூறியவற்றின் உண்மை புரியவரும்.
விமர்சகன்
கஷ்மீர் பற்றி எரிகிறது:மேலும் 8 பேர் மரணம்

சனிக்கிழமை போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து பாம்போரில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நயீம் அஹ்மத் ஷாவும், ரயீசும் மரணமடைந்தனர். இன்னொரு இடத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பதினேழு வயது அஃப்ரோஸ் என்ற பெண் கொல்லப்பட்டாள்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பிரதேச காவல்நிலையத்தை போராட்டக்காரர்கள் தீவைத்தனர். தொடர்ந்து குண்டுவெடிப்பும் நிகழ்ந்தது. இதில் ஐந்துபேர் கொல்லப்பட்டு ஏராளமானோருக்கு காயமும் ஏற்பட்டது.
போலீஸ் ஸ்டேசனில் பாதுகாத்து வைத்திருந்த வெடிப்பொருள் வெடித்ததில்தான் விபத்து ஏற்பட்டதாக போலீஸ் தெரிவிக்கிறது.
போராட்டக்காரர்களால் தீவைத்துக் கொழுத்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனிலிருந்த போலீஸ்காரர்களை ராணுவம் வந்து காப்பாற்றிய பின்னரே கடுமையான குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் தடைகளை ஏற்படுத்தினர். கலந்தர், கட்லபல், பர்சு, ப்ரஸ்தாபால், ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் சாலையை மறித்தனர்.
ஒரு தாசில்தாரின் வீடும், அலுவலகமும் தீவைத்துக் கொழுத்தப்பட்டது. ஒரு போலீசு வாகனம் தீவைத்துக் கொழுத்தப்பட்டு ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
அனந்த்நாக், ஸ்ரீநகர், பாரமுல்லா, குல்கம், புட்கம், பந்திப்போரா, கண்டேர்பால், ஷோபியான், புல்வாமா ஆகிய 9 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குப்வாரா மாவட்டத்தில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை போலீஸ் பொதுமக்களை நோக்கி துப்பாக்கி குண்டுமழை பொழிந்ததில் இரண்டுபேர் கொல்லப்பட்டிருந்தனர். தெற்கு கஷ்மீரில் அமர்கட், கக்போரா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதினர். பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீஸ் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கிறார்.
இதற்கிடையே ஜம்மு கஷ்மீர் விவகாரத்தை பிரதமர் அலுவலகம் நேரிடையாக கையாள வேண்டும் என ஜம்மு-கஷ்மீர் நேசனல் பேந்தர்ஸ் பார்டி வலியுறுத்தியுள்ளது.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் செய்ததுபோல் கஷ்மீர் விவகாரத்தை மன்மோகன்சிங் நேரிடையாக கையாள வேண்டும் என்பது அக்கட்சியின் கோரிக்கையாகும்.
கஷ்மீரில் நிலைமை மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் தலைமையில் பாதுகாப்பிற்கான அமைச்சரவை மீண்டும் கூடி நிலைமைகளை விவாதித்தது. ஒரு மாதத்திற்கிடையே இது இரண்டாவது முறையாக பாதுகாப்பிற்கான அமைச்சரவை கூடியுள்ளது.
கஷ்மீரிலிருந்து வந்துள்ள உளவுத்துறை தகவல்களையும், அரசியல் கட்சிகளின் கோரிக்கையையும் இக்கூட்டம் விவாதித்தது. கஷ்மீர் அமைப்புகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கோரிக்கையையும் அமைச்சரவை விவாதித்தது.
வேலைவாய்ப்பில்லாமலிருக்கும் பழைய போராளிகள்தான் போலீசார் மீது கல்லெறிவதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
ஞாயிறு, 11 ஜூலை, 2010
கஷ்மீரில் ராணுவம் வாபஸ் பெறுவது குறித்து ஜூலை 13-க்குப் பின் பரிசீலனை
கஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது குறித்து ஜூலை 13-ம் தேதிக்குப் பிறகு பரிசீலிக்கப்படும் என்றார் அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா.கஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் போராட்டம் வெடித்ததால் அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தின் உதவியை நாடினார் முதல்வர் ஒமர் அப்துல்லா.
இதையடுத்து கஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரச்னைக்குரிய பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அந்த மாநில பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஒமர் தலைமையிலான அரசுக்கு கஷ்மீர் சூழலை கையாள திறமை இல்லை என்று விமர்சித்துள்ளது.
இந்நிலையில் ஒமர் அப்துல்லா, ஸ்ரீநகரில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெறும் திட்டம் அரசிடம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ஒமர் அப்துல்லா, ராணுவத்தை வாபஸ் பெறும் திட்டம் அரசிடம் உள்ளது.இதுகுறித்து ஜூலை 13-ம் தேதிக்குப் பின்னரே பரிசீலிக்கப்படும்.காஷ்மீரில் டோக்ரா ஆட்சிக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களின் நினைவுதினம் ஜூலை 13-ல் அனுசரிக்கப்படவுள்ளது. அதுவரை ராணுவத்தை வாபஸ் பெறுதல் குறித்து முடிவெடுக்க முடியாது என்றார்.
கஷ்மீர் பள்ளத்தாக்கில் விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் மட்டுமே ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.நகர்ப்புற பகுதியில் ராணுவ வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தவில்லை.
போராட்டக்காரர்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கையிலும் ராணுவம் ஈடுபடவில்லை. கொடி அணி வகுப்பு மட்டுமே நடத்துகிறது என்று ஒமர் அப்துல்லா மேலும் தெரிவித்தார்.
செவ்வாய், 29 ஜூன், 2010
கஷ்மீர்:மத்திய போலீஸ் சுட்டதில் குண்டு பாய்ந்து 2 இளைஞர்கள் பலி
கஷ்மீர் மாநிலம் சோபோர் நகரில் போலீஸாரை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வியாழன், 9 ஜூலை, 2009
கஷ்மீரில் அதிகரித்து வரும் இந்தியப்பாதுகாப்புப்படையினரின் அட்டூழியம், மக்கள் ஆவேசம்
திங்கள், 15 ஜூன், 2009
கஷ்மீரில் தொடரும் போராட்டம்

ஆயிரக்கணக்கான பெண்கள் குறிப்பாக மாணவிகள் பெருந்திரளாக வீதிகளில் கூடி நீதிக்காகவும் கஷ்மீரிலிருந்து இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அமைதியான முறையில் நடைபெறும் இந்த போராட்டங்களை இந்திய ராணுவமும் காவல்துறையும் இணைந்து அநீதமான முறையில் அடக்கிவருகின்றனர். மீடியாக்கள் இச்செய்திகளை மறைத்துவருகின்றன. உள்ளூர் கேபிள் சேனல்களில் இச்செய்திகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.


கஷ்மீர் இந்தியாவிலுள்ள மாநிலம் என்று கூறுபவர்கள் வேறு மாநிலத்தவர்கள் கஷ்மீரைப்பற்றி பேசினாலேயே அதை தேசதுரோகம் என்று கருதும் வெட்கக்கேடான போக்கு. தொடர்ந்து பல ஆண்டுகளாக தொடரும் அநீதம்! உயிரையும் மானத்தையும் உறவுகளையும் சொத்துகளையும் இழந்தபின்னரும் அநீத்த்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் கஷ்மீர் மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.





