திங்கள், 4 ஜனவரி, 2010

ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று தான் என்ற மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் கருத்திற்கு தமுமுக தலைவர் கண்டன கடிதம்

புதுடெல்யில் கடந்த டிசம்பர் 23 அன்று நடைபெற்ற மத்திய உளவுத்துறையின் 22வது ஐ.பி. என்டோமென்ட் சொற்பொழிவின் போது மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஜிஹாதை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு உரையாற்றினார். இந்த உரையை கண்டித்து தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எழுதிய கடிதம்:
சமீபத்தில் மத்திய உளவுத்துறை (ஐ.பி.) கூட்டத்தில் வெறுக்கத்தக்க தீவிரவாதத்தை புனித ஜிஹாதிற்கு இணையானது என்று தாங்கள் பேசியதாக வெளிவந்துள்ள செய்தி சிறுபான்மை முஸ்­லிம் சமூகத்தின் உணர்வுகளை மிக மோசமாக புண்படுத்தியுள்ளது. ஜிஹாத் என்பது ஒரு போராட்டம் தான். ஆனால் அது யாருக்கு எதிராக எந்த நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஜிஹாத் என்பது பொய்மைக்கும் அநீதிக்கும் எதிராக தொடுக்கப்படும் போராட்டம் ஆகும். ஆனால் இந்த போராட்டம் வன்முறை வாயிலாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று சொல்வது வடிகட்டிய பொய்யாகும்.

உங்கள் உரையில் சிலுவை யுத்தங்களை பாரம்பரிய போர்கள் என்றும் ஜிஹாதை நம்பிக்கையற்றோர் மீது தொடுக்கப்படும் யுத்தம் என்றும் நீங்கள் வேறுபடுத்தி பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது உண்மைக்கு புறம்பான கருத்து என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். சிலுவை யுத்தங்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்கள் ஆகிய இரு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு அரசுகளுக்கு இடையே அச்சமூகங்களின் ஆட்சியாளர்கள் தலைமையில் நடைபெற்ற முழுமையான யுத்தங்களாகும். முஸ்­லிம்கள் இது போன்ற நிலையில் நடைபெறும் யுத்தங்களில் பங்குக் கொள்ளும் போது தான் அதனை ஜிஹாத் என்றழைக்க இயலும். இது போன்ற யுத்தங்களில் பங்குக் கொள்ளும் நிலையிலும் கூட முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், மதகுருமார்கள் மட்டுமல்லாது வழிப்பாட்டு ஸ்தலங்கள், நீர்நிலைகள், பயன் தரும் தாவரங்களை கூட எந்த காரணத்திற்காகவும் தாக்கக் கூடாது என்று இஸ்லாம் தெளிவான போர் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.

இறைவனோ அவனது இறுதித்துôதர் முஹம்மது (ஸல்) அவர்களோ பயங்கரவாதச் செயல் ஈடுபடுமாறு முஸ்லிம்களுக்கு கட்டளையிடவில்லை. உண்மையில் போர் நடைபெறும் நிலையில் கூட அதில் ஈடுபடாத அப்பாவி மக்களுக்கு எவ்வித துன்பமும் விளைவிக்க கூடாது உட்பட எவ்வித பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுவடுவதையும் இஸ்லாம் தடைச் செய்துள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் உரையில் ஜிஹாதை பயங்கரவாதத்துடன் நீங்கள் ஒப்பிட்டுள்ளது மூலம் இஸ்லாம் கூறும் ஜிஹாத் கோட்பாடு குறித்த உங்கள் மனநிலை தெளிவற்றது என்பது வெளிச்சமாகியுள்ளது. எவ்வித தயக்கமும் இல்லாமல் ஆனால் முழு பொறுப்புடன் நான் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். பயங்கரவாதச் செயல் ஈடுபடும் முஸ்ம் ஒருவரை முஸ்­ம் என்றே சொல்ல இயலாது. எனெனில் அமைதியை நிலைநாட்டும் மார்க்கமாக இஸ்லாம் விளங்குகின்றது.. அதன் பொருளும் அமைதி என்பதாகவே அமைந்துள்ளது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முஸ்லிம் கும்பல்களுக்கு தாங்கள் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளதாக கூறிக் கொள்ள எவ்வித உரிமையும் கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீவிரப்போக்கை கைவிடுமாறு போதித்துள்ளார்கள். தீவிர போக்குத் தான் கடந்த கால சமூகங்கள் அழிந்ததற்கான கரணமாக இருந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சில முஸ்­லிம் கும்பல்கள் தீவிரவாதச் செயல் ஈடுபட்டால் அவர்கள் இறைவனது உத்தரவிற்கு முரணான செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்றே கருதப்படும். இத்தகைய போக்கை நியாயப்படுத்துபவர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள். எனெனில் இவை இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளுக்கு முரணாகவும் வெறுக்கத்தக்க பாவங்களாகவும் அமைந்துள்ளன. நீதியின் அடிப்படையிலும், பொறுமையுடனும். நிலைகுலையா தன்மையுடனும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ளுமாறு திருக்குர்ஆன் வழிகாட்டியுள்ளது.. அநியாயமாக ஒரு மனிதரை கொலைச் செய்வது முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு இணையானது என்று திருக்குர்ஆன் வயுறுத்துகின்றது. மனித உயிர் மிக புனிதமானது என்ற இஸ்லாத்தின் இந்த அடிப்படை தத்துவத்தை புரியாத நிலையில் தான் பயங்கரவாதிகள் தங்கள் செயல்களை அமைத்துக் கொள்கிறார்கள். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் பயங்ரவாதச் செயல்களை மிக வெறுக்கத்தக்கது என்றும் அதில் ஈடுபடுபவர்களை மிக மோசமான குற்றவாளிகள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

எதார்த்தமான உண்மைகள் இப்படியிருக்க நீங்கள் ஐ.பி. அதிகாரிகள் கூட்டத்தில் ஆற்றிய உரை எங்கள் சமூகத்திற்கு பெரும் மன உளைச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது முஸ்­ம் சமூகத்திற்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சிக்கும் இடையிலான உறவையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இச்சூழல் நீங்கள் வெளிப்படுத்திய உண்மைக்கு புறம்பான கருத்தை நீங்கள் திரும்பப் பெற்று நீங்கள் நியாயவான் என்பதை உறுதி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

அனைத்திந்திய முஸ்­லிம் தனியார் சட்ட வாரியம், ஜமாஅத்தே இஸ்லாமி, 'ஷரிஅத் பாதுகாப்பு குழு போன்ற முஸ்லிம் அமைப்புகளும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

எச்சரிக்கை!! காசாகும் குடும்ப அந்தரங்கங்கள்.

நன்றி: ஜூனியர் விகடன்

குற்றத்துக்கு ஆதாரம்... அதுவே, கூசவைக்கும் வியாபாரம்... அது எது?

இப்படி யாராவது விடுகதை போட்டால், தயங் காமல் சொல்லலாம் 'கேமரா செல்போன்' என்று!

ஆம்... ஆந்திர ஆளுநர் மாளிகைக்குள் எடுக்கப் பட்டதாக 'திவாரி - சவாரி' வீடியோ காட்சிகள் வெளியான மறுநாள் நம் அலுவலகத்துக்கு வந்த பார்சல், மேற்சொன்னபடிதான் நம்மை மருள வைத்தது!

'இன்னும் பல பெண்களின் வாழ்க்கை பாழாவதற்கு முன்னால் இதுபற்றித் தீர

விசாரித்து ஜூ.வி-யில் எச்சரிக்கை ரிப்போர்ட் எழுதுங்கள்' என்று இறைஞ்சியது, அந்த சி.டி-யுடன் இருந்த ஒரு கடிதம்!

சி.டி-யை ஓடவிட்டதுமே அதில் விரிந்த ஆபாசக் காட்சிகளை நம்மால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அதேசமயம், அந்த ஒரே சி.டி-க்குள் அடுத்தடுத்து பதிவாகி இருந்தவை, வெவ்வேறு ஜோடிகள் சம்பந்தப்பட்ட காட்சி என்பதை உணர முடிந்தது. உணருவதென்ன... எந்த ஒளிவுமறைவோ, இருட்டு நிழலோ இல்லாமல் தெள்ளத் தெளிவாக ஓடின காட்சிகள்.

சி.டி-யுடன் இணைத்திருந்த கடிதம், ''இதில் உள்ள எல்லா ஜோடிகளுமே கணவன் - மனைவியர்தான். அவரவர் வீட்டுப் படுக்கையறையில் அரங்கேறிய அந்தரங்கங்கள்தான் இவை. காதோடு வைத்து ரசிக்க வேண்டிய தாம்பத்யம் என்ற சங்கீதத்தை, செல்போன் கேமரா கொண்டு விளையாட்டாகப் பதிவு செய்ததன்மூலம், இப்படி ஊரறிய அலறும் லவுட் ஸ்பீக்கராக மாற்றி விட்டார்கள். காஞ்சி காம குருக்கள் தேவநாதன் விஷயத்தில் நடந்ததுபோலவே, இவர்களின் செல்போனை சர்வீஸுக்குக் கொடுத்தபோதோ... எக்ஸ்சேஞ்சாக விற்றபோதோ இவர்கள் 'டெலிட்' செய்திருந்தும், 'ரெட்ரீவ்' செய்யப்பட்ட காட்சிகள்தான் இவை.


இத்தனையும் கூறுகிற நானும் ஒரு செல்போன் சர்வீஸ் சென்டரில் வேலை பார்ப்பவன்தான். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வெறியோடு தோண்டியெடுத்து, அதை மொத்தமாக சி.டி. போட்டு விற்கிற வக்கிரம், சில செல்போன் சர்வீஸ் பாய்களின் மூலமாக நடக்கிறது. அதிலும், கள்ள உறவுகளை இதுபோன்ற பதிவுகளாகப் பார்த்து அலுத்துவிட்ட ஒரு வக்கிர கும்பலுக்கு... இதுபோன்ற 'நல்ல உறவுகளை'ப் பார்க்கிற ஆசை வந்து... அதுவே இப்படி செட் செட்டாக மார்க்கெட்டில் விற்கிறது!'' என்று கிட்டத்தட்ட கதறியிருந்தது.

சைபர் கிரைம் பிரிவில் உள்ள நமது நட்பு போலீஸாரிடம் இதுபற்றி தமிழகம் முழுவதும் விசாரித்தபோது... கடிதத்தின் வார்த்தைகள் எத்தனை சத்தியமும் வீரியமும் மிக்கவை என்று புரிந்தோம்... மொத்தமாக அதிர்ந்தோம்! ''ரியாலிட்டி கிளிப் பிங்ஸ் என்று இதற்குப் பேர் வைத்து விற்கிறார்கள். சர்வீஸுக்கு ஒரு செல்போன் வருதுன்னாலே 'டெலிட்' செய்யப்பட்ட பிறகும் அதில் பதுங்கியிருக்கிற விஷயங்கள் என்னென்ன என்பதை ஆராய்வது, பல கடைகளில் உள்ள வயசுப் பையன்களின் வேலையாக இருக்கிறது. அதிலும் கண்ணுக்கு லட்சணமான பெண்கள் வந்து சர்வீஸுக்குக் கொடுத்தால், தேடல் ரொம்ப பலமாகிவிடும்.

மனைவியைவிட்டுப் பிரிந்து வெகு தூரத்தில் வேலை பார்க்கிற ஒருசில கணவர்கள்தான் இப்படி தங்கள் அந்தரங்கத்தை மனைவிக்குத் தெரிந்தே பதிவு செய்து வைத்துக் கொள்கிற தவறை முதலில் அரங்கேற்ற ஆரம்பித்தார்கள். பிரிவுத் துயரத்தின்போது, பர்ஸுக்குள் இருக்கிற போட்டோவை எடுத்துப் பார்க்கிற மாதிரி இதுவும் அவர்களுக்கு சர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், இந்த வீடியோவின் காட்சிகளில் வருகிற மனைவியர் முதலில் ஏகத்துக்கும் வெட்கப்படுவதும், பிறகு கள்ளங்கபடமேயில்லாமல் காஷுவலாக இருப்பதுமாக சில ஒற்றுமைகள் தெரியும்.

எங்களுக்குத் தெரிந்து செல்போன் சர்வீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் சில இளைஞர்கள் பெரிய நகரங்களில் தங்களுக்குள் சங்கம் அமைக்காத குறையாக இதுபோன்ற காட்சிகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இன்னும் சில புத்திசாலிகள்தான், இவற்றையெல்லாம் தொகுத்து சி.டி-யாக்கி அதன் மாஸ்டர் காப்பியை பல ஆயிரம் ரூபாய்கள் வரை விற்கிறார்கள். சென்னையில் அப்படிப்பட்ட நான்கைந்து பேருக்கு நாங்கள் பொறி வைத்திருக்கிறோம்'' என்றவர்கள்,

''தன் மனைவியை இப்படி வற்புறுத்தி பதிவு செய்துவிட்டு, அதையே தன் நண்பர்கள் கண்ணுக்கு தீனியாக்கிய ஒரு கணவனை லேட்டஸ்டாகப் பிடித்திருக்கிறோம்'' என்று சொல்லி, நம்மை மாதவரம் போலீஸாரிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த ஏரியாவைச் சேர்ந்த ஆன்னெல்லா டால்மியா என்ற பெண்மணியின் பரிதாபக் கதையைச் நம்மிடம் சொன்னார் மாதவரம் இன்ஸ்பெக்டர் குமரன்.

ஏடாகூட எரல் எல்லீஸ்!

''டால்மியாவின் கணவர் எரல் எல்லீஸ் தனியார் கார் கம்பெனி ஒன்றில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் பொறுப்புள்ள அதிகாரி. போன ஜனவரி மாதம்தான் ரெண்டு பேருக்கும் திருமணம் நடந்திருக்கு. மணமான நாளில் இருந்தே எரல் எல்லீஸ் புளூ ஃபிலிம் பார்க்கச் சொல்லி ஆனெல்லாவை வற்புறுத்தி இருக்கார். இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகள் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்து, அதன்படியே உறவு வச்சுக்க விரும்புறாங்க. டால்மியாவிடமும் இதை வலியுறுத்தி இருக்கார் எரல் எல்லீஸ். இதனையெல்லாம் தாண்டி உச்சகட்டமாக மனைவியுடன் தனிமையிலிருந்த தருணத்தை அப்படியே செல்போனில் படம் பிடிக்கவும் செய்திருக்கிறார். 'கணவர்தானே படம் எடுக்கிறார்' என்று வேறு வழியில்லாமல் டால்மியாவும் பொறுத்துக் கொண்டார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எரல் - டால்மியா உறவுக் காட்சிகள் மாதவரம் ஏரியாவில் பலருடைய செல்போன்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது. ஒருகட்டத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலம் டால்மியாவுக்கே இது தெரியவர... நடுங்கிப் போனவராகக் கணவரிடம் அதுபற்றி விசாரித்திருக்கிறார். அப்போதுதான் அந்த தாம்பத்திய காட்சிகளை நண்பர்கள் சிலருக்கு எரல் எல்லீஸ் போட்டுக் காட்டிய உண்மை தெரிந்திருக்கிறது. ப்ளூடூத் மூலம் அதை வாங்கிக்கொண்ட ஒரு நண்பர் மூலமாகவே அந்தக் காட்சிகள் ஒரு செல்போன் சர்வீஸ் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து வியாபாரமாகிவிட்டது. டால்மியா கொடுத்த புகாரின் பேரில் இப்போது எரல் எல்லீஸை சிறையில் அடைத்திருக்கிறோம்...'' எனச் சொன் னார் இன்ஸ்பெக்டர் குமரன்.

பூகம்ப புவனேஸ்வரன்!

கோவை போலீஸாரிடமிருந்து நமக்கு வந்துசேர்ந்த விவரம் அடுத்தகட்ட பயங்கரம்!

இவர்களிடம் சிக்கி இருக்கும் புவனேஸ்வரன் என்பவனோ, பல பெண்களோடு பாச நேசமாகப் பழகி, நெருக்கமான காட்சிகளைப் பதிவு செய்து, அதனை சந்தைக்குக் கொண்டுவந்து, இப்போது போலீஸில் சிக்கி இருக்கிறான். ''ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் இவன். 10-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறாததால, ஊர் சுத்த ஆரம்பிச்சிருக்கான். 20 வயசுலயே லவ் பண்ணி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்தப் பொண்ணைக் கொஞ்ச நாள்ல துரத்தி விட்டுட்டு, காலேஜ் பொண்ணுங்களை குறிவச்சு கவர் பண்ண ஆரம்பிச்சு இருக்கான்.

அவன்கூட ஸ்கூல்ல படிச்ச பசங்க, இப்போ காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களோட மொபைல்ல இருக்கிற பொண்ணுங்க நம்பரை மட்டும் நோட் பண்ணிட்டு, தினமும் ராத்திரி நேரத்துல அவங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பிச்சிருக்கான். புது நம்பர்ல இருந்து எஸ்.எம்.எஸ். வருதேன்னு, விவரம் புரியாம கூப்பிட்டுப் பேசுற பொண்ணுங்ககிட்ட நைஸா பேச்சை வளர்த்திருக்கான். தொடர்ந்து பேசியவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆபாச எஸ்.எம்.எஸ், வீடியோ கிளிப்பிங்க்ஸ் அனுப்பி வச்சு கொஞ்சம் கொஞ்சமா... தன்னோட வலைக்குள்ள விழ வச்சிருக்கான். 'கல்யாணம் பண்ணிக்கிறேன்' என நம்பிக்கை வார்த்து அதன் மூலமாகவே அவர்களை வலையில் வீழ்த்தியிருக்கான். அதை அப்படியே செல்போன்ல படம் பிடிக்கவும் செஞ்சிருக்கான். செல்போன் பதிவுக்கு மறுக்கும் பெண்களிடம், 'நீ இல்லாத நேரத்தில இதைப் பார்த்தாவது என் மனசை ஆத்திக்கிடுவேன்டா செல்லம்' என்றெல்லாம் அவர்கள் ரூட்டிலேயே பேசி மசிய வைத்திருக்கிறான்.

இவனோட வலையில கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகளோட குடும்ப வாரிசுகளும் சிக்கி இருக்காங்க. பத்திரிகைத் துறையில இருக்குற ஒருத்தரோட பொண்ணையும் அவன் விட்டு வைக்கலை. யார் யாரோடெல்லாம் சகவாசம் வச்சிருந்தேன்னு காட்டுவதற்காக நண்பர்கள் பலருக்கும் புளுடூத் வழியாகவும், எம்.எம்.எஸ். மூலமாகவும் உறவுக் காட்சிகளை புவனேஸ்வரன் அனுப்பி இருக்கான். நண்பர்கள் சிலர் மூலமா இதை மோப்பம் பிடிச்ச செல்போன் கடைக்காரங்க, அதை 'செட்'டா சி.டி. போட்டு தமிழகத்தின் பல திசைகளுக்கும் பரப்பி, காசு பார்த்திருக்காங்க. சமீபத்தில புவனேஸ்வரன் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்க்ஸ் காட்சியைப் பார்த்த கோவை உயரதிகாரி ஒருத்தர் குலை நடுங்கிப் போயிட்டார்.

புவனேஸ்வரனோட இணைஞ்சிருந்ததில் ஒரு பொண்ணு, அவரோட பொண்ணு! 'சார், இந்தப் பையனை எங்க ஏரியாவிலேயே நான் பார்த்திருக்கேன்' அப்படினு கலங்கிப்போய் அந்த அதிகாரி சொல்ல... அப்படித்தான் புவனேஸ்வரன் எங்க கவனத்துக்கே வந்தான். புவனேஸ்வரனோட செல்போன் நம்பரை ஃபாலோ செஞ்சு, அவனை வசமா அமுக்கிப் பிடிச்சோம். அவன்கிட்ட இருந்து மூணு மொபைல் போன், எட்டு சிம் கார்டுகளை பறிமுதல் செஞ்சோம். போன் மூலம் பெண்களை வளைக்கிறதுக்கும், அவங்களை கூட்டிட்டுப் போறதுக்கும் தன்னோட மோட்டார் பைக்கையே அடமானம் வெச்சிருக்கான். ஆனா, அவன் மூலமாக கிடைச்ச காட்சிகளை சி.டி. போட்டு பல ஆயிரங்களை சிலர் சம்பாதிச்சிருக்காங்க. அவங்க யார் யார் என்பதற்கான ஆதாரங்களைத் தேடிக் காத்திருக்கிறோம்.

'பல பொண்ணுங்க வாழ்க்கை உன்னால சீரழிஞ்சு போச்சேடா...'ன்னு நாங்க கேட்டதுக்கு, 'என்னைப் பத்தி எந்தப் பொண்ணும் புகார் கொடுக்க மாட்டா. ஏன்னா, நான் அவங்க ஒவ்வொருத்திக்கும் உயிருக்கு உயிரான காதலன்'னு தெனாவெட்டா சொல்றான்!'' என்று சொல்லித் திகைக்க வைக்கிறார்கள் அவனை வளைத்த போலீஸார்.

புவனேஸ்வரனிடம் விசாரணை நடத்திய கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் பேசியபோது, ''எழுத்துப்பூர்வமா அவன் மேல புகார் கொடுக்க யாருமே முன்வரல. அந்தக் காட்சிகளை காட்டி சிலர்கிட்ட மிரட்டிப் பணம் பறிக்கவும் செஞ்சிருக்கான். அது சம்பந்தமான புகாரை வெச்சு அவன் மேல செக்ஷன் 384-ன் கீழ் வழக்குப் பதிவு செஞ்சிருக்கோம். அவனோட நண்பர்கள்கிட்டேயும் விசாரணை நடந்துகிட்டு இருக்கு. அவன்கிட்ட ஏமாந்த பெண்கள் எழுத்துப்பூர்வமா தைரியமா புகார் தரலாம். அவங்களைப் பத்தின தகவலை வெளியில கசிய விடமாட்டோம்!'' என்றார்.

'பள்ளியறை' செல்வராஜ்!

சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஏ. பட்ட தாரியான செல்வராஜ் செய்ததும் உச்சகட்ட அயோக்கியத்தனம். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். மணலியில் ட்யூஷன் சென்டர் நடத்தி வந்த செல்வராஜிடம் பள்ளிப்பாடம் படிக்க வந்திருக்கிறாள், ப்ளஸ் ஒன் மாணவியான சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பருவத்தின் வாசலில் நின்றிருந்த சுஜாவைப் பார்த்துக் கிறங்கிப் போன செல்வராஜ்... நைஸாகக் காய் நகர்த்தியதில், அறியாப் பருவத்து சுஜா வலையில் விழுந்துவிட்டாள். அவர்களுக்கிடையே 'அத்தனையும்' நடந்திருக்கிறது.

சுஜாவோடு தான் இருந்த தனிமைத் தருணங்களை யெல்லாம் மறக்காமல், தனது செல்போன் கேமராவில் படமாக்கிய செல்வராஜ், தனது சாகசத்தை நண்பர்களுக்குக் காட்டி மகிழ... அந்தக் காட்சிகளும் பலருடைய செல்போன்களுக்கும் பரவியது. இப்போது செல்வராஜ் கைதாகிவிட... சுஜா தனது பள்ளிக்கூடத்துக்குக்கூடப் போக முடியாத இக்கட்டில் சிக்கித் தவிக்கிறார். காரணம், பல மூலைகளுக்கும் அந்தக் காட்சிகள் பரவி... குடும்பத்தைக் குத்திக் கிழிக்கும் வகையில் கேள்விகளும் பார்வைகளும் வரத் தொடங்கியதுதான்.

எனக்கே எனக்கா... எச்சரிக்கை ப்ளீஸ்!

'எனக்கே எனக்காக என் செல்போனில்தானே பதிவு செய்கிறேன். நானே பார்த்து ரசித்துவிட்டு ஃபைலையும் அழித்துவிடுவேன். யாருக்கும் எதுவும் தெரியாது!' என்ற எண்ணத்தோடுதான் சில தம்பதிகள் இப்படி எல்லை தாண்டுகிறார்கள். செல்போன் மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்தெல்லாம் அழிக்கப்பட்ட பிறகும், அந்த ஃபைல்களை எடுக்க ஏராளமான 'ரெக்கவரி சாஃப்ட்வேர்'கள் இப்போது வந்து விட்டன என்பதை இவர்கள் மறந்துவிடவே கூடாது. 'அதை'யெல்லாம் படம் எடுப்பது என்ற எண்ணத்தையே ஒழித்துவிட்டால் தொல்லையே கிடையாது!'' என்று எச்சரிக்கை வாசிக்கிறார்கள் சைபர் கிரைம் போலீஸார்.

இப்படி எதிர்பாராத விதமாக செல்போன் காட்சிகள் வெளியே பரவியதன் மூலம், வட மாவட்டத்தின் ஒரு கடையில் வேலை பார்த்த சேல்ஸ் கேர்ள் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும், கோவை மாவட்டத்தில் ஒரு குடும்பத் தலைவி விவாகரத்து வரை போன விவகாரமும் போலீஸாரின் ரகசிய ஃபைலில் இருக்கிறது!

தலித் வரலாற்று நூல் வரிசை வெளியீட்டு விழா


1. தலித் மக்களும் கல்வியும்,
2. எம்.சி.ராசா சிந்தனைகள்,
3. தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்
4. பஞ்சமி நில உரிமை மீட்பு ஆகிய நூல்களை எழுச்சித்தமிழர் வெளியிட்டார் அதனை முஸ்லீம் முன்னேற்றக்கழக தலைவர் ஜவாஹிருல்லா பெற்றுக் கொண்டார்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

பிரான்ஸில் இறையில்லம் கட்டுமானம் இடைநிறுத்தம்

பிரான்ஸின் இரண்டாவது பெரிய நகரமான மார்சில்லியில் ஜும்ஆ மஸ்ஜிதொன்றை நிறுவுவதற்கான திட்டங்கள், அந்நாட்டிலும் ஐரோப்பா முழுவதிலும் ஏற்பட்டுள்ள முஸ்லிம் விரோதப் போக்கின் விளைவாகவும் அதற்கெதிரான அச்சுறுத்தல்கள் காரணமாகவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பெயர் குறிப்பிடாத பிரான்சியர் ஒருவர், "நான் அம்மஸ்ஜிதை குண்டு வைத்துத் தகர்க்கப் போகின்றேன்" என்று நியுயார்க் டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்."இங்கே அவர்கள் (முஸ்லிம்கள்) ஏராளமாக உள்ளனர். ஏராளமான மஸ்ஜிதுகளும் உள்ளன. இந்நிலையில், மீண்டும் ஒரு மஸ்ஜித் கட்டப்படுவது அவர்களது எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். அவர்களது எண்ணிக்கை அதிகரிப்பது பல பிரச்சினைகளை எழுப்பும்" எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

33 மில்லியன் டாலர் செலவில், பிரான்சின் துறைமுக நகரில் நிர்மாணிக்கப்படவிருந்த இம்மமஸ்ஜித் கட்டுமாணப் பணிகள், தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இது, பிரான்சின் இனச்சுத்திகரிப்புக்கு நல்லதொரு அடையாளம் என, மார்சில்லி மஸ்ஜித் சங்கத் தலைவர் நூர்தீன் ஷெய்க் கூறுகின்றார்.

புதிய வணக்கஸ்தலத்தில், மினாரா ஒன்றைக் கட்டுவதெனவும், தொழுகைக்கான குறித்த நேரத்தில் கருஞ்சிவப்பு நிற விளக்கொன்றை ஒளிர விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நகரின் மொத்த மக்கள் தொகையில் நான்கிலொரு பகுதியினராக 1.5 மில்லியன் அளவிலுள்ள முஸ்லிம்கள் தமது வணக்கஸ்தலத்திற்காக ஒரு மஸ்ஜிதை நிறுவும் சமய உரிமையை இதன் மூலம் இழந்துள்ளனர்.

ஐரோப்பாவில் முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் அண்மைக்கால முயற்சிகளும் செயற்பாடுகளும் கசப்பான எதிர்காலத்தை உலகுக்கிற்க்கு காட்டி வருகின்றன.

உலகிலுள்ள நடுநிலை வகிக்கும் எல்லா சமய அறிஞர்களும் இத்தகைய செயற்பாடுகளைக் கண்டிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான உரிமை உள்ளதெனவும், அதனைத் தடுப்பது அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்லாம் தொடர்பாக ஐரோப்பாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்மைக்குப் புறம்பான பிரசாரங்கள், இத்தகைய குழப்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் காரணமாக அமைகின்றன. எனவே, இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரசாரம் செய்ய வேண்டியதும் அதன் மீதுள்ள குற்றச்சாட்டுகளைக் களைவதும் முஸ்லிம் அறிஞர்கள் அனைவர் மீதுமுள்ள முக்கிய கடமையாகும்.

ஐரோப்பாவில், பொருளாதாரக் குற்றங்கள், உலகமயமாக்கலின் அச்சம், குடியேற்றம் மற்றும் பிறப்பு வீதத்தின் அதிகரிப்பு என்பவை தோற்றுவிக்கும் கவலையானது, இஸ்லாத்தைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை எழுப்பி, 'இஸ்லாம் எல்லோரும் அச்சமடையக் கூடிய ஒரு மூடிய பெட்டி' எனும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது என முஸ்லிம் அறிஞர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
source:iqna

ப.சிதம்பரம் முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கோர சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை

போபால்:ஜிஹாதும் தீவிரவாதமும் ஒன்றுதான் என்றுபேசி முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உடனடியாக முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் எ.சயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் ப.சிதம்பரம் ஜிஹாதையும் தீவிரவாதத்தையும் ஒன்றிணைத்து பேசி இஸ்லாத்தின் மீது களங்கமேற்படுத்தும் உரைக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "ப.சிதம்பரம், முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும்விதமாக இஸ்லாத்தை அவமதிக்கத்தக்க வகையில் ஒப்பீடுச்செய்து பேசியுள்ளது அவரது இரட்டைநிலையை காண்பிக்கிறது. ப.சிதம்பரத்தின் இந்த பேச்சு அவருக்கு இஸ்லாத்தைப்பற்றியோ அதன் கொள்கைகளைப்பற்றியோ போதிய அறிவு இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. படித்த மேதாவியான ப.சிதம்பரம் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து யாரையோ திருப்தி படுத்தும்வண்ணம் உரையாற்றியிருப்பதைப்பற்றி எஸ்.டி.பி.ஐ க்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

சில மாதங்களுக்கு முன்புதான் தேவ்பந்தில் நடைபெற்ற ஜம்மியத்துல் உலமா மாநாட்டில் இஸ்லாம் அமைதியைப்போதிக்கின்றது என்றும் தீவிரவாதத்தை அத்தோடு தேவையில்லாமல் இணைத்துவிட்டார்கள் என்றும் இஸ்லாத்தை பற்றிய உயர்வான கருத்தை வெளியிட்டார். ஆனால் தற்போது போலீஸ் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் ஜிஹாதும் தீவிரவாதமும் ஒன்று என்று பேசியுள்ளார்.

கடந்த மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அரியணை ஏற உதவிய முஸ்லிம்கள் ப.சிதம்பரத்தின் இச்செயலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எந்த சமூகத்திலும் இல்லாத அளவுக்கு பயத்திலும் பசியிலும் உழலும் ஒரு சமூகமாக தலித்துகளை விட மோசமான நிலையிலிருப்பதாக காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட சச்சார் கமிசன் அறிக்கையே கூறியுள்ள நிலையில் அதன் பரிந்துரைகளை அமுல்படுத்தி முஸ்லிம் சமூகத்தை விடுவிக்கும் என்ற முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையில் மண்ணை அள்ளும் போடுவிதமாகவே காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் உள்ளன.

நீண்டநெடுங்காலமாக ஜிஹாத் தீவிரவாதம் என்று கூறி முஸ்லிம் சமூகம் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம் இளைஞர்கள்தான் காரணம் என பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு மும்முரமாக குறிவைக்கப்படும் சூழலிருந்து தங்களை காப்பாற்ற வழித்தெரியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளார்கள். ஆனாலும் சில நேர்மையான அதிகாரிகளின் புலனாய்வில் இக்குண்டுவெடிப்புகள் முஸ்லிம்களால் நடத்தப்பட்டது அல்ல இவற்றின் பின்னணியில் ஹிந்துத்துவா சக்திகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டு சற்று ஆசுவாசம் அடைந்த நிலையிலுள்ளனர்.

தற்ப்போது குண்டுவெடிப்புகள் நடைபெறுவதுமில்லை.ப.சிதம்பரத்தின் இந்த உரையால் முஸ்லிம்கள் மீதே புலனாய்வுகள் திரும்பும். புலனாய்வு திசை திருப்பப்படும். ஜிஹாதைப்பொறுத்தவரை அது மார்க்க ரீதியான கடமையாகவே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஜிஹாத் என்பது தீமைகளுக்கும், தீயவ சக்திகளுக்குமெதிரான போர். இது எப்பொழுதுமே போர் என்ற பொருளை மட்டும் கொடுப்பது அல்ல. இது குறிப்பிட்ட நாளிலிருந்து துவக்கப்பட்டதும் அல்ல.இது இஸ்லாத்தின் போதனைகளில் ஒன்று. இஸ்லாம் தன்னை பின்பற்றுவோருக்கு அவர்களின் எதிரிகளை மன்னிக்கவும் கூறுகிறது அதே வேளையில் தேவையேற்பட்டால் அவர்களோடு போர் புரியவும் கூறுகிறது. முஹம்மது நபி அவர்கள் எதிரிகளை மன்னிக்கவும் செய்தார்கள் அவர்கள் இரத்தம் தாகம் கொண்டு அலைந்தபோது அவர்களுக்கெதிராக போர்புரியவும் செய்தார்கள்.

ப.சிதம்பரம் கூறும்பொழுது 1989ஆம் ஆண்டிற்கு பிறகே ஜிஹாத் துவக்கப்பட்டதாக கூறுகிறார். இது அவருடைய அறியாமையை காட்டுகிறது. ஜிஹாது இஸ்லாத்தில் ஏற்கனவே கூறப்பட்டுள்ள ஒன்று. முஹம்மது நபியும் அவர்களுடைய தோழர்களும் இதனை செய்துள்ளார்கள். ஜிஹாத் என்பது தீவிரவாதம் என்றும், சிலுவைப்போர் மரபுரீதியானது என்றும் ப.சிதம்பரம் கூறியதிலிருந்து அவருக்கு ஜிஹாத் பற்றிய சட்டதிட்டங்களோ, கொள்கைகளோ, வரம்புகளோ,பொருளோ தெரியவில்லை என்றே புரிந்துக்கொள்ள முடிகிறது.

இந்த உலகில் அநியாயமாக ஒரு உயிரைக்கொல்வது இந்த உலகத்தில் அனைத்து மனிதர்களையும் கொன்றதற்கு சமம் என்று இஸ்லாம் போதிக்கிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் எ.சயீத் கூறியுள்ளார்.
செய்தி:twocircles.net

துபாயில் இஸ்லாமிய வங்கியல் அகாடமி

துபாய்:இஸ்லாமிய வங்கிகளின் பயன்பாடுகள் வளர்ந்துவரும் சூழலில் இஸ்லாமிய ஷரீஅத்தின் படியான கொள்முதல்- விற்பனை வங்கிமுறைகள் குறித்த அகாடமி படிப்பு மற்றும் ஆய்விற்காகவும் வளைகுடா நாடுகளில் முதன் முதலாக இஸ்லாமிய வங்கியல் அகாடமி துபாயில் செயல்பட ஆரம்பிக்கும்.

அதிகாரப்பூர்வ ரீதியிலான படிப்பிற்கும், ஆய்விற்கும் உரிய ஸ்தாபனங்கள் இல்லாதது அதிகமான நபர்கள் இத்துறையில் வருவதற்கு தடையாக உள்ளன. இஸ்லாமிய வங்கியலில் தேர்ச்சிப் பெற்றவர்களின் பற்றாக்குறையால் ஏராளமான நிறுவனங்களை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கிறது.

பிரபல மார்க்க அறிஞரும், ஃபத்வா ஷரீஅத் போர்டுகளின் தலைவருமான டாக்டர்.ஹுசைன் ஹமீத் ஹஸன் துபாய் இஸ்லாமிய வங்கியல் அகாடமிப்பற்றிய தகவலை தெரிவித்தார்.

உலகிலேயே இஸ்லாமிய வங்கியல் குறித்த படிப்பிற்கும், ஆய்விற்குமுரிய இரண்டாவது நிறுவனமாக இது செயல்படும். இன்னும் சில மாதங்களில் இதன் முக்கிய செயல்பாடு ஆரம்பிக்கும். 2011 ஆம் ஆண்டில் முழுமையாக செயல்பட துவங்கும். தற்போது பிரான்சில் மட்டுமே இஸ்லாமிய வங்கியல் குறித்து பயில்வதற்கான அகாடமி உள்ளதாக டாக்டர் ஹுசைன் தெரிவிக்கிறார். அது சமீபத்தில்தான் துவங்கப்பட்டது. துபாயில் இஸ்லாமிய வங்கியலுக்கான அகாடமி துவங்குவதோடு வளைகுடா நாடுகளில் இஸ்லாமிய வங்கியல் அறிஞர்களின் கூட்டமைப்பும் உருவாகும்.இந்த அகாடமியில் இஸ்லாமிய நிதியியல் இளங்கலைப்பட்டம், முதுகலைப்பட்டம் மற்றும் ஆய்வின் அடிப்படையிலான முனவர் பட்டம் ஆகியன வழங்கப்படும்.உலகில் இத்துறையில் அதிகரித்துவரும் தேவையை கருதியே இந்த அகாடமி துவக்கப்படுகிறது.இந்த அகாடமி இஸ்லாமிய அறிஞர்கள், நிறுவனங்களின் மேற்பார்வையில் கொண்டுவரப்படும் என்றும் டாக்டர் ஹுசைன் தெரிவித்தார்.

சில வருடங்களுக்கு முன்பாக வளைகுடா பகுதிகளில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய வங்கிகளிலும், இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் பணி புரிவதற்கு இதர வங்கியல்துறையில் பணியாற்றியவர்களை நியமித்தனர். ஆனால் இஸ்லாமிய நிதியியல் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு குறைந்த அளவே அறிவுள்ளது. அகாடமியில் சர்வதேச அளவில் செயல்படும் அறிஞர்கள்தான் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் எல்லா இஸ்லாமிய வங்கிகளின் பிரதிநிதிகளையும் உட்படுத்திய போர்டு ஒன்று செயல்படத்துவங்கியுள்ளது.

டாக்டர் ஹுசைன் இதன் தலைவராக செயல்படுகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் இஸ்லாமிய வங்கிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதே இதன் நோக்கம். இது வங்கிகளின் தரத்தை மேம்படுத்த உதவும் என டாக்டர்.ஹுசைன் கூறுகிறார்.

துபாயில் மட்டும் தற்ப்போது 4 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. துபாய் இஸ்லாமிய வங்கி, நூர் இஸ்லாமிய வங்கி, எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி, துபாய் வங்கிய ஆகியன. அத்தோடு அமீரகத்தில் அஜ்மான் வங்கி, ஷார்ஜா இஸ்லாமிய வங்கி, அபுதாபி இஸ்லாமிய வங்கி, அல்ஹிலால் வங்கி(அபுதாபி) ஆகியனவும் உள்ளன. மற்ற பாரம்பரிய வங்கிகளும் இஸ்லாமிய வங்கிகளின் தேவை அதிகரித்துவரும் சூழலை முன்னிட்டும், வாடிக்கையாளர்கள் தங்களை விட்டுச்செல்லாமலிருக்கவும் இஸ்லாமிய வங்கிப்பிரிவுகளை தனியாக ஆரம்பித்துள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 2 ஜனவரி, 2010

மதுரை ஆதீனத்திற்கு மறுப்பு

காஞ்சி சங்கராச்சாரியாரை நபிகள் நாயகம் (ஸல்), ஈஸா (அலை) ஆகியோருடன் ஒப்பிட்டு, நக்கீரன் 26.12.09 இதழில் மதுரை ஆதீனம் பேசியதற்கு, தமுமுக மாநில செயலாளர் பேரா. காஜாகனி நக்கீரனுக்கு அனுப்பியுள்ள கண்டன கடிதம். (-ஆர்.)



இளையராஜாவைத் தொட விரும்பாத ஜெயேந்திரர் (நக்கீரன் டிசலி26, 2009 இதழ் பக்லி1) என்ற தங்கள் கட்டுரையில் காஞ்சி மடத்தலைவர் ஜெயேந்திரரை, மதுரை மடத்தலைவர் ஆதீனம், நபியின் அவ தாரமாகவும், ஏசுவின் அவதாரமாகவும் சித்தரித்துப் போற்றி யுள்ளதைக் குறிப்பிட் டிருந்தீர்கள். மதுரை ஆதினம் சித்த சுவாதீனத்தோடு தான் பேசினாரா? அவரது வார்த்தைகள் இலட் சக்கணக்கான கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமுதாய மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளன.

திருச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் தின் திரிசூலம் வழங்கும் விழாவில் பேசிய அசோக்சிங்கல் திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிகளுக்கு, இன்னொரு முனை கிறிஸ்தவர்களுக்கு, மூன்றாவது முனை மதச்சார்பற்ற இந்துக்களுக்கு என்றார் காஞ்சிப் பெரியவாள் அதை ஆமோதிக்க ஆசிர்வதித்தார். மதவெறியை அவர் மறுக் கவில்லை, தன்மனதிலும் அது இருப்பதை மறைக்கவில்லை.

இரக்கம் உடையோர் பேறு பெற் றோர் என்று போதித்த இயேசு பிரானுடன் சங்கரராமன் கொலைப்புகழ் சங்கராச்சாரியை ஆதீனம் ஒப்பிட்டதற்கு பெயர் தான் மடத் தனம் என்பதோ. அச்சம் மடம் பெண்களின் குணங்களாம் இப்போதெல்லாம் பெண்களுக்கு மடம் என்றாலே அச்சம்-என்று என்போன்றோர் எழுதியதற்கு காரணமான ஓர் ஆசாமியை ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் என்பதை வாழ்க்கையாக்கிய உத்தம நபிகளோடு ஒப்பிடலாமா? குலவெறி கொலை வெறி யாய் வளர்ந்திருந்த காலத்தில் புனித மக்காவில் பீடத்தில் அன்றைய தலித் இனமான கறுப்பினத்தைச் சேர்ந்த பிலால் (ரலி) அவர்களை ஏற்றி அழகு பார்த்தவர் நபிகள் நாயகம்.

காஞ்சி பீடத்தில் ஒடுக்கப்பட்டத் தமிழனால் உட்கார முடியுமா? ஜெயேந்திரரை சிறையிலடைத்த ஜெயலலிதா வைத் தவிர வேறு தலைவர்கள் அவர் எதிரில் கூட உட்கார முடியாதே...

தனக்காகப் பிறர் நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர் நரகத்தைத் தன் ஒதுங்கிடமாக ஆக்கிக்கொள்ளட்டும் என்று தன்மானக் கருத்தைப் போதித்தவர் நபிகள் நாயகம்.

அணு விஞ்ஞானியாக இருந்தாலும் இந்த மனு விஞ்ஞானி முன்னால் அமர முடியாதே.... சேரியின் தெருக்கள் அழுக் காக இருப்பதால் இச்சுவாமிகள் அங்கே வராது என்று சொன்னவர் தானே இவர் இளையராஜாவைத் தீண்ட விரும்பாதவர் யாரையெல்லாம் தீண்டியிருக்கிறார் என்பதை நக்கீரன் தானே நாட்டுக்குச் சொன்னது. அவரைப்போய் முஸ்லிம்கள் உயிரினும் மேலாய் மதிக்கும் இறைத் தூதரான இயேசு பிரான் மற்றும் நபிகள் நாயகத்தோடு ஒப்பிடுவது ஓர் ஆதீனத்திற்கு அழகா?

மேலும், அவதாரம் என்றால் கடவுள் மனிதவடிவில் மேலிருந்து கீழே இறங்கு வது என்று பொருள் இஸ்லாம் மார்க் கத் தில் அப்படி ஒரு நம்பிக்கைக்கு இடமே இல்லை. மதுரை ஆதீனம் மற்ற மதத்தினரை வம்புக்கிழுக்காமல், தவத்திரு குன்றக் குடி அடிகளாரைப் போல் நடந்துகொள்ள முயற்சிக்கட்டும்.