இஸ்லாமிய வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாமிய வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

துபாயில் இஸ்லாமிய வங்கியல் அகாடமி

துபாய்:இஸ்லாமிய வங்கிகளின் பயன்பாடுகள் வளர்ந்துவரும் சூழலில் இஸ்லாமிய ஷரீஅத்தின் படியான கொள்முதல்- விற்பனை வங்கிமுறைகள் குறித்த அகாடமி படிப்பு மற்றும் ஆய்விற்காகவும் வளைகுடா நாடுகளில் முதன் முதலாக இஸ்லாமிய வங்கியல் அகாடமி துபாயில் செயல்பட ஆரம்பிக்கும்.

அதிகாரப்பூர்வ ரீதியிலான படிப்பிற்கும், ஆய்விற்கும் உரிய ஸ்தாபனங்கள் இல்லாதது அதிகமான நபர்கள் இத்துறையில் வருவதற்கு தடையாக உள்ளன. இஸ்லாமிய வங்கியலில் தேர்ச்சிப் பெற்றவர்களின் பற்றாக்குறையால் ஏராளமான நிறுவனங்களை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கிறது.

பிரபல மார்க்க அறிஞரும், ஃபத்வா ஷரீஅத் போர்டுகளின் தலைவருமான டாக்டர்.ஹுசைன் ஹமீத் ஹஸன் துபாய் இஸ்லாமிய வங்கியல் அகாடமிப்பற்றிய தகவலை தெரிவித்தார்.

உலகிலேயே இஸ்லாமிய வங்கியல் குறித்த படிப்பிற்கும், ஆய்விற்குமுரிய இரண்டாவது நிறுவனமாக இது செயல்படும். இன்னும் சில மாதங்களில் இதன் முக்கிய செயல்பாடு ஆரம்பிக்கும். 2011 ஆம் ஆண்டில் முழுமையாக செயல்பட துவங்கும். தற்போது பிரான்சில் மட்டுமே இஸ்லாமிய வங்கியல் குறித்து பயில்வதற்கான அகாடமி உள்ளதாக டாக்டர் ஹுசைன் தெரிவிக்கிறார். அது சமீபத்தில்தான் துவங்கப்பட்டது. துபாயில் இஸ்லாமிய வங்கியலுக்கான அகாடமி துவங்குவதோடு வளைகுடா நாடுகளில் இஸ்லாமிய வங்கியல் அறிஞர்களின் கூட்டமைப்பும் உருவாகும்.இந்த அகாடமியில் இஸ்லாமிய நிதியியல் இளங்கலைப்பட்டம், முதுகலைப்பட்டம் மற்றும் ஆய்வின் அடிப்படையிலான முனவர் பட்டம் ஆகியன வழங்கப்படும்.உலகில் இத்துறையில் அதிகரித்துவரும் தேவையை கருதியே இந்த அகாடமி துவக்கப்படுகிறது.இந்த அகாடமி இஸ்லாமிய அறிஞர்கள், நிறுவனங்களின் மேற்பார்வையில் கொண்டுவரப்படும் என்றும் டாக்டர் ஹுசைன் தெரிவித்தார்.

சில வருடங்களுக்கு முன்பாக வளைகுடா பகுதிகளில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய வங்கிகளிலும், இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் பணி புரிவதற்கு இதர வங்கியல்துறையில் பணியாற்றியவர்களை நியமித்தனர். ஆனால் இஸ்லாமிய நிதியியல் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு குறைந்த அளவே அறிவுள்ளது. அகாடமியில் சர்வதேச அளவில் செயல்படும் அறிஞர்கள்தான் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் எல்லா இஸ்லாமிய வங்கிகளின் பிரதிநிதிகளையும் உட்படுத்திய போர்டு ஒன்று செயல்படத்துவங்கியுள்ளது.

டாக்டர் ஹுசைன் இதன் தலைவராக செயல்படுகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் இஸ்லாமிய வங்கிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதே இதன் நோக்கம். இது வங்கிகளின் தரத்தை மேம்படுத்த உதவும் என டாக்டர்.ஹுசைன் கூறுகிறார்.

துபாயில் மட்டும் தற்ப்போது 4 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. துபாய் இஸ்லாமிய வங்கி, நூர் இஸ்லாமிய வங்கி, எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி, துபாய் வங்கிய ஆகியன. அத்தோடு அமீரகத்தில் அஜ்மான் வங்கி, ஷார்ஜா இஸ்லாமிய வங்கி, அபுதாபி இஸ்லாமிய வங்கி, அல்ஹிலால் வங்கி(அபுதாபி) ஆகியனவும் உள்ளன. மற்ற பாரம்பரிய வங்கிகளும் இஸ்லாமிய வங்கிகளின் தேவை அதிகரித்துவரும் சூழலை முன்னிட்டும், வாடிக்கையாளர்கள் தங்களை விட்டுச்செல்லாமலிருக்கவும் இஸ்லாமிய வங்கிப்பிரிவுகளை தனியாக ஆரம்பித்துள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 15 டிசம்பர், 2009

சர்வதேச இஸ்லாமிய வங்கியியல் மாநாடு

சர்வதேச இஸ்லாமிய வங்கியியல் மாநாடு

மனாமா: பொருளாதார துறையில் மாறி வரும் சூழலுக்கு தக்கவாறு புதிய யுக்திகளை வகுப்போம் (New strategies for New Economic Realities)
என்ற முழக்கத்தோடு உலகிலேயே மிகப்பெரிய இஸ்லாமிய வங்கியியல் மாநாடு பஹ்ரைனில் துவங்கியது.

டிசம்பர் 6,7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இது நடைபெறுகிறது.50 நாடுகளிலிருந்து 1200 பிரதிநிதிகளும் இஸ்லாமிய பொருளாதார வல்லுநர்களும் இதில் பங்கெடுத்துக்கொண்டுள்ளனர்.இம்மாநாட்டை பஹ்ரைன் மத்திய வங்கியின் கவர்நர் ராஷித் எம் அல் மாராஜ் துவக்கிவைத்தார். சிங்கப்பூர் மத்திய வங்கியின் கவர்நர் ஹெங்க் ஸ்வீ க்விட், கஸக்ஸ்தான் தொழில் அமைச்சர் அஸட் ஓ.இஸ்க்ஸவ், இஸ்லாமிக் கார்ப்ரேசன் டெவலப்மெண்ட் சி.இ.ஒ காலித் எம் அல் அபூதி ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

பொருளாதாரத்துறையின் வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதார நிறுவனங்களின் நிலையானத்தன்மையும் என்ற அமர்வில் டாக்டர் ஆலா அல் யூசுஃப்(Chief Economist of Gulf Finance House),டாக்டர் ஸலாஹ் அத்தீன் எ காதிர் சயீத் (GM- Credit & Risk Management for Bahrain Islamic Bank) மற்றும் டாக்டர் மொன்தசர் பென்ம்ராத் (Executive Partner - Leader Financial Services Sector MENA, IBM Global Business Services.) ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பிரிட்டனில் இஸ்லாமிய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு பி.பி.சி யின் மத்திய கிழக்கு தொழில் செய்திப்பிரிவு பத்திரிகையாளர் நிமா அபூவர்த தலைமை வகித்தார். இதில் ஹம்ரே பெர்சி(Chief Executive Officer of Bank of London and the Middle East), தர்சன் பிஜுர்(Director of Islamic Finance Advisory at KPMG),கில்லியன் வாம்ஸ்லி(Product Manager Debt & Specialist Securities at the London Stock Exchange), ரிச்சர்டு தாமஸ்(Chief Executive Officer of Gatehouse Bank), முனீர்கான்(Partner & Head of Islamic Finance at Simmons & Simmons.)
ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

செய்தி:மாத்யமம்