மும்பை,மார்ச்.12:மலேகான் குண்டுவெடிப்பு போன்ற நாட்டின் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல்வேறு சட்ட விரோத தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சனாதன் சன்ஸ்தாவை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி இருக்கிறது. இது தொடர்பான திட்டம் மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றார்.
கடந்த 2008ம் ஆண்டு, தானே மாவட்டத்தில் மராத்தி நாடகம் நடந்து கொண்டிருந்த தியேட்டரில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக சன்ஸ்தாவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போதே இந்த அமைப்பை தடை செய்யும்படி மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் பர்பானி, ஜல்னா, புர்னா, ஜல்காவ் ஆகிய இடங்களிலும் கோவா மற்றும் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவிலும் நடந்த குண்டு வெடிப்புகளிலும் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
2009ம் ஆண்டு மார்கோவாவில் தீபாவளி தினத்தில் நடந்த குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் சன்ஸ்தாவை சேர்ந்த இருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
மகாராஷ்டிராவிலும் அண்டை மாநிலங்களிலும் உள்ள சில இந்து அமைப்புகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே அம்பலப்படுத்தினார்.
மேலும் அந்த அதிகாரி தெரிவிக்கையில் " 'சனாதன் பிரபாத்' என்ற பத்திரிகை ஒன்றை சனாதன் சன்ஸ்தா அமைப்பு நடத்தி வருகிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை பற்றி ஆத்திரமூட்டும் வகையிலான கட்டுரைகள் இந்த பத்திரிகையில் வெளியாகி வருகின்றன இதையும் அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது" என்றார்.
source :
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
ஹிந்துத்துவா தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிந்துத்துவா தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 13 மார்ச், 2011
செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
இந்தியா எதிர் நோக்கி இருக்கும் அச்சுறுத்தல்கள் : ஜி.கே.பிள்ளை!!
புதுடெல்லி, பிப்.15: வளர்ந்துவரும் ஹிந்துத்துவா தீவிரவாதம் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார். நிரபராதிகளான இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்முகத்தில் அவர் இதனை தெரிவித்தார். மலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டுவெடிப்புகளில் சங்க்பரிவாரின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில்தான் ஜி.கே.பிள்ளையின் பேட்டி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.ஹிந்துத்துவா தீவிரவாதம் வலுவடைந்து வருவது பீதியூட்டுகிறது. தற்போது இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறவில்லை என புலனாய்வு விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், இத்தகைய அமைப்புகளில் மாறி மாறி ரகசிய திட்டங்கள் தீட்டுவதுக்கூட பீதிவயப்படுத்துகிறது என ஜி.கே.பிள்ளை கூறுகிறார். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்பட பல வழக்குகளில் பலர் தலைமறைவாக உள்ளனர். இவர்களில் குறைந்தது 20 பேரை கண்டுபிடிக்க என்.ஐ.ஏவும் சி.பி.ஐயும் முயற்சி மேற்கொண்டுள்ளன. தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் அனைவரும் தேசத்தின் எதிரிகளாவர். அனைவரையும் ஒரே ரீதியாகத்தான் எதிர்கொள்வோம்.
மலேகான் உள்பட பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் செயல்பட்டது சங்க்பரிவார் என்பது அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் மூலம் உறுதியான சூழலில் இவ்வழக்குகளில் நிரபராதிகளான இளைஞர்களை கைதுச் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை பொறுத்துக் கொள்ளவியலாது என்றும் கூறினார்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா சக்திகளுக்கு பங்குள்ளது என்ற விபரம் இந்தியாவை சிக்கலில் ஆழ்த்தவில்லை. அதுத் தொடர்பான விபரங்கள் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்த ஜி.கே. பிள்ளையிடம்,பொய் வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைச் செய்யப்படுவார்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன" என பதிலளித்தார்.'போலீஸிலும், ராணுவத்திலும் ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு அனுதாபிகள் உண்டா' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், 'சிலர் இருக்கின்றார்கள்' என ஜி.கே. பதிலளித்தார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)