மதரசா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதரசா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மதரசாக்களை விரும்பும் இந்து மாணவர்கள்..

உத்தர் பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், அங்குள்ள ஹிந்துக்கள் அரசு நடத்தும் பள்ளிகளுக்கு செல்லாமல் மதரசாக்களுக்கு சென்று கல்வி கற்கவே விரும்புகின்றனர் என்று அறிவித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வறிக்கையில் இந்த மதரசாக்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையில் இந்துக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.

இஸ்லாமியா அராபியா ஆலிமுல் உலூம் என்ற மதரசாவில் முஸ்லீம் மாணவர்களுக்கு அரபி மற்றும் உர்துவும் இந்து மாணவர்களுக்கு சமஸ்கிருதமும் கற்றுத்தரப் படுகின்றது. இந்த மதரசா உ.பி யின் பாரபங்கி பகுதியில் உள்ளது.

இந்த ஆய்வறிக்கையை லக்னோவை மையமாக கொண்டு செயல்படும் Better Education through Innovation (BETI) என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு ஐந்து மதரசாக்களில் நடத்தப்பட்டது. இந்த ஐந்து மதரசாக்களும் அரசு உதவியின்றி அப்பகுதி மக்களின் பொருளாதார உதவியைக்கொண்டும், நன்கொடைகள் மற்றும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் ஆகியவற்றை கொண்டுமே நடத்தப் பட்டு வருகின்றன.

இந்த ஐந்து மதரசாக்களில் மூன்று மார்க்கக் கல்வியை தவிர உலக கல்வியையும் கற்றுத் தருகின்றன.

UNICEF -இன் தலைவர் வினோபா கவுதம் இது பற்றி கூறுகையில், "மதரசாக்கள் குழந்தைகளுக்கு ஒரு முழுமையான கல்வியின் சூழலை உருவாக்கி தருகின்றது. இது மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும். இது போன்ற கல்விச் சூழல் கல்வி கற்பதற்கு ஆர்வத்தினை ஏற்படுத்தி மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும்" என்று கூறினார்.

UNICEF சார்பில் கவுதம் இந்த மதரசாக்களை தான் அடிக்கடி பார்வையிட்டு வருவதாகவும் அதற்கான புத்தகங்களை ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் மொழிப்பெயர்த்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

நன்றி,
Daily Times.

ஞாயிறு, 25 ஜனவரி, 2009

சிபிஎஸ்இ-க்கு நிகராக மதரசா சான்றிதழ்கள்: மத்திய அரசு முடிவு

டெல்லி: மதரசாக்கள் வழங்கும் சான்றிதழ்களை மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகள் வழங்கும் சான்றிதழ்களுக்கு சமமாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் மதராசாக்கள் உள்ளன. அவற்றில் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மதரசாவில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும், சிபிஎஸ்இ மாணவ, மாணவியருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளன.

உதாரணத்திற்கு மதரசாவில் ஒரு மாணவன் ஐந்தாவது வகுப்பு படிப்பதாக இருந்தால், அதே வயதுடைய சிபிஎஸ்இ மாணவன், தனது பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பான்.

இதனால் மதரசாவில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக மத்திய அரசு கூறப்பட்டு வந்தது.

இதைப் பரிசீலித்த மத்திய அரசு தற்போது மதரசாக்கள் வழங்கும் சான்றிதழ்களை, சிபிஎஸ்இ சான்றிதழ்களுக்கு நிகராக மதிப்பிட முடிவு செய்துள்ளது.

அதன்படி, மதரசாக்களுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நிகரான அந்தஸ்தை மத்திய அரசு அளிக்கவுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த அகமது சிராஜ் என்ற 13 வயது மாணவன் டெல்லி சாந்தினி சவுக் மதராசாவில் 5ம் வகுப்பு படிக்கிறார். ஆனால் மற்ற பள்ளிகளில் பயிலும் இவன் வயதுடைய மாணவர்கள் தற்போது 9ம் வகுப்பு படிக்கிறார்கள்.

சிராஜ் இன்னும் மூன்று ஆண்டுகளில் கல்லுரியில் சேர வேண்டும். ஆனால் இவர் இதுவரை மத புத்தகங்களை மட்டுமே படித்துள்ளார். கல்லுரியில் தான் முதன்முறையாக ஆங்கிலம் மற்றும் கணிதத்தை படிக்க இருக்கிறார்.

இவரது சீனியர்கள் பலரும் உருது மற்றும் யுனானி கற்று வருகின்றனர். ஆனால் தான் வித்தியாசமாக சமஸ்கிருதம் படிக்க போவதாக சிராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், அரபி மொழியை பலராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அது போல தான் சமஸ்கிருதமும். அடுத்து சமஸ்கிருதம் படிப்பேன். சிபிஎஸ்இயின் அறிவிப்பு எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றார் சிராஜ்.

ஜெய்சுமுதீன் என்பவர் கூறுகையில், அரசின் முடிவால் தற்போது எங்களால் டாக்டர் மற்றும் என்ஜீனியர்களாக முடியும். பிபிஓக்களிலும் வேலை பார்க்க முடியும் என்றார்.

டெல்லி ராம்ஜாஸ் கல்லூரி முதல்வர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், தேவைப்பட்டால் மதரசா மாணவர்களுக்கு பாடங்களை அடிப்படையிலிருந்து நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.