இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
பாபரி மஸ்ஜித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாபரி மஸ்ஜித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 3 டிசம்பர், 2012
புதன், 20 அக்டோபர், 2010
பாபரி பள்ளிவாசல் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தீர்மானம்!
பாபரி பள்ளிவாசல் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியக் கூட்டத்தில் தீர்மானம்! தமிழகத்திலிருந்து தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்றார்!

“பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு 1993ல் ஜெய்பூரில் நடைபெற்ற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இங்கே குழுமியுள்ள உறுப்பினர் களுக்கு மீண்டும் நினைவூட் டுகிறேன். அந்தக் கூட்டத்தில் ஒரு இடம் பள்ளிவாசலாக இருந்தால் அது என்றைக்குமே பள்ளிவாசலாகத் தான் இருக்க முடியும் என்று ஷரீஅத்தின் விதிமுறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த அடிப்படையில் தான் நாம் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும். பாபரி பள்ளிவாசல் தீர்ப்பு வெளிவந்த பிறகு நமது உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று ஒரு சில வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுகின்றன. இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அல்லாஹ்வின் ஆலயத்தை அன்பளிப்பாக அளிப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் ஆபத்தானது. உச்சநீதிமன்றத்தை நாடி இந்தத் தீர்ப்பை புதைக் குழிக்கு அனுப்புவதுதான் நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும். இதற்காக சையது ஷஹாபுத்தீன் அவர்கள் குறிப்பிட்டது போல் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். தலைசிறந்த வழக்குரைஞர்களின் பட்டாளம் இதற்காக அமைக்கப்பட வேண் டும். இந்தத் தீர்ப்பு நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கு எதிராக அமைந்துள்ளது என்பதையும் நாம் அனைத்து மக்களுக்கும் விளக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது மிகவும் ஆபத் தானது. தீண்டாமை ரீதியான கொடுங்கோன்மைகளைக் கூட இந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக காட்டி நியாயப்படுத்தும் நிலை ஏற்படும். இவ்வாறு தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் பேசினார்.
சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) பல்வேறு குழப்பங்களும், தவறுகளும் நிறைந்த அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது மிக அவசியமாகும். இந்த மேல்முறையீட்டின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளங்களை சிதைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப் பை திருத்தி எழுத முயற்சிகள் மேற்கொள்வது,
2) மேல்முறையீடு தொடர்பான நீதிமன்ற செலவுகளுக்காக பாபரி பள்ளிவாசல் சட்டநிதி உருவாக்குவது,
3) பாபரி பள்ளிவாசல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அபத்தங்களை விளக்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்குகள் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழுக் கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. பாபரி பள்ளிவாசல் பிரச்சனையில் பேச்சு வார்த்தைக்கு வழி இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வாரியத்தின் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் குரைஷி, ‘நீதிமன்றத் திற்கு வெளியில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. எதிர்தரப்பு ஏதாவது திட்டத்தை முன்வைத்தால் அது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், ஷரீஅத் நெறிமுறைகள் மற்றும் முஸ்லிம்களின் கண்ணியம் ஆகியவற்றின் வெளிச்சத்தில் பரிசீலிக்கப்படும்‘ என்று பதிலளித்தார்.
ஹாசிம் அன்சாரி நடத்தி வரும் சமாதான பேச்சு வார்த்தைகள் குறித்து கருத்து கேட்டபோது, “அது தனி நபர் எடுக்கும் முயற்சி என்றும் ஆனால் தனியார் சட்டவாரியம் எடுக்கும் முடிவிற்கு தான் கட்டுபட்டு நடப்பதாக அன்சாரி தன்னிடம் தெரிவித்தார்” என டாக்டர் இல்யாஸ் தெரிவித்தார்.
மிகுந்த பாதுகாப்பு வளையத் திற்குள் இந்தக் கூட்டம் நடைபெற்றது. வாரிய உறுப்பினர் கள் மத்தியில் கருத்து மோதல் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அக்கருத் துகளையெல்லாம் பொய்ப்பிப்பது போல் ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு அனைத்திந்திய முஸ் லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
உ.பி. மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற நத்வத்துல் உலூம் அரபி பல்கலைக் கழகத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 16) அன்று நடைபெற்றது. அனைத்திந் திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்தியாவில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப் புகளின் பிரதிநிதித்துவ அமைப் பாகும். முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைவரும் நத்வா பல்கலைக்கழகத்தின் தலை வருமான மவ்லவி ராபி ஹசன் நத்வி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் 51 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். தமிழகத்தில் இருந்து இக்கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டார்.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவ்லவி நிஜாமுத்தின், துணைப் பொதுச் செயலாளர் அப்துர் ரஹீம் குறைஷி, வாரியத்தின் துணைத் தலைவரும் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் தலைவருமான மவ்லவி ஜலாலுத்தீன் அன்சார் உமரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சைய்யது சஹாபுதீன், ஜம்மியத்துல் உலமா ஹிந்தின் தலைவர்கள் மஹ்மூத் மதனி எம்.பி. மற்றும் அர்ஷத் மதனி பிரபல மூத்த வழக்குரைஞர் யூசுப் முசாலா, தனியார் சட்ட வாரியத்தின் பாபரி பள்ளிவாசல் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் டாக்டர் எஸ்.கி.யூ.ஆர். இல்யாஸ், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான், கர்நாடக இமாஅரத்தே ஷரீஅத் அமைப்பின் தலைவர் முப்தி அஷ்ரப் அலி, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பேரா.சுலைமான், மில்லி கவுன்சில் பொதுச் செயலாளர் டாக்டர் மன்சூர் ஆலம் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2.30 வரை நீடித்தது. தொடக்கமாக பாபரி பள்ளிவாசல் வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து வழக்குரைஞர் ஜஃபர்யாப் ஜீலானி விவரித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் இக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துரையின் சுருக்கம் பின்வருமாறு:
“பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு 1993ல் ஜெய்பூரில் நடைபெற்ற அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இங்கே குழுமியுள்ள உறுப்பினர் களுக்கு மீண்டும் நினைவூட் டுகிறேன். அந்தக் கூட்டத்தில் ஒரு இடம் பள்ளிவாசலாக இருந்தால் அது என்றைக்குமே பள்ளிவாசலாகத் தான் இருக்க முடியும் என்று ஷரீஅத்தின் விதிமுறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த அடிப்படையில் தான் நாம் இந்தப் பிரச்னையை அணுக வேண்டும். பாபரி பள்ளிவாசல் தீர்ப்பு வெளிவந்த பிறகு நமது உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று ஒரு சில வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுகின்றன. இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அல்லாஹ்வின் ஆலயத்தை அன்பளிப்பாக அளிப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் ஆபத்தானது. உச்சநீதிமன்றத்தை நாடி இந்தத் தீர்ப்பை புதைக் குழிக்கு அனுப்புவதுதான் நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும். இதற்காக சையது ஷஹாபுத்தீன் அவர்கள் குறிப்பிட்டது போல் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். தலைசிறந்த வழக்குரைஞர்களின் பட்டாளம் இதற்காக அமைக்கப்பட வேண் டும். இந்தத் தீர்ப்பு நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கு எதிராக அமைந்துள்ளது என்பதையும் நாம் அனைத்து மக்களுக்கும் விளக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது மிகவும் ஆபத் தானது. தீண்டாமை ரீதியான கொடுங்கோன்மைகளைக் கூட இந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாக காட்டி நியாயப்படுத்தும் நிலை ஏற்படும். இவ்வாறு தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் பேசினார்.
சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) பல்வேறு குழப்பங்களும், தவறுகளும் நிறைந்த அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது மிக அவசியமாகும். இந்த மேல்முறையீட்டின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளங்களை சிதைக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப் பை திருத்தி எழுத முயற்சிகள் மேற்கொள்வது,
2) மேல்முறையீடு தொடர்பான நீதிமன்ற செலவுகளுக்காக பாபரி பள்ளிவாசல் சட்டநிதி உருவாக்குவது,
3) பாபரி பள்ளிவாசல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அபத்தங்களை விளக்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்குகள் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழுக் கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. பாபரி பள்ளிவாசல் பிரச்சனையில் பேச்சு வார்த்தைக்கு வழி இல்லையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வாரியத்தின் துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம் குரைஷி, ‘நீதிமன்றத் திற்கு வெளியில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. எதிர்தரப்பு ஏதாவது திட்டத்தை முன்வைத்தால் அது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், ஷரீஅத் நெறிமுறைகள் மற்றும் முஸ்லிம்களின் கண்ணியம் ஆகியவற்றின் வெளிச்சத்தில் பரிசீலிக்கப்படும்‘ என்று பதிலளித்தார்.
ஹாசிம் அன்சாரி நடத்தி வரும் சமாதான பேச்சு வார்த்தைகள் குறித்து கருத்து கேட்டபோது, “அது தனி நபர் எடுக்கும் முயற்சி என்றும் ஆனால் தனியார் சட்டவாரியம் எடுக்கும் முடிவிற்கு தான் கட்டுபட்டு நடப்பதாக அன்சாரி தன்னிடம் தெரிவித்தார்” என டாக்டர் இல்யாஸ் தெரிவித்தார்.
மிகுந்த பாதுகாப்பு வளையத் திற்குள் இந்தக் கூட்டம் நடைபெற்றது. வாரிய உறுப்பினர் கள் மத்தியில் கருத்து மோதல் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அக்கருத் துகளையெல்லாம் பொய்ப்பிப்பது போல் ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திங்கள், 4 அக்டோபர், 2010
பாபரி மஸ்ஜித் தொடர்பாக வழக்கு தொடுத்தவர் அதிர்ச்சியில் மரணம்
அஸ்லம் புரே தனது வழக்குறைஞர் ஒ.பி. சர்மாவுடன்
பாபரி மஸ்ஜித் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அஸ்லம் புரே அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கேட்டு அதிர்ச்சி அடைந்து அக்டோபர் 2 அன்று காலை மரணமடைந்தார்.
டெல்லியைச் சேர்ந்த சைக்கிள் ரிக்ஷா விற்பனையாளர் அஸ்லம் புரே. 1991ல் உ.பி. மாநில முதல்வராக இருந்த கல்யாண் சிங் பாபரி மஸ்ஜிதை சுற்றி 2.77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார். இந்த நிலப்பகுதியில் எவ்வித கட்டுமானப் பணியும் நடைபெறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் இவர் போட்ட மனுவை அது நவம்பர் 1991ல் ஏற்றுக் கொண்டு உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதே போல் மத்திய அரசு கையகப்படுத்திய நிலப் பகுதியில் மீண்டும் கரசேவை செய்ய வி.ஹெச்.பி. 2002ல் முயற்சித்தப் போது அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இவர் போட்ட பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு விதித்தது. பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்து விசாரித்த நீதிபதி லிபரான் விசாரணை ஆணையத்தின் முன்பும் இவர் பிரமாண வாக்குமூலம் சமர்பித்துள்ளார். அடல்பிகாரி வாஜ்பேயியை லிபரான் ஆணையம் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் இவர் மனு செய்திருந்தார்.
பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கேட்டவுடன் அஸ்லம் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானர். இவர் அது குறித்து யாரிடமும் பேசாமல் தனது அறையை விட்டு வெளியே வராமல் முடங்கிப் போனார். இவரது மகன் இம்ரான் செய்தியாளர்களிடம் பேசுகையில் அயோத்தி தீர்ப்பு எனது தந்தைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நான் எப்படி இனி முஸ்லிம் சமூகத்தை சந்திப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்நதார். இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தாரியாகஞ்சில் உள்ள அவரது வீட்டிலேயே மரணம் அடைந்தார். டெல்லி கேட் அருகே உள்ள அடக்கவிடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அஸ்லம் புரேவின் ஜனாசா ஊர்வலம்
சனி, 2 அக்டோபர், 2010
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விவகாரம்: அவசரமாக கூடியது தலைமை நிர்வாக குழு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை நிர்வாக குழு அவரசகூட்டம் அக்டோபர் 1-ம் தேதி மாலை 4:30 மணிக்கு இன்று சென்னையில் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே. எஸ். ரிஃபாயி, தலைமை நிர்வாககுழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, துணை பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்ட நடைமுறைகளை ஏளனம் செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு கருதுகின்றது விடுதலைப்பெற்ற இந்தியாவில் வழங்கப்பட்ட மிக மோசமான கட்டப்பஞ்சாயத் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது ஒரு தரப்பு மக்களின் மத நம்பிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு 450 ஆண்டு காலம் முஸ்லிம்கள் வழிப்பாடு நடத்திய இடம் பள்ளிவாசல் இல்லை என்றும் அது ராமர் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பது நடைமுறைச் சட்டங்களுக்கு முரணாக புராணங்களின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். லக்னோ பெஞ்சின் இந்த நடைமுறையைப் பின்பற்றி; இனி நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கினால் இனி நாட்டில் எவரும் தமது உரிமைகளை தக்க வைக்க இயலாது. எனவே உத்திரப்பிரதேச மாநில சன்னி வக்ஃப் வாரியம் அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எடுத்துள்ள முடிவை தலைமை நிர்வாக குழு வரவேற்கிறது.
2. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது டிசம்பர் 6, 1992ல் அப்பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படுமென அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் வாக்குறுதி அளித்தார். அன்று நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை இன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி நிறைவேற்ற வேண்டுமென இந்நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது.
3. அத்வானி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு உத்திரபிரதேச ராய்பரேலி நீதிமன்றத்தில் 18 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் விசாரணை துரிதமாக நடைபெற்று குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட மத்திய அரசு ஆவனச் செய்ய வேண்டுமென இந்நிர்வாக குழு கோருகின்றது.
4. பாபரி மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நீதி பரிபாலண முறைக்கு விரோதமாக அமைந்த போதினும் அது இறுதி தீர்ப்பு அல்ல. உச்சநீதிமன்றத்தில் நியாயம் கிடைக்க சட்டவழியாக கடும் முயற்சி மேற்கொள்ளவோம். அதுவரை சட்டம் ஒழுங்கை மதிக்கும் இந்தியர்கள் என்ற அடிப்படையில் அமைதியும் நல்லிணக்கமும் நாட்டில் தழைத்தோங்கும் வகையில் செயல்பட அனைவரையும் இந்நிர்வாக குழு கோருகின்றது.
செவ்வாய், 28 செப்டம்பர், 2010
பாபரி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்சநீதிமன்றம் பிற்பகல் தீர்ப்பு வழங்கும்
பாபரி மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு எப்போது தீர்ப்பு வழங்கலாம் என்பது குறித்த வழக்கில் தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கபாடியா தலைமையில் நீதிபதிகள் கே.எஸ். ராதகிருஷ்ணன் மற்றும் அப்தாப் ஆலம் ஆகியோர் வழக்கை விசாரித்து வருகின்றார்கள். தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் இருத்தரப்பினர் இடையே சமரசமாக இப்பிரச்னையை முடிவுக் கொண்டு வரவேண்டும் என்று மனு செய்துள்ள திரிபாதி என்பவரின் சார்பாக வழக்குறைஞர் முக்குல் ரஸ்தோகி இப்போது தனது வாதத்தை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு பிறகு முஸ்லிம் மற்றும் ஹிந்து தரப்பு வழக்குறைஞர்களின் வாதங்களை நீதிபதிகள் கேட்டார்கள் பிறகு மத்திய அரசு சார்பாக தலைமை வழக்குறைஞர் குலாம் வாஹனவதி இருத்தரப்பும் சமசத்திற்கு தயார் என்றால் மத்திய அரசு அதற்கு உதவிடும் என்றும் இதற்கு இருத்தரப்பினரும் உடன்படிவில்லையெனில் தீர்ப்பு வழங்குவது தான் சரி என்றும் தனது வாதத்தை எடுத்துரைத்தார். இதன் பிறகு நீதிபதிகள்் உணவு இடைவேளைக்கு பிறகு விசாரணையை ஒத்திவைத்தார்கள். பிற்பகலில் தீர்ப்பு எப்போது வழங்கலாம் என்பது குறித்து தங்கள் முடிவை அறிவிப்பார்கள். நமதுஇணையத்தளம் உடனுக்குடன் இது குறித்த செய்திகளை வெளியிடும்
செவ்வாய், 27 ஜூலை, 2010
பாபரி மஸ்ஜித் வழக்கில் செப் 15க்கு பிறகு தீர்ப்பு: லக்னோ நீதிமன்றம் அறிவிப்பு
பாபரி மஸ்ஜித்
பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான வழக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவில் 1960 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. 1949ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவில் பாபரி மஸ்ஜிதிற்குள் சில பயங்கரவாதிகள் புகுந்து ராமர் லட்சுமணர் சீதை மற்றும் அனுமாரின் சிலைகளை வைத்து விட்டனர். அப்போது அந்த மாவட்ட ஆட்சியர் பாபரி மஸ்ஜிதை பூட்டுவதற்கு உத்தரவிட்டார். இரண்டு பூஜாரிகள் மட்டும் பள்ளிவாசலுக்குள் சென்று சட்டவிரோதமாக வைக்கப்பட்டடிருக்கும் சிலைகளுக்கு பூஜை நடத்தலாம் என்று உத்தரவிட்டார். இது தொடர்பாக முஸ்லிம்கள் தொடர்ந்த வழக்கு கீழ்நிலை நீதிமன்றங்களிலிருந்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் வரை சென்று நிலுவையில் இருந்தது. இச்சூழலில் 1986 பிப்ரவரி 2ம் நாள் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் உமேசு சந்திர பாண்டே என்பவர் தொடர்ந்த வழக்கில் பாபரி மஸ்ஜித் பூட்டை உடைத்து ராம பக்தர்கள் உள்ளே செல்வதற்கு மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் முயற்சியில் சங் பரிவார் அமைப்புகள் முனைந்தன. இறுதியில் டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
மஸ்ஜித் இருந்த இடம் கூகுள் வரைப்படம்
பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு தொடர்ந்து லக்னோ பிரிவில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வழக்குறைஞர்களை நியமித்து நடத்தி வந்தது. வழக்கு நிதியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ரூ7.5 லட்சம் வழங்கப்பட்டது.
பாபரி மஸ்ஜித் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தமுமுக ஆண்டு தோறும் போராட்டம் நடத்தி வந்தது. 2004 டிசம்பர் 6 அன்று டெல்லியில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம். ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின் அன்று மாலை பிரதமரை சந்தித்த தமுமுக குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
டிசம்பர் 6 2004ல் பாபரி மஸ்ஜித் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை வைத்த போது எடுத்த படம்
டிசம்பர் 6 2004ல் பாபரி மஸ்ஜித் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் தமுமுக குழு கோரிக்கை வைத்த போது எடுத்த படம்
இதன் பிறகு அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பிரிவில் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு பெஞ்ச் முன்பு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் எஸ்.யூ.கான், சுதீர் அகர்வால் மற்றும் தரம்வீர் சர்மா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தார்கள். சுன்னத்தி மத்திய வக்ப் வாரியம் எதிர் விசாரத் சர்மா என்று அழைக்கப்படும் இந்த வழக்கில் இறுதி விசாரணை ஜுலை 26 அன்று காலை தொடங்கி இரவு 7 மணி வரை நீடித்தது. நீதிபதிகள் விசாரணைக்கு சமர்பிக்கப்பட்ட சில வீடியோ காட்சிகளையும் பார்வையிட்டனர். இரு தரப்பு வழக்குறைஞர்களின் இறுதி வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். இறுதியில் தீர்ப்பை ஒத்திவைப்பதாகவும் செப்டம்பர் 15க்கு பிறகு எந்த நாளிலும் தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்த வழக்கில் ஹிந்துக்கள் சார்பாக 54 சாட்சிகளும் முஸ்லிம்கள் சார்பாக 33 சாட்சிகளும் நீதிமன்றம் முன்பு முன்னிலையாகி சாட்சியம் கூறினர். முஸ்லிம்கள் தரப்பு சாட்சிகளில் பெருமாபாலனவர்கள் இந்துக்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான வழக்குறைஞர் ஜபர்யாப் ஜீலானி செய்தியாளர்களிடம் பேசிய போது: நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கு முடிவிற்கு வந்துள்ளது எனக்கு திருப்தி அளிக்கின்றது. எங்கள் தரப்பு வாதம் மிக வலுவாக உள்ளது. பாபரி மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதே என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கிடைக்க இறைவனிடம் நாமும் கையேந்துவோம்
சனி, 7 பிப்ரவரி, 2009
பாபரி மஸ்ஜித் வழக்கு: வெற்றியை எதிர்நோக்கும் முஸ்லிம்கள்
எதிர்வரும் பிப் 9 அன்று அல்லாஹ்ஆபாத் (அலஹாபாத்) ஸ்பெஷல் பெஞ்ச் விசாரித்து வரும் பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம் தரப்பு வாதங்கள் லக்னோவில் முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந் ஹிந்துக்கள் தரப்பிலான வாதம் துவங்கும். ஹிந்துக்களைப் போல் வெறுமனே நம்பிக்கையையும், உணர்ச்சிகளையும் மட்டுமல்லாமல், ஏராளமான அத்தாட்சிகளையும் சமர்ப்பித்துள்ள காரணத்தால் 100 சதம் வெற்றி கிட்டும் என முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
அயோத்தியைச் சேர்ந்த, முஹம்மது ஹாஷிம் அன்ஸாரி என்பவர், 'அரசியல் பலமும், அதிகார பலமும் மட்டுமே இவ்வழக்கில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதை தடுக்க முயற்சிக்கும். நாங்கள் அங்கு 550 வருடங்களாக பள்ளி இருந்துள்ளதற்கான வலுவான சமர்ப்பித்துள்ளோம்' என தெரிவித்தார். இவர் 1949 ம் ஆண்டு வழக்கின் மனுதாரராவார். 90 வயதாகும் அன்ஸாரி, 'சட்டம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது' என நம்பிக்கை தெரிவித்தார்.
முதலாவதாக கோபால் சிங் பிஷாரத் என்பவர் முறையான அறிவிக்கை இல்லாமல் வழக்குத் தொடுத்தார். எனவே அது நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, ராம் சந்திர ப்ரம்ஹான்ஸ் என்பவர் ஒரு வழக்குத் தொடுத்தார். அதில் 5 முஸ்லிம்களை பிரதிவாதியாக இணைத்திருந்தார். பாபரி மஸ்ஜித் என்பது அந்த 5 முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. எனவே இதுவும் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்ததாக நார்மோகி அக்காராவின் வழக்கு. இவரது வழக்கு 1885,86 இலேயே தோல்வியில் முடிந்த ஒரு வழக்கு. இதனை மறுபடியும் எடுத்தது நீதித்துறையை கேலிக்குரியதாக்குவதாகும்.
நீதிபதிகள், செய்யது ரஃபாத் ஆலம், சுதிர் குமார் அகர்வால், டி.வி.ஷர்மா ஆகியோர் அங்கம் வகிக்கும் விசேஷ பெஞ்ச் பாபரி மஸ்ஜித் யாருக்கு சொந்தம் என்ற 67 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது.
1989 இல் லக்னோவிலுள்ள இந்த பெஞ்ச் விசாரிப்பதற்கு முன், ஃபைஸாபாத் மாவட்ட நீதிமன்றம் இதனை விசாரித்து வந்தது. உ.பி.மாநில அரசின் பரிந்துரையை அல்லாஹ்ஆபாத் உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டதை அடுத்து வழக்கை விரைந்து முடிப்பதற்காக லக்னோ பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டது. இதுவரை 12 தடவைகளுக்கு மேல் இதிலுள்ள நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.
அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக ஹாஷிம் அன்ஸாரி குறிப்பிடுகின்றார். ஹாஜி மெஹபூப் அஹமது, அன்ஸாரியின் கருத்தை மறுபதிவு செய்கிறார். 'இத்தனை வருட தாமதத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் ரீதியாக தாமதம் தூண்டப்படுகிறது'.
'இவ்வழக்கைப் பொறுத்தவரை, நமது நிலை மிகவும் உறுதியானது. ஆதாரங்களைப் பொறுத்தவரை வி.ஹெச்.பி. தலைவர்கள் உள்ளிட்ட அனைவருமே, முஸ்லிம்களின் நிலை வலுவாக உள்ளதென அறிவர். அதனால் தான், உறுதியாக நமக்கு வெற்றி கிடைக்குமென நான் நம்புகிறேன். அவர்களைப் பொறுத்தவரை வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாதிடுகின்றனர். ஆனால் நீதிமன்றங்களுக்கு ஆதாரம் தேவை. அவை முஸ்லிம்களிடம் மாத்திரமே உள்ளது' என்றும் அவர் கூறியுள்ளார். இவர் பாபரி பள்ளிக்கு வசித்து வருகிறார் என்பதும், 1992 இல் கரசேவகர்கள் இவரை பயங்கரமாக தாக்கினார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பல மாமங்களுக்குப் பிறகும், ஆதாரங்களின் அடிப்படையில், விசேஷ அமர்வு நீதிமன்றம் இவ்விஷயத்தில் முஸ்லிம்களுக்கு சார்பாக தீர்ப்பளித்தால் அதனை ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்விக்கு, 'நிச்சயமாக மாட்டார்கள், அதன் வெளிப்பாடாகத்தான் உச்ச நீதிமன்றத்தை அவர்கள் நாடியுள்ளனர்' என்றும் அவர் கூறினார்.
நீதிமன்றங்களுக்கு வெளியேயான சமரசத்தீர்வு குறித்து வினவியபோது, 'நாங்கள் இப்போதும் எப்போதும் அதற்கு தயாராகவே உள்ளோம். ராமர் கோயில் அயோத்தியில் கட்டுவது குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எங்களது மார்க்கத்திற்கு முரணில்லாத எவ்வித சமரசத்திற்கும் நாங்கள் தயார். ஆனால் அவர்கள் இதனை இழுத்தடிக்கவே விரும்புகின்றனர். எனவே தான் உயர்நீதிமன்றத்தில் தோற்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தை அணுக முயற்சிக்கின்றனர்' என்றும் குறிப்பிட்டார்.
ஹாஜி மஹபூபின் தந்தை ஹாஜி முஹம்மது பெக்கூ இவ்வழக்கின் முதன்மையான வாதிகளில் ஒருவர். பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்கப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர். 1960,61 இல் அவரது மறைவுக்குப்பின் மத்திய சன்னி வக்ஃப் போர்டு இவ்வழக்கை ஏற்று நடத்தி வருகிறது. முஸ்லிம்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஸஃபரியாப் ஜிலானி, 'எதிர் தரப்பைச் சேர்ந்த நமோஹி அகாதா கூட டிசம்பர் 23, 1949 க்கு முன் அங்கு சிலைகள் இருந்ததில்லை என்றும் அதற்கு முந்தய இரவில் தான் வைக்கப்பட்டது என வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக குறிப்பிடும் அன்ஸாரி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இவ்வழக்கில் காட்டிவரும் பாராமுகத்தை கடுமையாக சாடுகிறார்.
இத்தலைவர்கள் பாபரி மஸ்ஜித் இயக்கத்திற்கு ஊறுதான் விளைத்துள்ளனர். ராமஜென்மபூமி இயக்கத்தைப் பொறுத்தவரை, அவர்களுக்கு செல்வந்தர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அரவணைப்பு கிடைக்கிறது. ஆனால் பள்ளிக்காக இதுவரை நாம் எந்த வசூலையும் செய்யவில்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி ஏன் பிஜேபியிலும் கூட முஸ்லிம் தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் முஸ்லிம்களை முட்டாளாக்குகின்றனர்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை 1949 முதல் நான் போராடி வருகிறேன். 1954 இல் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய போது 100 முஸ்லிம்களுடன் நான் கைது செய்யப்பட்டேன். மீண்டும் மிசாவில் நான் கைது செய்யப்பட்ட போது காங்கிரஸ் தான் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்தது. இப்படியாக இந்த வழக்கிலிருந்து நான் விலகிக் கொள்ள வேண்டுமென்பதற்காக பல நெருக்கடிகள் எனக்குத் தரப்பட்டன.
நன்றி: டூசர்க்கில்ஸ் டாட் நெட்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)