கலாச்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலாச்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 ஜூலை, 2011

கலாச்சாரங்களை ஒழித்துக்கொண்டிருக்கும் இஸ்லாம்


ஆதிமனிதர்களான ஆதம் மற்றும் அவர் மனைவி ஹவ்வா இருவரும் இவ்வுலகிற்கு படைத்தனுப்பப்பட்ட பின்னர், அவ்விருவரும் இப்படி இப்படித்தான் இம்மண்ணில் வாழ வேண்டும் என்று அவர்களுக்கு அன்றே இறைவனால் கொடுக்கப்பட்ட கலாச்சாரம்தான் இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி. இதனை, தன் இறைத்தூதர் ஆதம் நபி(அலை)க்கும், அவர்மூலம் அவரின் மனைவி ஹவ்வா (அலை) அவர்களுக்கும் இறைவன் மூலம் பரிசளிக்கப்பட்டது. இதுவே- இந்த இஸ்லாமே- இவர்களின் வழித்தோன்றல்களும் கடைப்பிடித்தொழுக வேண்டிய வாழ்வியல் நெறி. அப்படி இருக்க, முதன்முதலில் இந்த நெறிக்கு எதிராக ஆதம் நபியின் மகன் தன் சகோதரனை கொலை செய்தார். முதல் மனித மரணம். கொலை. இப்படித்தான் இஸ்லாத்திற்கு எதிரான 'கலாச்சாரங்கள்' உலகில் ஆரம்பித்தன. கலாச்சாரம் என்றாலே.. ஒரு நாலுபேர் ஒரே மாதிரி செயல்படுவதும், அதையே அவர்களின் வழித்தோன்றல்கள் எக்கேள்வியும் இன்றி பின்பற்றுவதும் தானே..?!

இதுபோல் மனித குலத்துக்கு-மனித உரிமைக்கு-இஸ்லாத்திற்கு எதிரான பல கலாச்சாரங்கள் தீய மனிதர்களால் உருவாகின. அப்போது இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி மக்கள் மறந்ததாலோ அல்லது பின்பற்றப்படாது போயிருந்ததாலோ, அந்த தீய கலாச்சாரங்கள் மிகுதியாகின. அப்போதெல்லாம் இந்த மனித சமுதாயத்துக்கு நன்மையை ஏவி, தீமையை தடுக்க அந்த மனிதர்களிலிருந்தே, ஒருவரோ இருவரோ இறைத்தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆதிமனிதர் ஆதம் நபிக்கு அளிக்கப்பட்ட அதே... 'இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி'யை அதே அடிப்படையுடன் அக்கால சூழலுக்கு ஏற்ப தேவையேற்படின் சில விஷயங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு மனிதகுலத்துக்கு மீண்டும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த... இஸ்லாம் எனும் வாழ்வியல் கலாச்சாரத்தை- வாழ்க்கை நெறியை மக்கள் மனதில் புணரமைக்கும் வேலையை அவ்வப்போது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இறைத்தூதர்கள் தம் மக்களிடம் செய்து வந்தனர். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு இறைத்தூதர் வந்தார். அப்படி வந்தோரில்... ஒரு 25 இறைத்தூதர்களைப்பற்றியும் அவர்களின் வரலாற்று சம்பவங்களையும் கற்பதன் வாயிலாக இக்கால மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக வேண்டி, திருக்குர்ஆன் மூலம் இறைவனால் நமக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

திருக்குர்ஆன் குறிப்பிடும் அந்த 25 இறைத்தூதர்கள்... ஆதம், இத்ரீஸ், நூஹ், ஹூத், ஸாலிஹ், இபுராஹீம், லூத், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாஃகூப், யூஸுஃப், அய்யூப், ஷுஐப், மூஸா, ஹாரூண், யூனுஸ், தாவூத், சுலைமான், இல்யாஸ், துல்கிப்லு, அல்யஸவு, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மத் (இவர்கள் அனைவர் மீதும் இறைவனின் ஸலாம் உண்டாவதாக) ஆகியோர்..!

இவர்கள் அனைவருக்கும் இறைவானால் அருளப்பட்ட வாழ்வியல் நெறி ஒன்றுதான் -ஒரேகலாச்சாரம்தான்- அது இஸ்லாம்..! இதைத்தான், இவர்கள் தம் மக்களுக்கும் போதித்து... தாமும் அதன்படியே வாழ்ந்தும் காட்டும்படி இறைவனால் கட்டளையிடப்பட்டு கண்கானிக்கப்பட்டார்கள்.

இறுதியாக... ஒரு இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) என்றொருவர் தேவைப்படும் அளவுக்கு அப்போது அப்படியென்ன தீய கலாச்சாரங்கள் அந்த அரபிய மக்களிடம் மிகுந்திருந்தன..? அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

(பண்டையகால அரேபிய கொடிய காட்டுமிராண்டி கலாச்சாரம் )

பெண் குழந்தைகள் பிறந்தால் நம்மைப்போல நெல்மணிகளையோ, எருக்கம்பூவையோ, கள்ளிப்பாலையோ தேடி நேரத்தை விரயம் பண்ணமாட்டார்கள் அந்த காட்டரபிகள். பிறந்தவுடனேயே அந்த 'பச்சை மண்ணை' ஈவிரக்கம் இன்றி சுடும் பாலை மண்ணில் புதைத்து விடுவார்கள் அந்த கொலைபாதக காட்டுமிராண்டி அரபிகள்.

ஆனால், வெறும் 23 வருஷம்தான்..! முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இஸ்லாமிய புணரமைப்பின் மூலம் புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! பிறகு அப்போதிருந்து இப்போது வரை, பெண் குழந்தை என்றால் அப்படியொரு சந்தோசம். இரண்டாவது பெண் குழந்தை என்றால் இரட்டிப்பு சந்தோசம். ஆவலாய் இருந்து நான்காவது ஐந்தாவது மாதமே ஸ்கேன் பண்ணிபார்த்து... மூன்றாவதும் பெண் குழந்தை என்று தெரிய வந்தால்... கேட்கவே வேண்டாம்... மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை அவர்களிடம்..! அன்றே சுவனம் சென்றுவிட்டது போன்ற பெருமகிழ்ச்சி அந்த இஸ்லாமிய கலாச்சார பெற்றோரிடம்..! என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? ஸ்கேன் பண்ணிய டாக்டரிடம் யாராவது, 'என்ன குழந்தை' என்று கேட்டாலோ அல்லது எவராவது சொன்னாலோ.. போதும்..! போலிஸ் வரும்..! சட்டப்படி கைது செய்ய விலங்கோடு..!? கேவலம் இல்லையா இந்த சட்டமும் அதற்கான பின்னணியும்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இதனை..?

அன்றைய அரபிகள் பெண்களை அடிமைபோல நடத்தினர். பகலிலும் இரவிலும் வேலை வாங்கினர். அதற்கு பிரதியாக சாப்பாடு போட்டனர். இதுதான் அபோதைய அரபி கலாச்சாரம். ஆனால், வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அம்மக்களிடம்..! இன்று அவர்களிடம், ஒரு பெண் மலையளவு பொற்குவியலையே தன் திருமணத்துக்காக கேட்டாலும், அதை மஹராக தரச்சொல்கிறது இஸ்லாமிய கலாச்சாரம்..! சமீபத்தில் என்னுடன் பணியாற்றும் ஒரு அரபி இரண்டு லட்சம் ரியால் (23 லட்சம் ரூபாய்) மஹர் கொடுத்து திருமணம் புரிந்தார். மேலும்... வாடகைஃபிளாட், ஃபர்னிச்சர், கார், சமையல் சாமான்கள், திருமணவிருந்து என அனைத்திற்குமாக சேர்த்து இன்னொரு இரண்டு லட்சம் ரியால் அவரே செலவு செய்தார். (இதுவே இவர்களிடம் ஒரு சராசரி திருமணமாம்..!) அந்த மஹர் முழுமைக்கும் நகைவாங்கி போட்டுக்கொண்டு அந்த அரபியபுதுமணப்பெண் கையை வீசிக்கொண்டு மஹாராணியாய் இல்வாழ்க்கையில் நுழைந்தார்..! என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..!

இஸ்லாமிய பெண்ணுரிமை..!?

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? பெண்வீட்டாரிடம் வரதட்சிணை, நகை, சீதனம், திருமண விருந்து, மண்டபம், வரவேற்பு... இத்யாதி..இத்யாதி...! இதில், வரதட்சிணை மட்டும் சட்டப்படி குற்றம். எங்காவது போலிஸ் வருகிறதா கைது செய்ய விலங்கோடு..!? போலிஸ் ஐஜி அல்லது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வீட்டு திருமணத்திலேயே இவையாவும் இருக்காதா..!? 'அஞ்சு பொட்டையை பெத்தா அரசனும் ஆண்டி' என்றல்லவா நம்முடைய பழமொழி சொல்கிறது..? கேவலம் இல்லையா இந்த நமது இந்த பெண்ணுரிமைக்கு எதிரான இந்திய கலாச்சாரம்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய பெண்ணடிமைத்தன காட்டுமிராண்டி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இதனை..?

அந்நாளில் அரபியரிடத்தில் விபச்சாரம் கொடிகட்டி பறந்தது. பெண்கள் ஆபாச உடை அணிந்திருந்தனர். ஆனால், வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! பெண்கள் கண்ணியமான உடை அணிந்தனர். மதிக்கப்பட்டனர். விபச்சாரத்துக்கே அங்கே வேலையே இல்லை. என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? சென்சார் கட் விழும் என்பதால் நடிகைகள் கூட போடாத ஆபாச ஆடையை இளம்பெண்கள் அணிவதும், சினிமா, டிஸ்கோத்தே, பஃப், நைட் பார்ட்டி, பார், டேட்டிங் என அனுமதி பெற்றும் பெறாமலும் விபச்சார வாசல் தாளாரமாய் இன்றய இளைஞர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இவை ஏதும் அரசாலும் சமூகத்தாலும் கண்டு கொள்ளப்படுவதும் இல்லை. திருமண உறவு இல்லாமல், விபச்சாரம் செய்து இருவர் மாட்டிக்கொண்டால், சட்டப்படி அங்கே பெண்தான் குற்றவாளி..! அப்போது பெரியமனது வைத்து அந்த ஆண், 'விரும்பித்தான் ஈடுபட்டோம்' என்றால் அது சட்டப்படி விபச்சாரமே அல்ல..! இன்னும், இப்போது 'கால்செண்டர் வாசல்களில் காண்டம் மெஷின் வைக்கிறார்கள்' என்கிறது சென்ற மாத செய்தி..! 'இந்திய தேவதாசி கலாச்சாரம்' இன்னும் இருப்பதாய் சென்றவாரம் ஒரு செய்தி..! கேவலம் இல்லையா இதெல்லாம்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி விபச்சார கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இவைகளை..?

இதேபோன்று, அப்போது மது அரபியரிடத்தில் ஆறாக ஓடியது. மற்ற தீயதை எல்லாம் ஒரேநாளில் சட்டம்போட்டு ஒழித்து வெற்றி நாட்டிய இறைநெறி, இங்கே மட்டும் இஸ்லாமிய கலாச்சார மாற்றம் படிப்படியாக மூன்று சட்டங்கள் மூலம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு மதுவில் மதிஇழந்து போயிருந்தனர் அந்த காட்டுமிராண்டி அரபிகள். ஆனாலும், வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! பிறகு ஒரு சொட்டுகூட மது இல்லை..! என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?

(மதுவை எதிர்த்து அரசிடம் கோரிக்கை மனுவுடன் செய்வதறியாது திகைக்கும் நாம்..!)

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? அரசாங்கமே கொலை வெறியோடு மதுக்கடை வைத்து வியாபாரம் செய்யும் நிலையில் நாம் இதை யாரிடம் முறையிடுவது..? பள்ளி மாணவர்கள், பெண்கள் உட்பட எல்லாரும் மது குடிக்கிறார்கள். இதனால், நாட்டின் முன்னேற்றத்திற்காக சிந்திக்க வேண்டியவ படித்த பண்டிதர்கள் எல்லாம் சிந்தை மயங்கி செயலற்று வீழ்ந்து கிடக்கின்றனர். மதியிழந்து வாகனம் ஓட்டி அப்பாவி பாதசாரிகளை கொலை செய்கின்றனர். சொத்துக்கள் கொள்ளை இடப்படும்போது சிந்தை இழந்து செயலற்று போய் விடுகின்றனர். தன் குடும்பத்து (தாய்/சகோதரி) பெண்களிடமே பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். பல ஆண்டுகள் வாழ்வேண்டியவர்கள் அல்ப ஆயுசுகளில் நோய் வந்து இறக்கின்றனர். கேவலம் இல்லையா இந்த ஹரப்பா கால பழம்பெரும் சோமபான சுராபான பாரத கலாச்சாரம்..? தேவையா இந்த தமிழக டாஸ்மாக் கலாச்சாரம்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி குடிகார கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இவைகளை..?

அப்போது அறியாமைக்கால அரபியரிடத்தில், கணவனை இழந்த கைம்பெண்கள் என்றாலே விபச்சாரத்தில் தள்ளப்பட்டனர். வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! புணரமைக்கப்பட்ட இஸ்லாமிய கலாச்சாரம் மூலம் கணவனை இழந்த கைம்பெண்கள் உடனடியாக மறுமணம் செய்விக்கப்பட்டனர், ஏகப்பட்ட மஹரும் பெற்றுக்கொண்டு..! மேலும் இவர்கள் மிகைக்கும் பட்சத்தில், ஒருதார மணமே சிறப்பு எனினும், பொருளாதாரமும் உடல்வலிமையும் அதிகம் இருக்கும் ஆண்கள் அதிபட்சம் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டு விதவைகள் மறுவாழ்வு நிகழ்த்திக்காட்டப்பட்டது. என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? இதோ சென்ற நூற்றாண்டில்தான் கைம்பெண்களை உடன்கட்டை ஏற்றும் நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரம் பல போராட்டங்களின் விளைவால் நீக்கப்பட்டு அதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இந்த ஆகம விதி சமய அடிப்படையில் நடக்கின்றனவே..? பூ, மஞ்சள், குங்குமம், தாலி, நகை, வண்ணப்புடைவை என்று திருமணம் மூலம் சுமங்கலி வேஷம் கொடுத்து, கணவன் இறந்துவிட்டால் அவை ஏதுமற்ற மொட்டைத்தலை அமங்கலி வேஷம் கட்டுதல் போன்ற நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரம் எல்லாம் கேவலம் இல்லையா..? இதனை கலாச்சாரம் எனக்கூறி கட்டிக்காக்க நமக்கு வெட்கமாக இல்லையா..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இதனை..?

கருப்பாக பிறந்தவன் என்றால் அடிமை என்ற நிலை. அரபி பேசாமல் வேறு எந்த மொழி பேசினாலும் அவர்கள் 'கால்நடைகள்' என்று புரிந்துணர்வில் வாழ்ந்துகொண்டிருந்த காட்டுமிராண்டி காலத்தில், இந்த நிறவெறியை மொழிவெறியை ஒழித்து 'எந்த நிறம், இனம், மொழி எனினும் அனைவரும் ஆதிமனிதர் ஆதம்-ஹவ்வா தம்பதிகளுக்கு பிறந்த ஒரு தந்தை-தாய் வயிற்று பிள்ளைகள் ஆகிய நாம் சகோதரர்களே' என்ற சமத்துவத்தை நிலைநாட்டியதே..! வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..!
ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? இன்னும் பாப்பாபட்டி கீரிப்பட்டியில் தேர்தல் நடத்த வக்கில்லை நமக்கு. தீண்டாமை சுவரை கட்டுகிறான். பலத்த காவலுடன் இடித்தால், மீண்டும் கட்டுகிறான். இரட்டை குவளை. ஒரே மதம் என்றாலும் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாட்டில் அனுமதி இல்லை. கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பேசினால் தமிழ் பேசுகின்றவனுக்கு தண்ணீர் விடுவது இல்லை. கேவலம் இல்லையா இது..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டிகால மொழிவெறி, இனவெறி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இவைகளை..?

இதேபோலத்தான்... நாமே செய்த சிலைகளை வணங்குதல், கல், மண், மரம், காற்று, நெருப்பு, மழை, சூரியன் என கண்டதையெல்லாம் காக்கும் இறைவன் என கருதி வணங்குவது, வட்டி, சூதாட்டம், ஓரினச்சேர்க்கை, பில்லி, சூனியம், மந்திரம், ஜோசியம், அதிர்ஷ்டக்கல், சகுனம், ஜாதகம், தோஷம், மூடநம்பிக்கைகள், தானாக செத்ததையும், கண்டதையும் உண்ணுதல், முறைதவறி திருமணம் செய்தல், பெண்களுக்கு சடங்கு சம்பிரதாயம் என்று அலப்பறை, மரம் வளர்ப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிராக இறந்தோரை எரித்தல், யாரோ எவரோ தன் சுயநலனுக்காக எப்போதோ ஏற்படுத்திய மணுதர்மம் எனும் சாதிய சதியை இன்னும் நாம் பிடித்துக்கொண்டு நமக்குள் அடித்துக்கொண்டு இருப்பது போன்ற இத்தனை பாரம்பரிய கலாச்சாரத்தையும் கட்டிக்காக்க வேண்டுமா அல்லது மனித குலத்துக்கு ஏற்ற சிறந்த கலாச்சாரத்தை---இவ்வுலகுக்கு ஏற்ற வாழ்வியல் நெறியை --இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றுவதா என்று 20 கோடி இந்தியர்கள் இன்று யோசிப்பது போலவே உலகில் இருக்கும் மூன்றில் ஒருபங்கு மக்களும் யோசிக்கின்றனர்.

சகல கலாச்சாரத்தையும் சீர்தூக்கி நன்மை தீமைகளை தீர ஆலோசித்ததன் முடிவு, இறுதியில் இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்கின்றனர். இது தம் 'உயர்ந்த இருப்பை' பாதிக்கும் என்போர் மட்டும் 'கலாச்சாரகாவலர்(?)' வேஷம் போட்டு இஸ்லாத்தையும் அதனை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்வோரை(முஸ்லிம்களை)யும் வீம்புக்காக எதிர்க்கின்றனர். ஆனால், உண்மையில் இப்படி எதிர்ப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்வில் மட்டும் அறிந்தோ அறியாமலோ 'இதுதான் சரி' என்று ஒன்றை விரும்புகின்றனர். 'அதுதான் இஸ்லாம்' என்று பின்னாளில் அறிய வரும்போது அவர்களும் தங்கள் போலி வேஷத்தை கலைத்துவிட்டு முஸ்லிம் ஆகின்றனர். இறைவனுக்கே எல்லாப்புகழும்.

ஆக, இப்படித்தான்... உலகில் மனித குலத்துக்கு எதிராக நாம் உருவாக்கி வைத்துள்ள நமது பல தீய கலாச்சாரங்களை மட்டும் ஒழித்து மக்களின் வாழ்வியல் நெறியை செம்மை படுத்திக்கொண்டிருக்கிறது இஸ்லாம். பிற மனிதர்க்கு நன்மை பயக்கும் நல்ல கலாச்சாரங்களை இஸ்லாம் என்றுமே எதிர்த்ததுமில்லை; அழித்ததுமில்லை. எனவே, நல்ல கலாச்சாரங்களை எவர் சொன்னாலும் எடுத்துக்கொள்வோம். நம்மிடம் இருக்கும் தீய கலாச்சாரங்களை விட்டொழிப்போம். அதை இஸ்லாமும் எதிர்க்கிறது என்பதற்காக கட்டிக்காப்பாற்ற முனைவது சமுதாயக்குற்றம்.

இதை நான் சொல்வதற்கு காரணம், நான் பின்பற்றும் "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"...என்ற நல்ல தமிழ் கலாச்சாரம்..! இதுவேதான்... நான் பின்பற்றும் "உனக்கு எதை நாடுகிறாயோ அதையே உன் சகோதரருக்கும் நாடு" என்ற இஸ்லாமிய கலாச்சாரம்..!

'தீய கலாச்சாரம்'

"இஸ்லாம்தான் நம் நாட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்திருக்கிறது" என்ற நச்சுக்கருத்தை சிலர் பரப்புகிறார்கள். இஸ்லாம் பற்றிய இன்றைய 'கலாச்சார காவலர்(?)களுடையது' முற்றிலும் தவறான புரிதல் ஆகும். இதை இவர்கள் உணரவேண்டும். எவ்வளவு விரைவாக உணர்கிறார்களோ அது அவர்களுக்கும் மற்றோருக்கும் மகத்தான நன்மை. ஆதலால், தீய கலாச்சாரங்களை தூக்கி தூர வீசி எறிந்து விட்டு நல்ல கலாச்சாரத்தை நம் வாழ்வினில் கைக்கொள்வோம் சகோ..!

மனித சமுதாயத்திடம் உள்ள தீய கலாச்சாரங்களைத்தான் இஸ்லாம் ஒழித்துக்கொண்டிருக்கிறது..!

நன்றி : http://pinnoottavaathi.blogspot.com/2011/06/blog-post_17.html#more

சனி, 18 செப்டம்பர், 2010

கள்ளக் கணவனின் நெருக்கமும்! கட்டிய கணவனின் மரணமும்!....

சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக, ஈரான் நாடு தான் ஓரளவு இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், அந்த நாட்டில் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட ஒரு பெண்ணிற்கு ஈரான் ஷரியத் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது. அதுவும் பொது மக்கள் முன்னிலையில் கல்லால் எரிந்து கொள்ளப்படவேண்டும் என்று.

இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் நாடுகளும், அதன் அபிமானிகளும்,எதற்க்கெடுத்தாலும் மனித உரிமை பேசும் அதன் ஆர்வலர்களும், இந்த தண்டனையை விமர்சனம் செய்தனர். அது மட்டுமல்லாமல் இந்த தண்டனையை குறைக்க வேண்டும் அல்லது ரத்து செய்யவேண்டும் என்று கொக்கரித்தனர். இது தொடர்பான ஒரு செய்தி நாளிதழ் ஒன்றில் 07 -09 -2010௦ அன்று வெளியானது.

அதில் “உலகநாடுகள் கண்டித்த, இந்த செயலை ரமதான் மாதத்தில் அந்த நாடு நிறைவேற்ற இருந்தது. ரமதான் மாதத்தில் இப்படி செய்வதற்கு அரபு நாடுகள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியதால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பரபரப்பான தகவலாக பரப்பியது அதன் உண்மை நிலையை அறிந்துக்கொண்டு விஷயத்திற்கு வருவோம் .

ஈரானை சார்ந்த அஷ்டியானி என்ற பெண்ணுக்கு, வயது 40. இரண்டு குழந்தைகளின் தாய். இவரும் தனது கள்ளக்காதலனும் சேர்ந்து இவருடைய கணவரை கொடூராமான முறையில் கொலை செய்துள்ளனர். எப்படி தெரியுமா? இவருடைய கணவருக்கு உண‌வில் மயக்க மருந்து கொடுத்து அவருடைய இரண்டு கால்களிலும் மின்சார வயர்க்ளை சுற்றி மின்சாரத்தை செலுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.. இது நடந்தது 2006 ஆம் ஆண்டு.

அப்பொழுதே இந்த பெண்ணின் கள்ளக்காதலனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவிட்டது. இந்த பெண்ணிற்க்கும் அப்பொழுதே (4 வருடங்களுக்கு முன்பு) மரணதண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இவருடைய தண்டனை தள்ளி வைக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டு இப்போது 2010 ஆம் ஆண்டு ஆகிவிட்டது. இந்த உண்மையை மீடியாக்கள் மறைத்து, அப்பெண் செய்த கொடூரத்தை மறைத்து, கொடுத்த தண்டனையை மட்டும் கொடூரமானதாக சித்தரிக்கின்றனர்.

99 கசையடி :

அடுத்து முகத்தை வெளியில் தெரியும்படி புகைப்படம் வெளியானதற்காக இந்த பெண்னுக்கு 99 கசையடி கொடுக்கப்பட்டதாகவும், இதை அவரோடு சிறையிலிருந்து தண்டனை அனுபவித்து, வெளியில் வந்த ஒரு பெண் உறுதி செய்ததாகவும் அந்த பெண்ணின் (அஷ்டியானி) வழ்க்கறிஞர் கூறியதாக கூடுதலாக செய்தியை பரப்பியது.

மேலும் இதனால் ஈரானில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை காரணம், இன்னொரு வழ்க்கறிஞர் கசையடி கொடுக்கப்பட்டது சரியாக தெரியலை என்று கூறியுள்ளார் என்ற தகவலையும் அதே பத்திரிக்கை கூறுகிறது. எனவே முகத்தை காட்டியதற்காக 99 கசையடி கொடுத்தது சரியா? தவறா? என்று, கருத்து சொல்லமுடியாது. ஆனால் முகம் தெரியும் வகையில் அப்பெண்ணின் புகைப்படம் வெளியானது மட்டும் உண்மை.

காட்டு மிராண்டித்தனமான சட்டம்:

செய்திகளை வெளியிட்ட மீடியாக்கள் எதற்காக தண்டனை வழங்கப்பட்டது? என்ற அதன் உண்மை நிலையையும் சேர்த்தே வெளியிட்டு இருந்தால், இந்த இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரியாக இருந்தாலும், அதை பார்ப்பவர்களின் உள்ளம்,தண்டனை வழங்கியது சரிதான் என்றே சொல்லும். நடுநிலையாளர்களின் உள்ளத்தில் இஸ்லாத்திற்கு சாதகமாக இப்படிப்பட்ட எண்ணங்கள் உதித்து விடக்கூடாது என்பதற்காக தான் பாதியை மறைத்து, பாதியை சொல்லும் தந்திரத்தை கையாளுகின்றன ஊடகங்கள்.

சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் இஸ்லாத்தை விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்ட விஷமிகளுக்கு இந்தமாதிரியான மொட்டை தகவல்கள் ஒரு வரப்ப்ரசாதம். இவர்கள் தான் இந்த தண்டனையை காட்டு மிராண்டித்தனமான தண்டனை என்றும், அறியாமைகால பழக்கம் என்றும் பேசி முற்றிலும் தாங்கள் மூடர்களே என்று பறைசாற்றுகின்றனர்.


இதில், ஒன்றிரண்டு மூடர்கள் சொல்வதை,ஒட்டு மொத்த மக்களும் சொல்வதுபோல் காட்டுவது தான் மீடியாவின் மேஜிக். இதை புரிந்துக்கொல்வோமேயானால் அவர்களுக்கு நாம் காட்டலாம் மேஜிக்.

இன்றைக்கும் மிருகங்களாய் வாழ வித்திடுபவர்கள், அன்று மிருகங்களாய் வாழ்ந்து வந்தவர்களை மனிதர்களாக வாழவைத்த அற்புதமான சட்டத்தை பார்த்து, காட்டு மிராண்டித்தனமான சட்டம் என்று வானத்துக்கும்- பூமிக்கும் குதிக்கின்றனர். இப்படிப்பட்ட சட்டம் இல்லாததால் தான் அறிவியலில் வளர்ச்சி அடைந்த இன்றைய அறிவுள்ள மனிதனும் மிருக வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறான்.இப்படிப்பட்ட மனிதனை, கட்டுப்படுத்தி, இந்த அசிங்கத்தை தடுக்கும்,சட்டங்களை, கொண்டுவந்து, அதை குறைத்து விட்டு அதன் பிறகு விமர்சனம் செய்யட்டும் .இலையேல்மூடிகிட்டு இருக்கட்டும்......................வாயை. அது வரைக்கும் யாராக இருந்தாலும்,எந்தநாடாக இருந்தாலும் இந்த சட்டத்தை விமர்சனம் செய்ய தகுதி அற்றவர்கள். என்பது தான் இதற்குப் பதிலாகும்.


குறிப்பிட்ட நாடுகளில் அதிகமாக நடக்கின்ற, நமது நாட்டில் (தமிழகத்தில்)மட்டும் வெளிச்சத்திற்கு வந்த, இன்னும் வரவிருக்கிற, இந்த நாகரீக[!] உறவு குறித்த,பல சம்பவங்களில் இரண்டே, இரண்டு மட்டும் நடு நிலையாளர் போர்வையில், சிறிதும் தெரியாமல் ஒளிந்து, ஒளமிடும் இஸ்லாமிய விரோத விஷமிகளுக்கு தருகிறோம்.

கள்ளக் காதலால்,கட்டிய கணவனை கொன்றது:

பொதுவாகவே கள்ளக் காதலை வாழ வைத்து,கள்ள உறவை பேணுவதற்காக,கட்டிய கணவனிடமிருந்து விவாகரத்து பெறுவதும்,பிரிந்து வாழ்வதும்,கொடூரமான முறையில் கொலைசெய்வதும் அதிகரித்து வருவதை தினசரி நாளேடுகளின் வாயிலாக நாம் அறிந்து வரும் செய்தி தான்.

குறிப்பாக நம்ம தமிழகம் இந்த மாதிரியான கூத்துக்களுக்கு, பிறப்பிடமாகவும், புகலிடமாகவும்,இருப்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. தமிழகத்தில் மட்டும் தான் இந்த நிலையா? மற்ற மாநிலங்களிலோ, மற்ற நாடுகளிலோ, இந்த கூத்து இல்லையா?என்றால் நிச்சயம் இருக்கும். ஆனாலும் அது சந்திக்கு வருவது கிடையாது. காரணம், அங்கெல்லாம்,ஒரு ஆண்,பெண்ணோடு கைகுலுக்குவதும்,பெண் ஆணோடு கைகுலுக்குவதும், கட்டிபிடிப்பதும், முத்தமிடுவதும், டேடிங் தருவதும், ஊர் சுற்றுவதும் நாகரீகமாக கருதுகின்றனர். சுருக்கமாக சொல்வதாக இருந்தால் வெள்ளையர்களின் கலாச்சாரம் வேரூன்றி வருவதால்.

தமிழகத்திலும்,வெள்ளையர்களின் கலாச்சாரம் வேகமாக வேருன்றி வந்தாலும்,ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரம்பரிய கலாச்சாரத்தின் தாக்கம் எஞ்சி உள்ளதால், கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ, துரோகம் செய்யும் பொழுது அந்த தவறை, கண்டிப்பதற்காக பாதிக்கப்பட்டவர் முற்படும் பொழுதோ, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கண்டு பிடித்து உண்மை வெளியில் வரும் பொழுதோ, விவாகரத்திலோ, கொலையிலோ போய் முடிந்துவிடுகிறது. விவாகரத்தில் முடிந்தால், பெரும்பாலும் இந்த அசிங்கம் வெளிவராது. கொலையில் போய் முடிவதால் தான், காவல்துறை விசாரித்து உண்மை நிலையை அறிய வேண்டிய நிப்பந்தம் உண்டாவதால் தான் வெளிச்சத்திற்கு வருகிறது. இப்படி வெளிச்சத்திற்கு வந்தவைகளை இனி பார்ப்போம்.


சம்பவம்: 1

மதுரையை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 42). இவரது மனைவி சத்யா (35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இவர் 10 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையத்தில் குடியேறியவர். இவர் அங்கு மருந்து கடை நடத்தி . வந்துள்ளார். வியாபாரத்தை கவனிக்கும் பொருட்டு 2 மகன்களையும் மதுரையில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்துள்ளார் மகள் தரணியை மட்டும் தங்களுடன் வைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் இவர் மனைவி சத்யாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் பழக்கம் ஏற்ப்பட்டு உள்ளது. அவரது கணவர் வீட்டில் இல்லாத பொழுது, அந்த பெண்ணை பர்ர்க்க வாலிபர்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார். ஆனாலும் இந்த கள்ளத்தொடர்பு அவரது மனைவி பேணியே வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் கடையில் இருந்து வீட்டுக்கு வந்த அந்த பெண்ணின் கணவர், வாலிபர்களோடு அவரது மனைவி உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது கோபத்தை காட்ட, அங்கிருந்த வாலிபர்களின் உதவியோடு அந்தப்பெண் தனது கணவரை கொன்று விட்டாள்.

சம்பவம்: 2


இந்த சம்பவம் ஒரு சிறைக்காவலர் பற்றியதாகும்.சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர், எஸ்.காயத்ரி மாலா (33). கோவையை சேர்ந்தவர்.காயத்ரி மாலாவும், மதுரை மத்திய சிறையில் சப்-ஜெயிலராக பணியாற்றி வரும் தமிழ்ச் செல்வன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர் . தமிழ்ச்செல்வன், காயத்ரி மாலா இருவருமே ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்கள்.கடந்த 2002-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக வேலைக்கு சேர்ந்த காயத்ரி மாலா, பதவி உயர்வு பெற்று, கோவையில் இருந்து சேலத்திற்கு வந்து அய்யந்திரு மாளிகை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் . கோவை வரதராஜபுரம் ஆர்.வி.எல். நகரில் காயத்ரி மாலாவுக்கு சொந்த வீடு உள்ளது. காயத்ரி மாலாவுக்கும், அவரது 2-வது கணவர் தமிழ்ச்செல்வனுக்கும் பிறந்த 4 வயது மகள் லட்சுமி பிரபா கோவையில் பெற்றோர் வீட்டில் இருப்பதால் வாரம் ஒரு முறை காயத்ரி மாலா கோவைக்கு சென்று தனது மகளை பார்த்து வருவது வழக்கம். தனது மகளை பார்க்கப்போவதாக தனது கணவனிடம் போய் சொல்லி விட்டு, கள்ளக்காதலனை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, தாங்கள் சந்திக்கும் இடத்திற்கு வரச் சொல்லிவுள்ளார். கள்ளக் காதலன் யாரென்றால்,அவன் ஒரு தண்டனைக்கைதி(ஆயுள் தன்டனை)இந்த தொடர்பு ,முன்னதாக கோவையில் பணியாற்றியபோது ஏற்ப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவனும் திருமணம் ஆனவன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவன் எப்படி வெளியில் வந்தான் என்றால் நன்னடத்தையின் காரணமாக "பரோலில்"வெளியில் வந்து, தனது மனைவியையும், பிள்ளையையும் அடிக்கடி பார்த்து செல்வது வழக்கம். அந்த சந்தர்ப்பத்தை அந்த பெண் காவல் அதிகாரி தனது கள்ளக்காதலை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்திக்கொண்டார். இந்நிலையில் தொலைபேசியில் பேசி வரவழைத்து ஜாலியாக இருந்துவுள்ளார்.பிறகு ரொக்க பணம் ரூ :5000 /- கேட்டுள்ளான்.வாரம் ஒரு முறை நீ என்னை சந்தித்து (கள்ள உறவால்) மகிழ்விக்க வேண்டும் என்று நிர்பந்திதுள்ளார். அதற்கு அவன் எனது மனைவி கர்பமாக உள்ளார் எனவே வாரம் ஒரு முறை வரமுடியாது.என்று கூற, பரோலில் வெளிவந்த நீ இதுவரை சிறைக்குத் திரும்பவில்லை நான் நினைத்தால் உன்னை போலீசில் மாட்டி விட்டு மீண்டும் சிறையில் அடைத்து விடுவேன். ஒழுங்காக நான் சொல்வதை கேள் என்று மிரட்டியுள்ளார். பயந்து போன அவன் அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு அந்த பெண்ணை கொன்றுவிட்டான்.
முதல் சம்பவத்தில்,

  • தந்தையை இழந்து பிள்ளைகள் அநாதை ஆனது.

  • அந்த குடும்பம் சமூதாயத்தில் மதிப்பும்,மரியாதையும்,இழந்தது.

  • பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

  • அந்த பெண்ணின் வாழ்க்கையும் வீணானது.
இரண்டாவது சம்பவத்தில்,
  • காவல் துறை அதிகாரியின்,மதிப்பும்,மரியாதையும் பறிபோனது.

  • அவரது பிள்ளைகள் தாய் அரவணைப்பு இல்லாமல் அநாதை ஆனது.

  • அந்த பிள்ளைகளின் எதிர்காலமும்,கேள்விக்குறிதான்? ஏனெனில் மாற்று தாய் நிச்சயம் பெற்ற தாய் போல் நடந்துக்கொள்ள மாட்டாள்.
“கள்ள உறவு” விளைவிக்கும் என்றும் காயாத இப்படிப்பட்ட சமூக காயங்களுக்கு தீர்வுகளை வழங்கி விட்டு இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை எதிர்ப்பவர் எதிர்க்கட்டும்.

இது இப்படி இருக்க,
""தமிழக மேற்கு மண்டலத்தில் கடந்த எட்டு மாதங்களில் 224 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், பெரும்பாலான கொலை சம்பவங்கள், சொத்து தகராறு மற்றும் கள்ளக்காதல் உள்ளிட்ட பாலியல் தொடர்பு காரணமாக நிகழ்ந்துள்ளன,''என்று, ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்த, செய்தி செப்டம்பர் 09, அன்று தினமலரில் வெளியாகிவுள்ளது.

“கள்ளக் உறவும்” அதனால் பறிபோகும் உயிர்களும் எந்த அளவிற்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை காவல் துறை (ஆவணங்கள்)மூலம் நாம் அறிந்துக் கொள்ளமுடிகிறது.அதனைத் தொடர்ந்து ஏற்ப்படும் மோசமான, பாரதூரமான விளைவுகளும், காணமுடிகிறது.

இத்தகைய சமூக கேடுகளை தவிர்க்க இஸ்லாம் அழகான வழிமுறைகளை வகுத்துள்ளது;

தனி மனிதன் பேணவேண்டிய சட்டம் :

  • ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும், தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்.
  • கணவன்- மனைவி மற்றும் மகரமான உறவினர்கள் அன்றி, ஆணும்- பெண்ணும் தனித்து இருக்கக் கூடாது.
  • அந்நிய ஆணிடம் பேசும் சூழ்நிலை ஏற்படுமேயானால் குழைந்தும், வழிந்தும் பேசக்கூடாது.
  • ஆடைகள் உடல் தெரியும் விதத்தில் இருக்கக் கூடாது. (சுறுக்கம்)

இந்த சிறு,சிறு சட்டங்களை, ஆணும், பெண்ணும் மீறும் பொழுது தான் பெருங்குற்றமான விபச்சாரம் நிகழ்ந்து விடுகிறது. இதை மீறாமல் இருப்பதற்கு உளவியல் ரீதியாக இறையச்சத்தை உண்டாக்கி தவறுகளை தடுக்கிறது இஸ்லாம்.

சமூதாயத்தில்அதிகாரம் படைத்தவர்கள் பேணவேண்டிய சட்டம் :

இந்த சிறு,சிறு சட்டங்களையும் மீறியும் விபச்சாரம் புரிந்து விடுவார்களேயானால் அவர்களை கண்டுபிடித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சமூதாயத்தில் அதிகாரம் படைத்தவர்கள் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று அற்புதமான சட்டத்தை கொடுத்து, இந்த மாபெருங் குற்றத்தை இரு நிலைகளில் தடுக்கிறது இஸ்லாம். எனவே தான் அரபு நாடுகளில் இப்படிப்பட்ட குற்றங்கள் குறைவு. அதை ஒட்டியே ஈரானும் தீர்ப்பளித்திருக்கிறது

பாவத்தில் பங்கு இருவருக்கும் :

ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும், தவறு செய்த இருவருக்கும் தண்டிக்கச் சொல்கிறது இஸ்லாம். இதில் திருமணமாகதவர்கள் தவறு செய்வார்களேயானால், அவர்களுக்கு மட்டும், தண்டனையை தளர்த்துகிறது. அதாவது நூறு கைசையடி வழங்குமாறு கட்டளையிடுகிறது. காரணம்,திருமணமாகாத,பருவ வயதை அடைந்தவர்கள் பாலுறவு என்றால் என்ன? என்ற இனம் புரியாத மோகத்தில் ,தவறிழைத்து விடுகின்றனர். திருமணம் ஆனவர்களோ, பாலுறவு குறித்து அறிந்து அனுபவித்து விட்டு, பிறகு தவறிழைப்பதால் அவர்களுக்கு தண்டனையை கடுமையாக்குகிறது. அதாவது கல்லால் இரிந்து கொல்லச்சொல்கிறது.

பாமரர்களை விடுங்கள், தவறுகளை தடுக்க வேண்டிய காக்கி உடையே கள்ள உறவுக்கு பலியாவது எதை காட்டுகிறது என்றால்? இந்த விசயத்தில் யாராக இருந்தாலும் தப்புவது கடினமே! என்பதைத் தான். எனவே தான் இப்படிப்பட்ட கடினமான ஒன்றை தடுக்க கடுமையான சட்டம் தேவை. இந்த சட்டம் நமது நாட்டில் இல்லாததால் தான் இந்த தவறு தாறுமாறாக பரவிவருகிறது. இப்படிப்பட்ட பெருங்குற்றங்களை தடுக்கத்தான் இஸ்லாம், இத்தகைய சட்டங்களை வழங்குகிறது.

இறைவேதம் கூறுவதை மெய்ப்பிக்கும் பழமையான வேதங்கள் :


இந்தியாவின் பழமையான வேதங்கள் என்று சொல்லக்கூடிய ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள், ஆணின் மத்தியில் ஒரு பெண் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று உலக வேதம் திரு குரான் கூறுகிறதோ அதைஅப்படியே மெய்ப்பிக்கிறது. இதில் ரிக் வேத வரிகளில்ஒன்றை மட்டும் மட்டும் இங்கே தருகிறோம்.

(பெண்ணே) பார்வையை தாழ்த்திக்கொள்!தனது பாதங்களை இறுக்கிக் கொள்.!
(ரிக் வேதம்)

இந்த வேதவரியில் பார்வையை தாழ்த்திக்கொள் என்பது எல்லோர்க்கும் தெரியும். ஆனால் பாதங்களை இறுக்கிக்கொள் என்றால் என்ன அர்த்தம்? விபச்சாரத்தின் வாசலை அடைத்துக்கொள் என்பதுதான். இன்னும் விபச்சாரத்திற்கு எதிரான பல வசனங்கள் இந்து மத வேதங்களில் உள்ளன.

இப்படி அவர்களின் வேதங்களே அவர்களுக்கு எதிராக சாட்சி அறியாதாதால்தான் இந்த கூப்பாடுகள். எனவே இஸ்லாமிய சட்டத்திலும் எவ்வித குறையுமில்லை. அதை நிறைவேற்ற முனைந்த ஈரானின் செயலிலும் எவ்வித குற்றமுமில்லை.

ஆக்கம்; முபாரக், துணைச்செயலாளர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத். குவைத் மண்டலம்.

தேங்க்ஸ் டு : http://mugavai-abbas.blogspot.com/2010/09/blog-post_17.ஹ்த்ம்ல்


திங்கள், 29 ஜூன், 2009

ஓரினசேர்க்கை;ஓலமிடும் நரிகளும், ஒத்து ஊதும் அரசும்!

மேற்க்கத்திய நாட்டின் புதிய வரவான பன்றி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் எகிறி, நம்மை 'பல்ஸ்' பார்த்துக்கொண்டிருக்க அதே மேற்க்கத்திய நாட்டின் மற்றொரு பயங்கரமான நோயை வரவேற்க சிவப்பு கம்பளமும் இந்தியாவில் விரிக்கப்பட்டுள்ளது. ஆம்! கற்பையும்-கலாச்சாரத்தையும் உயிரென மதிக்கும் தமிழகத்தில் நேற்று, கலாச்சாரம் கிலோ என்னவிலை? என கேட்கும் ஓரின சேர்க்கையாளர்கள், அரவாணிகள் அடங்கிய கூட்டம் மாபெரும் பேரணியை தமிழக தலைநகர் சென்னையில் நடத்தியுள்ளது. இந்த பேரணியில் ஆபாச/கவர்ச்சி உடையில் கலக்கியவர்கள் வைத்த கோரிக்கை என்னதெரியுமா? ஓரின சேர்க்கை குற்றம் என்று கூறும் சட்டப்பிரிவை நீக்கவேண்டும் என்பதே!

கலாச்சார சீரழிவை விதைக்கும் இந்த பேரணிக்கு அரசு அனுமதியளித்தது பெரும் வியப்பாக உள்ளது . இன்று ஓரின சேர்க்கையை அனுமதிக்கவேண்டும் என்று கூறும் கும்பலுக்கு அனுமதியளித்தால் நாளை விபச்சாரத்தை தடை செய்யும் சட்டத்தை நீக்கவேண்டும் என்று ஒரு கும்பலும், மது- சூதாட்டம் உள்ளிட்ட வேறுபல தீமைகளை தடை செய்யும் சட்டத்தை நீக்கவேண்டும் என்று வேறு சில கும்பலும் பேரணி நடத்த முன்வந்தால், அதை அனுமத்தித்தால் நாடு என்னவாகும் என்பதை சிந்திக்க மறந்துவிட்டது தமிழக அரசு.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், இது போன்ற கலாச்சார சீரழிவை உண்டாக்குபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று அறிவிக்கவேண்டிய மத்திய நடுவன் அரசின் அமைச்சர் வீரப்பமொய்லி, ஓரின சேர்க்கைக்கு தடையை நீக்குவது பற்றி மதத்தலைவர்கள் உட்பட அனைவரின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் முடிவு எடுக்கப்படும் என்கிறார். விரைவில் ஓரின சேர்க்கையை அனுமதிப்போம் என்பதை வேறு வார்த்தையில் அமைச்சர் சொல்வதாகவே அறிவுடையவர்கள் விளங்கிக்கொள்வர்.

மேலும், இறைவனின் படைப்பில் மனிதர்களில் சிலர் அரவாணிகளாக பிறப்பதுண்டு. அந்த அரவாணிகளை ஆண்களாக கருத வேண்டுமா? அல்லது பெண்களாக கருதவேண்டுமா என்ற கேள்விக்கும் இஸ்லாம் விடையளிக்கிறது. உடல் கூற்றில் பெரும்பாலும் பெண்களுக்கு ஒப்பாக இருந்தாலும் அவர்கள் ஆண்களாகவே கருதப்பட வேண்டும் என்பதுதான் இஸ்லாம் கூறும் தீர்ப்பாகும்.


(நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) 'அலி' ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த 'அலி', (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம், 'அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று கூறினார்கள்.[புஹாரி 4324 ]


பெண்கள் இருக்கும் இடங்களில் இந்த அரவாணிகள் வரக்கூடாது என்று நபி[ஸல்]தடுப்பதில் இருந்து அரவாணிகளை ஆண்களாகவே கருதவேண்டும் என்பதை விளங்கிக்கொள்ளலாம். ஆனால், இன்று அரவாணிகள் தங்களை முழுக்க-முழுக்க பெண்களாகவே அடையாளப்படுத்தவே விரும்புகின்றனர். பெண்கள் போன்றே நடை-உடை-பாவனைகளை மாற்றிக்கொண்டு, அதன் மூலம் பெரும்பாலான அரவாணிகள் பாலியல் ரீதியாய தொழிலில் தங்களை ஐக்கியப்படுத்தி அதன் மூலம் சமூகத்தின் கலாச்சார சீரழிவிற்கு வழிவகுப்பதை யாரும் மறுக்கமுடியாது.


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்துu கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், 'அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்!' என்றும் சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் இன்னாரை வெறியேற்றினார்கள்; உமர்(ரலி) அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள்.[புஹாரி 6834 ]


தமிழக அரசு அரவாணிகளை மூன்றாவது பாலினமாக அறிவித்து அவர்களுக்கென தனியாக நலவாரியமும் அமைத்துள்ளது. இந்த நல வாரியம் மூலம் அரவாணிகளை பாலியல் ரீதியான தொழில் செய்வதில் இருந்து மீட்டெடுத்து கவுரவமான தொழில் செய்து பிழைப்பவர்களாக மாற்ற அரசு முன்வரவேண்டும் . மேலும் அரவாணிகளுக்கு பெண்களாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்வதை தடை செய்யவேன்டும். விரும்பினால் ஆண்களாக மாற்றும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கலாம்.

அடுத்து, ஓரின சேர்க்கையாளர்களை எடுத்துக்கொண்டால், இவர்கள் வருங்கால சந்ததியை அஸ்தமிக்க செய்பவர்கள். ஆணுக்கு பெண்ணின் தேட்டத்தையும்- பெண்ணுக்கு ஆணின் தேட்டத்தையும் ஏற்படுத்தி அவ்விருவர் திருமணம் என்ற உறவு மூலம் இணைந்து இல்லற வாழ்வின் மூலம் சந்ததிகளை பெற்றெடுத்து அதன் மூலம் மனித சமூகத்தை இறைவன் தழைத்தோங்க வகை செய்திருக்கும் நிலையில், ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் இணைவதால் ஏற்படும் விளைவு என்ன? இந்த ஓரின சேர்க்கையாளர்கள் செய்யும் விபச்சாரத்தால் பல்வேறு நோய்கள் பரவுவதோடு, இந்த ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் என்ற கேலிக்கூத்தில் ஈடுபட்டு அதன் மூலம் சந்ததி அற்ற மனித குலத்திற்கு வழிவகை செய்கிறார்கள். ஓரின சேர்க்கையாளர்களில் திருமணம் செய்வதற்காக இருவரில் ஒருவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும், பின்பு அவ்விருவருக்கிடையில் பிணக்கு ஏற்படும்போது, தம்பதிகள் சம்மந்தப்பட்ட விவாகரத்து- ஜீவனாம்சம் உள்ளிட்ட எந்த சட்டமும் பயனளிக்காமல் இருவரும் அல்லது இருவரில் ஒருவர் பாதிக்கப்பட்டுவதை பார்க்கிறோம்.

எனவே, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக அரசு இருக்காமல் விபச்சாரம் - ஓரின சேர்க்கை ஆகியவற்றை இரும்புக்கரம் கொண்டு தடுக்க முன்வரவேண்டும். நாகரீகம், சம உரிமை என்ற பெயரில் அரசு இதை கண்டு கொள்ளாமல் இருக்குமானானால் இந்தியாவின் தனித்துவ அடையாளமான கலாச்சாரம் அடிபட்டு, பண்பாடற்ற வருங்கால சமுதாயம் உருவாக வழி வகுத்துவிடும்.ஆட்சியாளர்கள் சிந்திப்பார்களா?