கருணாநிதி அரசின் முஸ்லிம் விரோத போக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருணாநிதி அரசின் முஸ்லிம் விரோத போக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 மார்ச், 2011

தி.மு.க.,வை முஸ்லிம்கள் ஆதரிப்பது ஒரு மாயை-தமுமுக தலைவர் தினமலர் பேட்டி

மற்ற முஸ்லிம் கட்சிகள் தி.மு.க.,வை ஆதரிக்கும் போது நீங்கள் மட்டும் இதில் மாறுபட்டது ஏன்?

இது தவறான கருத்து. மக்கள் ஆதரவு உள்ள பல முஸ்லிம் அமைப்புகள், ஜமாத்துக்கள், அ.தி.மு.க.,வை தான் ஆதரிக்கின்றன. சிறுபான்மை அணியை சேர்ந்த சில, "லெட்டர் பேடு' அமைப்புக்களை அறிவாலயத்திற்கு அழைத்து, துணை முதல்வருக்கு மாலை, சால்வை அணிவித்து, போட்டோ எடுத்துக் கொண்டு, முஸ்லிம்கள் தி.மு.க.,வை ஆதரிப்பதாக ஒரு மாயையை உருவாக்கியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தினரின் கோரிக்கையை தி.மு.க., நிறைவேற்றியதில்லை. தி.மு.க., அரசில் முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கூடுதல் "சீட்'டுக்காக தான் நீங்கள் அ.தி.மு.க., அணிக்கு வந்ததாக கூறுகிறார்களே?


அப்படி இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., எங்களுக்கு ஒரு "சீட்' தர முன்வந்தது. ஆனால், உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட சொன்னார்கள். நாங்கள், சொந்த சின்னத்தில் நிற்க விரும்பினோம். மேலும், நாங்கள் கேட்ட தொகுதியும் கிடைக்கவில்லை. இதனால் தான் தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகினோம்.


அ.தி.மு.க., கூட்டணியில் உங்கள் கோரிக்கை நிறைவேறியதா?


முஸ்லிம்களின் அரசியல் தனித்தன்மையை அ.தி.மு.க., எப்போதும் பறித்தது கிடையாது. 2001ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட அப்துல் லத்தீப், பஸ் சின்னத்திலும், கடந்த தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட தாவூத் மியாகான், வாழைப்பழம் சின்னத்திலும் போட்டியிட அ.தி.மு.க., ஒப்புக்கொண்டது. தற்போதும், எங்களுக்கு ஒதுக்கியுள்ள மூன்று தொகுதிகளிலும் சொந்த சின்னத்தில் போட்டியிடவும் ஒப்புக்கொண்டுள்ளது.

தி.மு.க., குறித்து உங்கள் நிலைப்பாடு தான் என்ன?

தி.மு.க., ஓர் இமாலய ஊழல் கட்சி. அங்கு மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அதிகார துஷ்பிரயோகம் உள்ளது. இஸ்லாமியர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. தற்போது கூட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கினர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ள அவர்கள் மூவருமே, தி.மு.க., உறுப்பினர்களாக தான் இருப்பர். இந்நிலையில், காங்கிரசுக்காக, முஸ்லிம் லீக்கில் இருந்து ஒரு தொகுதியைப் பிடுங்கிக் கொடுத்து விட்டார் கருணாநிதி.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?


முஸ்லிம்களுக்கு தற்போதுள்ள 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். 3.5 சதவீதம் ஒதுக்கீட்டிலும் சில சிக்கல்கள் உள்ளன. இந்த ஒதுக்கீடு அடிப்படையிலும் உரிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் அரசு பணியில் சேர முடியவில்லை. 1991ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான மானியத்தை மீண்டும் வழங்கவும், தமிழகத்தில் துவக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களில், எங்களது உரிமையை, வேலை உத்தரவாதத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைப்போம்.

ஐந்து ஆண்டு கால தி.மு.க., அரசின் செயல்பாடுகள் குறித்து?


இவ்வளவு காலமாக குறைக்காத பெட்ரோல் விற்பனை வரியை தேர்தலுக்காக குறைந்த அளவில் குறைந்துள்ளார். விலைவாசியால் மக்கள் வெறுப்பைப் பெற்றுள்ள ஓர் ஆட்சியாகவே தி.மு.க., ஆட்சி விளங்குகிறது. இந்த அரசின் கலைஞர் காப்பீட்டு திட்டத்தால், "கார்ப்பரேட்' மருத்துவமனைகள் தான் அதிகம் பயனடைந்துள்ளன. இன்னமும் மின்வெட்டு உள்ளது.

உங்களின் பிரசார வியூகம் என்ன?

மனிதநேய மக்கள் கட்சி சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. தேர்தலில் பணத்தை முதலீடு செய்து வெற்றியை அறுவடை செய்யும் அரசியலுக்கு, ஒரு மாற்று அரசியல் வேண்டும் என்பதற்காக துவக்கப்பட்ட கட்சி இது. தி.மு.க., கூட்டணி பணத்தை கொடுத்து வெற்றி பெற நினைக்கிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தல்களில் 55 சதவீதம் மக்கள் தி.மு.க.,வுக்கு எதிராக தான் ஓட்டு போட்டனர். எதிர்க்கட்சி ஓட்டுகள் சிதறலால் தி.மு.க., வெற்றி பெற்றது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். அது நடக்கும்.முஸ்லிம்களின் அரசியல் தனித் தன்மையை அ.தி.மு.க., எப்போதும் பறித்தது கிடையாது.


நன்றி: தினமலர்

வியாழன், 10 மார்ச், 2011

தன்மானம் காக்குமா தாய்ச்சபை...?

அரசியல் களத்தில் முஸ்லிம்கள் இன்னும் எடுப்பார் கைபிள்ளைகள்தான்
என்பதை மீண்டுமொருமுறை நிருபித்துள்ளது தமிழகத்தின் தற்போதைய
சட்டப்பேரவை தேர்தல்களம்.
திமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் முஸ்லிம்களின் தாய்ச்சபை எனும்
பெருமைக்குரிய இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அக்கூட்டணியில் தனக்கு
ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளிலும் திமுக சின்னமான உதயசூரியன்
சின்னத்திலேயே போட்டியிடுமென அறிவிக்கப்பட்டது.
மீண்டும் மீண்டும் தாய்ச்சபை தனது தனித்துவத்தை இழந்துவருவதை கண்டு
அரசியல் சார்பற்ற சமுதாய சொந்தங்களுமே சோகத்திலும் கோபத்திலும்
இருந்துவரும் வேளையில் மேலும் ஒரு இனிப்பான செய்தி வெளியாகி உள்ளது.
ஆம் "அல்வா" இனிப்பாகதானே இருக்கும்...
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட தொகுதி உடன்பாடு பிணக்கை
சரிசெய்ய முஸ்லிம்லீக் தனக்கு ஒதுக்கப்பட்ட மூன்றில் ஒரு தொகுதியை தாறைவார்த்துவிட்டதாம்...
கூட்டணிதர்மம் பார்ப்பது அரசியலில் நல்ல விசயம்தான் ஆனால்
"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் மடத்து ஆண்டி" எனும் கிராமப்புற பழமொழிக்கு ஏற்ப
ஏற்கனவே மூன்று என நாமம் போடப்பட்ட முஸ்லிம்லீக்கின் தலையில்தான்
பெரியவர் கலைஞர் கைவைக்க வேண்டுமா...?
இதில் என்ன கொடுமை என்றால் முஸ்லிம்லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட மூன்றிலும்
வெற்றி பெற்றாலும் அவைகள் சட்டப்படி திமுகவின் வெற்றி தொகுதியாகவே
கணக்கிடப்படும். காரணம் முஸ்லிம்லீக் போட்டியிடுவது திமுக சின்னம்.
அப்படி இருக்கையில் ஏன் அதிலும் ஒன்றை பிடுங்கி காங்கிரசுக்கு கொடுக்க வேண்டும்.
கடந்த கால சில சம்பவங்களை பார்ப்போம். மறைந்த அப்துல் சமது சாஹிப் அவர்கள் இருந்தவரை
திமுகவிற்கும் முஸ்லிம்லீக்கிர்க்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்துவந்தது.
அந்த காலகட்டத்தில் கருத்து வேறுபாட்டால் தேசியலீக்கின் தலைமை பொறுப்பை ஏற்ற
மறைந்த அப்துல்லத்தீப் சாஹிப் அவர்கள் திமுகவுடன் இணக்கமானார். அந்த சூழலில்
நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக தேசியலீக்கிற்கு ஐந்து தொகுதிகள்
ஒதுக்கும் அதேபோல அதிமுக முஸ்லிம்லீக்கிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கும் ஏறக்குறைய
அந்த ஐந்து தொகுதிகளிலும் முஸ்லிம்லீக்கும் தேசியலீக்கும் நேரடியாகவே மோதிக்கொள்ளும்
அந்த காட்சியை திமுக தலைமையும் அதிமுக தலைமையும் கண்டு ரசிக்கும்.
இவற்றை ஏன் சுட்டிக்காட்டுகிறோம் என்றால் எவ்வளவு வரலாற்று பின்பலம்கொண்ட
கட்சி இன்றைக்கு அரசியலில் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து பார்க்கவேண்டும்.
கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்களின் கட்டமைப்பில் பல பெரிய அரசியல்கட்சிகளுக்கு
சவால்விடுக்கும் வண்ணம் தோன்றிய முஸ்லிம்லீக் ஏன் இன்று இத்தகைய பின்னடைவுக்கு
ஆளாகியது...?
எந்த ஒரு சூழ்நிலைகளிலும் முஸ்லிம்களின் அரசியல் மரியாதையை விட்டுகொடுக்காத
கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்களின் வழிதோன்றல்கள் என சொல்லிகொள்ளும்
முஸ்லிம்லீக்கர்கள் ஏன் இந்த அவல நிலைக்கு ஆளானார்கள்...? அரசியலின் சமயோசிதை
தீர்க்கமான திட்டமிடல் இவைகளை அவர்கள் இழந்தார்கள்... கண்ணியத்தையும் மரியாதையையும்
துறந்தார்கள்...
1971 தமிழக சட்டமற்ற தேர்தல்களம் கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்கள் இறுதியாக
பங்கேற்ற தேர்தல்களம். இதே திமுக கூட்டணியில் முஸ்லிம்லீக் அன்றைக்கு ஏழு தொகுதிகளை
பெற்றிருந்தது. திமுக தலைமை முஸ்லிம்லீக்கை தனது சின்னமான உதயசூரியனில் போட்டியிட
வலியுறுத்தியது. காயிதேமில்லத் திடமாக மறுத்தார். அத்தேர்தலில் புவனகிரி தொகுதி வேட்பாளராக
அறிவிக்கப்பட்டிருந்த ஜனாப்.அபுஸாலிஹ் அவர்கள் கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்களிடம்
திமுக சொல்வதை கேட்டு நாம் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடலாமே என சொன்னார்.
அதை கேட்டு சினம்கொண்டாலும் அமைதியாக கண்ணியதலைவர் சொன்னார் அப்படி திமுகவின்
சின்னத்தில் போட்டியிடுவதைவிட முஸ்லிம்லீக்கை கலைத்துவிட்டு திமுகவிலேயே இணைந்துவிடலாம்
என...
அத்தகைய கொள்கை உறுதிகொண்ட தலைவன் கண்ட மாபெரும் இயக்கம் ஏன் இன்று அரசியலில்
தல்லாடும்நிலைக்கு தள்ளப்பட்டது...?
இன்று அல்ல என்று முஸ்லிம்களின் தாய்ச்சபை தனது சொந்த அடையாளமான ஏணி சின்னத்தை
துறந்து இரவல் சின்னங்களில் போட்டியிட துவங்கியதோ அன்றே தனது தனித்துவத்தை இழந்துவிட்டது...
ஏறக்குறைய திமுகவின் சிறுபான்மை பிரிவாகவே தன்னை மாற்றிகொண்ட முஸ்லிம்லீக்கை
சாமானிய முஸ்லிம்கள் தங்களின் அரசியல் அடையாளமாகவே இன்றுவரை நினைதுவருகிறார்கள்
என்பது நிதர்சனம். அதை மெய்பிக்கும்வகையில் சில மாறுதல்கள் முஸ்லிம்லீக்கின் தலைமைத்துவத்தில்
கொண்டுவரப்பட்டபோது சமுதாயமே சந்தோசமடைந்தது. ஆனால் அந்த சந்தோசம் மீண்டும்
சள்ளடையாக்கபட்டுவிட்டது.
முஸ்லிம்லீக்கின் தலைமை நிர்வாகிகளை சமுதாயம் கேட்க நினைப்பது இதுதான்...
எது நடந்தாலும் சமுதாயமே ஓன்று திரண்டு எதிர்த்தாலும் பெரியவர் கலைஞரை விட்டுகொடுக்காமல்
பயணிதீர்களே... அதற்க்கான விலைதான் இந்த அவமானமா...? இரவல் சின்னத்தில் நின்று வென்று
சட்டசபைக்குள் சென்றாலும் திமுகவின் கண்ணசைவுக்குதானே கட்டுப்பட்டாக வேண்டும்...
இப்போதும் அதேபோல உங்களிடம் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் கடந்த
ஐந்தாண்டு காலமாக அவர்கள் சமுதாய பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் என்ன விவாதித்து
இருக்கிறார்கள்...?!!! ஒரு வேலை அவர்களோ உங்கள் தலைமையோ நினைத்தாலும்
சகோ.அப்துல் பாசித் அவர்களாலும் சகோ.கலீலுர்ரஹ்மான் அவர்களாலும் தன்னிச்சையாக
எதாவது செயல்பட முடியுமா...?
ஆக சமுதாயத்திற்கு எந்த நன்மையையுமே தராத இந்த பதவிக்களுக்காக ஏன் தன்மானத்தை இழக்க வேண்டும்.?
நேற்று வரை எந்த வகையிலுமே திமுகவிற்கு ஆதரவு அளிக்காத கொமுகவிற்க்கு
கலைஞர் ஏழு தொகுதிகளை அதுவும் சொந்த சின்னத்தில் கொடுத்துள்ளாரே... இது உங்களுக்கு
உறுத்தலாக இல்லையா...? இப்போது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான காரணத்தை சொல்லி
திமுக சின்னத்திலேயே உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மூன்றில் ஒன்றை பிடுங்கிகொண்டாரே
இது அரசியல் அவமானமில்லையா...?
சமுதாய மக்களின் நன்மதிப்பை மீண்டும் தாய்ச்சபை பெறவேண்டியே அல்லாஹ் இந்த தருணத்தை
முஸ்லிம்லீக்கிற்கு தந்துள்ளான்...
ஆம் திமுகவின் அவமானத்திற்கு பதிலடிகொடுக்க உங்களுக்கு துணிவு இருக்குமேயானால்
திமுக அவமானத்தின் அங்கீகாரமாக கொடுத்துள்ள இரண்டு தொகுதிகளையும் தூக்கி எறியுங்கள்...
சமுதாயம் உங்களுக்கான சிவப்புகம்பளத்தை தயாராகவே வைத்துள்ளது... இல்லை... இல்லை...
இதுவே நாங்கள் பெற்ற பாக்கியம் என்பீர்களானால் அதற்கும் பதிலை சமுதாயம் இந்த தேர்தல்களத்தில்
உங்களுக்கு சொல்லும்...!!!

நன்றி : வேங்கை.சு.செ.இப்ராஹீம்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

கருணாநிதி அரசின் முஸ்லிம் விரோத போக்கு!!!

சென்னை,பிப்.23: கோவை வெடிக்குண்டு நாடக நாயகன் ரத்தின சபாபதிக்கு அரசு பதவி, உயர்வு அளித்தது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி பின்வருமாறு: 'கடந்த 22.06.2007அன்று கோவையை தகர்க்க சதி என தமிழகத்தையே பீதிக்குள்ளாக்கியவர் ரத்தின சபாபதி. இவர் அப்போதைய உளவுத்துறை உதவி ஆணையாளராக பதவி வகித்தவர். சில பொருள்களை கைப்பற்றியதாகக் கூறி சில முஸ்லிம் இளைஞர்களையும் கைதுச் செய்து அவர்கள் மனித நீதிப் பாசறையைச் சார்ந்தவர்கள் என்று அறிக்கையும் விடுத்தார்.

இவ்வழக்கில் உள்ள போலித் தன்மையை உணர்ந்துக் கொண்ட பொதுமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோரிடையே எழுந்த நீதிக்கான குரல்கள் எழுந்தன. இதன் விளைவாக அரசு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஆர்.பாலன் அவர்களுடைய தலைமையில் சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்த உத்தரவிட்டது.

சுமார் ஒருவருடமாக இவ்வழக்கை விசாரித்த எஸ்.ஐ.டி கடந்த 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், "இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட வெடிக்குண்டுகள் காவல் துறையினராலேயே பொய்யாக புனையப்பட்டு இவ்வழக்கில் சேர்க்கப்பட்டவை. மேலும் இவ்வழக்கின் ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு புனையப்பட்டுள்ளன. எனவே இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கூறி இவ்வழக்கை முடிக்கின்றோம்" என எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் அரசு ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக அவருக்கு கோவை மாநகரிலேயே காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இத்தகைய அரசின் கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும், ரத்தினசபாபதி மீது வழக்குப்பதிவுச் செய்து தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், பொய்வழக்கு புனையப்பட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், பிரச்சாரங்கள், கையெழுத்து இயக்கங்களின் வாயிலாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்தின சபாபதி மீது வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலும், ரத்தின சபாபதிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி அளிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கை தெளிவாக உணர்த்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரையிலும், அரசின் இந்த கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து மக்களை திரட்டி போராடும்.' என அவர் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்; இது போல்தான் கோவை கலவரத்திற்கு காரணமாக அமைத்த போலீஸ் கயவர்களுக்கு பதவி உயர்வு அளித்து மகிழ்ந்தார் இந்த கருணாநிதி. கோவையில் ட்ராபிக் போலீஸ்காரர் விசமிகளால் கொல்லபட்டார். இதில் சம்மந்த பட்டவர்கள் மேல் வழக்கு தொடுக்காமல் போலீஸ் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளோடு கூட்டு சேர்ந்து திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது கலவரத்தை நடத்தி 19 முஸ்லிம்கள் கொல்லபட்டார்கள். இதற்க்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு கருணாநிதி பதக்கம் அணிவித்து பதவி உயர்வு கொடுத்தார். இந்த கருணாநிதி எம்.ஜி.ஆர். இடம் தொடர்ந்து 14 வருடங்கள் தோற்று வனவாசம் இருந்த பொது முஸ்லிம் ஒட்டு வங்கி இல்லை என்றால் இவரது கட்சியே இருந்திருக்காது. இந்த காலகட்டத்தில் முஸ்லிம்களின் 99 சதவிதம் ஓட்டை பெற்றே இவர் தமிழகத்தில் கட்சி நடத்தினார். அப்போது முழுக்க திராவிட சிந்தனை உள்ளவர் போல் காட்டி கொண்டு முஸ்லிம்கள் வாக்குகளை பெற்றார். என்று ஆட்சிக்கு வந்தாரோ அதோடு தோளில் மஞ்சள் துண்டு ஏறிவிட்டது. அதில் இருந்து இதுவரை நோன்பு கஞ்சி குடித்து தொப்பி போட்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருகிறார்.

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.