இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
வியாழன், 19 ஜூன், 2014
தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு - எம்.பி. கவிதா
தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு - எம்.பி. கவிதா
முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு கொடுத்தே தீருவோம்:தெலுங்கானா எம்.பி. உறுதி!
நீதிமன்றம் குறுக்கே நிற்க விடமாட்டோம் எனவும் சூளுரை !!
ஒன்றுபட்ட ஆந்திராவில், முஸ்லிம்களுக்கு 5% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டபோது, நீதிமன்றம் தடை விதித்தது போன்ற நிலையை தெலுங்கானாவில் அரங்கேற விடமாட்டோம் என்கிறார், TRS எம்.பி, கவிதா.
இதற்கு முன்னர், முஸ்லிம் இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்த நீதிமன்றம், பின்னர் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50% அளவுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதியை காரணம் காட்டி, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 4 சதவிகிதமாக குறைத்தது.
தெலுங்கானா மாநிலத்தில் இதுபோன்ற அபத்தங்களை அரங்கேற விடமாட்டோம் என உறுதிப்படக் கூறியுள்ளார், தெலுங்கானாவின் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.பி.யுமான கவிதா.
நிசாமாபாத் பாராளுமன்ற உறுப்பினரான கல்வகுந்தலா கவிதா (K. கவிதா) எம்பி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது:
முஸ்லிம் செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு:
ஆந்திராவில் 5% இட ஒதுக்கீட்டை வழங்கியபோதே நாங்கள் படாத பாடு பட்டோமே, நீங்கள் 12% இட ஒதுக்கீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளீர்களே எனக் கேள்வி எழுப்பினார்.
காங்கிரசோடு எங்களை ஒப்பிடாதீர்கள், காங்கிரஸ் அரசில், பெயரளவில் அமைச்சராக்கப்படும் முஸ்லிம்களுக்கு, சிறுபான்மை நலத்துறை, வக்ப் வாரியம் உள்ளிட்ட முக்கியத்துவம் இல்லாத துறைகள் தான் வழங்கப்பட்டு வந்தது.
நாங்களோ, முஸ்லிமுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்துள்ளதோடு, வருவாய்த்துறை போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளையும் அவரிடம் கொடுத்துள்ளோம்.
11 அமைச்சர்களைக் கொண்ட தெலுங்கானா அமைச்சரவையில், மேலும் ஒரு முஸ்லிமுக்கு வாய்ப்பளிக்கும் திட்டமும் உள்ளது என்றார், கவிதா.
50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லும் உச்சநீதிமனறம், தமிழகத்தில் உள்ள 69%, கர்நாடகத்தில் அமலில் உள்ள அதிகப்படியான சதவிகித இட ஒதுக்கீட்டை குறித்து வாய் திறக்காதது ஏன் எனக்கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம் இட ஒதுக்கீடு விஷயத்தில் தெலுங்கானா முதலமைச்சர் "KCR" (K Chandrashekhar Rao), மிகவும் தெளிவான பார்வையோடும் தீர்க்கமான முடிவோடும் இருக்கிறார், என்றார், அவர்.
தற்போது அமலில் உள்ள (OBC 25%, SC 15%, ST 6% MUSLIM 4% = Total 50%) என்பதை மாற்றியமைத்து,
முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக, தெலுங்கானாவில், இட ஒதுக்கீட்டின் அளவை 64% அளவுக்கு உயர்த்தி சட்டம் இயற்றப்படும் என்றார் கவிதா எம்.பி.
நன்றி: https://www.facebook.com/maruppu.in
தாமதமான நீதிக்கு என்ன பெயர்?
செய்யாத குற்றத்துக்காகச் சிறையில் வாடும் முஸ்லிம்கள்… அவர்கள் மீது சுமத்தப்படும் பழிகள்...
“இந்த வழக்கு, தேசத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பானது. வழக்கின்
தன்மை துயரம்மிக்கது. இத்தகைய வழக்கை இவ்வளவு திறமையற்ற முறையில் புலனாய்வு
அமைப்புகள் நடத்தியிருப்பது வேதனையளிக்கிறது. பல உயிர்களைக் கொன்றுகுவித்த
உண்மையான குற்றவாளிகளுக்குப் பதிலாக, காவல் துறை அப்பாவிகளைக் கைதுசெய்து
கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, தண்டனை வழங்கக் காரணமாக
இருந்துள்ளது...
எனவே, மேல்முறையீட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக் கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம்.”
16-வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளி வந்த மே 16 அன்றுதான்
இத்தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக் மற்றும் இ.கோபால்
கெளடா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது. 33 பேர் கொல் லப்பட்ட பயங்கரவாதத்
தாக்குதல்பற்றிய தீர்ப்பு அது.
அக்ஷர்தாம் கோயில் தாக்குதல்
குஜராத் தலைநகர் காந்திநகரில் அக்ஷர்தாம் கோயில் மீது 24-9-2002 அன்று
தாக்குதல் நடத்தத் தொடங்கிய பயங்கரவாதிகள், அடுத்த நாள் காலை வரை
தாக்குதலைத் தொடர்ந்தனர். இதில் 33 பேர் கொல்லப்பட்டனர். 86 பேர்
காயமடைந்தனர். இந்தக் கொலைக்கும் தாக்குதலுக்கும் காரணமான பயங்கரவாதிகள்
இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளுக்கு உதவியவர்கள், அவர்களோடு சேர்ந்து சதி செய்தவர்கள் என்று
ஆறு பேர் மீது பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த
நீதிமன்றம் 1.7.2006 அன்று தீர்ப்பு வழங்கியது. ஆதம்பாய் அஜ்மீரி, அப்துல்
கயூம் முஃப்தீசாப் முகமது பாய், சந்த்கான் ஆகியோருக்கு மரண தண்டனையும்,
முகமது சமிம் ஹனீப் சேக்குக்கு ஆயுள் தண்டனையும், அப்துல்லாமியா
யாசீன்மியாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அல்ட்டாஃப்
மாலீக்குக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இத்தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் ஜூலை 2010-ல் உறுதிசெய்தது. இதன்
மீதான மேல்முறையீட்டின் மீதுதான் தண்டனைகளையும் குற்றச்சாட்டுகளையும் உச்ச
நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. குற்றம் நிரூபணமாகவில்லை என்று
நீதிமன்றம் சொல்லவில்லை. மாறாக, இவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று
விடுவித்தும், குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளது.
குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்து தண்டனைகளை ரத்துசெய்ததற்கான பல
காரணங்களை உச்ச நீதிமன்றம் தனது 281 பக்கத் தீர்ப்பில் கூறியுள்ளது. அதில்,
ஒரு அம்சத்தை மட்டும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
மரண தண்டனை விதித்ததற்குக் காரணமாக இருந்த வற்றில் முக்கியமானவை என்று பொடா
நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டவை,
பயங்கரவாதிகளுக்கு ‘சதிகாரர்களால்' உருது மொழியில் எழுதப்பட்டதாகச்
சொல்லப்பட்ட இரண்டு கடிதங்கள்.
இரண்டு பயங்கரவாதிகளும் குண்டுகளால் துளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.
ஒருவர் உடலில் 46 குண்டுகளும், மற்றொருவர் உடலில் 60 குண்டுகளும்
துளைத்திருந்தன. அவர்களின் ஆடைகள் முழுவதும் ரத்தமும் சேறுமாக இருந்தது.
அப்படி இருந்தபோது அவர்கள் சட்டையில் இருந்த கடிதங்கள் மட்டும் புத்தம்
புதிதாக மடிப்புக் கலையாமல் இருந்திருக்கின்றன. இதிலிருந்தே அவை,
குற்றம்சாட்டப்பட்டவர்களை வழக்கில் சிக்க வைப்பதற்காகப் பின்னர்
சேர்க்கப்பட்டவை என்பது எளிதில் விளங்கும்.
நீதி பிழைத்தது
உச்ச நீதிமன்றம் தீவிர கவனம் செலுத்தாமல் இருந்திருந்தால், நிச்சயமாக
மூன்று பேரும் தூக்கிலிடப் பட்டிருப்பார்கள். அவர்களது குடும்பத்தினர்களும்
உறவினர்களும் வழிவழியாக ஒதுக்கப்பட்டும், சபிக்கப்பட்டும் வாழ
நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்கள். எத்தனை கொடூரமான நிகழ்வு இது. ஆனால்,
பெரும்பாலான பத்திரிகைகள் இதுகுறித்து ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. இந்த
உண்மை யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.
இப்படி நடப்பது முதல்முறையும் அல்ல. இதுவே, கடைசி முறையாகவும் இருக்கப்போவதில்லை.
8-9-2006-ல் மகாராஷ்டிரத்தின் மலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 37 பேர்
கொல்லப்பட்டார்கள். 125 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த
மகாராஷ்டிரத்தின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு மற்றும் சி.பி.ஐ-யால்
முஸ்லிம் இளைஞர்கள் 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
2013 வரை ஏழு ஆண்டுகள் அவர்கள் அனைவரும் சிறையில்தான் இருந்தனர். சி.பி.ஐ.
விசாரித்து, இந்த ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்று வழக்கைக் கொண்டுசென்ற
பின்னர், எதிர்பாராதவிதமாக இந்தக் குற்றத்தைச் செய்ததாக அசீமானந்தா
ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார். இதன் பின்னர்தான் அந்த ஒன்பது முஸ்லிம்
இளைஞர்களும் வெளியே வந்தனர். இல்லையேல், அவர்களில் சிலருக்குத் தூக்குத்
தண்டனை கிடைத்திருக்கக் கூடும். அவர்களது குடும்பத் தினருக்குப்
பழிச்சொற்கள் பட்டமாகக் கிடைத்திருக்கும்.
மிகப் பெரிய அவமானம்
இன்னொரு முக்கியமான வழக்கு, ஐதராபாத்தில் மெக்கா மசூதியில் நடத்தப்பட்ட
குண்டுவெடிப்பு தொடர் பானது. இந்த வழக்கிலும் பின்னர் குற்றம்சாட்டப்பட்டு
ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் அசீமானந்தா. அதற்கு முன்னதாக 70 முஸ்லிம்
இளைஞர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும்
ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 2013-ல்தான் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த மூன்று வழக்குகளும் ஒன்றை வெளிப்படுத்து கின்றன. முதலாவது வழக்கு,
குஜராத்தில் நடந்தது. அங்கு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. மலேகான்
வழக்கும் மெக்கா மசூதி வழக்கும் காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் நடைபெற்றன.
இந்த வழக்குகளை விசாரித்ததில் மாநிலத்தில் உள்ள புலனாய்வுக் குழுக்கள்
மட்டுமின்றி மத்திய புலனாய்வுக் குழுவும் ஈடுபட்டுள்ளது. ஆயினும் அந்தக்
குற்றங்களில் தொடர்பே இல்லாத 70 பேர், ஆறு ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் வரை
சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆளும் அரசு என்பதையும் தாண்டி, சிறுபான்மை
வெறுப்பு அரசு நிறுவனங்களுக்குள்ளும் புகுந்திருப்பது ஆபத்தான அறிகுறி.
இவர்களில் பெரும்பாலானவர்களின் வயது 25-க்கும் குறைவு. இளமைக் காலத்தின்
பொன்னான காலத்தைக் குற்றமேதும் செய்யாமலேயே சிறையில் கழித்துள்ளனர். வெளியே
வரும்போது குடும்பமும் சமூகமும் இவர் களைச் சந்தேகத்துடனேயே பார்க்கும்.
ஒருவேளை இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அவர்களின் சந்ததியும்
‘பயங்கரவாதிகளின் சந்ததி' என்று சமூகத்திலிருந்து
விலக்கிவைக்கப்பட்டிருக்கும்.
இந்தியாவில் நீதி வழங்கும் முறைக்கும், ஜனநாயகத்துக்கும் இது மிகப் பெரிய
அவமானம். ஆபத்தானதும்கூட. இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த
ஆபத்து, நாளை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை அனைத்துத்
தரப்பினரும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
க. கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் - சி.பி.ஐ.(எம்)- தொடர்புக்கு: kanagaraj@tncpim.org
நன்றி :
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/article6124157.ece?homepage=true&theme=true
புதன், 18 ஜூன், 2014
செவ்வாய், 17 ஜூன், 2014
ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள் 17.06.1911.
இன்று !
ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள் 17.06.1911.
வரலாற்றை அறியாத கூட்டம் வரலாறு படைக்க முடியாது - இதை படித்து விட்டு விரும்பினால் ஷேர் செய்யுங்கள்
''குற்றால அருவியில் குறிப்பிட்ட ஒரு குலத்தவரே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.''என்பது நம்மில் எத்தணை பேருக்கு தெரியும்?
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை சனாதன வெறியன் வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்டார்,
தகவல் உதவி - பரிமள ராசன்
ஆஷ் துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார். நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் கேட்கிறது. ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் சொல்லுகிறார். ஆஷ் துரை, ராவுத்தரை பார்த்து நீ போய் பார்த்து வா என்றார். சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார் " மொத பிரசவம் துரை சின்ன பொண்ணு ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம்" எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார். ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க , அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா பின்ன எப்படி வண்டு கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார் முத்தா ரவுத்தர்.
இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ் துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார். மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை. ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்குபகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். என்ன விடயம் என்வென்று சொல்லி ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார். அந்த வழியாய் வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான் சென்றாகவேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது. ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும் வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விடமறுக்கிறார்கள். வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்துவிடுவோம் என எச்சரிக்கிறார்கள். வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின் மனைவியும்தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் . இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர்.
இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார். குதிரையோட்டியின் பக்கதிலேறி அமர்ந்து கொண்டார். வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது. பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள் "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது"என்கிறார ்கள்.
வழிவிட சொல்லிப்பார்த்தார் மறுக்கவே வண்டியைக்கிளப்பு என்று
உத்தரவிடுகிறார். மீறி மறித்த பார்ப்புகளின் முதுகுத்தோல் துரை அவர்களின்
குதிரைசவுக்கால் புண்ணாக்கபடுகிறது. அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள். ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில்
ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன். அப்போது எடுத்த
சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது. சனாதான காவலனாக , மனித
உயிரைவிட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கபட்டு
வருகிறது. இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Official Notes எனும்
குறிப்புகளில் அரசு ஆவனக்காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது
தகவல் உதவி - kuttapusky
ஆஷ் துரை சுட்டு கொல்லப்பட்ட நாள் 17.06.1911.
வரலாற்றை அறியாத கூட்டம் வரலாறு படைக்க முடியாது - இதை படித்து விட்டு விரும்பினால் ஷேர் செய்யுங்கள்
''குற்றால அருவியில் குறிப்பிட்ட ஒரு குலத்தவரே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.''என்பது நம்மில் எத்தணை பேருக்கு தெரியும்?
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை சனாதன வெறியன் வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்டார்,
தகவல் உதவி - பரிமள ராசன்
ஆஷ் துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார். நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் கேட்கிறது. ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார். ஏன் என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும் சொல்லுகிறார். ஆஷ் துரை, ராவுத்தரை பார்த்து நீ போய் பார்த்து வா என்றார். சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார் " மொத பிரசவம் துரை சின்ன பொண்ணு ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம்" எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார். ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க , அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா பின்ன எப்படி வண்டு கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார் முத்தா ரவுத்தர்.
இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ் துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார். மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார். அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை. ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்குபகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். என்ன விடயம் என்வென்று சொல்லி ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார். அந்த வழியாய் வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான் சென்றாகவேண்டும். சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது. ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும் வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விடமறுக்கிறார்கள். வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்துவிடுவோம் என எச்சரிக்கிறார்கள். வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின் மனைவியும்தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் . இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர்.
இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார். குதிரையோட்டியின் பக்கதிலேறி அமர்ந்து கொண்டார். வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது. பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள் "ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது"என்கிறார
தகவல் உதவி - kuttapusky
மனியாட்சியில் சுட்டு கொல்லப்பட்ட .....!
கலெக்டர் ஆஸ் துரையின்
நினைவாக தூத்துக்குடியில் கட்டப்பட்ட
நினைவு சின்னம் Aazhi Aazhi Aazhi.
கலெக்டர் ஆஸ் துரையின்
நினைவாக தூத்துக்குடியில் கட்டப்பட்ட
நினைவு சின்னம் Aazhi Aazhi Aazhi.
இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை- இந்திய அரசு தலையிட திருமாவளவன் கோரிக்கை
சென்னை: இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில்
மத்திய அரசு தலையிட்டு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் கொழும்பு அருகே இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும்
அளுத்கமா, பேருவளை ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக சிங்கள இனத்தைச்
சேர்ந்த பவுத்தத் துறவிகள் இசுலாமியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
நடத்தியுள்ளனர்.
இசுலாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகளைத் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.
மசூதிகள் மீதும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சிங்கள, பவுத்த ஆதிக்க வெறியர்களின் இந்தத் தாக்குதலில் இதுவரை மூன்று
இசுலாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்
காயமடைந்துள்ளனர். ‘பொதுபலசேனா' என்னும் அமைப்பைச் சேர்ந்த புத்தத்
துறவிகளே இந்தக் கொடூரமான வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இசுலாமியர்களின் புனித நூலான குர்ஆனையும் தீயில் எரித்து வெறியாட்டம்
ஆடியுள்ளனர். சிங்கள, பவுத்த இனவெறிக் கும்பலின் காட்டுமிராண்டித் தனமான
இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அயல்நாட்டுச் சுற்றுப் பயணத்திலிருக்கும் இராஜபக்சே வன்முறையில் ஈடுபடுவோர்
மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதாகத்
தகவல்கள் கூறுகின்றன. இதனை பவுத்தத் துறவிகளுக்கான எச்சரிக்கையாக
புரிந்துகொள்ள இயலாது; இசுலாமியர்களுக்கு எதிரான எச்சரிக்கையாகத்தான்
புரிந்துகொள்ள முடியும்.
எனவே, இந்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு சிங்கள அரசுக்குக் கடும்
எச்சரிக்கை விடுக்க வேண்டும். இசுலாமிய மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க
தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழர்கள், இசுலாமியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மை மக்களுக்கு
எதிராகவும் சிங்கள அரசு செயல்பட்டு வருகிறது என்பதற்கு பவுத்தத் துறவிகளின்
இந்த வெறியாட்டமே ஒரு சாட்சியமாக உள்ளது. எனவே, இலங்கையில் வாழும்
தமிழர்கள், இசுலாமியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மைச்
சமூகத்தினருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு இந்திய அரசு உரிய வழிவகை காண
வேண்டும்
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















