வியாழன், 6 டிசம்பர், 2012

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும்

கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்லிக்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.
கி.பி.1528 - பாபரின் தளபதி மீர்பாகி அயோத்திக்கு வருகிறார். அங்கு முழுமை அடையாமல் கிடந்த பள்ளிவாசலை கட்டி முடித்து அதற்கு பாபரின் பெயரை சூட்டுகிறார். 1524ல் இப்ராஹிம் லோடி டெல்லியை ஆண்டபொழுது இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
கி.பி.1853 - முதல் முறையாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை ஆங்கிலேயர்களால் தூண்டிவிடப்படுகிறது
கி.பி.1855 - பாபர் பள்ளிவாசலின் ஒரு பகுதி நிலம், ராம பக்தர்கள் என கூறிக்கொண்ட ஒரு கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப்படுகிறது.
கி.பி.1857 - முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் கடைசி முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாவின் தலைமையில் நடக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கியர்களும் ஓரணியில் திரண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்கிறார்கள். நிலைகுலைந்த ஆங்கிலேயர்கள் அப்போராட்டத்தை ஒடுக்கினாலும், இனி தாங்கள் தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமெனில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையே குரோதத்தை - பிரித்தாளும் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று சதித்திட்டம் போடுகிறார்கள். அதற்கு அவர்கள் உடனடியாக எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் அயோத்தி - பாபர் பள்ளிவாசல் தொடர்பான வரலாற்றுத் திரிபுகள்.
அதேவருடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பாபர் மசூதி நிலத்தில் "ராம் சபுத்ரா' எனும் பூஜை செய்யும் திண்ணை உருவாக்கப்பட்டு பிரச்சினை தீவிரமடைகிறது.
கி.பி.1859 - ஆக்கிரமிக்கப்பட்ட இப்பகுதிக்கும், பாபர் பள்ளிவாசலுக்கும் இடையில் ஒரு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருதரப்பினரும் வழிபாடு நடத்திட ஆங்கிலேய நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. இதுதான் பிற்காலத்தில் நிகழ்ந்திட்ட துயரங்களுக்கு முன்னோட்டமாகும்.
கி.பி.1931 - அயோத்தியில் வகுப்புக் கலவரம் நடக்கிறது. அப்போது பாபர் பள்ளிவாசலின் உண்மைகளைக் கூறும் கல்வெட்டு திட்டமிட்டு பெயர்த்தெடுக்கப்படுகிறது.
கி.பி.1947 - இந்தியா விடுதலைப் பெறுகிறது.
கி.பி.1949 - மே மாதம் 22-23 தேதிகளின் நள்ளிரவில் பள்ளிவாசலின் கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு மிம்பரில் ராமர் சிலைகள் வைக்கப்படுகிறது. அதுவரை இஷா தொழுகை நடத்திவிட்டு சுப்ஹு தொழுகைக்கு மீண்டும் பள்ளிக்கு வந்த முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்கள். புகார் பதிவு செய்யப்படுகிறது.
அன்றைய பிரதமர் நேருவுக்கு தகவல் தெரிந்து உடனடியாக சிலைகளை அகற்றச் சொல்கிறார். அன்றைய உள்துறை அமைச்சரான சர்ச்சைக்குரிய வல்லபாய் படேல் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அன்றைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பிரச்சினையின் தீவிரத்தை உணரவில்லை. அயோத்தி நகரின் துணை ஆணையர் கே.கே.நய்யார், பிரதமர் நேருவின் உத்தரவை பொருட்படுத்தாமல், பள்ளிவாசலை இழுத்துப் பூட்டி அதை "சர்ச்சைக்குரிய பகுதி'' என அறிவிக்கிறார்.
கி.பி.1949 - இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள்.
கி.பி.1959 - நிர்மோகி அகோரா என்கிற துறவியர் அமைப்பு, அது எங்களுக்குச் சொந்தமான இடம் என்று வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்கிறது.
கி.பி.1961 - சன்னி வக்பு வாரியம், இது தங்களுக்குச் சொந்தமான இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது.
கி.பி.1984 - அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்து பதற்றத்தை உருவாக்குகிறது.
கி.பி.1986 - பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவை முஸ்லிம்கள் தொடங்குகின்றனர். அதே வருடம் அன்றைய காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில், பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சட்டவிரோத சிலையை பூஜை செய்ய பைசாபாத் நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
கி.பி.1989 - விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், பள்ளிவாசலுக்கு அருகில் அடிக்கல் நாட்டப்பட்டு பிரச்சினை தீவிரப்படுத்தப்படுகிறது.
கி.பி.1990 - முலாயம்சிங் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்தபோது வன்முறையாளர்கள் பள்ளிவாசலுக்கு அருகே சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டம் கலைக்கப்படுகிறது. உடனடியாக அத்வானி, குஜராத்தில் சோமநாதபுரம் ஆலயத்தி-ருந்து அயோத்தி வரை ரத யாத்திரையை நடத்தி நாடெங்கிலும் பீதியை உண்டாக்குகிறார். ஆனால் அவரது ரத யாத்திரை பீகார் மாநிலத்துக்குள் நுழைந்தபோது அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அத்வானியை துணிச்சலோடு கைது செய்கிறார். அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் இதனால் மத்தியில் ஆட்சியை இழக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 6 - நாடெங்கிலும் திரட்டப்பட்ட மதவெறி பிடித்த, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வன்முறைக் கூட்டம் பாபர் மஸ்ஜிதை இடிக்கிறது. நாடெங்கிலும் மதக்கலவரங்கள் நடந்து அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
மீண்டும் அதே இடத்தில் 100 நாட்களுக்குள் பள்ளிவாசலைக் கட்டித் தருவோம் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அறிவிக்கிறார்.
கி.பி.1992 - டிசம்பர் 16 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு யார் காரணம் என்று கண்டறிய நீதிபதி லிபர்ஹான் தலைமையில் கமிஷன் அமைக்கப்படுகிறது.
கி.பி.1993 - சுதந்திரத்திற்கு முன்பு 1947 வரை எவையெல்லாம் யாருடைய வழிபாட்டுத் தலங்களாக இருந்தனவோ அவை அப்படியே தொடரும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டது.
2002 - பிப்ரவரி மாதம் பாபர் மஸ்ஜித் நிலத்திற்கு அருகில் பெருமளவில் கூட்டம் திரட்டப்பட்டு மீண்டும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பிரச்சினை தொடங்கப்படுகிறது. மார்ச் 15 அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிலத்தில் கோயில் கட்டும் பணி தொடங்கும் என விசுவ ஹிந்து பரிஷத் அறிவிக்கிறது.
2002 - பிப்ரவரி 27 அன்று குஜராத்தில், கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து மதக்கலவரம் வெடிக்கிறது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
2002 - ஏப்ரல் மாதம் மூன்று நீதிபதிகள் கொண்ட அலஹாபாத் உயர்நீதிமன்ற குழு, பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விசாரணையைத் தொடங்கியது.
2003 - பாபர் மஸ்ஜித் இடத்தில் கோயில் இருந்ததா? என்று ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2009 - லிபர்ஹான் ஆணையம் 16 வருடங்கள் விசாரணைக்குப் பிறகு, பாபர் மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, அசோக் சிங்கால், உமாபாரதி, உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரை குற்றவாளிகள் என அறிவிக்கிறது.
2010 - செப்டம்பர் 30. 61 வருடங்களாக நடைபெற்ற பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம், சட்டப்படி அல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. சன்னி வக்பு வாரியமும் மற்றவர்களும் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்க இடைக்காலத் தடை விதித்தது.

திங்கள், 3 டிசம்பர், 2012

டிசம்பர் 6, 1992 என்றும் நம் நினைவில்

 
டிசம்பர் 6, 1992 ஹிந்துத்துவ பாசிஸ்டுகளால் 463 ஆண்டுகால பழமை வாய்ந்த இறையில்லம் பாபரி மஸ்ஜித் இடித்துத் தள்ளப்பட்டது. பாபரி மஸ்ஜிதுடன் இந்திய தேசம் அதுவரை போற்றிவந்த உயர்ந்த சிந்தனைகளும் விழுமியங்களும் சேர்த்தே தரைமட்டமாக்கப்பட்டன இந்திய அரசு ஒரு கையாலாகாத பார்வையாளராக மாறியது அரசியல் சாசனத்தின் சட்டத்திட்டங்கள் காகிதங்களில் எழுதப்பட்ட புனைவாகவும் நீதிபீடம் முற்றிலும் செயலற்றதுமாக மாறியது சுதந்திர இந்தியாவில் காந்தியின் படுகொலைக்கு பின்னர் நிகழ்ந்த மிகப்பெரிய தீவரவாத தாக்குதல் இதுவாகும் உலக சமூகங்களின் முன்னால் இந்தியா அவமானத்தால் தலை குனிந்த நாள் இது

420 ஆண்டுகாலமாக முஸ்லிம்கள் ஏக இறைவனை வணங்கி வந்த வழிபாட்டுத்தலமான பாபரி மஸ்ஜிதை இடித்துவிட்டு நூற்றாண்டுகளாக இந்தியா மீது படிந்திருந்த கறை துடைக்கப்பட்டது என்று கொக்கரித்தார்கள் சங்கபரிவாரத்தினர் அதன் பொருற் முஸ்லிம்கள் இந்த தேசத்தின் மீது படிந்துள்ள கறை என்பதாகும் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது என்பது ஒரு வழிப்பாட்டுத்தலத்தை தகர்த்தார்கள் என்பதோடு நிற்கவில்லை மாறாக இந்திய முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்க சங்கபரிவார்கள் தீட்டிய செயல்திட்டத்தின் ஒரு பகுதி என்பதை அதனைத் தொடர்ந்த நிகழ்வுகள் உணர்த்தின பாபரி மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து தேசம் முழுவதும் முஸ்லீம்கள் மீது தாக்குதல் கட்டவிழ்க்கப்பட்டது மரணங்களும் அழிவுகளும் முஸ்லிம்களுக்கு சுமத்தப்பட்டன இது ஹிந்தீத்துவ பாசிஸ சக்திகளுக்கு அரசியல் ஆதாயமாக மாறியது

(ஆர்.எஸ்.எஸ்) (வி.ஹெச்.பி) (பா.ஜ.கா) தலைவர்கள் தாம் இந்த வரலாற்று சின்னத்தை அழித்ததற்கு பின்னால் உள்ள குற்றவாளிகள் என்றாலும் இதர நபர்களுக்கும் இதில் சமமான பங்குண்டு மத்தியில் ஆண்ட நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு உத்திர பிரதேச மாநில அரசு நீதிபீடம் ராணுவம் ஊடகம் அரசியல் கட்சிகள் அனைவரும் இந்த குற்றத்தில் பங்காளிகளே துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இந்த துயர நிகழ்விலிருந்து பாடம் படிக்க தவறிவிட்டார்கள் 20 ஆண்டுகள் கழிந்துவிட்டன இடிக்கப்பட்ட மஸ்ஜித் மீண்டும் கட்டித்தரப்படும் என்று தேசத்திற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது இதுவரை இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மஸ்ஜித் கட்டப்படவில்லை

இதுவே அரசின் வாக்குறுதி அப்பட்டமான பொய் என்பதை நிரூபிக்கிறது பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டியெழுப்பி குற்றவாளிகளை தண்டித்தால் மட்டுமே நீதி நிலைநாட்டப்படும் மேலும் இந்த தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்க முடியும் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட வேளையில் பல்வேறு அறிவுஜீவிகளும் மதசார்பற்ற தலைவர்களும் ஊடகங்களும் தேசம் முழுவதுமுள்ள மக்களும் இதைத்தான் கூறினார்கள் ஆனால் எதுவுமே நடக்கவில்லை

பாபரி மஸ்ஜித் தொடர்புடைய மாறுபட்ட அம்சங்களைக் கொண்ட 3 சட்ட முறைமைகள் இறுதி முடிவுக்காக காத்திருக்கின்றன

1, பாபரி மஸ்ஜித் நில உரிமையில் வழக்கு. அதாவது பாபரி மஸ்ஜிதும் அதன் சுற்றுப் பகுதிகளும் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு 1961 ம் ஆண்டு தொடுக்கப்பட்டது இவ்வழக்கில் பாபரி மஸ்ஜிதை 3 ஆக பாகப்பிரிவினை செய்யும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் பாரபட்சமான தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது

2, பாபரி மஸ்ஜிதை இடித்தவர்கள் மீதீ 1992 ம் ஆண்டு தொடுக்கப்பட்ட குற்றவியல் வழக்காகும் பாபரி மஸ்ஜிதை இடித்துதள்ளிய குற்றவாளிகள் எவ்வித குற்ற உணர்வோ தண்டனை குறித்த அச்சமோ இன்றி சுதந்திரமாக சுற்றித் திரிகின்றார்கள்

3, பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக விசாரனை நடத்த நியமிக்கப்பட்ட லிபர்ஹான் கமிஷன் அளித்த அறிக்கையின் மீதான மத்திய அரசின் நடவடிக்கை குறித்தது பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அரசியல் துணிச்சல் இல்லை

முஸ்லிம்களிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் பாபரி மஸ்ஜிதை மறப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமமாகும் பாபரி மஸ்ஜிதை முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்த மாபெரும் தேசத்தின் எந்தவொரு குடிமகனும் மறந்துவிடக்கூடாது இந்த மோசமான துயர சம்பவத்தை மறப்பது என்பது வகுப்புவாதம் மற்றும் பாசிசத்தின் வளர்ச்சிக்கே உதவும் நமது தேசம் கடந்த 20 ஆண்டுகளாக நம்பிக்கை துரோகத்திற்கு சாட்சியம் வகிக்கிறது இதுவரை நீதி மறுக்கப்பட்டே வருகிறது இனிமேலும் அது தாமதிக்கப்படகூடாது

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில் நீதிக்காக உறுதியாக போராட இந்தியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்

பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டு!

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு!!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

செவ்வாய், 13 நவம்பர், 2012

ஆந்திராவில் பா.ஜ.க.வுடன் "காங்கிரஸ்" கள்ளக்கூட்டு : "மஜ்லிஸ் கட்சி" விலகியதால் ஆட்சிக்கு வேட்டு!



சார்மினாரை ஆக்கிரமித்து கோவில் கட்டும் பா.ஜ.க.வுக்கு, காவல்துறை மூலம் காங்கிரஸ் ஆதரவளித்ததையடுத்து, ஆக்கிரமிப்புக் கோவிலுக்கு மேற்கூரை போடப்பட்டது.

நீதிமன்றங்களின் உத்தரவுகளுக்கு எதிராக ஆளுகின்ற அரசே செயல்பட்டு, கலவர திட்டத்துடன் களமிறங்கியுள்ள சங்க்பரிவாரங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்து "மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன்" (M.I.M.) கட்சி, காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது.

M.I.M. கட்சிக்கு ஆந்திராவில் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் உள்ளனர்.

294 உறுப்பினர்கள் கொண்ட ஆந்திர சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 152 உறுப்பினர்கள் உள்ளனர்.

இது, பெரும்பான்மைக்கு தேவையான 148 உறுப்பினர்களின் எண்ணிக்கை யை விட 4 உறுப்பினர்கள் அதிகம் என்றாலும், இவர்களில் பலர் "ஜெகன் மோகன் ரெட்டி"யின் YSR காங்கிரசுக்கு ஆதரவானவர்கள்.

மேலும், YSR காங்கிரஸ் இடைத்தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தெலுங்கு தேசம் (TDP) கட்சிக்கு 86, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (TRS) கட்சிக்கு 17 உறுப்பினர்களும், சி.பி.ஐ. 4, மார்க்சிஸ்ட் 1, பாஜகவுக்கு 3 இடங்களும் உள்ளன.

மஜ்லிஸ் கட்சியின் முடிவை வரவேற்றுள்ள YSR காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் கூறுகையில், காங்கிரசுக்கு எதிராக "நம்பிக்கையில்லா தீர்மானம்" கொண்டு வந்தால் ஆதரிப்பதாகவும் வாக்களித்துள்ளனர்.

மஜ்லிஸ் கட்சி, காங்கிரஸ் அரசுக்கு எதிராக செயல்பட்டால் தற்போதைய கணக்குப்படி (7+86+17+17+4+1= 132) 132 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்கும் என்பதோடு, காங்கிரசில் உள்ள "ஜெகன்" ஆதரவாளர்களும் சேர்ந்து யோசித்தால், காங்கிரஸ் அரசு கவிழுவது நிஜம்.

- மறுப்பு மீடியா செய்தி

திங்கள், 12 நவம்பர், 2012

கூத்தாநல்லூர் நகர தமுமுக மமக செயல் வீரர்கள் கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )11-11-2012 அன்று காலை 11 மணி அளவில் கூத்தாநல்லூர் நகர தமுமுக மற்றும் மமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மமகநகரசெயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார், நகர செயலாளர் காதர் முஹினுதீன், மன்னை ஒன்றிய செயலாளர் ஜெஹபர் அலி,முன்னாள் நகர செயலாளர் நைனாஸ் அஹமது முன்னிலை வகித்தார்கள். நகர கூட்ட
த்தில் தமுமுக,மமக, மற்றும் மாணவர் இந்தியா நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அஸ்லம் ஸ்போர்ட்ஸ் கிளப், நியூ பிரெண்ட்ஸ் கிளப் , இஸ்மாயில் கிரிக்கெட் கிளப், ஜமாலியா பிரெண்ட்ஸ், மரக்கடை இஸ்லாமிய பொதுநல கமிட்டியை சர்ர்ந்த நண்பர்கள் தங்களது அமைப்பை தமுமுகவோடு இணைத்து கொண்டனர்.
நகர கூட்ட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. முன் அறிவிப்பின்றி மின்வெட்டை ஏற்படுத்தும் மின்சாரத்துறையை வன்மையாக கனடிக்கிறது.
2. டெங்கு காய்ச்சல் பரவமால் தடுக்க கூத்தாநல்லூர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
3. வரும் நவம்பர் 22 ஆம் தேதி திருவாரூர் மன்னார்குடி சாலையில் அமைந்துள்ள லக்ஷ்மாங்குடி அரசு மது பான கடைக்கு மாபெரும் பூட்டு போடும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது
4. திருவாரூரில் டிசம்பர் 6 தர்ணா போரட்டதிற்கு கூத்தாநல்லூர் நகரத்தில் இருந்து 30 வாகனங்களில் மக்களை அழைத்து செல்வதென முடிவு செய்ய பட்டது
நிகழ்சிகளை நகர தமுமுக மாணவரணி செயலாளர் அக்பர் சலீம், மாணவர் இந்தியா செயலாளர் அப்துல் காதர் ஏற்பாடு செய்தனர்

முடிவில் முன்னாள் சோழ மண்டல மாணவரணி செயலாளர் அபுதாஹிர் நன்றி உரை ஆற்றினார்