புதன், 5 அக்டோபர், 2011

ஊழலற்ற உள்ளாட்சி அதுவே மனிதநேய மக்கள் கட்சியின் மனசாட்சி நமது வேட்பாளர்கள் ......

நமது வேட்பாளர்கள் ......

ஊழலற்ற
உள்ளாட்சி அதுவே மனிதநேய மக்கள் கட்சியின் மனசாட்சி.......

கூத்தாநல்லூர் நகர் மன்ற தலைவருக்கு போட்டியிடும் மமக வேட்பாளர் சகோ. இரா. பிரபுதாஸ் B.A,BL அவர்களுக்கு "பேரூந்து" சின்னத்தில் வாக்களிப்பீர்...



கூத்தாநல்லூர் 7 வது வார்டுக்கு போட்டியிடும் மமக வேட்பாளர் சகோ. M.A ஜெஹபர் அலி அவர்களுக்கு "தென்னை மரம்" சின்னத்தில் வாக்களிப்பீர்...

கூத்தாநல்லூர் 8 வது வார்டுக்கு போட்டியிடும் மமக வேட்பாளர் சகோதரி. K. ரெஜினா பேகம் அவர்களுக்கு "தென்னை மரம்" சின்னத்தில் வாக்களிப்பீர்...

கூத்தாநல்லூர் 10 வது வார்டுக்கு போட்டியிடும் மமக வேட்பாளர் சகோதரி. நாச்சியா அவர்களுக்கு "தென்னை மரம்" சின்னத்தில் வாக்களிப்பீர்...

கூத்தாநல்லூர் 13 வது வார்டுக்கு போட்டியிடும் மமக வேட்பாளர் சகோ. K.A நைனஸ் அமது அவர்களுக்கு "தென்னை மரம்" சின்னத்தில் வாக்களிப்பீர்...

கூத்தாநல்லூர் 15 வது வார்டுக்கு போட்டியிடும் மமக வேட்பாளர் சகோதரி S.N. ஆயிஷா பீவி அவர்களுக்கு "தென்னை மரம்" சின்னத்தில் வாக்களிப்பீர்...

கூத்தாநல்லூர் 16 வது வார்டுக்கு போட்டியிடும் மமக வேட்பாளர் சகோ. S.B. மன்சூர் அலி அவர்களுக்கு "தென்னை மரம்" சின்னத்தில் வாக்களிப்பீர்...

கூத்தாநல்லூர் 21 வது வார்டுக்கு போட்டியிடும் மமக வேட்பாளர் சகோதரி. ஜம்ஜம் நிஸா அவர்களுக்கு "தென்னை மரம்" சின்னத்தில் வாக்களிப்பீர்...


கூத்தாநல்லூர் 24 வது வார்டுக்கு போட்டியிடும் மமக வேட்பாளர் சகோ. P.M.A. சீனி ஜெஹபர் சாதிக் M.A அவர்களுக்கு "தென்னை மரம்" சின்னத்தில் வாக்களிப்பீர்...

கூத்தாநல்லூர் நகராட்சியை நல்லாட்சியாக மாற்றுவேன் …மமக வேட்பாளா் பிரபுதாஸ்

செவ்வாய், 4 அக்டோபர், 2011

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களின் முதல் பட்டியல்



1. மீரான் மைதீன் (மாவட்ட தலைவர்)

2வது வார்டு

லெப்பைக்குடிகாடு பேரூராட்சி

பெரம்பலூர் மாவட்டம்



2. நூருல்ஹீதா

17வது வார்டு

லெப்பைக்குடிகாடு பேரூராட்சி

பெரம்பலூர் மாவட்டம்


3. எம்.சாதிக் பாட்ஷா (மாவட்ட செயலாளர்)

4வது வார்டு

தொண்டி பேரூராட்சி

ராமநாதபுரம் மாவட்டம்



4. சம்சாத் பேகம்

2வது வார்டு

வழுதாவூர் ஊராட்சி

விழுப்புரம் மாவட்டம்




5. எஸ்.ஷேக் முஹம்மத்

4வது வார்டு

கோணை ஊராட்சி

விழுப்புரம் மாவட்டம்


6. சுல்தானா

3வது வார்டு

பண்டாரவடை ஊராட்சி

தஞ்சாவூர் மாவட்டம்


7. பி. ஜீலான் பாஷா

1வது வார்டு

பேரிகை ஊராட்சி

கிருஷ்ணகிரி மாவட்டம்


8. கே.அப்பாஸ்

8வது வார்டு

ஆய்யனார் ஊற்று

தூத்துக்குடி மாவட்டம்

9.சுலைமான்

9வது வார்டு

ஆய்யனார் ஊற்று

தூத்துக்குடிமாவட்டம்

10. ஷேக் முஹம்மது

3வது வார்டு

ஆழ்வார்திருநகரி
கீழமேடு

தூத்துக்குடி மாவட்டம்

11. எஸ். ஜியாவுதீன்
3வது வார்டு
மானியம் ஆடூர் ஊராட்சி
காட்டுமன்னார்குடி ஒன்றியம்
கடலூர் தெற்கு மாவட்டம்

12. முகமது
1வது வார்டு
கந்தகுமாரன் ஊராட்சி
கீரப்பாளையம் ஒன்றியம்
கடலூர் தெற்கு மாவட்டம்

13. ஏ.நிஜாம் அலி
3வது வார்டு
டி நெடுஞ்சேரி ஊராட்சி
கீரப்பாளையம் ஒன்றியம்
கடலூர் தெற்கு மாவட்டம்

14. ஹலிக் ரஹ்மான்
5வது வார்டு
கோவிலாம்பூண்டி ஊராட்சி
பரங்கிப்பேட்டை ஒன்றியம்

கடலூர் தெற்கு மாவட்டம்

சனி, 1 அக்டோபர், 2011

கூத்தாநல்லூர் அரசினர் பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மனு – பத்திரிக்கை செய்தி


கூத்தாநல்லூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் முஸ்லீம் மாணவிகள் தலைமையில் துணி போடுவதற்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் பயிலும் பள்ளியில் ஆண் ஆசிரியர்களே அதிகம் உள்ளனர். இதை உடடியாக சரி செய்யக் கோரி பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடந்த 19/9/11 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக மனு அளிக்கப்பட்டது. மேலும் இது குறித்து கிளை சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.



பரபரப்பான பரமக்குடியும்; பார்ப்போர் இல்லாத கோவையும்!

ரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சியை அடுத்து ஏற்பட்ட மோதலில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஏழுபேர் பலியாயினர். இந்த சம்பவம் நடந்த மாத்திரமே தமிழக அரசு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார்க்கும், காயமடைந்தோருக்கும் நிவாரண உதவி அறிவித்தது. அதோடு ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.
மேற்படி சம்பவம் நடந்த நாள் முதல் பரமக்குடி பரபரப்புக் குடியாக மாறிவிட்டது. திமுக பொருளாளர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், வைகோ, உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட வடநாட்டு தலைவர்கள் உள்பட பலரும் பரமக்குடியை நோக்கி படையெடுத்தனர். கலவரத்தில் கொல்லப்பட்டவர் குடும்பத்தாரையும், சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் சொல்லியதோடு, உதவித்தொகையும் சில தலைவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் இந்த சம்பவம் நடந்த மாத்திரமே சட்டமன்றத்திலும், வெளியிலும் பல்வேறு கட்சிகள் கண்டனக் குரல்கள் எழுப்பின. மேலும் மதவாத பாஜக, இப்பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் என்று சொல்கிறது. கட்சிகளின் இந்த ஆதங்கத்தையும், ஆர்வத்தையும் அப்படியே வரவேற்கிறோம். கொல்லப்பட்டவர் குடும்பத்தாருக்கு நீதியும், நிதியும், காயமடைந்தோருக்கு நிதியும், நிவாரணமும் கிடைத்திட இக்கட்சிகள் முயற்சிக்க வேண்டும் என்று நாமும் கேட்டுக் கொள்கிறோம்.
அதே நேரத்தில், சில ஆண்டுகளை பின்னோக்கி நமது நினைவை செலுத்தி கோவைக்கு சென்றால், அங்கே செல்வராஜ் என்ற காவலர் கொல்லப்பட்டதையடுத்து,
இந்துத்துவ சக்திகளோடு கைகோர்த்துக்கொண்டு காவல்துறை குருவியை சுடுவது போன்று 19 முஸ்லிம்களை சுட்டுக் கொன்றதே? அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதியோ, அவரது மகனோ, அல்லது இன்றைக்கு பரமக்குடியை நோக்கி படையெடுத்த அரசியல் கட்சித் தலைவர்களோ திரும்பிக் கூட பார்க்கவில்லையே? இன்றைக்கு போலீசாரின் சில தவறான நடவடிக்கையால் ஏழு உயிர்கள் போனதை கண்டிப்பவர்கள், அன்றைக்கு இதே போலீசாரின் காவி சிந்தனையால் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை கண்டிக்க வில்லையே? இது குறித்து சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ, ஏன் வெளியில் கூட சன்னமான குரலைக் கூட இக்கட்சிகள் வெளிப்படுத்த வில்லையே?
பரமக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சகோதரர்களை சகோதர வாஞ்சையோடு போய் பார்த்தது இந்திய தவ்ஹீத் ஜமாஅத். ஆனால் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் சமுதாய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட அன்று கோவைக்கு வந்து ஆறுதல் சொல்ல முன்வரவில்லையே? இதெல்லாம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால், ஆட்சியாளருக்கும் சரி- அரசியல்வாதிகளுக்கும் சரி அது பெரிய தாக்கத்தை உண்டாக்குவதில்லை என்பதை காட்டுகிறதல்லவா? இன்றுவரை அந்த கோவையில் போலீசாரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும்- நிதியும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறதே? ஏன் இந்த மாற்றந்தாய் மனப்பாண்மை? இது ஒழியவேண்டும். எங்கு யார் அநியாயமாக பாதிக்கப் பட்டாலும் அவர்களுக்கு உரிய நீதி கிடைத்திட ஆளும் வர்க்கமும், அரசியல்-சமூக அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல்கொடுக்க முன்வர வேண்டும் என்பதே நடுநிலை பேணும் அனைவரின் எண்ணமாக உள்ளது.

நம்பிக்கையாளர்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செலுத்துங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.[அல்-குர்'ஆன் 5 ;8 ]
http://mugavai-abbas.blogspot.com/