ஹதீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹதீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 மார்ச், 2009

உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்

தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணிவாழட்டும். நூல்;புஹாரி,எண் 5985 ]

இன்று முஸ்லிம்களில் உறவுகளுக்கு மத்தியில் பிளவுகளுடன் வாழ்பவர்களை அதிகமானோரை பார்க்கிறோம். அற்பமான விஷயங்களுக்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல் இருக்கும் முஸ்லிம்களையும் காண்கிறோம். இப்படிப்பட்டவர்களிடம் போய், 'நீங்கள் உங்கள் உறவினரோடு சேர்ந்து வாழக்கூடாதா?' என்று நாம் சொன்னால், அட! போங்க!! அவன் வீட்லயா எனக்கு சாப்பாடு! என்று சாதாரணமாக உறவுகளை உதாசீனப்படுத்துவதை பார்க்கிறோம்.

நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரைவிட்டும் அவரும், அவரைவிட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது.) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவராவார். நூல்;புஹாரி,எண் 6237

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறியிருக்ககல்யாண வீட்டில் எனக்கு பந்தியில் எலும்பைத்தான் போட்டான்' என்ற உப்பு சப்பில்லாத விஷயத்திற்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல், உறவினர்களை உதாசீனம் செய்பவர்கள் சிந்திக்கவேண்டும்.உறவை சேர்த்து வாழ்வது என்றால் என்ன? நம்மோடு யார் கொஞ்சி குலாவுகிரார்களோ அவர்களோடு உறவாக இருப்பதா? இல்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் உறவின் இலக்கணம்

உக்பா இப்ன் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, யாரசூலுல்லாஹ்! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் நான் உறவாக இருக்க விரும்புகிறேன். அவர்களோ என்னை வெறுக்கிறார்கள். நான் அவர்களுக்கு நலம் நாடுகிறேன்! அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது எனவினவ, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நிலையில் நீர் இருக்கும் வரை அவர்களை சுடுசாம்பல் தின்னவைத்தவர் போன்றவராவீர்! மேலும், உறவினர்களின் தீமையைவிட்டும் உம்மை காப்பதற்காக ஒரு மலைக்கு உம்முடன் இருந்துகொண்டே இருப்பார் என்று நபியவர்கள் கூறினார்கள்.நூல்;முஸ்லீம் 4640.

மேலும், உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் போதுமென்று சொல்லாத விஷயங்கள் இரண்டுதான். 1. செல்வம் 2 .ஆயுள். கோடிக்கணக்கில் செல்வத்தை சேர்த்து வைத்துள்ளவனிடம், இன்னொரு கோடியை காட்டிஇது வேணுமா? என்றால் அமா! வேணும் என்றுதான் சொல்வான். அதுபோல நூறுவயசு குடுகுடு கிழவனிடம் அவன் உயிர் பிரியும் நேரத்தில் உனக்கு இறுதி ஆசை என்ன? என்றால் இன்னொரு பத்து வருஷம் வாழ்தல் நல்லாருக்குமே என்பான்! நாம் விரும்பும் செல்வமும்-ஆயுளும் அதிகமாக வேண்டுமெனில் இதோ நபியவர்களின் பொன்மொழி பாரீர்!

தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணிவாழட்டும்.நூல்;புஹாரி,எண் 5985

நம்முடைய உறவுக்கு உதவுவதால் நமக்கு கிடைக்கும் இரட்டிப்பு பரிசு

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு உடைய மனைவி ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்.

பள்ளிவாயிலில் இருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுவுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன்.

எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது ஸதாகாவாகுமா என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன்.

அப்துல்லாஹ்ரளியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன்.

அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது.

அப்போது எங்களிடையே பிலால்
(ரளியல்லாஹு அன்ஹு) வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம்.

உடனே அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் 'ஸைனப்' எனக் கூறினார். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள் 'எந்த ஸைனப்?' எனக் கேட்டதும் பிலால் (ரளியல்லாஹு அன்ஹு), 'அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார்.

உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்திற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது" எனக் கூறினார்கள். நூல்;புஹாரி,எண் 1466

உறவை சேர்த்து வாழ்ந்தால்த்தான் நம்முடைய இலக்கான சொர்க்கம்

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, 'சொர்க்கத்தில் என்னை சேர்ப்பிக்கக்கூடிய நற்செயலை எனக்கு அறிவித்து தாருங்கள் என வினவ, அதற்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,*அல்லாஹ்வை வனங்கு.*அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கதே!*தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தை வழங்கு.*உறவினரை சேர்த்து வாழ்வீராக!என்று கூறினார்கள்.

நாம் இந்த உலகில் பல்வேறு பாவங்களை செய்கிறோம். நாம் செய்யும் பாவங்களுக்காக அல்லாஹ், உடனுக்குடன் தன்டிக்கநினைத்தால் நாம் யாருமே தப்பமுடியாது. நாம் செய்யும் பாவங்களுக்கான தண்டனையை மறுமைவரை தள்ளிவைத்துள்ளான். இருப்பினும்,

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; மறுமையில் தண்டனை கிடைப்பதற்கு முன் இம்மையிலும் துரிதமாக தண்டனை அளிப்பதற்கு ஏற்ற பாவங்கள்; அநியாயமும், உறவை முறிப்பதும்தான். நூல்;அபூதாவூத்

சொர்க்கத்தின் திறவுகோல் உறவு

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். நூல்;புஹாரி,எண் 5984

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சொர்க்கமே இலக்கு! அந்த சொர்க்கத்தை அடைய பழுதடைந்திருக்கும் நமது 'உறவு' பாலத்தை இன்றே புதுப்பிப்போம்! இறையருள் பெறுவோம்!!

தேங்க்ஸ் டு: ' முகவை எக்ஸ்பிரஸ்

புதன், 28 ஜனவரி, 2009

இஸ்லாம் பார்வையில் "அன்பளிப்பு"

நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு நான் ஓர் அன்பளிப்பைக் கொண்டு சென்றேன். அப்பொழுது அவர்கள் நீர் இஸ்லாத்தைத் தழுவி விட்டீரா? என்று வினவினர். அதற்கு நான் இல்லை என்றேன். அப்பொழுது அவர்கள் நிச்சயமாக நான் இணை வைப்பவர்களுடைய அன்பளிப்பையும் நன்கொடையையும் ஏற்பதை விட்டும் தடை செய்யப்பட்டுள்ளேன் என்று கூறினர் (அறிவிப்பவர்: இயான் இப்னுஹிமாஸ் َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத்,திர்மிதீ)

நிச்சயமாக ஒரு காட்டரபி நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு ஓர் ஒட்டகத்தை அன்பளிப்பாக அனுப்பினார். அதற்குப் பகரமாக நபி صلى الله عليه وسلم அவர்கள் அவருக்கு ஆறு ஒட்டகங்களை அன்பளிப்புச் செய்தனர். எனவே அவர் சினந்து கொண்டார். ஆனால் இச்செய்தி நபி صلى الله عليه وسلم அவர்களுக்குத் தெரியவரவே அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்து அவனைத் துதி செய்துவிட்டு பின்னர், நிச்சயமாக, இன்னார் எனக்கு ஓர் ஒட்டகத்தை அன்பளிப்புச் செய்தார். எனினும் நான் அவருக்கு அதற்குப் பகரமாக ஆறு ஒட்ட்கங்களை அன்பளிப்பு செய்தேன். ஆனால் அவர் அதற்காகச் சினந்து கொண்டார். எனவே நான் (இனிமேல்) குறைஷிகளிடமிருந்தோ, அன்ஸாரிகளிடமிருந்தோ, ஸகஃபீகளிடமிருந்தோ, தவ்ஸீகளிடமிருந்தோ அன்றி வேறு எவரிடமிருந்தும்) அன்பளிப்பை ஏற்றுக் கொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْ நூல் ஸூனன்)

ஒருவருக்காக எவரேனும் பரிந்துரைத்து (சிபாரிசு செய்து) அதற்காக அவர் தமக்குப் பரிந்துரைத்தவருக்கு அன்பளிப்புச் செய்து அதனை அவர் ஏற்றுக் கொள்வாரானால் நிச்சயமாக அவர் பெரும்பாலும் வட்டியின் தலை வாயிலில் நுழைந்தவராவார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்:அபூ உமாமா َضِيَ اللَّهُ عَنْநூல் அபூதாவூத்)

நபி صلى الله عليه وسلم அவர்களின் திண்ணைப் பள்ளி மாணக்கர்களான ஸுஃப்பாவாசிகளில் சிலருக்கு நான் எழுத்துக் கலையையும் குர்ஆனையும் கற்றுக் கொடுத்தேன். எனவே அவர்களில் ஒருவர் எனக்கு வில் ஒன்றை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அப்பொழுது நான், என்னிடம் பொருள் இல்லாததால் அதைக் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அம்பு எய்துவேன் என்று கூறி பின்னர், அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! நான் ஒருவருக்கு குர்ஆனை கற்றுக்கொடுத்து வந்தேன். அவர் என்னிடம் பொருள் இல்லாததால் நான் அதைக் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அம்பு எய்வேன் என்று கூறினேன். அதற்கு அவர்கள், நரக நெருப்பு வளையம் உம்முடைய கழுத்தில் போடப்பட வேண்டும் என்று நீர் விரும்பினால் அதை நீர் ஏற்றுக் கொள்ளும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாபித் َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத்)


ஒருவர் நன்கொடை நல்கிவிட்டோ அல்லது சன்மானம் அளித்து விட்ட பின்னர் அதனையவர் திரும்பப் பெற்றுக் கொள்வது அவருக்கு ஆகுமானதல்ல. ஆனால் தந்தை தன் மைந்தனுக்கு அளித்து விட்டதைத் திரும்பப் பெருவது ஆகுமானதாகும். மற்றோர் அறிவிப்பின்படி, எவர் தாம் அளித்த நன்கொடையையோ அல்லது தாம் கொடுத்த சன்மானத்தையோ திரும்பப் பெறுவாராயின் அவர், வாந்தி எடுத்து விட்டுப் பின்னர் தம் வாந்தியைத் தின்னும் நாயைப் போலாவார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் َضِيَ اللَّهُ عَنْ,இப்னு உமர் َضِيَ اللَّهُ عَنْ நூல் ஸூனன்)

நிச்சயமாக என் தந்தை என்னை நபி صلى الله عليه وسلم அவர்களிடம் அழைத்துச் சென்று, நாயகமே நிச்சயமாக நான் இந்த என்னுடைய மகனுக்கு ஓர் அடிமையை நன்கொடையாக அளித்தேன் என்று கூறினார். அதற்கவர்கள், இவ்விதமாகவே உம்முடைய எல்லா மக்களுக்கும் நன்கொடை அளித்திருக்கின்றீரா? என்று வினவினர். அதற்கு என் தந்தை இல்லை என்று மறுமொழி பகர்ந்தார். (அது கேட்ட) நபி صلى الله عليه وسلم அவர்கள், அவ்விதமாயின் அவ்வடிமையைத் திரும்பப்பெற்றுக் கொள்ளும் என்று கூறினர். (அறிவிப்பவர்: நூமான் இப்னுபஷீர் َضِيَ اللَّهُ عَنْ நூல் முஅத்தா, அபூதாவூத்,திர்மிதீ,நஸயீ)

நபி صلى الله عليه وسلمஅவர்கள் எனக்கு நன்கொடைகள் அளித்து வந்தனர். அப்பொழுது நான் என்னைவிட அதிக தேவையுள்ளவர்களுக்கு இவற்றை அளியுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ளும் அன்றி, நீர் கோராமலும் நீர் விரும்பாமலும் எந்தப் பொருளையும் நீர் ஏற்றுக்கொள்ளும்; ஆனால் இவ்விதமாக எந்தப் பொருள் மீது நீர் நாட்டம் வைக்காதீர் என்று கூறினர். (அறிவிப்பவர்: இப்னுஸ் ஸயீத் அவர்கள் உமர் َضِيَ اللَّهُ عَنْ மூலமாக அறிந்து நூல் புகாரீ, முஸ்லிம்)

ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அன்பளிப்பு, உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடும். மேலும் எந்த அண்டை வீட்டாரும் தம்முடைய அண்டை வீட்டாரை இழிவாகக் கருத வேண்டாம் அவர் ஆட்டின் குழம்புத் துண்டை அன்பளிப்பாக அனுப்பிய போதினும் சரி என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதுடன் அதற்குப் பகரமாக அன்பளிப்பும் அனுப்பி வந்தனர் என்று ஆயிஷா َضِيَ اللَّهُ عَنْ அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத், திர்மிதீ)

நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு கிஸ்ரா (எனும் ஈரான் நாட்டு மன்னர்) அன்பளிப்பு அனுப்பினார். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அன்றி, (மற்ற) அரசர்களும் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு அன்பளிப்பை நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏற்றுக் கொண்டனர். (அறிவிப்பவர்: அலீ َضِيَ اللَّهُ عَنْ நூல் திர்மிதீ)

thanks to :அமைதி ரயில்

ஞாயிறு, 25 ஜனவரி, 2009

இஸ்லாம் பார்வையில் "கோபம்"

அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (புகாரி)


அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும். ”(அபூதாவூத்)


அறிவிப்பாளர் : அபூதர் رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும். ” (மிஷ்காத்)



அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்: “என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்? ”இறைவன் கூறினான்“ எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்.” (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அனஸ் رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ” (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அனஸ் رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “மூன்று விஷயங்களை இறை நம்பிக்கையாளரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:
ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.
அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது. ” (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு மனிதர், “எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் ” என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், “கோபம் கொள்ளாதீர் ” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “எனக்கு அறிவுரை கூறுங்கள்! ”என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் “நீர் கோபம் கொள்ளாதீர்! ” என்றே பதில் தந்தார்கள். (புகாரி)
thanks to : அமைதி ரயில்

இஸ்லாம் பார்வையில் "தற்பெருமை"

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்

அண்ணல் நபி அவர்கள் அருளினார்கள்: “எவனுடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் நுழைய முடியாது.” இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார்: “மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?” அண்ணலார் அவர்கள் நவின்றார்கள்: “(இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.” (முஸ்லிம்)


அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி)

அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். ” (அபூதாவூத்)


அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி)

நான் அண்ணல் நபி அவர்கள் கூறக் கேட்டேன்: “இறை நம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இதனை (இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவமும் தெளிவாகிவிடட்டும் என்பதற்காக) அண்ணலார் மூன்று முறை கூறினார்கள். பிறகு “அகந்தையுணர்வினால் தன் கீழங்கியைப் பூமியில் இழுத்தவண்ணம் நடக்கும் மனிதனை இறைவன் மறுமை நாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான் ”என்று அண்ணலார் கூறினார்கள். (அபூதாவூத்)


அறிவிப்பாளர்: இப்னு உமர்

ண்ணல் நபி அவர்கள் அருளினார்கள்: “எவன் தன் கால்சட்டையை கர்வத்துடன் பூமியில் இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். ( கருணைப் பார்வை பார்க்கமாட்டான் )”

அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் வினவினார்கள்: “நான் பிடித்து வைத்த வண்ணம் இருக்காவிட்டால் என் வேட்டி தளர்ந்து கணுக்கால்களுக்குக் கீழே போய்விடுகின்றது. (நானும் என் இறைவனின் கருணைப் பார்வையை இழந்து விடுவேனா? ” அதற்கு அண்ணலார், “இல்லை, நீர் கர்வத்தால் வேட்டியை இழுத்துச் செல்பவரல்லர். என்று பதிலளித்தார்கள். (புகாரி)


அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்

அண்ணல் நபி அவர்கள் கூறுகின்றார்கள்: “நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்கூடாது.” (புகாரி)

thanks to : அமைதி ரயில்