வேலைவாய்ப்பு தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலைவாய்ப்பு தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 ஜூன், 2010

நர்ஸிங் படித்த பெண்களுக்கு சவுதியில வேலைவாய்ப்பு

சவுதி அரேபிய சுகாதார அமைச்சக அரசு மருத்துவமனையில் பணிபுரிய 40 வயதுக்குட்பட்ட பி.எஸ்ஸி. நர்ஸிங் தேர்ச்சி பெற்ற பெண்கள் தேவைப்படுவதாக வெளிநாடு வேலைவாய்ப்பு நிறுவன முதன்மை செயலர் குத்சியாகாந்தி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில்,இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன், 40 வயதுக்குட்பட்ட பி.எஸ்ஸி., நர்ஸிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களுக்கான நேர்முக தேர்வு சவூதி அமைச்சக தேர்வுக்கு ழுவினரால் ஜூலை மூன்றாவது வாரத்தில் டில்லி மற்றும் கொச்சியில் நடக்கிறது.

தகுதியுடைய மனுதாரர்கள் விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்கள்,வெள்ளை பின்னணியில் எடுக்கப்பட்ட பத்து புகைப்படங்களை இணைத்து, 48,முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை என்ற, முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். 044-24464268, 24467562 ஆகிய ஃபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

புதன், 25 நவம்பர், 2009

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 1000 அக்கவுன்ட்ஸ் ஆபீசர் பணியிடங்கள்


logo

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனமும், தொலைத் தொடர்புத் துறையில் பெரும்பங்கு வகிப்பதுமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் 1000 அக்கவுன்ட்ஸ் ஆபிசர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆயிரக் கணக்கில் இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் (ஜே.டி.ஓ.) மற்றும் பிற டெக்னிகல் பணியிடங்களை அவ்வப்போது அறிவித்து வரும் பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ள மிகப் பெரிய வேலை வாய்ப்புகளில் ஒன்று இது.

இப்போது ஜே.ஏ.ஓ. எனப்படும் ஜூனியர் அக்கவுன்ட்ஸ் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது பிஎஸ்என்எல்.

இந்த காலியிடங்கள் அகில இந்திய அளவில் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்படும். இந்தத் தேர்வானது பிப்ரவரி/மார்ச் 2010ல் நடத்தப்படும்.

பணியின் பெயர்: இளநிலை கணக்கு அலுவலர் (JAO)

சம்பளம்: மாதம் ரூ.20500/

தகுதிகள்: சி.ஏ., சி.எஸ்., சி.டபிள்யூ.ஏ., எம்.காம்., இவற்றில் ஒரு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

சலுகைகள்: 1.1.2010 அன்று 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும். உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகள் சலுகை உண்டு.

பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் சலுகை தரப்படும்.

தேர்வு பாடத்திட்டம்: இத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, நிதி மேலாண்மை/காஸ்ட் அக்கவுன்டிங்/டாக்ஸ் கமர்சியல் லா இவற்றில் கேள்விகள் இடம் பெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000 இது டி.டி., அல்லது பே ஆர்டராக செலுத்தப்பட வேண்டும்.

எஸ்ஸி/எஸ்டி/ஊனமுற்றோர்/முன்னாள் ராணுவத்தினருக்கு முழு கட்டண விலக்கு உண்டு.

எஸ்ஸி/எஸ்டி பிரிவினர் தேர்வுக்கு வந்து போகும் பயணப் படியும் வழங்கப்படும்.

விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, டி.டி., 27க்கு 12 செ.மீ., அளவுள்ள 2 சுய முகவரியிட்ட உறைகள் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The DGM (Admn.), O/o CGM(Mtce.), BSNL, Northern Telecom Region, Room No. 257, 2nd Floor, Kidwai Bhawan, Janpath, New Delhi 110001.

முழு விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தை டவுண்லோட் செய்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணைய தள முகவரி: www.bsnl.co.in

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் டிசம்பர் 15, 2009.

ஞாயிறு, 22 நவம்பர், 2009

அரசு வேலைகள்… அரிய வாய்ப்பு; மிஸ் பண்ணிடாதீங்க!!

நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1100 பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்ஸி தேர்வு!

tnpsc_txt

நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கு 1100 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் 5.11.2009 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது மிக முக்கியமான ஒரு வாய்ப்பு. பட்டப்படிப்புதான் அடிப்படைத் தகுதி. கூடுதல் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பணி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை தபால் அலுவலகங்களில் பெறலாம். இந்த நல்ல வாய்ப்பை இளைஞர்கள் மற்றும் இன்னும் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அறிவிக்கை பற்றிய விவரம்:

நகராட்சி ஆணையர்: மொத்த பணியிடங்கள் -3

சம்பளம் – ரூ 9300-34800 + ரூ 4600

2. அஸிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீஸர் (சட்டம்) – 13

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4600

3. அஸிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீஸர் (டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம்) – 4

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4600

4. புரபேஷன் ஆபீஸர் (டிபன்ஸ் சர்வீஸ்)-10

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500

5. புரபேஷன் ஆபீஸர் (ஜெயில் சர்வீஸ்)-4

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500

6. ஜூனியர் எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸர் -9

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500

7. அஸிஸ்டன்ட் லேபர் இன்ஸ்பெக்டர் -20

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4400

8. சார் பதிவாளர் -29

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4300

9. மகளிர் நல அலுவலர் (சோஷியல் டிபென்ஸ்) -1

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4300

10. தொழில் கூட்டுறவு கண்காணிப்பாளர் -7

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4200

11. தணிக்கை ஆய்வாளர் (இந்து அறநிலையத் துறை) – 27

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500

12. வருவாய் துறை உதவியாளர் (அனைத்து மாவட்டங்கள்) – 875

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

13. செயல் அலுவலர் – 5

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

மேலே உள்ள 13 பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

பின்வரும் 8 பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால் போதும்!

14. வணிக வரித்துறையில் உதவியாளர் (அமைச்சுப் பணி)-3

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

15. தொழில் மற்றும் வர்த்தக துறை உதவியாளர் – 63

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

16. வருவாய் ஆணையர் அலுலவக உதவியாளர் – 6

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

17. நில நிர்வாகத் துறை அலுவலக உதவியாளர் -2

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

18. திட்டக் குழுவில் திட்ட உதவியாளர் – 1

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

19. கீழ் நிலை எழுத்தர் – சட்ட மன்றம், தலைமைச் செயலகம் – 3

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

20. டிஎன்பிஎஸ்ஸி அலுவலக உதவியாளர் -4

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

21. சட்டத் துறையில் உதவியாளர் -2

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

விண்ணப்பங்களை தபால் அலுவலகங்களில் ரூ 30 செலுத்திப் பெற்றுக் கொள்ளுங்கள்.

தேர்வுக் கட்டணம்: ரூ.100. இதையும் தபால் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

ஆதி திராவிடர் / பழங்குடியினர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்டோர் / முன்னாள் ராணுவத்தினர் / கைம்பெண்கள் / ஊனமுற்றோருக்கு முழுமையான கட்டண விலக்குண்டு.

மிக முக்கியமானது:

A Date of Notification 15.11.2009 -

B Last date for receipt of applications 30-12-2009 5.45 P.M.

C Date of Written Examination 11-04-2010 10.00 A.M. to 1.00 P.M.

மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in பார்க்கவும். முழு விவரங்களையும் இங்கு பிடிஎப் கோப்பாகவும் தந்துள்ளோம்.

டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு ஆங்கிலத்தில் – not_eng_css2009

விண்ணப்பம், தேர்வு முறை, மையம், சலுகை குறித்த விவரங்கள்- தமிழில்.. instns_tam_new

மிக அரிய வாய்ப்பு… தவற விடாதீங்க!

புதன், 22 ஜூலை, 2009

ம‌த்‌திய அரசு சா‌ர்‌பி‌ல் இலவச சமைய‌ல்கலை ப‌‌யி‌ற்‌சி

ம‌த்‌திய அர‌சி‌ன் சு‌ற்றுலா‌த்துறை சா‌ர்‌பி‌ல் நட‌த்த‌ப்படு‌ம் இலவச தேசிய விருந்தோம்பல் திறன் சான்றித‌ழ் பயிற்சி, உணவு சமையல்கலை பயிற்சி‌, உணவு பரிமாறும் முறை பயிற்சி‌க்கு ‌விருப்பமுள்ளவ‌ர்க‌ள் செ‌ன்னை தரம‌ணி‌யி‌ல் உ‌ள்ள உணவு மேலாண்மை நிறுவன‌‌த்தை அணுகலா‌ம்.


ம‌த்‌திய அரசின் சுற்றுலாத்துறையால் உருவாக்கப்பட்ட “உணவக மேலாண்மை, சமையல் கலை மற்றும் ஊட்டநெறி தொழில்நுட்பக் கல்லூரி” சென்னையிலுள்ள தரமணியில் இயங்கி வருகிறது.

இங்கு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றித‌ழ் படிப்பு ஆகிய நிலைகளில், விருந்தோம்பல், உணவு விடுதி நிர்வாகம் போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில், பணியாளர்களுக்கான திறன் வளர்ப்பு திட்டத்தின் கீ‌ழ் பின்வரும் பயிற்சிகளை மைய அரசின் சுற்றுலாத்துறை இலவசமாக அளிக்கவுள்ளது.

3 நாட்கள் தேசிய விருந்தோம்பல் திறன் சான்றித‌ழ் பயிற்சி‌க்கு வழக்கமான கல்வி, சான்றித‌ழ் ஏதுமில்லாமல் அனுபவ அறிவுடன் பெரிய, சிறிய உணவகங்களில் பணிபுரியும் நபர்களுக்கு சமையல்காரர் மற்றும் உணவு பரிமாறுபவர்களுக்கான பயிற்சி அளிக்கப்படும். வயது வரம்பு கிடையாது. பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மதிய உணவும் இலவசமாக அளிக்கப்படு‌கிறது.

8 வாரங்களுக்கு உணவு சமையல்கலை பயிற்சி‌க்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெ‌ற்‌றிரு‌க்க வே‌ண்டு‌ம். 18 முத‌ல் 25 வயது‌க்கு‌ள்ளவ‌ர்க‌ள் இ‌ப்ப‌‌யி‌ற்‌‌‌சி‌க்கு விண்ணப்பிக்கலாம். ஊக்கத் தொகை ரூ.2000 வழங்கப்படு‌கிறது. மேலும், சீருடை, சமையல் பொருட்கள், பயிற்சிக்கான பொருட்கள் போன்றவையும், மதிய உணவும் இலவசமாக அளிக்கப்படு‌கிறது.

6 வாரம் உணவு பரிமாறும் முறை பயிற்சி‌க்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெ‌ற்‌றிரு‌க்க வே‌ண்டு‌ம். வயது வரம்பு 18 25க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊக்கத் தொகை ரூ.1500 வழங்கப்படு‌கிறது. மேலும், சீருடை, சமையல் பொருட்கள், பயிற்சிக்கான பொருட்கள் போன்றவையும், மதிய உணவும் இலவசமாக அளிக்கப்படு‌கிறது.

இப்பயிற்சி வருகின்ற 03.08.2009 அன்று தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு விருப்பமுள்ள நபர்கள் பின்வரும் முகவரியில் உள்ள இந்நிறுவனத்தை வேலை நாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

உணவு மேலாண்மை நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி அஞ்சல், சென்னை 600 113 (இந்திரா நகர் இரயில் நிலையம் அருகில்) தொலைபேசி எ‌ண் 22542029. கல்லூரியின் தொலைபேசி எண். 044 22542029. இணைய தளம் முகவரி www.ihmchennai.org.

ஞாயிறு, 12 ஜூலை, 2009

கம்ப்யூட்டருடன் பிஎட் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கல்வி அமைச்சர் தகவல்

சென்னை, ஜூலை 11- கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர்கள் பொன்னுசாமி, ராஜ்குமார், ஜி.கே.மணி (பாமக), எச். வசந்தகுமார் (காங்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூ), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்) ஆகியோர் கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்:
தமிழ்நாட்டில் 200 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முழுவதும் அரசின் நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளது. மாநில அளவில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும்போது அந்த தீர்ப்புக்கு கண்டுப்பட வேண்டும்.

கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகமா னோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பு துறை தரும் சீனியாரிட்டி அடிப்படையில்தான் பணி உத்தரவு பிறப்பிக்க முடியும்.

தற்போது உயர்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் நியமனத்தில் கம்ப் யூட்டர் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டனர்.

வருங்காலங்களில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சனி, 11 ஜூலை, 2009

ஜியாலஜி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: விண்ணப்பிக்க 20ந் தேதி கடைசி நாள்

மத்திய நிலத்தடி நீர் வாரியம், ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா ஆகியவற்றில் காலியாக உள்ள ஜியாலஜிஸ்ட் (மண்ணியல் நிபுணர்) பணி இடங்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. எம்.எஸ்சி. ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, மெரைன் ஜியாலஜி படித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது 21 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி. வகுப்பினருக்கு
3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. இதற்கான விண்ணப்ப படிவங்கள் தலைமை தபால் அலுவலகங்களில் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் ரூ.20 ஆகும்.

மேலும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்
இணையதளத்திலும் தேர்வு பற்றிய தகவல்களை விரிவாக தெரிந்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை இந்த மாதம் 20 ந் தேதிக்குள் டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 7 ஜூலை, 2009

ஆன்லைனில் அரசு வேலைவாய்ப்பு பதிவு தகவல்களை பெற..

நீங்கள் வேலைவாய்ப்பு மையங்களில் அரசு வேலைக்கு பதிவு செய்துள்ளீர்களா? கீழ்கண்ட வெப்தளத்திற்கு சென்றால் உங்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புத் தகவல்கள், சீனியறிட்டி விபரங்கள், மாநில வாறியான வேலைவாய்ப்பு அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் பெறலாம்

மேலும் Job Seeker என்ற லிங்க்-ஐ கிளிக்செய்து தங்களுடைய பதிவு எண்ணும் பிறந்த தேதியும் டைப் செய்தால் உங்களுக்குத் தேவையான விபரம் இன்ஷா அல்லாஹ் கிடைக்கலாம்.

இணையதள முகவரி
www.employment.tn.gov.in
வேலை வாய்ப்பு தொடர்பான வின்னப்பான்கள்
Registration form for candidates
Quarterly return to be submitted to the local Employment Exchange - ER-I
Occupational return to be submitted to the local Employment Exchange once in two years - ER-II
Unemployment Assistance Application Form
Declaration for Unemployment Assistance

சென்னை: விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு

இந்திய விமானப்படைக்கு திருமணமாகாத இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதுகுறித்து சென்னை கலெக்டர் ஷோபனா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த, திருமணமாகாத இளைஞர்கள் இந்திய விமானப்படைக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். குரூப் 'ஒய்', குரூப் 'எக்ஸ்', பணிகளுக்கான ஆள் சேர்ப்பு 24ம் தேதி முதல் 29ம் தேதி, சென்னை தாம்பரம் ஏர்போர்ஸ் ஸ்டேஷனில் நடைபெறவுள்ளது.

கடந்த 1988 ஜூலை 1ம் தேதி முதல் 1992 செப்.30ம் தேதி வரை பிறந்திருக்க வேண்டும். குரூப் 'ஒய்' பிரிவுக்கு பிளஸ் 2 அறிவியல் மற்றும் கலை படிப்பில் 50 சதவீதம் தேர்ச்சி. குரூப் 'எக்ஸ்' பிரிவுக்கு பிளஸ் 2 கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.