வாஷிங்டன்,செப்.12:உலக வர்த்தகமையம் நிலைக்கொண்டிருந்த அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது விமானத் தாக்குதலில் அல்ல என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
வாஷிங்டனில் உலகவர்த்தக மையம் தகர்க்கப்பட்ட ஒன்பதாவது நினைவுத் தினம் அனுஷ்டிக்கும் வேளையில் ஆர்கிடெக்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் ஃபார் 9/11 ட்ரூத் என்ற அமைப்பு உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்டது குண்டுவெடிப்பின் மூலம்தான் என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று நடந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ விளக்கம் தவறு என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் ரிச்சார்ட் காஜ் தெரிவித்துள்ளார்.
கட்டிடங்களின் மீது விமானங்கள் மோதவில்லை எனவும், அக்கட்டிடங்களில் நடந்த குண்டுவெடிப்பினால்தான் உலக வர்த்தக மையம் தகர்ந்தது என காஜ் கூறுகிறார்.
உலக வர்த்தக மையம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து உருகியநிலையிலான உலோகச் சிதறல்கள் கிடைத்துள்ளன. விமான எரிபொருள் இரும்பையோ அல்லது ஸ்டீலையோ உருக்குவதில்லை. ஆதலால் கட்டிடத்தின் உள்பகுதியிலிருந்து ஏதேனும் பொருள்தான் கட்டிடம் தகர்வதற்கு காரணமாகயிருக்கும்-அறிக்கை கூறுகிறது.
விமானம் மோதாமலேயே 6.5 வினாடிகளில் கட்டிடங்கள் தகர்ந்தது எப்படி? என்பதுக் குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என 600 ஆர்கிடெக்டுகள் மற்றும் என்ஜினீயர்கள் அடங்கும் அவ்வமைப்பு கோரியுள்ளது.
உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்ட இடத்திலிருந்து கிடைத்த உலோக சிதறல்களில் நானோ தெர்மிட்டிக் ஒருங்கிணைப்பின் சிதறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கட்டிடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதற்கு ஆதாரம் எனவும் அவ்வமைப்பு கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
வாஷிங்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாஷிங்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 12 செப்டம்பர், 2010
ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
க்ரவுண்ட் ஸீரோ மஸ்ஜித் விவாதம்: ஃபரீத் ஸக்கரியா விருதை திரும்பக் கொடுத்தார்
வாஷிங்டன்,ஆக8:உலக வர்த்தக மையம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த க்ரவுண்ட் ஸீரோவில் மஸ்ஜித் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த யூத அமைப்பின் நடவடிக்கையை கண்டித்து 'நியூஸ் வீக்' வார இதழின் ஆசிரியரும், இந்தியா வம்சாவழியைச் சார்ந்தவருமான ஃபரீத் ஸக்கரியா ஆண்டி டிஃபமேஷன் லீக் என்ற அமைப்பு வழங்கிய விருதை திரும்பக் கொடுத்தார்.2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விருதாகும் இது. விருதை திரும்ப அளிக்க தீர்மானித்த ஸக்கரியா, அவ்வமைப்பிற்கு எழுதிய கடிதத்தில், "எனக்கு விருந்து அளித்தது மிக்க மகிழ்ச்சி என்றாலும்,மஸ்ஜிதை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நடவடிக்கை எனது மனசாட்சியை திருப்திப்படுத்தவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
விருதை திரும்பக் கொடுத்த ஸக்கரியா, யூத அமைப்பிடம் தீர்மானத்தை வாபஸ் பெறும்படி கோரியுள்ளார். செப்டம்பர் 11 சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களில் சிலரும்,சில அரசியல் தலைவர்களும்தான் மஸ்ஜித் நிர்மாணிப்பதை எதிர்க்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்புதான் மஸ்ஜித் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு யூத அமைப்புகள் எதிர்க்கத் துவங்கியுள்ளன.
10 கோடி டாலர் செலவில் கட்டப்படும் மஸ்ஜிதுக்கு பணம் அளிப்பது குவைத் வம்சாவழியைச் சார்ந்த இமாம் ஃபைஸல் அப்துல் ரவூஃப் ஆவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
ஞாயிறு, 11 ஜூலை, 2010
முஸ்லிம் பெண்களின் நிகாப் மீதான தடையை எதிர்க்கும் அமெரிக்கர்கள்
வாஷிங்டன்:முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவது ஃப்ரான்ஸில் சட்டவிரோதமாக்கப்படும் மசோதா இன்னும் ஓரிரு நாளில் ஃபிரான்ஸ் பாராளுமன்றத்தில் வாக்களிக்கப்படவுள்ள நிலையில், அமெரிக்கர்கள் இத்தடையை எதிர்க்கின்றனர்.பெவ் எனும் ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் ஃபிரான்ஸில் 10-ல் 8-பேர் பொது இடங்களில் நிகாப் மீதான தடையை ஆதரித்துள்ளனர். வெறும் 17% ஃபிரான்ஸ் மக்களே தடையை எதிர்க்கின்றனர். ஜெர்மனியில் 71%, பிரிட்டனில் 62%, ஸ்பெயின் 59% மக்களும் தடையை ஆதரிக்கின்றனர்.ஆனால் நிகாப் மீதான தடையை மூன்றில் இரண்டு அமெரிக்கர்கள் எதிர்க்கின்றனர்.
ஃப்ரான்ஸின் தேசிய தினத்திற்கு முந்தய நாளான ஜூலை 13 அன்று பாராளுமன்றத்தில் பொதுயிடங்களில் நிகாபிற்கு தடை விதிப்பது குறித்து வாக்கு எண்ணிக்கை நடக்கயிருக்கிறது.
ஒப்புதல் வேண்டி மேல்சபைக்கு(செனட்) அனுப்பி வைக்கப்படும், செப்டம்பரில் முடிவு தெரியும்.
இதன்படி பொதுயிடங்களில் முழுமுகத்திரையுடன் பெண்கள் பிடிபட்டால் 150 யூரோ (190 டாலர்) அபராதமும், ஆண்கள் மனைவியை அல்லது பிள்ளைகளை நிர்பந்தித்தால் 30,000 யூரோ அபராதமும், ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் கிடைக்கும்.
ஃப்ரான்ஸில் சிறுபான்மையாகயிருக்கும் முஸ்லிம் பெண்களை இந்த சட்டம் பெரிதும் பாதிக்கும். 1,900 பேர் மட்டுமே நிகாப் அணிவதாக அமைச்சகம் தெரிவிக்கிறது. இதேபோன்று சட்டங்கள் பெல்ஜியம், ஸ்பெயினில் நிலுவையில் உள்ளது,
ஆனால் குறிப்பாக ஐரோப்பாவின் சிறுபான்மை முஸ்லிம்களை பெரியளவில் கொண்டிருக்கும் ஃப்ரான்ஸில் மட்டுமே பெரிதும் புண்படுத்துகிறது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)