மனிதநேயமக்கள் கட்சி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதநேயமக்கள் கட்சி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஜனவரி, 2010

ஆளுநர் உரை ஏமாற்றத்தை அளிக்கின்றது

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை

இன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் ஆற்றிய உரை ஏமாற்றத்தை அளிக்கின்றது
உயர் தொழில்கல்வி (புரபெசனல்) பயிலும் முதல் தலைமுறை மாணவர்களது கல்வி கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தும், நெல் கொள்முதல் விலை ரூ50 உயர்த்தப்படும் பட்டா வழங்குவதற்கான காலக்கட்டத்தை ஐந்தாண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படும் என மூன்று வரவேற்க்கத்தக்க அம்சங்களைத் தவிர வேறு அடித்தட்டு மக்களுக்கு பயன் தரும் அறிவிப்புகள் எதுவும் ஆளுநரின் உரையில் இடம் பெறாதது பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றது.

சிறுபான்மை மக்களுக்கு பலன் அளிக்கும் புதிய அறிவிப்புகள் எதுவும் ஆளுநரின் உரையில் இடம் பெறாதது பெரும் அதிருப்தி அளிக்கின்றது. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு அளித்தது மட்டும் முஸ்லிம்களின் சமூக முன்னேற்றத்திற்கு போதுமானது இல்லை. ஆனால் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு அரசின் கொள்கை ஒன்றுமில்லை என்பதை தான் ஆளுநரின் உரையில் சிறுபான்மை மக்கள் குறித்து ஒன்றும் சொல்லப்படாது உணர்த்துகின்றது.

நெல் கொள்முதல் விலையை ரூ50ஐ அதிகரிப்பதாக கூறும் ஆளுநர் அறிக்கை மரபணு விதைகள் மூலம் வேளான்மையும் விவசாயிகளின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுவது குறித்து எதுவும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்படாது அரசின் கொள்கை தடுமாற்றத்தை வெளிப்படுத்துகின்றது.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக அரசு மருத்துவமனை சீரமைப்பதற்காக ரூ792 கோடி செலவுச் செய்திருப்பதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுக்கு ரூ13,000 கோடி ரூபாய் மது விற்பனை மூலம் அரசுக்கு வருகின்றது. அரசுக்கு வருவாயை தரும் மதுவை அருந்தி தமது உடலை சீரழித்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அரசு மருத்துவமனைகளோ வசதியில்லாமல் தள்ளாடும் நிலையில் உள்ளன. அரசு மருத்துவமனைளை மேம்படுத்த மதுவிற்பனை வருவாயில் 10 சதவிகிதம் கூட ஆண்டுதோறும் செலவுச் செய்யப்படாதது வருத்தத்திற்குரியதாகும்.

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களை மீண்டும் நியமனம் செய்யும் அரசின் உத்தரவை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் நகைப்பிற்குரியதாக இருக்கின்றன. அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுச் செய்வதற்கு கால அவகாசம் ஏற்படுவதால் தான் ஒய்வு பெறும் அரசு ஊழியர்கள் மீண்டும் தற்காலிகமாக நியமிக்கப்படுவதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் எப்போது ஒய்வு பெறுவார்கள் என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும் நிலையில் ஒய்வு பெறும் ஊழியர்களின் இடத்தில் புதியவர்களை நியமிக்க முன்கூட்டியே ஏற்பாடுகளை அரசு செய்வதற்கு என்ன தடையுள்ளது? தற்காலிகமாக ஒய்வு பெற்றவர்களை மீண்டும் அரசு பணியில் நியமனம் செய்வது வேலையில்லாமல் காத்திருக்கும் அரை கோடிக்கும் மேலான இளைஞர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இதனை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் உரையில் அமைந்துள்ளது கண்டிக்கத்தக்கது.

செவ்வாய், 19 மே, 2009

வெற்றியை இழந்திருக்கிறோம் களத்தை இழக்கவில்லை!



கண்மணிகளே...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்து, புதிய ஆட்சியின் மந்திரிசபை குறித்து பரபரப்புகள் நிலவும் நேரத்தில் இக்கடிதம் வரைகிறேன்.

எல்லோரும் வெற்றி உலாவரும் நேரத்தில் உங்கள் முகத்தில் ஒருவித சோர்வு நிலவக்கூடும். வெற்றியையும் லி தோல்வியையும் கருத்தில் கொண்டுதான் நாம் தேர்தல் களத்துக்கு வந்தோம். 'தோல்வி தான் வெற்றிக்கான படிக்கல்' என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நாம் தனித்து நின்று தேர்தலை சந்தித்ததே மிகப்பெரிய வெற்றியாகும். பணபலமும், அதிகார பலமுமின்றி இருபெரும் கூட்டணிகளை சமாளித்திருக் கிறோம். அதிகார முறைகேடுகளை எதிர்கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு தொகுதியிலும் ஆளும் கட்சியின் சார்பில் பல கோடிகள் வாரி இறைக்கப்பட்டது. ஜெயலலிதா மீது உள்ள கோபத்தில் அரசு ஊழியர்களில் சிலரும் வாக்குப் பதிவின் போது, ஆளுங் கட்சியின் அராஜகங்களுக்கு துணை போயினர் அல்லது கண்டும் காணாமல் இருந்தனர்.

நமக்கு விழுந்த வாக்குகளை ஆளும் தரப்புக்கு மாற்றும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் திட்டமிட்டு தில்லுமுல்லுகள் செய்யப்பட்டதால், 67 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளை மட்டுமே நாம் பெற்றதுபோல் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

நமது எழுச்சியை விரும்பாத ஆளும் கட்சி, மிகுந்த நுட்பத்தோடு நம்மை இழிவுபடுத்த நடத்திய சதியை நாம் கண்டு பிடித்துவிட்டோம்.

இப்போது தேர்தல் ஆணையத்தால் நாம் பெற்றதாக வெளியிடப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை உண்மையாகவே நமக்குப் பதிவான வாக்குகளில் ஒரு பகுதிதான் என்பதை காலம் நிரூபிக்கும்.

கண்மணிகளே...

நமது சமுதாய எழுச்சியை நிலை குலைய வைக்கும் வகையில் ஆளும் கட்சி செய்த அயோக்கியத்தனத்தை தெரிந்து கொண்ட சமுதாய மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். 21 ஆயிரம், 19 ஆயிரம், 13 ஆயிரம் என நமக்கான வாக்குகளை தொகுதி வாரியாக அறிவித்த போது ஒரு கணம் குழம்பிப் போய் விட்டோம்.

அலை அலையாய் ஆண்களும் பெண் களும் நமக்கு ஓட்டுப் போட்டார்கள். ஜமாஅத், ஜமாஅத்தாக நமக்குப் பிரச் சாரம் நடந்தது. சமுதாய ஆர்வலர்கள் தன்னெழுச்சியாக வாக்கு சேகரித்தார்கள். முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள் நமது மாற்று அரசியலையும், கண்ணிய மான பிரச்சாரத்தை வரவேற்றார்கள்.

நான்கு தொகுதிகளில் நிச்சயம் தலா ஒரு லட்சம் வாக்குகள் கிடைக்கும் என பிற கட்சி வேட்பாளர்களே அடித்துக் கூறினார்கள்.

இதைத்தான் ஆளுங்கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. மனிதநேய மக்கள் கட்சியால் திமுக கூட்டணி வேட் பாளர்கள் தோற்றார்கள் என்ற நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நமது தொகுதிகளில் பெரும்பாலான வாக்குப் பதிவு இயந்திரங்களில் தொழில் நுட்ப சூழ்ச்சிகளை செய்து தங்கள் கொடூர எண்ணத்தை வெளிக்காட்டி யுள்ளனர்.

கண்மணிகளே...

இவ்வளவு கேவலமாகவும், கொடூர மாகவும் திமுக தரப்பு நடந்து கொள்ளும் என கனவிலும் நினைக்கவில்லை. எனினும் நாம் இதை இப்படியே விட்டு விடப் போவதில்லை. கோழைத்தனமான இந்த சதிச் செயலை அம்பலப்படுத்தி தமிழகமெங்கும் பல்வேறு வடிவ போராட்டக் களங்களையும், பொதுக் கூட்டங்களையும் நடத்துவது குறித்து விரைவில் உயர்நிலைக் குழுவில் முடிவெடுத்து அறிவிப்போம்.

சட்டரீதியாக இதை அணுகுவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகி றோம். தேர்தல் ஆணையத்தையும் சந்திக்கப் போகிறோம்.

எனவே கண்மணிகளே... கலங்காதீர் கள். நமக்கு மொத்தமே 66 ஆயிரம் வாக்குகள்தான் கிடைத்தன என நினைக்காதீர்கள். நமக்கு நான்கு லட்சம் கிடைத்து, அதில் 66 ஆயிரம் வாக்குகள் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது.

நாம் தோல்வியை ஒப்புக் கொள் கிறோம். ஆனால் வாக்கு எண்ணிக் கையை ஏற்க மாட்டோம். இதனை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.

முதல்வர் கருணாநிதி ராஜதந்திரி என்பதைக் காட்டியுள்ளார். ஒரு ராஜதந்திரி, தனது அதிகபட்ச ராஜதந்திரத் தாலேயே வீழ்வார் என்பதை அவர் விரைவில் உணர்வார். உணர வைப்போம்.

கண்மணிகளே...

நாம் பெற்ற வாக்குகள் மகத்தானவை. யார் காலிலும் விழாமல், மார்க்க வரை முறைகளை மீறாமல், பிரியாணி பொட்ட லங்களை வழங்காமல், சாராயம் வாங்கிக் கொடுக்காமல், வாக்குச் சாவடிகளை கைப்பற்றாமல், கள்ள ஓட்டு போடாமல், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல், அராஜகங்களை செய்யாமல், ஆளும் கட்சி பலமில்லாமல், பிரபல சின்னமில்லா மல், கவர்ச்சி அரசியல் செய்யாமல், அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இவ்வளவு வாக்குகளைப் பெற்றிருக் கிறோம் என்றால், இது இமாலய சாதனை யாகும். பிற கட்சிகள் பத்து தொகுதிகளில் பெற்ற வெற்றிக்கு இணையான சாதனையாகும்.

மேற்சொன்ன அனைத்தையும் செய்து தான் பிற கட்சிகள் ஓட்டு வாங்கின. ஆனால் நாமோ மாற்று அரசியலின் அவசியத்தை மட்டுமே முன்வைத்து பிரச்சாரம் செய்தோம். கண்ணியமாக மக்களை அணுகினோம். அவர்களோடு கைகுலுக் கினோம். கலந்துரையாடினோம். விழிப் புணர்ச்சி கருத்துக்களைப் பேசினோம். அதனால் ஒரு பெரும் அலை ஏற்பட்டது. இதுவே மக்கள் மன்றத்தில் நமக்கு கிடைத்த வெற்றியாகும்.

கண்மணிகளே...

எல்லாவற்றையும் தாண்டி நமக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி கொஞ் சநஞ்சமல்ல. ஒரு தொகுதியில் 10 கோடி, 20 கோடி என மற்றவர்கள் செலவு செய்த போது, நாமோ 20 லட்சம் ரூபாய் கூட செலவு செய்ய முடியாத துயர நிலைக்கு தள்ளப்பட்டோம், ஒரு தொகுதிக்கு 20 லட்ச ரூபாயை வைத்துக் கொண்டு தேர் தலை எப்படி சந்திப்பீர்கள்? என பலரும் கேள்வி கேட்டனர்.

வேறு என்ன செய்வது? சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்! நமக்கு வந்த தேர்தல் நிதியைக் கொண்டு அதற்குள்தானே செலவு செய்ய முடியும்? நமக்கு அம்பானியுடனோ, பிர்லாக்க ளுடனோ பழக்கம் கிடையாது. ஏழை எளிய மக்களின் வியர்வையையும், நடுத்தர மக்களின் நன்கொடைகளையும் வைத்துதான் பணி செய்து வருகிறோம்.

எனவே, நிதி நெருக்கடியால் நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் சொல்லி மாளாது. எனினும் அதையும் தைரியமாக எதிர்கொண்டுதான் தேர்தல் களத்தை வலம் வந்தோம்.

கண்மணிகளே...

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை மிகமிக முக்கியமாக குறிப்பிட விரும்பு கிறேன். ஏராளமான நமது சகோதரர்கள் கடந்த ஒரு மாதமாக ஓய்வின்றி உழைத்தார் கள். குடும்பத்தினரை பிரிந்து வந்து களப்பணியாற்றினார்கள். அவர்களின் தியாகம் இணையற்றது.

சொந்தக் காசை எடுத்து வந்து அவர் களது செலவுகளை அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். தங்கள் ஊரிலிருந்து மொத்தமாக எடுத்துவந்த அரிசி, பருப்பு, காய்கறிகளைக் கொண்டு தங்கள் உணவு களை தாங்களே சமைத்துக் கொண்டார் கள். தங்கள் ஒரு வார வருமானத்தை இழந்து, வெயிலில் அலைந்து, வாகன வசதியின்றி வாக்கு சேகரித்த அவர்களது உழைப்பை நினைக்கும்போது கண்ணீர் மல்குகிறது. இந்த சகோதரர்கள் இல்லா விட்டால் நம்மால் எந்த பொதுப்பணியை யும் செய்ய முடியாது. அருமையான சகோதரர்களை இந்த இயக்கத்திற்கு அளித்த அந்த இறைவனைப் புகழுகின்றோம்.

கண்மணிகளே...

இப்படிப்பட்ட அருமை தொண்டர் கள் வேறு எந்த கட்சியில் இருக்கிறார்கள். கிடைத்ததை சுருட்டும் சுயநலக் கூட்டங்களுக்கு மத்தியில், இருப்பதை இழக்கும் இவர்கள்தான் இந்த இயக்கத்தின் இரத்த ஓட்டம் என்பதை நாம் எப்போதும் அறிந்திருக்கிறோம்.

கண்மணிகளே...

இதுபோல் வெளிநாடுகளில் வாழும் நமது சகோதரர்கள் நமது வெற்றிக்காக ஆற்றிய அரும்பணிகள் நமது தாயகத் தொண்டர்களுக்கு இணையானது. 10 மணி நேர வேலை முடிந்ததும் ஓய்வெடுக்கச் செல்லாமல், கட்டடம் கட்டடமாக ஏறி அங்கே பிரச்சாரம் செய்தார்கள்.

'இங்கு நடக்கும் தேர்தலுக்கு அங்கு எதற்கு பிரச்சாரம்?' என்று கேட்கலாம்.

அங்கு அவர்கள் வாழ்ந்தாலும், அவர் களின் இதயங்கள் தமிழகத்தில்தான் வாழ்கின்றன. அங்குள்ளவர்கள் தாயகத் தில் உள்ள தங்கள் உறவினர்களிடம் தொலைபேசி மூலம் பேசி, நமக்கு ஆதர வாக வாக்குகளைப் பதிவு செய்யவே அங்கும் பிரச்சாரம் நடைபெற்றது.

மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், கடிதங் கள் என ஒரு பெரும் சூறாவளியே வெளி நாடுகளில் வீசியது. பல சகோதரர்கள் வாக்குப் பதிவுக்கு முதல் நாள் 'தஹஜ்ஜத்' தொழுதார்கள். பலர் நோன்பு நோற்று பிரார்த்திருத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை. இறைவன் நமக்காக உழைத்த அனைவருக்கும் ஈருலகிலும் நன்மைகளைத் தருவானாக என பிரார்த்திக்கிறோம். மேலும் நமக்கு ஆதரவளித்த இந்திய தேசிய லீக் (நிஜாம்), பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், மக்கள் ஜனநாயக கட்சி (ஷெரீப்), ஜமாஅத்தே இஸ்லாமி, இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம், கிறித்தவ வாழ்வுரிமை இயக்கம் உட்பட அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக் கிறோம்.

கண்மணிகளே..

தேர்த­ல் 4 தொகுதிகளிலும் நாம் வெற்றி வாய்ப்பை இழந்ததும் உலகமே முடிவிற்கு வந்தது போல் உங்களில் சிலர் விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ளதை நான் அறிவேன். இன்னும் சிலர் நாம் தஹஜ்ஜத் தொழுகையை தினமும் தொழுது இறைவனை இறைஞ்சினோம், நஃபிலான நோன்பை வைத்தோம்; உம்ரா செய்தோம், இருப்பினும் நாம் கேட்ட பிரார்த்தனையை இறைவன் அங்கீகரிக்க வில்லையே என்று ஆதங்கம் கொண்டுள்ள தையும் நான் அறிவேன். இத்தகைய மனப்பான்மையில் உள்ள சகோதரர் களுக்கு பதிலாக அமைந்துள்ளது பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள்:

நம்பிக்கைக் கொண்டோரே! பொறு மையுடனும் தொழுகையுட னும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமை யுடையவர்களுடன் இருக்கிறான்.
(திருக்குர்ஆன் 2:153)

இன்னும், அல்லாஹ்வின் பாதை யில் கொல்லப்பட்டோரை ''(அவர் கள்) இறந்துவிட்டார்கள் என்று கூறா தீர்கள் அப்படியல்ல! அவர்கள் உயிருள் ளவர்கள் எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர் கள். (திருக்குர்ஆன் 2:154)

நிச்சயமாக, நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள் கள் உயிர்கள் விளைச்சல்கள் ஆகிய வற்றின் இழப்பினாலும் சோதிப் போம். ஆனால் பொறுமையுடை யோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:153)

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் 'நிச்சயமாக நாம் அவனி டமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். (திருக்குர்ஆன் 2:156)

இத்தகையோர் மீது தான் அவர் களுடைய இறைவனின் நல்லாசியும் நற் கிருபையும் உண்டாகின்றன; இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந் தவர்கள். (திருக்குர்ஆன் 2:157)

இந்த வசனங்கள் உஹது போர் முடிவடைந்த நிலையில் அருளப் பட்டவை. இந்த வசனங்கள் தான் இன்று தேர்த­ல் பின்னடைவை சந்தித்திருக் கும் நமக்கு ஒரு உந்துதல் சக்தியாக இருக்க வேண்டும். இந்த தேர்தல் முடிவு கள் நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ள இறை வன் நாடியுள்ள நிகழ்வுகள் என்பதை முத­ல் நாம் உணரவேண்டும்.

கடந்த காலங்களில் நாம் பெரிய வெற்றிகளைப் பெற்ற போது, நாம் இறை வனுக்கு உரிய வழியில் நன்றி செலுத்தி இருக்கின்றோமா என்பதை சற்று சிந்தித் துப் பாருங்கள். மேலே குறிப்பிட்டுள்ள வசனங்களில் இறைவன் நம்மை பொறுமை யைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேட சொல்கிறான். நமக்கு வெற்றிக் கிட்டும் போதும், நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். நாம் சோதனைகளை எதிர்கொள்ளும் போது நாம் பொறுமையுடன் அதனை எதிர் கொள்ள வேண்டும்.

முஸ்­மில் பதிவாகியுள்ள ஒரு நபிமொழியில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

வியப்பிற்குரியவராக நம்பிக்கையா ளர் இருக்கிறார். இறைவன் நம்பிக்கை யாளர்களுக்கு அளிப்பதெல்லாம் அவருக்கு நன்மையாகத்தான் இருக்கும். ஒரு நன்மை நம்பிக்கையாளனுக்கு கிடைக்கும் போது அவன் அதற்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மை யாகவே அமைகின்றது. நம்பிக்கை யாளனுக்கு இறைவன் சோதனைகளைத் தரும்போது அவன் பொறுமை காக்கி றான். அது அவனுக்கு நன்மையாகவே அமைகின்றது.

எனவே கண்மணிகளே... இந்தத் தேர் த­ல் நாம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ள நிலையில் நாம் விரக்தி கொள்வதில் பயனில்லை.

இந்த முடிவில் நாம் அறியாத நன் மையை இறைவன் நமக்குத் தந்துள் ளான். நாம் இந்த நேரத்தில் பொறுமை யைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடு வதே; அடுத்து நமக்கு பெரிய வெற்றி கிடைக்க உதவிடும்.

கண்மணிகளே...

நாம் வெற்றியை இழந்திருக்கிறோம். களத்தை இழந்து விடவில்லை. சூழ்ச்சி அரசியலில் சோதனைகளை சந்தித்திருக் கிறோம். இன்றைய நிகழ்காலம் நம்மை கைவிட்டிருக்கலாம். இறையருளால் நாளைய எதிர்காலம் நம்முடையதே என்பதை மறவாதீர்.

தேர்தலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் துவண்டு போவார்கள். நாமோ லட்சியவாதிகள். தேர்தல் என்பது நமது பயணத் திட்டத்தில் ஒரு பகுதி மட்டுமே. வெற்றி பெற்றிருந்தால் செய்ய வேண்டியிருந்த பணிகளை இனி வெளியில் இருந்து போராடி செய்வோம்.

இந்த நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு பயிற்சிக் களம் மட்டுமே. அடுத்துவரும் சட்ட மன்றத் தேர்தலை தெளிவான திட்டமிட லோடு சந்திப்போம். நாளை நமதே என்பதை மறவாதீர் இன்ஷாஅல்லாஹ்.

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரி யத்தை இழந்திட வேண்டாம்; கவலைப் படவும் வேண்டாம்; (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் வெற்றி அடை வீர்கள். (திருக்குர்ஆன் 3:139)
அன்புடன்
எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்

ம.ம.க.வினர் மீது பொய் வழக்குகள்


மனிதநேய மக்கள் கட்சியினர் சென்னையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளியன்று (15.6.09) தமுமுக, மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங் களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திமுக ரவுடிகளுக்கு எதிராகவும், காவல்துறையைக் கண் டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எனினும் அனைத்து ஆர்ப்பாட் டங்களும் அமைதியான முறையில் நடந்து முடிந்தன.

ஆனால் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் தூண்டுதல் பேரில் காவல்துறையினர் மற்றும் ம.ம.க.வினர் மீது தொடர்ச்சியாக பொய் வழக்குகளை புனைந்து வருகின்ற னர். ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத் தில் கலந்து ம.ம.க. வேட்பாளரும், மாவட்டச் செயலாளருமான சலிமுல்லா கான் உட்பட 100 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வந்தவாசியில் ததஜ அலுவலகத்தை தாக்கியதாக 30 பேர் மீதும், சேலத்தில் 20 பேர் மீதும் என ம.ம.க.வினர் மீது வழக்குகளைப் பதிவு செய்யும் அடக்குமுறையைக் கையாள ஆரம்பித்துவிட்டது ஆளுங் கட்சியான தி.மு.க.

தமுமுகவின் ஆரம்ப காலங் களில் அடக்குமுறையைக் கட்டவிழ்த் தது இதே திமுகதான். ஆயினும் தமுமுக வீறு கொண்டு எழுந்தது. மக்களின் பேரியக்கமாக மாறியது. இப்போது ம.ம.க. மீதான வழக்கு களும், அடக்குமுறைகளும் ம.ம.க. வின் எதிர்கால அரசியல் எழுச்சி யையே காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஞாயிறு, 17 மே, 2009

மண்ணைக்கவ்வியதா மனிதநேயமக்கள் கட்சி..?

த.மு.மு.க மக்கள் மத்தியில் அறிமுகமான 1995 முதல் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தி போராடி வந்தது. 2004 ல் பிளவு ஏற்பட்டு த.த.ஜ. உதயமானபின், இட ஒதுக்கீடுக்காக த.த.ஜ.வும் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில் கடந்த சட்டமன்றதேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கருணாநிதி அறிவித்தார். அதனை ஏற்று முஸ்லிம்களின் வாக்குகளை, [உயிரைக்கொடுத்து] பாடுபட்டு தி.மு.கவுக்கு பெற்றுத்தந்தனர் த.மு.மு.கவினர்.
முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்த கருணாநிதி, தான் அளித்த வாக்குறுதி அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தந்தார். அதாவது நம்மிடம் பெற்ற வாக்குகளுக்கு பகரமாகத்தான் இட ஒதுக்கீடு தந்தார். அதோடு இட ஒதுக்கீடு தந்ததற்காக த.மு.மு.க. அவருக்கு நன்றி அறிவிப்பு மாநாடும் நடத்தி கணக்கு பைசல் செய்யப்பட்டுவிட்டது.

இந்நிலையில் த.த.ஜ., முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தந்ததற்காக வரும் நாடாளுமன்றதேர்தலில்[2009 ] தி.மு.கவை ஆதரிப்போம் என்று கடிதம் தருகிறது. ஏற்கனவே கணக்கு நேர் செய்யப்பட்ட விஷயத்திற்கு மீண்டும் கட்டணம் தரும் முடிவை த.த.ஜ எடுத்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்தது. ஆனால் அதே திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரசுக்கு ஆதரவில்லை என்ற முடிவையும் எடுத்தது. அதோடு பி.ஜே.பி மற்றும் ம.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் 'தீவிர' பணியாற்றி அவர்களை மண்ணை கவ்வவைப்போம் என்றும் சூளுரைத்தது. அதற்காக எந்த காங்கிரசை ஆதரிக்கமாட்டோம் என்று பொதுக்குழுவில் தீர்மானித்தார்களோ, அதற்கு மாற்றமாக மயிலாடுதுறையில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற மமதையில், காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யரை ஆதரித்ததோடு களப்பணி என்ற பெயரில் ஒரு ஆலிமை தாக்கும் அளவுக்கு பணியாற்றினார்கள். ஆனால் மண்ணை கவ்வியது யார்? பேராசிரியரா? அல்லது த.த.ஜ. ஆதரித்த மணிசங்கர் அய்யரா? இவ்வளவுகாலம் தொடர்ந்து வென்றுவந்த மணிசங்கர் அய்யரை த.த.ஜ. ஆதரித்ததால் மக்கள் அய்யரை புறக்கணித்து அதிமுகவை வெற்றிபெற செய்துள்ளார்கள். அதோடு பேராசிரியருக்கு 19814 வாக்குகளை வழங்கி வரவேற்பும் அளித்துள்ளனர். த.த.ஜ. ஆதரிக்காத தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் வென்றுள்ளநிலையில் மயிலாடுதுறையில் மண்ணை கவ்வியதற்கு காரணம் வெற்றியையும் தோல்வியையும் தருபவன் இறைவன் என்பதை மறந்து பேராசிரியரை மண்ணை கவ்வவைப்போம் என்று ஆணவமாக கூறியதால், அல்லாஹ் அவர்கள் ஆதரித்த வேட்பாளரை மண்ணை கவ்வவைத்தான். [அல்ஹம்துலில்லாஹ்]

இந்த தேர்தல் முடிவை கண்டு ம.ம.க. துவண்டுவிடக்கூடாது. சோர்ந்துவிடக்கூடாது ஏனெனில் அதிகாரம்-பணபலம்-படைபலம்-குண்டர்கள்பலம் நிறைந்த கட்சிகளுக்கு மத்தியில் , நீங்கள் பெற்றிருப்பது உண்மையான வாக்காகும். இந்த தேர்தல் வெற்றிக்கு முதல்படிதான். பணிகளை தொடருங்கள். அந்தப்பணி இறையச்சத்தின் அடிப்படையில் இருக்கட்டும். இன்று நீங்கள் தோற்றாலும்,

*முஸ்லிம்கள் திராவிடக்கட்சிகளின் சவளை பிள்ளைகள் என்ற இமேஜை உடைத்தவர்கள்!
*ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழித்தவர்கள்!

*சமுதாயத்தின் மானம் காக்க தனித்து, தனி சின்னத்தில் நின்றவர்கள்!

*சமுதாயத்தின் கண்ணியமா? பதவியா என்று வரும்போது பதவியை தூக்கி எரிந்து சரித்திரம் படைத்தவர்கள்!

என்று வருங்காலாம் உங்களை போற்றும்!

இவை எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாம் வல்ல இறைவன் கூறுகின்றான்;
إِن تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُواْ بِهَا وَإِن تَصْبِرُواْ وَتَتَّقُواْ لاَ يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ
ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். (3:120)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اصْبِرُواْ وَصَابِرُواْ وَرَابِطُواْ وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (3:200)

முகவை எஸ்.அப்பாஸ்