இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
மனிதநேய
மக்கள் கட்சியின் சார்பில் 2012 டிசம்பர் 20 முதல் 30 வரை நடைபெறும் மது -
மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரையின் ஒரு பகுதியாக குறுந்தகடு டிசம்பர் 19
அன்று தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.
தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயீ அவர்கள் வெளியிட, பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி பெற்றுக் கொண்டார்.
அப்போது மமக துணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரசீது, மமக அமைப்புச்
செயலாளர் செய்யது அஹமது பாரூக், தமுமுக மாநிலச் செயலாளர் கோவை செய்யது
மற்றும் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட கவிஞர் அரவிந்த பாரதி உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.