புதுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 செப்டம்பர், 2010

முஸ்லிம்களுக்கும் மீனவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு – ஆணை வெளியிட்டது புதுவை அரசு

புதுவையில் வாழும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 2 சதவிகித தனி இடஒதுக்கீடு அளித்து புதுவை அரசு ஆணையை கடந்த ஆகஸ்ட் 28 அன்று வெளியிட்டது. புதுவையில் இதுவரை அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் 13 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்த்து, இதில் 2 சதவிகிதம் இனி பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டும் தனியான ஒதுக்கப்படும். இதே போல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் மீனவச் சமூகங்களுக்கு 2 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வகைச் செய்யும் ஆணையும் வெளியிடப்பட்டது.



பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பட்டியலில் பின் வரும் சமூகங்கள் இடம் பெற்றுள்ளன

1.தக்னி முஸ்லிம் (பாண்டி, காரைக்கால் மற்றும் யானம் ஆகிய பகுதிகளில் வாழ்வோர் மட்டும்

2.மாப்பிளா

3.லெப்ப்பை (இதில் மரைக்காயர், ராவுத்தர், சாயிபு, சேக், சையித் ஆகியோரும் அடங்குவர்)



மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தனி இடஒதுக்கீடு பெறும் மீனவர் சமூகத்தில் பின்வருவோர் அடங்குவர்

1. செட்டியார்

2. சின்ன பட்டினவர்

3. மீனவ செட்டியார்

4. நாட்டார்

5. பர்வர்தராஜகுலம்

6. பட்டினவர்

7. பட்டினவ செட்டியார்

8. பெரிய பட்டினவர்

9. செம்பதவர்

அரசு ஆணையை இதில் காணலாம்...

சனி, 21 ஆகஸ்ட், 2010

புதுவையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு

புதுவையில் முஸ்லிம்கள் இடஒதுக்கிட்டிற்காக தமுமுக நடத்திய இடஒதுக்கீடு பேரணியில் எடுத்த படம்.

புதுவையில் முஸ்லிம்கள் இடஒதுக்கிட்டிற்காக தமுமுக நடத்திய இடஒதுக்கீடு பேரணியில் எடுத்த படம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:

புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 2 சதவிகித தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுமென இன்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நீண்ட காலமாக புதுவை மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போராடி வந்துள்ளது. இறுதியாக முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்காவிட்டால் தமிழகம் வரும் போது புதுவை முதல்வரை முற்றுகையிடுவோம் என்றும் தமுமுக அறிவித்திருந்தது.

பல்வேறு காரணங்களை சொல்லி தனி இடஒதுக்கீடு அளிப்பதை தள்ளிப் போட்டு வந்துள்ள அம்மாநில அரசு தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 2 சதவிகிதம் அளிக்கப்படுமென அறிவித்துள்ளது. இது வரவேற்க்கதக்க அறிவிப்பாக இருந்த போதினும் புதுவையில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 2 சதவிகிதம் என்பது மிகவும் குறைவான அளவாகும். சில மாதங்களுக்கு முன்பு 2.5 சதவிகிதம் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க புதுவை அமைச்சரவை முடிவு செய்திருந்தது. 0.5 விழுக்காட்டை குறைத்து இப்போது அறிவித்திருப்பது வருந்தத்தக்கது.

இன்று புதுவை முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு திருத்தப்பட்டு முஸ்லிம்களுக்கான உள்ஒதுக்கீடு 3 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு அது உடனடியாக சட்டமாக்கப்பட்டு இந்த கல்வி ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டுமென தமுமுக கோருகின்றது. சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பின் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென தமுமுக கோருகின்றது.

புதுவையில் வாழும் மீனவ மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீ;ட்டில் 2 சதவிகித உள்ஒதுக்கீடு அளிக்க புதுவை அரசு முடிவைச் செய்திருப்பதையும் தமுமுக வரவேற்கிறது.

புதுவையில் முஸ்லிம்கள் இடஒதுக்கிட்டிற்காக தமுமுக நடத்திய இடஒதுக்கீடு பேரணியில் எடுத்த படம்.