தினத்தந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினத்தந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 மார்ச், 2012

முஹம்மத் நபியையும் , கேடுகெட்ட கூத்தாடி ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு விளம்பரம் !

Muslims fired dinamalar and dinathanthi in velloreமுஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக முஹம்மது நபியை நினைத்து கொண்டு இருக்கையில் முஹம்மது நபியையும், கேடுகெட்ட கூத்தாடி ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு விளம்பரம் வெளியானதை அடுத்து வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் தினத்தந்தி நாளிதழை எரித்து முஸ்லிம்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. அதிமுக மேற்கு மாவட்ட விவசாய அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஆம்பூரில் நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதற்காக மேற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கடேசன் விளம்பரம் கொடுத்திருந்தார். அதில், நபிகள் நாயகத்தையும் , கேடுகெட்ட கூத்தாடி ஜெயலலிதாவையும் ஒப்பிடும் விதமாக வாசகங்கள் இடம் பெற்றிருந்தது, முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் நேற்று மாலை 6 மணியளவில் தொழுகை முடிந்து வெளியே வந்த ஆயிரகணக்கான முஸ்லிம்கள் மேல்விஷாரம் பைபாஸ் சாலை சந்திப்பில் திரண்டு தினமலர், தினத்தந்தி நாளிதழ்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தாங்கள் கொண்டு வந்திருந்த தினத்தந்தி நாளிதழ்களை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பதற்றமான சூழ்நிலை நிலவியதால் ஏடிஎஸ்பி முருகேசன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
thanks to asiananban.blogspot.com

வியாழன், 22 ஜூலை, 2010

சிரியாவில் முகத்திரைக்கு விதித்த தடையை பர்தாவுக்கு விதித்த தடையாக செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கு உண்மையை விளக்கி மறுப்புக் கடிதம்

பெறுநர்

ஆசிரியர்,
தினத்தந்தி,
சென்னை.

பொருள்:மறுப்புக் கடிதம் சிரியாவில் பல்கலைகழகங்களில் முகத்திரைக்கே தடை. பர்தாவிற்கு அல்ல

அன்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
ஜூலை 21,2010 அன்று வெளியிட்ட உங்களது தினப் பத்திரிக்கையில் பக்கம் 23ல் வெளிநாட்டு விநோதங்கள் என்ற பகுதியில் வெளிவந்த செய்தி எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அச்செய்தி இதுதான் "சிரியா நாட்டு பல்கலை கழகங்களில் பர்தா அணிய தடை" அதுமட்டுமின்றி அத்தடைக்குரிய காரணமாக தாங்களே வெளியிட்ட செய்தி என்னவெனில் "பர்தா அணிவது சிரியா பல்கலை கழகங்களின் பாரம்பரியத்திற்கும், கல்விச் சூழலுக்கும் எதிராக இருப்பதாகவும் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது."

உங்களுடைய செய்தி உண்மைச் செய்தியை திரித்து வெளியிட்டு உள்ளதை நாங்கள் காண்கிறோம்.எதார்த்தத்தில் இந்தச் செய்தியைப் படிப்பவர்கள் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள நேரிடலாம். 'என்னப்பா முஸ்லிம் நாட்டிலேயே பர்தாவுக்கு தடையாம்!, அதுவும் கல்விச் சூழலுக்கு எதிரானதாம் பர்தா" என்று பொதுமக்கள் எண்ணவைப்பதாக உங்கள் செய்தி வெளியாகி இருக்கிறது.

தயவு செய்து செய்தியினை முழுமையாகப் படிக்க வேண்டும்.மிகவும் பிரசித்திப் பெற்ற 'அரப் நியூஸ்' என்ற பத்திரிக்கை வெளிட்ட இந்த செய்தியை உங்களுக்கு இத்துடன் அனுப்பியுள்ளேன்.

சிரியா அரசாங்கம் பல்கலைக் கழகங்களில் 'முகத்திரை ('Niqab' அல்லது 'Face veil') அணிவதை தடை செய்து இருப்பதாகத்தான் உள்ளதே தவிர நீங்கள் எழுதியிருப்பது போல் 'பர்தா' அணியத் தடை இல்லை.

மேலும் நீங்கள் செதுக்கியிருக்கும் விதம் 'பர்தா கல்விச் சூழலுக்கு எதிரானதாகும்'. எந்த ஒரு 'செய்தி நிறுவனமும்' இது போன்று பிரசுரித்ததாகத் தெரியவில்லை.

'அசோசியேட் பிரஸ்ஸாக' இருக்கட்டும் 'REUTERS' ஆக இருக்கட்டும். சிரியா அரசு பல்கலை கழகங்களில் 'முகத்திரை' அணிவதை தடை செய்துள்ளதற்கு காரணம் அது 'சிரியாவின் சமயச் சார்பற்ற அடையாளத்தை பாதுகாப்பதற்காக' என்பது மட்டுமே.

ஆக மொத்தத்தில் உங்கள் பத்திரிக்கை செய்தியை திரித்து வெளியிட்டுள்ளது முஸ்லிம்களின் மனதை புண்படுத்துகிறது.

முஸ்லிம்கள் அல்லது இஸ்லாத்தைப் பற்றி எழுதும்பொழுது அந்த மதத்தைப் பற்றிய அறிவு எழுதுபவர்க்கு நிச்சயம் அவசியம். ஒரு தவறான கருத்தை பரப்பியிருக்கிறீர்கள்.இதற்கு மாற்றுப் பரிகாரம் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

என்றும் உண்மையே நாடும்

முஹம்மது இஸ்மாயீல்
ஷார்ஜா, யு.ஏ.இ.


thanks to : முஹம்மது இஸ்மாயீல் & பாலைவனத் தூது