திட்டச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திட்டச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஜூலை, 2010

சர்வதேச அளவில் சாதித்த சல்மா ஃபாரூக்


நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்தவர் முஹம்மது பாரூக். இவர் செசல்ஸ் தீவில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் நிறுவன உரிமையாளராக உள்ளார். இவரின் மகள் சகோதரி சல்மா செசல்ஸ் தீவில் உள்ள சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். சர்வதேச அளவில் 100 நாடுகளை சேர்ந்த 2,000 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற “இண்டர்நேசனல் ஜெனரல் சர்டிபிகேட் ஆப் செகண்டரி எஜிகேசன்ஸ்” என்ற தேர்வு கடந்த ஆண்டு (2009) அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதனுடைய சர்வதேச முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியானது. இதில் கலந்துக்கொண்ட சகோதரி சல்மா சர்வதேச அளவில் மூன்று பாடங்களில் முதல் பத்து இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளார்.


ஆங்கில இலக்கிய பாடப்பிரிவில் சல்மா ஃபாரூக் சர்வதேச அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். மேலும் உயிரியல் பாடத்தில் மூன்றாம் இடத்தையும், புவியியல் பாடத்தில் ஒன்பதாம் இடத்தையும் பெற்றுள்ளார். இன்பர்மேசன் கம்யூனிகேசன் மற்றும் புவியியல் பாடங்களில் செசல்ஸ் தீவில் சிறப்பிடத்தையும், இயற்பியல் பாடத்தில் அதீத சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளார். பத்து பாடங்களிலும் 95 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளதால் இவருக்கு “ஏ ஸ்டார் (A-Star)” என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.


,


செவ்வாய், 14 ஏப்ரல், 2009

திட்டச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்று விழா

நாகப்பட்டிணம், ஏப். 11: நாகை மாவட்டம், திட்டச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியேற்று விழா அண்மையில் நடைபெற்றது.

தமுமுக மாவட்டத் தலைவர் ஏ.எம்.ஜபருல்லா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பரகத் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் செய்யது முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

தமுமுக மாநிலத் துணைச் செயலர் ஜெ.ஹாஜாகனி, மாவட்டப் பொருளாளர் கவுஸ், துணைச் செயலர் அஸ்ரப் அலி, மாவட்ட வர்த்தகர் அணி செயலர் முகமது ரபீக், மாவட்ட மாணவரணி செயலாளர் ஹமீது ஜெகபர், கட்சியின் மாவட்டப் பொருளாளர் சுலைமான், திட்டச்சேரி கிளை பொறுப்பாளர்கள் ரியாஸ், ரித்தாவுதீன், அஸ்ரப், அமீன், சிராஜ்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமணி