ஜம்மு-காஷ்மீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜம்மு-காஷ்மீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மே, 2012

காஷ்மீர் மாநிலத்திலிருந்து முஸ்லிம் பெண் ஐஏஎஸ்!

காஷ்மீர் மாநிலத்தின் ஈஸ் அஸ்கர் என்ற 25 வயது இள மங்கை ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு

'அகில இந்திய அளவில் நடக்கும் ஒரு தேர்வில் வெற்றி பெறுவது என்பது எவ்வளவு சிரமம் என்பது நமக்கு தெரியும். அதுவும் கடந்த 20 வருடங்களாக முழு காஷ்மீரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பெண் என்ற வகையில் பாதுகாப்பும் முக்கியததுவம் பெறுகிறது. எனது பெற்றோரும் எனது உறவினர்களும் நான் இந்த நிலையை அடைய மிகுந்த உறு துணையாக இருந்துள்ளனர்.” என்றார்.

கேள்வி: காஷ்மீரைப் பொறுத்தவரை மேல் படிப்புக்கு செல்வது என்பது மிகுந்த சிரமமான ஒன்று என்று சொல்லப்ட்டு வருகையில் உங்களின் இந்த முன்னேற்றம் எதைக் காட்டுகிறது?

பதில்: “நான் மட்டும் அல்ல. என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் காஷ்மீருக்கும் இந்திய நாட்டுக்கும் திறம்பட பணியாற்றவே விரும்புகின்றனர். லடாக், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஸ்ரீநகர் என்று அனைத்து பிரதேச மக்களும் தற்போது படிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கொடுத்தால் கண்டிப்பாக தங்களின் திறமையினால் முன்னுக்கு வருவார்கள்.”

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

காஷ்மீரும் அதன் சர்சைக்குரிய வரைபடமும்!!!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் வரைபடத்தில் சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியை சிவப்பு நிறத்தில் சுட்டிக் காட்டியதற்காக எங்களை பாராட்டாமல் விமர்சிப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் வரைபடத்தை மக்கள் ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியை பச்சை நிறத்திலும், சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியை சிவப்பு நிறத்திலும் சுட்டிக் காட்டியிருந்தது. இவ்வாறு செய்வது அவ்விரு நாடுகளின் ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொண்டுள்ளது போல் உள்ளது என்று அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து மெகபூபா அளித்த விளக்கம் வருமாறு, ஜம்மு-காஷ்மீர் வரைபடத்தில் சீனா ஆக்கிரமித்துள்ள பகுதியை சுட்டிக்காட்டவே தனியாக சிவப்பு வண்ணம் பயன்படுத்தினோம். அதற்காக முறையே எங்களை பாராட்ட வேண்டும். காஷ்மீரின் லே பகுதியை சீனா ஆக்கிமிரத்து வருகிறது. அதைப்பற்றி கவலைப்படாத உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனியாக விசா வழங்குவதைப் பற்றி பேசுகிறார். சீன ஆக்கிரமிப்பை உடனே தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்திய சுதந்திரத்துக்கு முன்பு இருந்ததைப் போன்று அனைத்துப் பகுதிகளும் காஷ்மீருடன் இணைக்கப்பட வேண்டும். காஷ்மீர் பிரச்னையை மூடி மறைப்பதை விட்டுவிட்டு சுதந்திர காஷ்மீர் உருவாவது பற்றி தீர்வு காண இந்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

திங்கள், 7 ஜூன், 2010

கஷ்மீர்:போலி என்கவுன்ட்டர்- ராணுவ கர்னல் பதவி நீக்கம்

ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் 3 இளைஞர்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் ராணுவ கர்னல் ஒருவர் பதவி நீக்கமும் மேஜர் ஒருவர் தாற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜபுத்திர 4-வது படைப்பிரிவைச் சேர்ந்த கர்னல் டி.கே.பதானியா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ராஜபுத்திர 4-வது படைப்பிரிவு மேஜர் ரூபிந்தர் மீது எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் அவர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று ராணுவத்தின் வடக்கு படைப்பிரிவு தளபதி தெரிவித்துள்ளார்.

குப்வாரா மாவட்டத்தில் கடந்த ஏப்ரலில் 3 இளைஞர்கள் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்தனர்.அவர்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்ததில், போலி என்கவுன்ட்டர் மூலம் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்தச் சம்பவத்துக்கும் கர்னல் பதானியா,மேஜர் ரூபிந்தருக்கும் தொடர்பிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.இதையடுத்து அவர்கள் மீது ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.