சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 அக்டோபர், 2010

சில்லறை விலையில் சினிமாயிஸம்!

E-mail

பாடசாலை மாணவர்களுக்கு விஞ்ஞான கோட்பாடு (Scientifical theories)களை விளங்கப்படுத்தும் ஆசிரியர்கள், அதனை மாணவர்கள் மனதில் சரியாக பதியவைக்க வேண்டும் என்பதற்காக ஆய்வு கூடங்களை பயன்படுத்தி செயல்படுத்தியும் (Practical)காண்பிக்கிறார்கள்.

இது கல்வி அறிவை மேன்மைப்படுத்துவதற்கு தேவையான ஒரு முக்கிய அம்சமாகும். குறிப்பாக வாழ்க்கைக்குத் தேவையான கல்வி, இது கோட்பாடுகளுடன் மட்டும் நின்றுவிடாமல் செயல்வடிவில் காண்பிக்கும் ஒரு முயற்சியாக இந்த முயற்சி பரிணமிக்கிறது.

இந்த செயன்முறை கல்வி திட்டம் இல்லாமல் ஒரு வைத்தியரால் தனது பணியை எடுத்துச் செல்ல முடியாது என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டதும் அனுமதித்ததுமாகும். ஆனால் அதே பாடசாலையில் படிக்கும் மாணவர்கள், எப்படி பொய் சொல்லுவது?, எப்படி களவெடுப்பது? எப்படி மது அருந்துவது? எப்படி அந்நிய பெண்களுடன் உறவுகளை வளர்த்துக்கொள்வது? எப்படி விபச்சாரம் செய்வது? என்பதையெல்லாம் செயல்வடிவில் சொல்லும், காண்பிக்கும் ஒரு ஊடகம், எல்லா நாடுகளிலும் ஆளும் கட்சி அரசியல் ஆதாரவுடன் மிகப் பரபரப்பாகச் செயற்பட்டுவருகிறது.

ஒரு தீராத நோய்க்கு கடைசியாக மது தான் மருந்து என்கின்ற நிர்ப்பந்தம் ஏற்படுகிற போது, மது மக்களுக்கு பயனளிக்கிறது என்று சொல்லி தெருவெல்லாம் மதுக்கடைகளை கட்டியெழுப்புவதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோமோ, அது போல் தான் இந்த வழிகெடுக்கும் ஒரு ஊடகம் எம்மை ஆடிப் படைக்கிறது.

அது தான் ‘சினிமா’ என்கிற சமூக எதிரியாகும்.

அங்கம் ஒன்று:

பாதையில் பயணிக்கும் போது காணும் ஒரு தேலைப் பிடித்து சட்டைக்கும் இடுவதும், பக்கத்து வீட்டுக்காரன் இருக்கும் போது மனைவியின் அழகை திறந்து காட்டுவதும் எப்படி பாதிப்பைத் தருகிறதோ, அதைவிடவும் பல் மடங்கு தீங்கு தருவது தான் இந்த சினிமா என்கிற ஷாத்தான். சினிமாத் துறையில் பணம் சம்பாதிக்கும், காலம் கடத்தும் சிலர், சினிமாத் துறை சமூக சீர்த்திருத்தத்திற்கும் வழிகாட்டகளுக்கும் முக்கிய பங்கை வகிக்கின்றது என்ற அறிவற்ற கருத்துக்களையும், பேட்டிகளையும் வழங்கிவருவதை பரவலாகப் பார்க்கமுடிகிறது.

இன்று உலகலவில் இயற்றப்படும், திரையிடப்பதும் சினிமாப் படங்கள், சின்னத்திரை தொடர் நாடங்கள், பாடல்கள் அனைத்தும் எமது சமூகத்தின் கலாச்சாரங்களையும் நாகரிகங்களையும் அழித்தொழிக்க பிறந்த ஒரு ஊடகமாகும்.

சமூகத்தை வழிகாட்ட மதங்கள், மார்க்கங்கள் பிறந்தது என்று சொல்லுவது போன்று அதே சமூகத்தை வழிகெடுத்த வந்தது தான் சினிமாத்துறை என்றால் அது 100 சத வீதம் உண்மையாகும்.

சினிமாத்துறைசார் இயக்குநர்கள், வடிவமைப்பாளர்கள் திரையிடப்படும் சினிமாப் படங்கள் அனைத்திலும் தவிர்க்கமுடியாத சில அங்கங்களை வடிவமைத்திருக்கிறார்கள். குறித்த சில பகுதிகளை தவறது உற்படுத்தியவாறு வெளியிடுவார்கள், அவைகளில் சில,

o எல்லா சினிமாப் படஙகளிலும் காமத்தைத் தூண்டும் அல்லது காதலைத் தூண்டும் பாடல் வரிகள் இருக்க வேண்டும். அந்த பாடல் வரிகளை செயலுருவில் காண்பிக்கும் காட்சிகளை நடிகனும் நடிகையும் நடித்துக் காண்பிப்பார்கள்.அதில் காட்சி தரும் நடிகை அல்லது நடிகைகள் முழு ஆபாசமாக, வெரும் இரண்டு பீஸ்களுடன் மட்டும் வருவார்கள்.

o ஒரு பணக்காரனை அச்சுறுத்தி, பிலக்மைல் பண்ணி அவனது பணங்களை கொல்லையடிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் காட்சி.

o போதை பொருட்கள் பாவணை, புகைத்தல், மது அருந்துதல்.

o அந்த போதையில் பெண்களை கற்பளித்தல், பிறரை துன்புறுத்தல், கண்ணில் படும் மனிதர்களுடன் வீணாக சண்டையில் ஈடுபது...

o நல்ல மனிதர்களுக்கு அநியாயம் செய்தல்.

o கல்லூரியில் எடுக்கும் படமாக இருந்தால், வகுப்பில் ஆசிரியர்களுடன் மோசமாக நடந்துகொள்ளுதல், சக மாணவிகளை ஸைட்டடித்தல், ஆபாச பேச்சுக்களில் ஈடுபடல், தகாத உறவுக்கு வழிவகுத்தல்.

o பஸ் பயணம் அல்லது ரயில் பயணம் தொடர்பான கட்டமாக இருந்தால், பயணத்தின் போது டிக்கட் எடுக்காமல் பயணிப்பது எப்படி? பக்கத்து சீட்டில் இருக்கும் கன்னிப் பெண்ணை எப்படி கற்பளிப்பது? பக்கத்து சீட்டில் இருக்கு பயணியின் பணப் பையை எப்படித் திருடுவது? என்ற காட்சிகள் தாராலமாக காண்பிக்கப்படும்.

o வீட்டில் இடம்பெறுவது போன்ற காட்சியாக இருந்தால், அப்பாவுக்கு தெரியாமல் தகாத குறும்புகளில் ஈடுபடுவது எப்படி?, அப்பாவிடம் பொய் சொல்லி எப்படி பணம் பறிப்பது? போன்ற மாதிரியான காட்சிகளுக்கு அளவிருக்காது.

o குடும்பப் படங்கள் என்ற பெயரில் இன்னும் சில சினிமாக்கள், சின்னத்திரை தொடர் நாடங்கள், இவைகள் அதிகமாக எமது பெண்களால் பார்க்கப் படுபவை.

இதிலும் பல அட்டகாசங்கள்:

கனவனுக்கு எப்படி பொய் சொல்லுவது?, சொந்தக்காரர்களுடன் எப்படி சண்டை வளர்த்துக் கொள்வது?, மாமன் மாமிகளுடன் எப்படி கெளரவமற்ற முறையில் நடந்து கொள்வது? கணவன் இருக்க, அவனுக்கே தெரியாமல் வேறு ஒருவனுடன் கள்ள உறவை வளர்த்துக்கொள்லவது எப்படி? மனைவி இருக்க வேறு ஒருவளுடன் குடும்ப நடத்துவது எப்படி? போன்ற காட்சிகள் எல்லையற்று காணப்படும்.

o இவைகளுக்கும் மேலாக கதாநயகன், கதாநாயகியாக நடிக்கும் வாலிபனும் யுவதியும் எப்படி ஒருவரை ஒருவர் கட்டியணைப்பது, முத்தமிடுவது, ஓரே போர்வையில் உறங்குவது போன்று காட்சிப் படுவது, நிர்வாணமாக குளிப்பது அனைத்தும் எந்த வகையில், எந்த மததில் அனுமதிக்கப் பட்டது? எந்த பெற்றோர்களால் ஆசிர்வகிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது?

o படக் காட்சி எடுப்பதற்காக ஊர் ஊராக, நாடு நாடாகப் பயணிக்கும் இந்த சினிமாக் கும்பல் பயணத்தின் எப்படி நடந்துகொள்கிறார்கள். எத்தனை நடிகைகள் தங்கள் கற்பை தனது துணை நடிகனுக்கும், இயக்குநருக்கும் விருந்தாகக் கொடுக்கிறார்கள்?

இந்த இழி செயலை எத்தனை சினிமாத் துறை ஆண்மக்கள் பயன்படுத்தாது, தனது தங்கையாக அந்த சக நடிகையை நினைத்து பரிசுத்தவானாக நடந்துகொள்கிறார்கள்?

உதாரணமாக, ஒரு நடிகை 20 படங்களில் நடிக்கிறால் என்றால் 20 வேறு நடிகர்களுடனும் இயக்குநர்களுடனும் வேறு பல கதாபாத்திரங்கள் தரிக்கும் ஆண்களுடனும் தனது காம இச்சையை பகிர்ந்து கொள்கிறால்? (ஒரு பெண்ணாக இருந்து அவள் அனுமதி மறுத்தால், சினிமாத்துரையிலிருந்து அவள் துக்கியெறியப்படுவால்).அப்படியென்றால் அவளுக்கு என்ன பெயர் சமூகத்தில் சொல்லுவது? அதனை வாசகர் கருத்துக்கு விட்டுவிடுகிறேன்.

இந்த செயல்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டது தான், அதனால் தான் நாங்கள் எங்களுடைய பிரதேசங்களில் அல்லது எங்களது சொந்தங்களை அனுமதித்திருக்கிறோம் என்பதற்கு இந்துக்கள் தங்கள் வேத நூல்களிலிருந்து ஆதாரத்தைக் கொண்டு வரட்டும், கிறிஸ்தவர்களும் தங்கள் ஆதாரத்தைக் கொண்டு வரட்டும், யூதர்களும் பெளத்தர்களும் அவர்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வரட்டும், அதே போன்று முஸ்லீம்களும் தங்கள் வேத புத்தகங்களிலிருந்து ஆதாரங்களை கொண்டு வரட்டும் பார்க்கலாம்.

சமூக சீர்திருத்தம் தொடர்பாக பேசும், எழுதும், செயல்படும் எத்தனை தியாகிகள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்க, கேவலம் சினிமாவில் பாடல்வரிகள் எழுதினார், எழுதுகிறார் என்பதற்காக எத்தனை பதக்கங்கள், பட்டங்கள் கொடுக்கப்பட்டது, கொடுக்கப்பட்டு வருகிறது? அந்த பாடல் வரிகளுக்கு இசை அமைத்தார் என்பதற்கு எத்தனை பாராட்டுக்கள்? பட்டங்கள்?

சினிமாவில் ஒரு நடிகன் ...வெறியால் தனது நாக்கால் ஒரு வயசுப் பெண்ணில் தொப்புளில் வட்டம் போட்டார் என்பதற்காக, சிறந்த நடிகர், நடிகைகள் என்று எத்தனை பாராட்டு விழாக்கள், பதக்கங்கள், பட்டங்கள்? இது தான் சமூக சீர்திருத்தமா?

இவர்கள் சமூக சீர்திருத்தவாதிகளா?இந்த சினிமாத் துறையின் தாக்கத்தை பாருங்கள்,மகன் படிக்க வேண்டும் என்ற பேராசையுடன் பாடசாலைக்கு அனுப்பி வைக்கின்றார்கள் பெற்றார்கள், பாடசலை வழியிலேயை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு சினிமாப் பார்ப்பதற்காக அல்லது திருடுவதற்காக அல்லது ஒரு சக மாணவியை கடத்துவதற்காக வகுப்பை கட் செய்வதை பரவலாகப் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட தகவல்களை எல்லா செய்தி ஊடகங்களிலும் பார்க்க கேட்க முடிகிறது. இந்த நிலையை உருவாக்கியது சினிமாத் துறை என்றால் அதை எவராலும் மறுக்க, மறைக்க முடியாது.இதை மறுப்பவர்களுடன் இது தொடர்பாக பகிரங்கமாக விவாதிக்கலாம்.

அங்கம் இரண்டு:

ஒரு வைத்தியர் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டால் என்றால் அதை தவிர்த்துக் கொள்கிறோம். புகை பிடிக்க வேண்டால் அல்லது மது அருந்த வேண்டாம், உங்கள் நோயை சீர் செய்ய அதுதான் நல்லது என்ற வைத்திய ஆலோசனையைக் கேட்ட உடன் நிருத்திவிடுகிறோம் அல்லது அதற்கு முயற்சிக்கிறோம். காரணம் எமது நீண்ட ஆயுளுக்கு அது துணை புரிகிறது. அதே போன்று எமது மூலை, சிந்தனை சீர் பெறுவதற்கும் விவேகமாக இயங்குவதற்கும் எம்மிடத்தில் இருக்கின்ற மருந்துகளில் ஒன்று, சினிமாப் பார்க்காமல் அதிலிருந்து தவிர்ந்திருப்பதும் என்றால் எத்தனை பேர் ஏற்றுக் கொள்வீர்கள்.

உங்கள் சூழலில் வாழும் எந்த சிந்தனையாளர்களிடமும் அல்லது எந்த மனோதத்துவ அறிஞர்களிடத்திலும் ஆய்வாளர்களிடத்திலும் இதை பற்றிக் கேளுங்கள். இந்த உண்மையை அவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.

நாம் வயிற்றுப்பசியைத் தீர்ப்பதற்கும், மேலும் வளர்வதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தினந்தோறும் மூன்று தடவை உணவு உண்ணுகிறோம், ஆனால் எத்தனை பேர் எமது மூலை வளர வேண்டும் நல்ல முறையில் சிந்தனைத் தெளிவு கிடைக்க வேண்டும் என்று அதற்கு உணவு படைக்கிறோம்?

எமது சிந்தனை சீர்பெறுவதற்கும் மூலை அபிவிருத்தி அடைவதற்கும் உரிய உணவு என்ன வென்றால், அந்த மூலை வளர்ச்சியை பாதிக்கும் நச்சுத் தன்மைவாய்ந்த செயலிருந்து தூரமாகி இருப்பது மிக முக்கியமானதாகும். அப்படியென்றால் வாருங்கள் சமூக சீரழிவை உண்டுபன்னும் சமூகத்தின் கலாச்சாரத்தை பாதிக்கச் செய்திருக்கும் சினிமாவிலிருந்து ஒதுங்குவோம், அதற்கெதிராக குரல் கொடுப்போம். சினிமாத் துரையை வளர்க்கும் அரசாங்களையும் ஆதரவு அமைப்புக்களையும் சிந்திக்கச் செய்வோம்.

அங்கம் மூன்று:

சில நவீன கால அறிஞர்கள், முஸ்லிம்கள் சினிமாவில் நடிப்பதும், பார்ப்பதும் கூடும், அதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது என்று கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். அதற்கு ஆதரவாக ஃபத்வாவும் கொடுத்து வருகிறார்கள். இப்படிப் பட்டவர்களை எம்மில் சிலர் தங்களது மேலான மார்க்க அறிஞர்களில் ஒருவராகவும் பார்த்து, அவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு அலைகிறார்கள். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் சினிமாவில் நடிக்கலாம் என்று கூட ஃபத்வா.

ஏன் மார்க்கத்தை விலை பேசுகிறீர்கள்? மார்க்கத்தில் உங்கள் மனோ இச்சைகளை திணிக்கிறீர்கள் என்றால் அதற்கு பதில் இல்லை. இந்த சில அறிஞர்களிடத்தில் அல்லது அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களிடத்தில் சில கேள்வியை சில சிந்தனையாளர்கள் முன் வைக்கிறார்கள்,

1. நீங்கள் அனுமதிக்கும் இந்த சினிமா இன்று எந்த நாட்டில், திரை அரங்குகளில் காட்சிப் படுத்தப்படுகிறது?

2. ஒரு பெண் அந்நிய ஆணுடன் தேவையற்ற தொடர்புகளை வைத்துக் கொள்வதை இஸ்லாம் தடுப்பதால், சினிமாவில் ஒரு ஆணும் பெண்ணும் எப்படி கதாநாயகனாக, கதாநாயகியாக வேடம் போட்டு நடிக்க முடியும்? முடியாது என்றால்,

3. அனுமதிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் சேர்ந்து நடிக்கலாம் என்றால் தந்தையையும் மகளையும் கதாநயகனாகவும் கதாநாயகியாக்வும் நடிக்க அனுமதிப்பீர்களா?

4. அல்லது அனுமதிக்கப்பட்ட கனவனும் மனைவியும் சினிமாவிலும் அதே கனவனும் மனைவியும் போல் நடிப்பது தவறில்லை என்றால், நீங்கள் இயற்றும் படத்தில் அதே கனவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுவதையும், முத்தமிட்டுக் கொள்வதையும் சண்டை பிடித்துக் கொள்வதையும், ஒன்றாக படுத்துத் தூங்குவதையும் காட்சிப் படுத்துவீர்களா?

5. பெண்கள் சினிமாவில் நடிக்கமுடியும் என்றால் சந்தர்ப்பம் கிடைத்தால் இன்றை சினிமாவில் உங்கள் வீட்டுப் பெண்களை நடிக்க அனுமதிப்பீர்களா?

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக கத்தாரிலிருந்து ஒரு நிருவனம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

சில முஸ்லிம் அமைப்புக்களால் அறிஞர்களில் ஒருவராக பார்க்கப்படும் 'யூசுப் கர்ளாவி' அவர்கள் இதைப் பற்றி கருத்துச் சொல்லும் போது: ’இது இஸ்லாத்தைப் பரப்புவதற்கான ஒரு தஃவா முயற்சியாகும்’ என்று கூறினார். யானைக்கும் அடி சறுக்கும் என்பார்களே! அது இதுதான் போலும்!

மதுபானம் தடை செய்ததைப்பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது, நன்மையைவிட தீமைகளே 'அதில்' அதிகம் என்றார்கள். ஆகவே அதை தடை செய்தார்கள். சினிமாவில் சில நன்மைகள் உண்டு என்று சொல்லக்கூடியவர்கள் மனதில் கை வைத்துச்சொல்லட்டும் 'அதில்' நன்மையை விட தீமை பல மடங்கு அதிகமல்லவா?

அறிவுள்ள மக்கள் எப்போதும் நல்லதையே எடுத்து நடப்பவர்கள், எடுத்துச் சொல்பவர்கள் என்பது யதார்த்தமென்றால் சினிமா ஒரு சமூகத் துரோகி, அத்துடன் இன்றைய வாழும்கலைகளில் இது முதன்மை பெரும் சமூக வழிகேட்டிற்கு முழுமையாக துணை போகிறது என்பதை உணர்ந்து இதை ஒழிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் முயற்சிப்போம்.

source: http://changesdo.blogspot.com/2010/09/blog-post_25.html,

http://www.blogger.com/post-create.g?blogID=973875757451047974


வியாழன், 9 ஜூலை, 2009

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

16 வயது... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள். வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள்.

சென்னையில் இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து... தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து... காதல் வளர்த்த காலம் போயே போச்சு.

நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு... 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை.

செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.

காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்...

கடந்த 2 மாதங்களில் மட்டும் சென்னையில் பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக 50-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. இதில் வட சென்னை மற்ற பகுதிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்” பட காட்சிதான்.

அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு... என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து வளர்த்து... வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து வட சென்னை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும், டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன் சுற்றும் நிலை ஏற்படுகிறது.

டி.வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது.

பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு!
வட சென்னை செம்பியம் போலீஸ் நிலையத்திற்கு வாரம் 5 புகார்களும், புளியந்தோப்புக்கு 4 புகார்களும், எம்.கே.பி.நகர் போலீசுக்கு 3 புகார்களும், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் முறையே 4 புகார்களும், வருகிறது. குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க அனுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்.

வியாழன், 2 ஜூலை, 2009

பொக்கிஷம் என்ற பெயரில் ஒரு விஷம்! வருகிறது இன்னொரு கலவர திரைப்படம்!





இயக்குனர் சேரன் இயக்கி நடிக்கும் பொக்கிஷம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.சினிமா பைத்தியங்கள் நிறைந்த தமிழகத்திற்கு புதிய திரைப்படங்கள் வெளிவருவது ஒன்றும் புதிது அல்லவே என்று நீங்கள் கேட்கலாம்.திரைப்படம்,கலை என்ற பெயரில் வியாபார வெறி பிடித்து சினிமாகாரர்கள் செய்யும் சமூக சீரழிவுகளை வன்மையாக கண்டிப்பவர்கள் நாம்.சினிமா என்னும் சீரழிவு கலாச்சாரத்தில் இருந்து தமிழ் முஸ்லிம் சமுதாயம் பெரும்பாலும் ஒதுங்கியே இருந்து வருகிறது.ஒரு சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் சினிமா தளத்தில் இயங்கி வருகிறார்கள்.ஒரு சில மார்க்கம் தெரிந்த முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்களால் மார்க்க விசயங்களை முஸ்லிம் சமூக அவலங்களை வெகு ஜன ஊடகமான சினிமாவில் பூடகமாக கூட தெரிவிக்க முடிவதில்லை.தெரிவிக்கவும் முயலுவதில்லை.
சினிமா என்ற ஊடகத்தின் மூலம் புரட்சிகளை ஏற்படுத்திய பல திரைப்படங்கள்(உமர் முக்தார்) மனித வாழ்வின் அவலங்களை,அழகியல்களை காட்டும் அற்புதமான திரைப்படங்கள்(ஈரானிய திரைப்படங்கள்),கடந்த கால நிகழ்வுகள்,மக்கள் தலைவர்களின் வரலாறுகள் என திரைப்படங்கள் பல பரிணாமங்களை கொண்டவை, மக்களின் எண்ணங்களை எழுச்சி பெற வைக்கவும்,நல்லவை பக்கம் நாட்டம் பெற வைக்கவும் சுய உணர்ச்சி கொள்ள வைக்கவும் திரைப்படங்கள் பெரும் பங்காற்றுகின்றன.ஆனால் பொழுது போக்கு என்ற பெயரில் சமூக பொறுப்புகளை மறந்து வியாபார வெற்றி,பணம் என்ற குறிக்கோளுடன் மட்டுமே களமிறங்கி உள்ள நமது இந்திய குறிப்பாக தமிழ் திரைப்பட வியாபாரிகள் பெண்களின் அந்தரங்க அவயங்களை காட்டுவதிலும் காதல் என்ற பெயரில் சுய ஆசைகளை கற்பனைகளை திரைப்படங்களாக எடுப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.தமிழ் சினிமா தொடங்கியதில் இருந்து இன்று வரை காதல் என்ற ஒற்றை சொல்லை வைத்து வித்தை காட்டுவதில் சினிமாக்காரர்கள் வல்லவர்கள்.
அந்த வகையில் காதல் கதை என்ற பெயரில் சர்ச்சைக்குரிய அல்லது சர்ச்சை ஆகும் என்றே தெரிந்து எடுக்கப்பட்ட படம்தான் சேரனின் பொக்கிஷம்.படத்தின் கதை இதுதான்.நாகூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான இலக்கியம் படிக்கும் கதிஜாவிற்க்கும் (நடிகை பத்மப்ரியா) கப்பல் பொறியாளரான இந்து இளைஞர் சேரனுக்கும்(கதைப் பெயர் தெரியவில்லை) நடக்கும் காதல் அதை ஒட்டிய சம்பவங்கள்தான் கதை.இதில் இருவரும் கடிதம் மூலமாகவே தங்கள் காதலை பரிமாறிக் கொள்கிறார்களாம்.1970 ம் ஆண்டு கால கட்டத்தில் கதை நடப்பதாக செட்டிங் போடப்பட்டு படம் எடுக்கப் பட்டுள்ளதாம்.
மணிரத்தனம் என்ற இருட்டுப்பட இயக்குனர் பம்பாய் என்று இதேபோல்தான் முஸ்லிம் பெண் இந்து இளைனன் என்ற கான்செப்டில் ஒரு கதை எடுத்தார்.படத்தில் முஸ்லிம் பெண் கடல்புறத்தில் குலுங்க குலுங்க ஓடி வரும் காட்சியை ரசிகர்களுக்கு விருந்தாக்கினார்.பால் தாக்கரேவுக்கு மட்டும் படத்தை போட்டு காண்பித்து அனுமதி வாங்கி வெளியிட்டார்.முஸ்லிம் சமூக பெரியவர்களுக்கோ,இயக்கங்களுக்கோ படத்தை காட்டவில்லை.ஏன் காட்ட வேண்டும் என்ற பாசிச சிந்தனைதான் அவரை அவ்வாறு செய்ய வைத்தது. விளைவு உணர்ச்சி வசப்பட்ட உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் வெடி குண்டுகளை மணி ரத்தினத்தின் வீட்டில் வீசி வெளிச்சம் ஏற்படுத்தினர்.நல்ல வேலையாக தப்பி பிழைத்தார் இருட்டு இயக்குனர்.இந்த வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.சிலர் சிறையில் வாடி வருகின்றனர்.மணி ரத்தினத்தின் கதை தெரிந்தும் சினிமாவை புறம் தள்ளியே வைத்திருக்கும் தமிழ் முஸ்லிம்களின் குணம் தெரிந்தும் தொடர்ந்து சில தமிழ் பட வியாபாரிகள் நம்மை தொந்தரவு செய்தே வருகின்றனர்.முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது,முஸ்லிம் பெண்களின் பர்தாவை பயன்படுத்தி கேவலமான செயல்களை செய்வது என பல படங்களை எடுத்து வருகின்றனர். (உதாரணம். ஒற்றன்,ஹே ராம்,இன்னும் பல).
ஏற்க்கனவே தமிழ் திரைப்படங்களின் உபயத்தால் காதல் என்ற பெயரிலும் நட்பு என்ற பெயரிலும் இளம் பெண்களும் இளைஞர்களும் வீட்டை விட்டு ஓடுதல்,ரகசிய திருமணம் செய்தல்,கடற்கரைகளில்,பூங்காக்களில் சேட்டைகள், விடுதிகளில் லீலைகள் என தமிழ் கலாசாரத்தை வளர்த்து வருகின்றனர். இந்த படங்களின் பாதிப்புக்கள் கலாச்சார பெருமை கொண்ட தமிழக முஸ்லிம் சமூகத்தையும் மெல்ல பாதித்து வருகின்றது.ஓடிப்போகும் கலாச்சாரம் தற்ப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இது போன்ற படங்கள் சமூகத்தில் எவ்வித தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சொல்லி தெரிய தேவை இல்லை.முஸ்லிம் சமூகத்து பெண்கள் மற்றும் இளைஞர்களை இது போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டியது முஸ்லிம் சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை.எனவே பொக்கிஷம் போன்ற படங்கள் வெளி வரும் முன்னே திரைபடத்தை பார்த்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோர வேண்டும். மறுத்தால் திரைப்படம் வெளிவருவதற்கு கடுமையான எதிர்ப்புகளை காண்பிக்க வேண்டும்.பம்பாய் பட பாதிப்பினால் ஏற்பட்ட விளைவுகள் இந்த படத்தினாலும் ஏற்பட்டு விடக்கூடாது.
தமிழக அரசும் இவ்விஷயத்தில் உடனே கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பின்னர் சட்டம் ஒழுங்கு கெட்ட பின்னர் வருந்துவதை விட முன் நடவடிக்கை எடுப்பதே சாலச் சிறந்தது.