சாமியார்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாமியார்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 பிப்ரவரி, 2011

ஹெலிகாப்டரில் வலம்வரும் புதிய சாமியார்!!!


புதுடெல்லி,பிப்.24:யோகா என்றாலே பலருக்கு அலாதி பிரியம் உருவாகிவிட்டது. வாழுங்கலை' இன்னும் பல்வேறு பெயர்களில் சில மெஸ்மரிஸ கலைகளையும் கற்றுவிட்டு கோடி கோடியாக சம்பாதிக் கின்றார்கள் பல சாமியார்கள். 'கதவைத்திற காற்று உள்ளே வரட்டும்' என கட்டுரை எழுதிய ஒரு சாமியார் 'கதவை மூடமறந்ததால்' சர்ச்சையில் சிக்கி சீரழிந்தார். இந்நிலையில் பல்வேறு சாமியார்களின் கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த பொழுதிலும் பலருக்கு யோகா மற்றும் சுவாமிகள் மீதான பற்று விட்டப்பாடில்லை.

இப்பொழுது புதியதொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அவர்தாம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற யோகா சாமியார் ராம்தேவ். கடந்த 10 ஆண்டுகளில் அவர் சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த சொத்துக்களைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரப்பட்டுள்ளது. இந்தியாவின் பல இடங்களிலும் சொத்துக்களை குவித்துள்ள சுவாமிஜிக்கு கோயில்கள் நிறைந்த ஹரித்துவாரில் மட்டும் 1000 கோடிக்கான சொத்துக்கள் உள்ளனவாம்.பத்து ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் சஞ்சரித்த சுவாமி ராம்தேவ் இன்று ஹெலிகாப்டருக்கு சொந்தக்காரர்.

தனக்கு சொந்தமான சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வக்கில்லாத ராம்தேவின் நம்பமுடியாத வளர்ச்சியின் பின்னணியைக் குறித்து சி.பி.ஐ விசாரித்து உண்மையை வெளிக்கொணர கோரியது நாத்திகர்கள் அல்லர். மாறாக அகில பாரதீய அகாரா பரிஷத்தின் செய்தித் தொடர்பாளர் பாபா ஹட்யோகிதான். இதேக் கோரிக்கையை முன்வைத்து பலரும் முன்வந்துள்ளனர். வட இந்தியர்களுக்கு மத்தியில் ஆஷ்தா தொலைக்காட்சி சேனல் மற்றும் இதர சேனல்கள் வாயிலாக அதிகாலைகளில் யோகா பயிற்சியை துவங்கிய ராம்தேவின் வளர்ச்சி திடீரென உருவானதாகும். ராம்தேவால் உருவாக்கப்பட்டதுதான் உடல் நலனுக்கான பயிற்சியான யோகா கலை என பல மக்களும் தவறாகவே விளங்கி தொலைக்காட்சிக்கு முன்பாக உட்கார்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். சுவாமி என்ற நிலையில் கட்சி பேதமற்ற அனைவரும் பாபா ராம்தேவின் ஆதரவை பெறுவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தை சார்ந்த சங்கர்தேவ் என்ற சன்னியாசி சந்தேகமான நிலையில் காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து ராம்தேவின் ஆசிரமத்தின் செயல்பாடுகளில் மர்மம் நீடிக்கிறது என ஹட்யோகி கூறுகிறார். ராம்தேவின் ஆசிரமத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளில் மோசடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில மருந்துகளில் அஸ்திகள் இருப்பதாக சுட்டிக்காட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.எம் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரட் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். இந்நிலையில் ராம்தேவை ஆதரித்து பாசிச பா.ஜ.க களமிறங்கியுள்ளது. சாமியார்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாதல்லவா?

புதன், 8 டிசம்பர், 2010

சாமியார் நித்தியானந்தா அறையில் ஆணுறைகள்: பெண் பரபரப்பு வாக்குமூலம்.


சாமியார் நித்தியானந்தா தனது பிடதி ஆசிரமத்தில் எப்போதும் ஆணுறைகள், மது வகைகளை வைத்திருப்பார். ஆணுறைகளை அவர் வைத்திருந்ததை நானே எனது கண்ணால் பார்த்துள்ளேன் என்று நித்தியானந்தா வழக்கில் ஒரு சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார். சமீபத்தில் நித்தியானந்தா வழக்கில் ராம்நகர் கோர்ட்டில் கர்நாடக சிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிக்கையுடன் இந்த வாக்கு மூலத்தையும் இணைத்துள்ளனர்.பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு பெண் சாட்சிதான் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இவரிடம், மோட்சம் அடைவீர்கள் என்று சொல்லி சாமியார் நித்தியானந்தா உடல் ரீதியான உறவுக்கு கட்டாயப்படுத்தி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அந்தப் பெண் கூறுகையில், நான் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அப்போது என்னிடம் ஒரு மதுக் கடையிலிருந்து மது வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார் நித்தியானந்தா.இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தேன். இருப்பினும் நித்தியானந்தாவின் போதனைகளால் எனது மனம் அந்த அதிர்ச்சியை புறக்கணித்தது. எந்த ஒரு குடும்பப் பெண்ணும் மதுக் கடைக்குச் சென்று மது வாங்க மாட்டார். ஆனால் நித்தியானந்தாவின் போதனையால் பிரெய்ன் வாஷ் செய்யப்பட்டிருந்த நான் ஆசிரமத்திற்கு அருகில் இருந்த மதுக் கடைக்குச் சென்று மது வாங்கி வந்தேன். பின்னர் அதை தனது அறைக்குக் கொண்டு வருமாறு கூறினார் நித்தியானந்தா. அங்கு கொண்டு போய்க் கொடுத்ததும் அதை வாங்கி அருந்தினார். என்னால் அந்த மதுவின் நெடியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் நான் வாந்தி எடுத்து விட்டேன். பின்னர் நான் மயங்கி விட்டேன்.
சில மணிநேரம் கழித்து நித்தியானந்தா எழுப்பிய பிறகே நான் கண் விழித்தேன். நான் மயக்கமாக இருந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. நான் படுக்கையில் படுத்திருந்தேன். என்னை அவர் என்ன செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் எனது உடைகள் கலைந்திருந்தன.பிறகு என்னை டிரஸ் செய்து கொள்ளச் சொல்லி அங்கிருந்து போகுமாறு பணித்தார் நித்தியானந்தா. நான் ஆசிரமத்தில் சேர்ந்தபோது நித்தியானந்தா போட்ட விதிமுறைகளில் ஒன்றாக எனக்குக் கூறப்பட்டவை ஆசிரமத்திற்குள் மது அருந்தக் கூடாது என்பது. ஆனால் என்னையே மது வாங்கச் சொல்லி அனுப்பி வைத்தவர் நித்தியானந்தா.அதேசமயம், நான் அவருக்கு மது வாங்கி வந்ததையும், அவர் அருந்தியதையும் யாரிடமும் கூறக் கூடாது என்று என்னை எச்சரித்தார் நித்தியானந்தா என்று அந்த பெண் கூறியுள்ளார். மது மட்டுமல்லாமல் ஆணுறைகளும் நித்தியானந்தா அறையில் இருந்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார். இவை இரண்டும் நித்தியானந்தா அறையில் எப்போதும் இருக்கும் என்றும் அப்பெண் கூறியுள்ளதாக அந்த வாக்குமூலம் தெரிவிக்கிறது.