சவூதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சவூதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

சவூதி தொழில் அமைச்சர் மரணம்

ரியாத்,ஆக16:சவூதி அரேபியாவின் தொழில் அமைச்சரும் கவிஞருமான டாக்டர்.காஸி அல் குதைபி மரணமடைந்தார். அவருக்கு வயது 70. நோயின் காரணமாக ரியாதில் கிங் ஃபைஸல் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்றுவந்தார் இவர்.

நான்கு மன்னர்களின் ஆட்சியில் இவர் சேவை புரிந்துள்ளார். முன்னர்
குடிநீர்-மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றிய இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தொழில் அமைச்சரானார்.

பஹ்ரைன், அயர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் சவூதி அரேபியா தூதராக பணியாற்றியுள்ளார் குதைபி.

எ பாட்டில் வித்அவுட், ஷுஹாத் அல் ஹுர்ரியத் உள்ளிட்ட கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார். கெய்ரோ பல்கலைக்கழகத்திலிருந்து சட்டத்தில் பட்டமும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து பட்ட மேற்படிப்பு பட்டமும், லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் குதைபி.

சனி, 1 ஆகஸ்ட், 2009

இஸ்ரேலுடனான உறவுக்கு சாத்தியமில்லை சவூதி அரேபியா திட்டவட்டம்

ஃபலஸ்தின் மற்றும் இஸ்ரேலுக்கிடையேயான பேச்சு வார்த்தைக்கு உதவுவதற்காக இஸ்ரேலுடன் உறவை பேண அமெரிக்கா விடுத்த அழைப்பை சவூதி அரேபியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுபற்றி சவூதி இளவரசர் சவூத் அல் ஃபைசல் கூறுகையில் "இஸ்ரேல் தான் ஆக்கிரமித்துள்ள அனைத்து ஃபலஸ்தீன் பிரதேசங்களிலிருந்து வெளியேறும் வரை இஸ்ரேலுடனான எந்த உறவுப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. மேலும் தற்சமய பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை பலப்படுத்துவது ஆகியன நிரந்தர அமைதிக்கு வழி வகுக்காது" என்றார்.

செய்தி:அல்ஜஸீரா