குற்றாலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குற்றாலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 செப்டம்பர், 2011

குற்றாலம் அருவியில் குளித்த பெண்களை புகைப்படம் பிடித்த வாலிபர் கைது


குற்றாலம் அருவி



குற்றாலம்: குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த பெண்களை போட்டோ மற்றும் வீடியோ எடுத்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குற்றாலத்தில் உள்ள அருவியில் குளிப்பதற்கு தினமும் எண்ணற்ற மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு என தனித்தனி இடங்கள் உள்ளன. பாலியல் சில்மிஷங்களை தவிர்க்க ஆங்காங்கே ஆண் மற்றும் பெண் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த ஆண்கள் பகுதியில் ஒருவர் கேமராவுடன் சுற்றி திரிந்தார். சிறிது நேரத்தில் அவர் பெண்கள் பகுதியின் அருகில் சென்று அங்கு குளித்து கொண்டிருந்த பெண்களை போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

இதை கவனித்த மற்றவர்கள் அவரை அழைத்து கண்டித்துள்ளனர். அதனால் கண்டித்தவர்களுக்கும் அந்த வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கண்டித்தவர்களில் சிலர் இது குறித்து அங்கு பாதுகாப்பில் நின்ற போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரிடம் இருந்த கேமராவை பரிசோதித்த போது, அவர் சில பெண்களை படம் பிடித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார் விசாரித்தனர். இதில் அவர் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பாலாஜி என்பது தெரிந்தது