ஓரினச் சேர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓரினச் சேர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஜூலை, 2010

இதுதான் மேலை நாட்டு கலாச்சாரம்:தோழியை மணந்த ஐஸ்லாந்து பெண் பிரதமர்!

ரெய்க்ஜாவிக்: ஓரினச் சேர்க்கையாளரான ஐஸ்லாந்து பெண் பிரதமர் தன் நீண்ட கால பார்ட்னரை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.கடந்த 2009ம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டின் பெண் பிரதமரானவர் ஜோகன்னா சிகுர்டார்டோடிர் (68). இவரது பெண் நண்பர் ஜோனினா லியோஸ்டோடிர். இருவரும் தொடக்கத்தில் நண்பர்களாக இருந்து பின்னர் ஓரின சேர்க்கையாளராக மாறினர்.

இவர்கள் திருமணம் செய்து கொள்ள அந்நாட்டு அரசியல் சட்டம் இடம் தராத நிலையில் இருவரும் அதிகாரபூர்வமின்றி ஒன்றாக வாழ்ந்தனர்.இந் நிலையில், கடந்த 12ம் தேதி ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஐஸ்லாந்து நாடாளுமன்றம் அனுமதி தந்து சட்டம் இயற்றியது.இதையடுத்து நேற்று பிரதமரும் அந்தப் பெண்ணும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர்.தனது 50வது வயதில் கணவரைப் பிரிந்த ஜோகன்னா அதன் பின்னர் தோழி ஜோனினாவுடன் வாழ ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போதைய திருமணம் மூலம் உலகிலேயே முதல் ஓரின சேர்க்கை பிரதமர் என்ற பெயரை ஜோகன்னா பெற்றுள்ளார்.

திங்கள், 6 ஜூலை, 2009

ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்: லாலு பிரசாத்

ஓரினச் சேர்க்கை ஒரு கிரிமினல் குற்றம். அதை அனுமதித்தால் சமுதாயம் சீரழிந்து விடும் என்று லாலு பிரசாத் ஆவேசமாக கூறினார்.

ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் அளித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஓரினச் சேர்க்கைக்கு எக்காரணம் கொண்டும் சட்ட அங்கீகாரம் அளிக்கக் கூடாது. அதை கடுமையாக எதிர்க்கிறேன். இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன். ஓரினச் சேர்க்கை என்பது ஒரு கிரிமினல் குற்றம். அந்த செயலை நம் நாட்டில் அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் சமுதாயம் சீரழிந்து விடும். அதற்கு இடம் தரக்கூடாது. இது ஆபாசமான செயல். அது பற்றி மேலும் பேச விரும்ப வில்லை.

இது போன்ற செயல்களை நமது நாடும் நமது கலாசாரமும் ஏற்றுக் கொள்ளாது. இந்த பிரச்னையில் மத்திய அரசுக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது. ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் அளித்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றார்.