இந்துத்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்துத்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜூன், 2014

இர்ஷத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் ஆபீஸர் ஜி.எல்.சிங்காலுக்கு மீண்டும் பதவி

இர்ஷத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் ஆபீஸர் ஜி.எல்.சிங்கால் தற்போது பெயிலில் உள்ளார். சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையை 90 நாட்களில் கோர்ட்டில் சமர்ப்பிக்காததே இவரை பெயிலில் விட முக்கிய காரணமாக உள்ளது. முக்கியமான இந்த கேசில் சிபிஐ எவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டுள்ளது என்பதற்கு இந்த வழக்கே ஒரு சாட்சி. அதிகாரத்தில் இருப்போர் எந்த அளவு இனப் பற்றோடு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதற்கு அடுத்த படியாக ஜி.எல்.சிங்கால் குஜராத் அரசால் திரும்பவும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். போலி என்கவுண்டரில் ஒரு அப்பாவி இளம் பெண்ணின் உயிரை பறிக்க காரணமான ஒரு அதிகாரிக்கு மீண்டும் பதவி கொடுத்து கௌரவித்துள்ளது பிஜேபி அரசு. நரேந்திர மோடி பிரதமரானதால் அவரது இடத்துக்கு வந்துள்ள ஆனந்திபென் பட்டேல் பதவியேற்றவுடன் இந்த நிகழ்வு நடந்துள்ளது. கிரிமினல்களை முக்கிய பதவியில் அமர்த்துவதன் மூலம் தானும் ஒரு மற்றொரு மோடி என்பதை இந்த முதல்வரும் நிரூபிக்கிறார்.

'இது ஒரு மட்டரகமான சட்டத்தை மீறிய செயல். இங்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. பிஜேபி நீதியான ஆட்சியை கொடுப்போம் என்று மக்களுக்கு வாக்களித்தது என்ன ஆனது? ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு மீண்டும் அரசு பதவி தருவது முறைதானா?' என்று கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞர் வீரேந்திர குரோவர்.

மற்றொரு அநியாயமும் ராஜஸ்தானில் நடந்துள்ளது. சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவர் தினேஷ் என்ற போலீஸ் அதிகாரி. இவரும் தற்போது பெயிலில் உள்ளார். வசுந்தராவ் அரசு மீண்டும் அவருக்கு பதவியைக் கொடுத்து அழகு பார்த்துள்ளது. ஆட்கள் மாறினாலும் இந்துத்வாவின் நிறம் மட்டும் மாறுவதில்லை என்பது குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல்களை மீண்டும் பதவியில் அமர்த்தியன் மூலம் நிரூபணமாகியுள்ளது. இங்கும் பிஜேபி தான் யார் என்பதை நிரூபித்துள்ளது.

இது போன்ற கிரிமினல்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தபபடுவதால்தான் இஸ்லாமியர்களின் மேல் போலி குற்றச்சாட்டுக்களை தைரியமாக ஆள்வோர்களால் சுமத்த முடிகிறது.

நமது நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாக்கும் பொறுப்பை நமது இறைவனிடம் தான் கேட்க வேண்டும். காலம் இப்படியே சென்று விடாது. இறந்த அந்த அப்பாவிகளின் குடும்ப உறுப்பினர்களின் பிரார்தனை வீண் போகாது. இறைவனின் தண்டனையை அந்த கொடியவர்கள் நமது கண் முன்னாலேயே அனுபவிக்கும் காலமும் வரும். அதுவரை பொறுத்திருப்போம்.

http://www.ndtv.com/article/india/gl-singhal-accused-in-ishrat-jahan-case-reinstated-by-gujarat-government-532361
நன்றி: http://suvanappiriyan.blogspot.ae/2014/05/blog-post_29.html

புதன், 1 டிசம்பர், 2010

நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்! – வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் I

நரேந்திர மோடி (கேடி) பிஜெபி அரசு காவிக்கும்பலும், கோத்ராவில் நடந்த சபர்மதி எக்ஸ்ப்ரெஸ் துக்கத்தைத்தான்,.. 2002 ல் குஜராத்தில் நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது ஏவி விடப்பட்ட கொடூரக் கொலை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் ஆகியவற்றிற்க்கு காரணமாக காட்டிக் கொண்டிருக்கிறது. தெஹெல்காவின் ஆறுமாத புலனாய்வில் இதன் பின்னணியில் உள்ள பொய்கள், அரசாங்கமே அடியாட்களுக்கு உத்தரவுகளும், லஞ்சமும் கொடுத்து நடத்திய கலவரத்தின் பின்னணி அம்பலமாகியுள்ளது.

இதோ, சுருக்கத்தில், நடந்ததாக கண்டறியப்பட்ட உண்மைகள்……

காவல் துறையின் வாதம் :

1. சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மற்றும் மத முக்கியஸ்தர்கள் சபர்மதி எக்ஸ்ப்ரெஸ்ஸின் எஸ்-6 பெட்டியை February 27, 2002 ல் சதிசெய்து கொளுத்தினார்கள். (கவனிக்க: எதேனும் ஒரு பெட்டியை அல்ல. குறிப்பாக எஸ்-6 பெட்டியை ).

2. முஹம்மது ஹுஸைன், அப்பொதைய கோத்ரா முனிசிபல் கவுன்சில் தலைவர், இரண்டு முஸ்லிம் முனிசிபல் உறுப்பினர்கள் ஆகியோர் இந்த ரயில் பெட்டியை எரிக்கும் குழுவில் இருந்து, எஸ்-6 பெட்டியை எரிக்க தூண்டினார்கள்.

3. போலீஸின் கூற்றுப்படி, எராளமான பெட்ரோல் எஸ்-6 ன் தளத்தில் ஊற்றி, பின் கொளுத்தப்பட்டது. இதற்க்காக 140 லிட்டர் பெட்ரோல் பெப்ருவரி 28ம் தியதி, கலாபாய் என்ற ஒரு முஸ்லிமுக்கு சொந்தமான பெட்ரோல் பம்பில் இருந்து வாங்கப்பட்டது. பின் 9 முஸ்லிம் கூலிதொதொழிலகளாலும், ஒரு ஹிந்து தொழிலாளியாலும் சபர்மதி எக்ஸ்ப்ரெஸ் நின்றுகொண்டிருந்த காபின் A க்கு கொண்டுவரப்பட்டது.

4. சபர்மதி எக்ஸ்ப்ரெஸ்ஸின் எஸ்-6 பெட்டியின் இணைப்பை மூன்று முஸ்லிம் தொழிலாளர்கள் துண்டித்ததால், ரயில் நிறுத்தப்பட்டது.

5. சில தொழிலாளிகள் 6 இன்ச் கனமுள்ள இரு பெட்டிகளையும் இணக்கும் தொடர்பை சாதாரண கத்தரிக்கோலால் வெட்டிய பிறகு எஸ்-6 க்குள் நுழைந்து பெட்டியின் தரையில் பெட்ரோலை ஊற்றினார்கள். கண்ணாடி உடைந்த ஜன்னல் வழியாகவும் பெட்ரோல் ஊற்றப்பட்டது.

மேற்சொன்ன காவல் துறையின் ‘தியரி’ க்கான சாட்சிகள் :

1. போலீஸ் பெரும்பாலும் சம்பவத்தை நேரில் பார்த்த 9 பிஜேபி உறுப்பினர்களின் சாட்சியையே முக்கியமாக எடுத்தொக்கொண்டிருக்கிறது. இவர்கள் 41 முஸ்லிம்களை அடையாளம் காட்டியிருக்கிறர்கள். (ஒரு பிஜெபி உறுப்பினர் திலீப் தேஸாதியா, பிறகு தன்னுடைய வாக்குமூலத்தை முழுவதுமாக வாபஸ் வாங்கிக்கொண்டார்.)

2. எஸ்-6 ல் பயணம் செய்த கர்சேவகர்களின் வாக்குமூலங்களும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

3. அங்கு ஏற்பட்ட புகையால் மயங்கிவிட்டதாகவும், என்ன நடந்தது என்றே காண இயலவில்லை என்றும் சொன்ன இரண்டு கரசேவர்கள், ஆறு மாதங்களுக்கு அப்புறம், தங்கள் நிலையை மாற்றி வெளியிலிருந்து எதோ திராவகம் தரையில் ஊற்றப்பட்டதை பார்த்ததாக சொன்னார்கள். இந்த வாக்குமூலம் தான் – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்க்கு 15 தினங்களுக்குமுன் சேர்க்கப்பட்டு – போலீஸ் தியரியின் திடீர் சக்தியாக மாற்றப்பட்டுள்ளது.

4. போரென்சிக் ரிபோர்டின்படி, ” 60 லிட்டர் பெட்ரோல் தென் திசையிலிருந்து பெட்டியின் தரையில் ஊற்றப்பட்டிருக்கலாம் ” என்பது.

5. ஒன்றரை மாதங்களுக்குப்பிறகு, ஒரு டீக் கடை காரர், அஜய் பாரியா என்ற ஒரு சாட்சியை போலீஸ் திடீரென்று கொண்டு வந்து நிறுத்தியது. இந்த அஜய் பாரியா, தன்னை 9 முஸ்லிம் தொழிலாளிகள் எஸ்-6 பெட்டியில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்குமாறு கட்டயப்படுத்தியதாக விளம்பினார்.

6. இரண்டு முஸ்லிம் தொழிலாளர்கள் கைது செய்த ஒரு வாரத்திற்க்கப்புறம், ட்ரயின் இணைப்பைத் தாங்கள் துண்டித்ததாக ஒப்புக்கொண்டார்கள். அப்புறம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலமாக இதை வாபஸ் வாங்கிகொண்டார்கள்.

7. இதே போல் இன்னொரு முஸ்லிம் தொழிலாளி எஸ்-6 பெட்டியை கொளுத்திய கும்பலில் தானும் இருந்ததாக ஒப்புக்கொண்ட (?) வர், அப்புறம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலமாக இதை வாபஸ் வாங்கிகொண்டார்.

8. சம்பவம் நடந்து 1 வருடம் கழித்து போலிஸ் இரண்டு இந்து சேல்ஸ்மேன்களை ஆஜர் படுத்தியது. பிரபாத்சிங் பட்டேல் மற்றும் ரஞ்சித்சிங் பட்டேல்.

இவர்கள் இருவர்தான், பெட்ரொல் பம்பிலிருந்து 140 லிட்டர் பெட்ரோலை விற்ற சேல்ஸ்மேன்கள். இவர்க்ளுள் ஒருவர், அன்றைய தினத்தில் அப்படி யாருக்கும்ம் பெட்ரோல் விற்கவில்லை என்று தெரிவித்தார்.

9. இன்னொரு போலிஸின் சாட்சி, சம்பவ இடத்தில் இருந்த மற்ற முஸ்லிம் தலைவர்களுடன் மவுலவி யாக்கூப் பஞ்சாபி என்பவரும் கொளுத்த தூண்டிவிட்டார் என்று சாட்சி சொன்னார். பின்பு பொலீஸ் பஞ்சாபியை கைது செய்து பின் விட்டுவிட்டது. காரணம் பஞ்சாபி அந்த நாட்களில் சவூதி அரேபியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதே.

10. இன்னும் இதில் பங்கெடுத்துக் கொண்டதாகவும், கொளுத்தியதாகவும் ‘ஒப்புக்கொண்ட’ ஆறு முஸ்லிம் தொழிலாளிகள், பின்னர் தங்களுடைய வாக்கு மூலத்தை வாபஸ் வாங்கிகொண்டார்கள்.

இனி தெஹல்கா கண்டறிந்த கொடுமையான உண்மைகள்…

1. பிரபாத்சிங் பட்டேல் மற்றும் ரஞ்சித்சிங் பட்டேல் என்ற இரு பெட்ரோல் பம்ப் சேல்ஸ்மேன்களுக்கும், தலைமை விசாரணை அதிகாரியே லஞ்சம் கொடுத்து, இப்படிச் சொல்லவும், தவறான நபர்கலை அடையாலம் காட்டவும் பணித்தார். தெஹெல்க்காவின் கேமராவில் அந்த அதிகாரியே இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். 50,000 ரூபாய் இதற்க்காக் இலஞ்சமாக கொடுக்கப்பட்டது.

2. சம்பவத்தை நேரில் பார்த்ததாக சொல்லப்பட்ட 9 பிஜெபி நபர்க்ளும் அப்பொழுது அந்த இடத்திலேயே இருந்திருக்கவில்லை. தெஹெல்க்கா அவர்க்ளுள் இருவரை – Kakul Pathak and Murli Mulchandani – பேட்டி கண்டதில் தாங்கள் அந்த இடத்திலேயே இல்லை என்றும், தாங்கள் பெயெர் இருப்பது தாங்களுக்கே தெரியாது என்றும் கூறினர்.

3. பெட்டியின் இணைப்பை துண்டித்ததாக சொல்லப்பட்ட இரு முஸ்லிம் தொழிலாளிகளும் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், (பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்தியது உட்பட ) தெஹெல்க்காவிடம் அனுமதித்தனர்.

4. பெட்ரோல் எப்படி எங்கிருந்து ஊற்றப்படு எப்படி எரிக்கப்பட்டது என்ற போலீஸின் கூற்றும், போரென்சிக் லாபின் கூற்றும் முற்றிலும் மாறுபடுகிறது.

இது இந்துத்வா நடத்திய கபட நாடகம் ( ஜெயராமன் சல்மா அயூப் நியாபகம் வருகிறதா..? ) வெளிச்சத்திற்ற்கு வந்தது மட்டும்…இனிதான் காவிக்கும்பலின் நரபலி வேட்டைவிழாவின் துவக்கம். கொலைகள், கற்பழிப்புகள், சிசுக்கொலைகள் நடத்திய விதம், பேட்டிகள், செய்முறைகள், உத்தரவுகள்….

நன்றி : கதிரவன்