இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
ஆனால் மோடி ஆட்சியின் சாதனை என்னவெனில், நாட்டின் கண் போன்ற கல்வியில் தனது மாநிலத்தை படு பாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்பதற்கு ஒரு சான்று; குஜராத் மாநில பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாயின. இது குஜராத் மாநில ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறமையின்மையை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது. மாநிலம் முழுவதும் 119 பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.கடந்த ஆண்டு 408 பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 359 ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 113 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற நிலையில் இருந்து இந்த ஆண்டு 119 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற மோசமான நிலையையும் அடைந்துள்ளது.ஒருவர் கூட தேர்ச்சி பெறாத பள்ளிகள் கிராமப்புறத்தில் இருக்கக் கூடும் என்ற எண்ணத்தை தகர்த்து, அகமதாபாத் நகரில் 12 பள்ளிகள், பரோடா மற்றும் சூரத் மாவட்டங்களில் தலா 12 பள்ளிகள், பஞ்சமகால் மாவட்டத்தில் 13 பள்ளிகள் என நகர்ப்புற பள்ளிகளிலும் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.மாநிலம் முழுவதும் 1,236 பள்ளிகளில் 0 முதல் 30 சதவீத தேர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 968 ஆக இருந்தது.[நன்றி;இந்நேரம்]
இப்படிப்பட்டவர் பிரதமரானால், குஜராத்தின் கல்வி நிலை இந்தியா முழுவதும் ஏற்பட்டால்? உலகிலேயே படிப்பறிவில்லா நாடு என்று நமது நாட்டிற்கு பெருமை[?] வந்து சேரும். அது சரி! இந்துத்துவாக்களின் ஒரே நோக்கமான முஸ்லிம்களின் கருவறுப்பு கொள்கைக்கு அறிவு எதற்கு..? ஆயுதம் போதும் என முடிவெடுத்து விட்டார்கள் போலும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக