சனி, 12 செப்டம்பர், 2009

"ஏன் இஸ்லாம்?"கலிஃபோர்னியாவில் விளம்பரப் பிரச்சாரம்

Why Islam?பலவித விளம்பரப் பலகைகளைக் கண்டு பழகிய அமெரிக்க மக்களுக்கு இப்பொழுது புதிதாய்த் தென்படத் துவங்கியுள்ள விளம்பரப் பலகை, "ஏன் இஸ்லாம்?" என்பதாகும். ஆங்கிலத்தில் ”Why Islam?" என்று சட்டெனச் சுண்டியிழுக்கும் விளம்பரம். பே ஏரியா (Bay area) எனப்படும் பகுதியில் அமைந்துள்ள சான் ஓசே, சான்டா க்ளாரா, கன்கார்ட் நகரங்களில், பேருந்துகளில், பேருந்து நிறுத்தங்களில் என அங்கெங்கெனாதவாறு கலிஃபோர்னியாவில் எங்கெங்கும் திடீரெனத் தோன்றியுள்ள ”ஏன் இஸ்லாம்?” எனும் விளம்பரப் போஸ்டர்கள், இலவசக் குர்ஆன் பிரதிகள் அளிக்கப்படுவது பற்றியும் இஸ்லாமிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் கட்டணமற்ற தொலைபேசி (டோல் ஃப்ரீ) எண் பற்றியும் தெரிவிக்கின்றன.
ஏறக்குறைய செப்டம்பர் 11, நிகழ்வுக்கு ஓராண்டுக்கும் முன்பாகவே இந்த விளம்பரப் பலகைத் தி்ட்டம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இத்திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான தாரிக் அமானுல்லா, உலக வர்த்தக மையத்தில் நிகழ்ந்த செப்டம்பர் 11 தாக்குதலில் இறந்து போனது ஒரு வினோத முரண்.

இந்த விளம்பரத் திட்டத்தின் எளிய செய்தி, "இஸ்லாம் என்பது மக்களைக் கொல்லும் தீவிரவாதம் அல்ல; ஆனால் அவர்களின் உயர்வுக்கான மார்க்கம்".


Why Islam travelsஅமெரிக்காவில் முழு வீச்சாய் இஸ்லாமியப் பணியாற்றி வரும் அமைப்பு ICNA (Islamic Community of North America). ”ஏன் இஸ்லாம்?” எனும் இந்தத் திட்டத்திற்கு இந்த அமைப்பு பொறுப்பேற்று ஆதரவளித்து வருகிறது. இதன் பே ஏரியா கிளையின் வெளித்தொடர்பு செயலாளர் அஹ்மத் கலீலுக்கு 30 வயது. "செப்டம்பர் 11 நிகழ்விற்குப் பின், இங்கு இஸ்லாம் என்பது 'சாந்தி'க்கு எதிர்மறையான தீவிரவாதமாகப் பார்க்க ஆரம்பிக்கப்பட்டது. இஸ்லாம் ஒன்றும் தீவிரவாதத்தின் மறுபெயரல்லவே! மக்களின் மனதிலுள்ள இத்தகைய தவறான மனோபாவத்தை மாற்றவாவது குறைந்த பட்சம் இந்தத் திட்டம் உதவும். மக்கள் முஸ்லிம்களைக் கடின உழைப்பாளிகளாகவும் அமைதி விரும்பும் குடும்பஸ்தர்களாகவும் உணர வைக்க இந்தத் திட்டம் பயன்படும்" எனும் கருத்துப்பட கூறியுள்ளார்.

நியூ ஜெர்சியிலுள்ள இந்த அமைப்பின் தொலைபேசித் தகவல் மையத்தில் பணியாற்றும் தொண்டர் அஷ்ஃபாக் பார்க்கர், "யூதர்கள், கிறி்த்தவர்கள்போல் நாங்களும் ரமளானில் நோன்பு நோற்கிறோம். இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மதத்தவர் என்ற அடிப்படையில் அவர்களிடமும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவை வளர்க்க முயல வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” எனறார்.

அதற்கேற்ப சான் ஓஸே 880 தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை, ”இஸ்லாம் என்பது ஆபிரகாம், மோஸஸ், ஈசா மற்றும் முஹம்மது நபியின் பிரச்சாரத்தின்படி அமைந்த மார்க்கம்தான்” என்று அறிவிக்கிறது. கலிஃபோர்னியாவில் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களும் அதிகம் ஆதலால், சில பலகைகள் ஸ்பானிஷ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் முஸ்லிம்களின் பொருளுதவி இந்த விளம்பரப் பலகை நிர்மாணத்திற்கு உதவுகின்றது. சிகாக்கோ, ஹுஸ்டன், பிலடெல்ஃபியா, பாஸ்டன், ஃப்ளோரிடா ஆகிய மாநிலங்களின் நெடுஞ்சாலைகளிலெல்லாம் இந்த விளம்பரம் பரவி வருகிறது. நெடுஞ்சாலைகளிலுள்ள பெரிய விளம்பரப் பலகைகள் அமைக்க ஒவ்வொன்றும் 1,000 முதல் 5000 டாலர்கள் வரையும், சிறிய விளம்பரங்கள் ஒவ்வொன்றுக்கும் 200 முதல் 500 டாலர்கள் வரையும் செலவாவதாய்த் தெரிகிறது.

"இஸ்லாம் ஒன்றும் தீவிரவாதத்தின் மறுபெயரல்லவே! மக்களின் மனதிலுள்ள இத்தகைய தவறான மனோபாவத்தை மாற்றவாவது குறைந்த பட்சம் இந்தத் திட்டம் உதவும்

1-877-WHY-ISLAM எனும் தொலைபேசி ஹாட்லைனுக்கு சராசரியாய் ஒரு மாதத்தில் 1000 தொலைபேசி விசாரணைகளும் ஏறக்குறைய அதே அளவு மின்அஞ்சல் விசாரண WhyIslam.org எனும் இணைய தளத்திற்கு வருவதாகவும் பார்க்கர் தெரிவிக்கிறார்.

சான்டா க்ரூஸ் பகுதியிலிருந்து பே ஏரியாவுக்குப் பயணிக்கும் ப்ரூஸ் க்ரீன் என்பார் ஒரு கிறித்தவ மத போதகர். அனைத்து மதத்திற்கு மத்தியிலும் பாலம் அமைக்கும் நல்முயற்சியில் ஈடுபட்டுள்ள இவருக்கு நிறைய இஸ்லாமிய நட்பும் உண்டு. இந்த விளம்பரங்களை நெடுஞ்சாலைகளில் கண்ணுற்ற அவர், முஸ்லிம்கள் இப்பொழுது மேற்கத்திய மக்களை சென்றடையும் வகையில் பணியாற்றுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சான்டா க்ளாரா ICNA கிளையின் உதவித் தலைமையாளர் அமீன் அஷ்ரப், இந்த விளம்பரங்களுக்குப் பிறகு இஸ்லாம் பற்றி விசாரிக்கும் ஆர்வத்தில் மஸ்ஜிதுகளில் பல புதிய முகங்கள் தென்படுவதாகவும், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 8000 தொலைபேசி விசாரணைகள் இருந்தன என்றும் கூறினார்.

எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், ஒரே ஒருவரின் இஸ்லாமிய விரோத மனப்போக்கைக் களைய முடிந்தாலே அது இந்தத் திட்டத்தின் வெற்றிதான் என்பது இதன் அமைப்பாளர்களின் கருத்து. அவ்வகையில் நோக்கினால் பரவலாக அமெரிக்கா முழுவதும் இது சிறப்பான பலனைத் தருவதாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.

தகவல் : சகோ. நூருத்தீன், கலிஃபோர்னியா.

துபாய் சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு



துபாய்: பதிமூன்றாவது சர்வதேச புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியாவுக்கு முதலிடம்.
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12-வது வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச்சார்ந்த மாணவர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதுதான் 84 நாடுகளைச்சார்ந்த போட்டியாளர்களை முந்தி முதலிடம் பெற்றவர்.
இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து முழுக்குர்ஆனையும் மனப்பாடமாக்கி ஹாபிழ் பட்டம்பெற்றவர்.
முதல் பரிசாக 2.5 லட்சம் திர்ஹம் வழங்கப்பட்டது. துபாய் புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியர் ஒருவர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பரிசினை ஷேஹ் ஹம்தான் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார். இப்ராஹீமின் தந்தை ராசல்கைமா அஹ்மத் பின் ஃபவ்ல் மஸ்ஜிதில் 20 வருடமாக இமாமாக வேலைபார்த்து வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக துபாய் புனித குர்ஆன் மனனப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குக்கொள்வது கோழிக்கோடு மர்க்கஸைச்சார்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதை நாமும் வாழ்த்துவோம்.

டெல்லி:வதந்தியால் ஏற்பட்ட நெரிசலில் 5 மாணவிகள் பலி


டெல்லி: டெல்லியில் பள்ளிக் கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களில் ஷாக் அடிப்பதாக கிளம்பிய வதந்தியையடுத்து மாணவிகள் அலறியடித்து வெளியேறிதில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 5 மாணவிகள் பலியாயினர்.
மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.டெல்லியில் கன மழை பெய்து வரும் நிலையில், கஜுரிகாஸ் என்னுமிடத்தில் உள்ள அரசு பள்ளியில் இன்று காலை இச் சம்பவம் நடந்தது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள இந்த பள்ளியின் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களிலும் தரையிலும் மின்சாரம் பாய்ந்துள்ளதாக வதந்தி பரவியது.இதையடுத்து முதல் மாடி வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவிகள் பீதியடைந்து கீழே இறங்கினர். இந் நிலையில் கீழ் தளத்தில் இருந்த மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் மேலே ஏறினர். மிகக் குறுகலான அந்தப் படிக்கட்டுகள் வழியாக மாணவ-மாணவிகள் மேலே ஏறவும், கீழே இறங்கவும் முயற்சித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதில் பல மாணவ, மாணவிகள் கீழே விழுந்தனர். அவர்கள் மீது பிற மாணவ, மாணவிகள் ஏறி மிதித்துக் கொண்டு ஓடியதில் 5 மாணவிகள் பலியாயினர். 12 வயதான அஃப்ரோஸை காணாமல் தேடி அலைந்த அவருடைய தாயார் ஷம்சாரி "எனது மகள் ரமலான் நோன்பு நோற்றிருந்தாள்.இனி அவள் நோன்பு திறக்க வரமாட்டாள்".என்று கூறி அழுதது காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 26 பேர் மாணவிகள் ஆவர். அவர்கள் ஜி.டி.பி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் சந்தித்து ஆறுதல் கூறினார். மின் கசிவு ஏற்பட்டதாக வதந்தியை பரப்பியது யார் என்பது குறித்து விசாரணைக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தாடி வளர்த்ததால் நீக்கப்பட்டமுஸ்லிம் மாணவரை மீண்டும் சேர்க்க வேண்டும்

புதுடெல்லி, செப்.12-மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள `நிர்மல் கான்வெண்ட்' பள்ளியில் 10-ம் வகுப்பில் படித்த மாணவர், முகமது சலீம். அவர் தாடி வளர்த்ததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோரைக் கொண்ட `பெஞ்ச்' முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாடி வளர்த்ததற்காக பள்ளியில் இருந்து முஸ்லிம் மாணவரை நீக்குவது என்றால், சீக்கிய மாணவர் தாடி வளர்த்தாலும் நீக்கப்படுவாரா? வருங்காலத்தில் சிவப்பான நிறத்தின் அடிப்படையில் கூட ஒரு மாணவரை நீக்கும் நிலை வருமா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பினார்கள்.மாணவர் முகமது சலீமை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவரின் மனு குறித்து பதில் அனுப்பவும் நோட்டீசு அனுப்பினார்கள். சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் தற்போது 3-வது முறையாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 10 செப்டம்பர், 2009

கணக்கு தெரியாத இஸ்ரேல்

இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பு ஒன்று, 22 நாட்கள் இஸ்ரேல் அநியாயமாக பாலஸ்தீன் மீது நடத்திய ஆக்கிரமிப்பு தாக்குதலில் பலியானவர்களில் பாதிக்கும் மேலானோர் அப்பாவிப் பொதுமக்களே என்று கூறியுள்ளது. தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி, இஸ்ரேல் தாக்குதலின் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் போராளிகள் என்று கூறியது பொய் என்று தெரிய வந்துள்ளது.

B'Tselem என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1387 பாலஸ்தீனியர்கள் இந்த ஆக்கிரமிப்பு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 773 பேர் அப்பாவிப் பொது மக்கள் என்றும், 330 பேர் போராளிகள் என்றும், 248 பேர் காவல்துறையினர் என்றும் 36 பேர் போராளிகளா இல்லை பொதுமக்களா என்று அடையாளம் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.

அந்த அறிக்கை மேலும் கூறுகையில், கொல்லப்பட்டவர்களில் 320 பேர் 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் என்றும் கூறியுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகளின் அறிக்கையின்படி 1166 பேர் இஸ்ரேல் தாக்குதல் நடத்த முயன்ற போது கொல்லப்பட்டதாகவும், அதில் 709 பேர் போராளிகள் எனவும், 295 பொதுமக்கள் என்றும், 162 பேர் யார் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.

தற்பொழுது B'Tselem வெளிட்டுள்ள அறிக்கையைப் பற்றி இஸ்ரேல் அதிகாரிகளிடம் கேட்டதிற்கு அவர்கள் அதனை மறுத்துள்ளனர். B'Tselem ன் கணக்கெடுப்பு தவறானது என்றும் அது வலையுலக தகவலை வைத்து இந்த முடிவிற்கு வந்ததாக கூறியுள்ளனர்.

இதனை மறுத்த B'Tselem, அது காசாவின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்று இந்த அறிக்கையை தயார் செய்ததாக கூறியுள்ளது. அது மேலும் இஸ்ரேலிய அரசை இது தொடர்பான சுதந்திரமான விசாரணையை தொடங்க கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாவது, இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் சர்வதேச சட்டம் ஒழுங்கை பேணி நடந்தது என்று கூறியுள்ளனர். (இந்த ஆக்ரமிப்பு தாக்குதலில் இஸ்ரேல் நடத்திய அத்துமீறல்கள் நாம் அனைவரும் அறிந்ததே....)

இஸ்ரேலின் இந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி இஸ்ரேலிய

துபாய் மெட்ரோ ரயில் ஓடத்துவங்கியது











துபாய்: 2800 கோடி செலவில் 4 வருடமா நடைபெற்ற பணி பூர்த்தியான நிலையில் அரபு நாடுகளில் முதன்முதலாக ட்ரைவர் இல்லாத மெட்ரோ சர்வீஸ் நேற்று இரவு (செப்.09/09) துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேஹ் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் பச்சைகொடி காண்பித்து துவங்கி வைத்தார்.








ஷேக் செய்யத் சாலையிலிலுள்ள மால் ஆஃப் எமிரேட்ஸில் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஷேஹ் முஹம்மது மெட்ரோ ரெயிலை பொதுமக்களுக்காக திறந்துக்கொடுத்தார்.

நாளை காலை முதல் பயணிகளுக்காக மெட்ரோவின் கதவுகள் திறக்கும். பணிகள் நிறைவடைந்த 10 ஸ்டேசன்களில் ரெயில் ஓடும். துபாய் சர்வதேச விமானநிலையத்தின் அருகிலிலுள்ள ராஷிதியா ஸ்டேஷனிலிருந்து ஜெபல் அலி வரையிலான ரெட்லைனிற்கு 52 கி.மீ நீளம். இந்தவழியில் 19 ஸ்டேசன்களின் பணி பிப்ரவரியில் முடிவடையும்.

மிட்சுபிஷிஹெவி இண்டஸ்ட்ரீஸ், ஒபயாஸி, கஜிமா கார்ப்பரேஷன், யாபி மார்க்கஸி, மிட்சுபிஸி ரெயில்வே உள்ளிட்ட உலகின் பிரபல 5 கம்பெனிகளும், 150 சிறிய கட்டுமான கம்பெனிகளும், 30 ஆயிரம் தொழிலாளர்களும் இணைந்து சாதனை வேகத்தில் துபாய் மெட்ரோவை பூர்த்தியாக்கியுள்ளனர்.

கிஸைஸ் முதல் துபாய் ஷாப்பிங்காம்ப்ளக்ஸ்களை சுற்றி ஜித்தாஃபில் முடிவடையும் கிரீன் லைன் மார்ச் மாதத்தில் பயணிகளுக்காக திறக்கப்படும். ஒரு மணிநேரத்தில் 6 ரெயில்களில் 3858 பயணிகளுக்கு தற்ப்போது பயணம் மேற்க்கொள்ளலாம். வி.ஐ.பி, சாதாரண நபர்கள், பெண்கள் குழந்தைகள் என 3 விதமான வகுப்புகள் துபாய் மெட்ரோவில் உள்ளது. தற்ப்போது 6 லட்சம் பேருக்கு தினமும் பயணம் செய்ய இயலும்.

2020 முதல் இது 18 லட்சமாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இதன் மூலம் 17 சதவீதம் குறையுமென்றும் கருதப்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் 1.7 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படுகிறது.

மெட்ரோ ரெயில் பயணத்திற்காக இந்தியர்கள் பலரும் பெருநாள் விடுமுறைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.

புதன், 9 செப்டம்பர், 2009

என்னை எவரும் மதமாற்றவில்லை, மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் – ஸில்ஜா ராஜ்


பத்திரிகையாளர் சந்திப்பில் ஸில்ஜாராஜ் தனது கணவர் அஸ்கருடன்

கடந்த
சில வாரங்களாக கேரள பத்திரிகைகளில் விவாத்ததைகிளப்பிய செய்தி என்னவெனில் சிலர் பெண்களை இஸ்லாத்திற்கு மதமாற்றம்செய்யும் பணியை மேற்க்கொள்வதாகவும் அவர்கள் தீவிரவாத இயக்கத்தைச்சார்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுவந்தன.

ஹிந்து
ஐக்கியவேதி என்ற ஹிந்துத்துவா பாசிச அமைப்பும் முஸ்லிம்கள் லவ்ஜிஹாதை துவக்கியுள்ளதாக பிரச்சாரம்செய்தது.

பத்திரிகைகளின் இந்த சூடான செய்திகளுக்கும் ஹிந்து ஐக்கியவேதியின் லவ் ஜிஹாதிற்கும் காரணமானவராக கருதப்படும் ஸில்ஜா ராஜ் என்பவர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து சத்தியம் என்ன என்பதை தெளிவுப்படுத்தினார்.

ஸில்ஜா
ராஜ் கர்நாடகா மாநிலத்தில் சாமராஜ் நகர் சதி ரோடில் அமைந்துள்ள பங்கஜ் என்ற பேக்கரி உரிமையாளரான செல்வராஜின் மகள். இவர் கண்ணூரில் சிற்றாரிக்கடையில் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு வந்தபொழுது டாக்ஸி ட்ரைவரான அஸ்கருடன் காதல் ஏற்படுகிறது. சிவில் என்ஞ்சினியரிங் மாணவியான ஸில்ஜா டிப்ளமோ முடித்தவுடன் கம்ப்யூட்டர் படிக்கும் காலக்கட்டத்தில் அஸ்கரை திருமணம் முடிக்க முடிவெடுக்கிறார். கடந்த மாதம் 8 ஆம் தேதி பெற்றோரை அறிவிக்காமல் அஸ்கரை சந்திக்க அவர் வேலைபார்க்கும் கோட்டயம் அருகிலிருக்கும் ஈராட்டுப்பேட்டை என்ற ஊருக்கு வந்துள்ளார். வரும் வழியில் தனது தாயாரிடம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸில்ஜாவின் உறவினர்கள் ஈராட்டுப்பேட்டைக்கு வந்து அஸ்கர் தன்னை கடத்திச்சென்றதாக போலீசில் புகார் அளிக்க வற்புறுத்தியுள்ளனர். இவர் மறுக்கவே வழக்கறிஞருடன் வந்து அஸ்கரை திருமணம் முடிக்கும் முடிவை மாற்றுமாறு கூறியுள்ளனர். இதற்கும் ஸில்ஜா அசைந்துக்கொடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து
இச்செய்தியை மோப்பம் பிடித்த பத்திரிகை வியாபாரிகளும் ஹிந்து ஐக்கியவேதியும் விவாதத்தை கிளப்பி விட்டன. இதுபற்றி பேட்டியளித்த ஸில்ஜா கூறுகையில், "நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதில் எந்தவித வற்புறுத்தலும் நிர்பந்தமும் இல்லை. மனப்பூர்வமாகவே ஏற்றுக்கொண்டேன். தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை சரியாக விசாரிக்காமல் தேவையற்ற சர்ச்சைகளுக்கு என்னையும் என்னுடைய கணவரையும் உள்ளாக்கிய ஹிந்து ஐக்கியவேதி மீது சட்டநடவடிக்கை எடுக்க முயற்சித்துவருகிறேன். எனக்கு ஒன்றரை வருடமாக அஸ்கரை தெரியும். அவருக்கு எந்தவொரு தீவிரவாத செயலுக்கும் சம்பந்தமில்லை. நான் இஸ்லாத்தை பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்தது எந்தவொரு நிர்பந்தத்தின் அடிப்படையிலும் அல்ல. ஈராட்டுப்பேட்டைக்கு வந்தபிறகே நான் இஸ்லாத்தை பற்றி படிக்கவேண்டும் என்று அஸ்கரிடம் கூறினேன்.பின்னர் அஸ்கர் என்னை வாரிசேரி என்ற இடத்திலுள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் என்னை சேர்த்தார். மேஜரான எனக்கு எந்த மதத்தின் அடிப்படையில் வாழ்வதற்கும் விரும்பும் நபரை திருமணம் முடிப்பதற்கும் சுதந்திரமுண்டு. இனரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே ஹிந்து ஐக்கியவேதி எனக்கெதிராக பிரச்சாரம் செய்துவருகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்